< லூக்கா 3 >
1 ௧ திபேரியு பேரரசர் அரசாண்ட பதினைந்தாம் வருடத்தில், பொந்தியுபிலாத்து யூதேயா நாட்டிற்கு அதிபதியாகவும், ஏரோது கலிலேயாவிற்கு அதிபதியாகவும், அவன் சகோதரனாகிய பிலிப்பு இத்துரேயா மற்றும் திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாகவும், லிசானியா அபிலேனேக்கு அதிபதியாகவும்,
And in the fifteenth year in the reign of Tiberius Caesar, Pontius Pilate being governor of Judea, and Herod being tetrarch of Galilee, and Philip his brother, tetrarch of Ituria and the Trachonitis country, and Lusanius tetrarch of Abilene, during the high-priesthood of Annas
2 ௨ அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியர்களாகவும் இருந்தகாலத்தில் வனாந்திரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு தேவனுடைய வார்த்தை உண்டானது.
and Caiaphas, the word of God came to John the son of Zacharias in the wilderness.
3 ௩ அப்பொழுது: “கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைப்படுத்துங்கள் என்றும்,
And he came into all the region round about the Jordan preaching the baptism of repentance unto the remissions of sins,
4 ௪ பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், எல்லா மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் நேராகும், கரடானவைகள் சமமாகும் என்றும்,
as has been written in the book of Isaiah the prophet, saying; The voice of one roaring in the wilderness; Prepare ye the way of the Lord, make straight His paths.
5 ௫ மாம்சமான எல்லோரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள் என்றும், வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும்” என்று ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி,
Every valley shall be filled up and every mountain and hill shall be cut down; and the crooked places shall be straight and the rough ways smooth.
6 ௬ அவன் யோர்தான் நதிக்கு அருகில் உள்ள தேசத்திற்குப்போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தான்.
And all flesh shall see the salvation of God.
7 ௭ அவன், தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறுவதற்கு வந்த மக்கள் கூட்டத்தை நோக்கி: “விரியன்பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்திற்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வழிகாட்டினவன் யார்?
Then he said unto the multitudes coming out to be baptized by him; O generations of vipers, who hath warned you to flee from the wrath to come?
8 ௮ மனந்திரும்புதலுக்கு தகுந்த கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுடைய தகப்பன் என்று உங்களுக்குள்ளேசொல்லாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினால் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராக இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Bring forth therefore fruits worthy of repentance, and do not begin to say among yourselves; We have Abraham our father.
9 ௯ இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது; எனவே நல்ல கனிகொடுக்காத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படும் என்றான்.
But truly the ax is laid to the root of the trees; Therefore every tree not producing good fruit is hewn down, and cast into the fire.
10 ௧0 அப்பொழுது மக்கள் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள்.
And the multitudes asked him, saying; What then shall we do?
11 ௧௧ அவர்களுக்கு அவன் மறுமொழியாக: இரண்டு மேலாடையை வைத்திருக்கிறவன், ஒன்றும் இல்லாதவனுக்கு அதில் ஒன்றைக் கொடுக்கவேண்டும்; உணவு வைத்திருப்பவனும் அப்படியே செய்யவேண்டும்” என்றான்.
And responding he says to them, Let the one having two coats, give to him having none, and let the one having food do likewise.
12 ௧௨ வரி வசூலிப்பவர்களும் ஞானஸ்நானம் பெறுவதற்கு வந்து, அவனை நோக்கி: “போதகரே, நாங்கள் என்னசெய்யவேண்டும்” என்று கேட்டார்கள்.
And the publicans came also to be baptized, and said to him; Teacher, what shall we do!
13 ௧௩ அதற்கு அவன்: “உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதற்குமேல் அதிகமாக ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான்.
And he said to them, Exact no more than that which has been appointed unto you.
14 ௧௪ போர்வீரர்களும் அவனை நோக்கி: “நாங்கள் என்னசெய்யவேண்டும்” என்று கேட்டார்கள். அதற்கு அவன்: “நீங்கள் யாரிடமும் கட்டாயப்படுத்தி பணம் வாங்காமலும், ஒருவன் மேலும் பொய்யாக குற்றஞ்சாட்டாமலும், உங்களுடைய சம்பளமே போதும் என்று இருங்கள்” என்றான்.
And the soldiers were asking him saying; And what shall we do? And he said to them; Oppress no one, neither defraud; and be content with your wages.
15 ௧௫ யோவானைப்பற்றி: இவன்தான் கிறிஸ்துவோ என்று மக்களெல்லோரும் நினைத்துக்கொண்டு, தங்களுடைய இருதயங்களில் யோசித்துக்கொண்டிருக்கும்போது,
And the people waiting and all reasoning in their hearts concerning John, lest he might be the Christ.
16 ௧௬ யோவான் எல்லோருக்கும் மறுமொழியாக: “நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன், என்னைவிட வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய காலணிகளின் வாரை அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை, அவர் பரிசுத்த ஆவியானவராலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.
John responded to all, saying; I indeed baptize you with water; but there cometh One more powerful than I, the latchet of His sandals I am not worthy to loose; He will baptize you with the Holy Ghost and fire.
17 ௧௭ தூற்றுக்கூடை அவருடைய கையில் இருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாக சுத்தம்செய்து, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையாத அக்கினியினால் சுட்டெரிப்பார்” என்றான்.
Whose fan is in His hand, and He will thoroughly purify His threshing-floor, and gather the wheat into His garner, and will burn up the chaff with unquenchable fire.
18 ௧௮ வேறு அநேக புத்திமதிகளையும் அவன் மக்களுக்குச் சொல்லிப் பிரசங்கித்தான்.
Then indeed exhorting them as to many other things he continued to preach the gospel to the people.
19 ௧௯ தேசத்தின் அதிபதியாகிய ஏரோது, அவன் சகோதரன் பிலிப்புவின் மனைவியாகிய ஏரோதியாளைத் திருமணம் செய்ததாலும், அவன் செய்த மற்றப் பொல்லாங்குகளுக்காகவும், யோவானாலே கடிந்துகொள்ளப்பட்டபோது,
And Herod the tetrarch, being convicted by him concerning Herodias, the wife of his brother Philip, and concerning the wickedness which Herod did,
20 ௨0 ஏரோது தான் செய்த மற்ற எல்லாப் பொல்லாங்குகளும் போதாதென்று, யோவானைப் பிடித்து சிறையில் அடைத்துவைத்தான்.
added also this to all, and shut up John in prison.
21 ௨௧ மக்களெல்லோரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணும்போது, வானம் திறக்கப்பட்டது;
And it came to pass while all the people were being baptized, and Jesus having been baptized, and praying, the heaven was opened,
22 ௨௨ பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: “நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மிடம் பிரியமாக இருக்கிறேன்” என்று உரைத்தது.
and the Holy Spirit in bodily appearance like a dove descended on Him; and there was a voice from heaven, saying; Thou art my beloved Son, I am delighted in Thee.
23 ௨௩ அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவராக இருந்தார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்;
And Jesus was beginning to be about thirty years old, being as was supposed, the son of Joseph, the son of Eli,
24 ௨௪ ஏலி மாத்தாத்தின் குமாரன்; மாத்தாத் லேவியின் குமாரன்; லேவி மெல்கியின் குமாரன்; மெல்கி யன்னாவின் குமாரன்; யன்னா யோசேப்பின் குமாரன்;
Matthat, Levi, Melchi, Janna, Joseph:
25 ௨௫ யோசேப்பு மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா ஆமோசின் குமாரன்; ஆமோஸ் நாகூமின் குமாரன்; நாகூம் எஸ்லியின் குமாரன்; எஸ்லி நங்காயின் குமாரன்.
Mattathios, Amos, Naum, Esli, Naggai,
26 ௨௬ நங்காய் மாகாத்தின் குமாரன்; மாகாத் மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா சேமேயின் குமாரன்; சேமேய் யோசேப்பின் குமாரன்; யோசேப்பு யூதாவின் குமாரன்; யூதா யோவன்னாவின் குமாரன்.
Mattathios, Semei, Josech, Joda,
27 ௨௭ யோவன்னா ரேசாவின் குமாரன்; ரேசா செருபாபேலின் குமாரன்; செருபாபேல் சலாத்தியேலின் குமாரன்; சலாத்தியேல் நேரியின் குமாரன்.
Joanna, Resa, Zorababbel, Salithiel, Neri,
28 ௨௮ நேரி மெல்கியின் குமாரன்; மெல்கி அத்தியின் குமாரன்; அத்தி கோசாமின் குமாரன்; கோசாம் எல்மோதாமின் குமாரன்; எல்மோதாம் ஏரின் குமாரன்; ஏர் யோசேயின் குமாரன்.
Melchi, Addi, Cosam, Elmodam, Er,
29 ௨௯ யோசே எலியேசரின் குமாரன்; எலியேசர் யோரீமின் குமாரன்; யோரீம் மாத்தாத்தின் குமாரன்; மாத்தாத் லேவியின் குமாரன்.
Joses, Eliezer, Jorim, Matthat, Levi,
30 ௩0 லேவி சிமியோனின் குமாரன்; சிமியோன் யூதாவின் குமாரன்; யூதா யோசேப்பின் குமாரன்; யோசேப்பு யோனானின் குமாரன்; யோனாம் எலியாக்கீமின் குமாரன்.
Simeon, Judah, Joseph, Jonan, Eliakim,
31 ௩௧ எலியாக்கீம் மெலெயாவின் குமாரன்; மெலெயா மயினானின் குமாரன்; மயினான் மாத்தாத்தாவின் குமாரன்; மாத்தாத்தா நாத்தானின் குமாரன்; நாத்தான் தாவீதின் குமாரன்.
Melea, Mainan, Mattatha, Nathan, David,
32 ௩௨ தாவீது ஈசாயின் குமாரன்; ஈசாய் ஓபேத்தின் குமாரன்; ஓபேத் போவாஸின் குமாரன்; போவாஸ் சல்மோனின் குமாரன்; சல்மோன் நகசோனின் குமாரன்.
Jesse, Obed, Booz, Salmon, Naasson,
33 ௩௩ நகசோன் அம்மினதாபின் குமாரன்; அம்மினதாப் ஆராமின் குமாரன்; ஆராம் எஸ்ரோமின் குமாரன்; எஸ்ரோம் பாரேசின் குமாரன்; பாரேஸ் யூதாவின் குமாரன்; யூதா யாக்கோபின் குமாரன்.
Aminadab, Aram, Esrom, Phares, Judah,
34 ௩௪ யாக்கோபு ஈசாக்கின் குமாரன்; ஈசாக்கு ஆபிரகாமின் குமாரன்; ஆபிரகாம் தேராவின் குமாரன்; தேரா நாகோரின் குமாரன்.
Jacob, Isaac, Abraham, Thara, Nachor, Serouch, Ragau,
35 ௩௫ நாகோர் சேரூக்கின் குமாரன்; சேரூக் ரெகூவின் குமாரன்; ரெகூ பேலேக்கின் குமாரன்; பேலேக் ஏபேரின் குமாரன்; ஏபேர் சாலாவின் குமாரன்.
Phalek, Heber, Sala,
36 ௩௬ சாலா காயினானின் குமாரன்; காயினான் அர்ப்பகசாத்தின் குமாரன்; அர்ப்பகசாத் சேமின் குமாரன்; சேம் நோவாவின் குமாரன்; நோவா லாமேக்கின் குமாரன்.
Cainan, Arphaxad, Shem, Noah, Lamech,
37 ௩௭ லாமேக்கு மெத்தூசலாவின் குமாரன்; மெத்தூசலா ஏனோக்கின் குமாரன்; ஏனோக்கு யாரேத்தின் குமாரன்; யாரேத் மகலாலெயேலின் குமாரன்; மகலாலெயேல் கேனானின் குமாரன்; கெய்னான் ஏனோசின் குமாரன்.
of Methusalah, Enoch, Jared, of Mahalaleel, Cainan,
38 ௩௮ ஏனோஸ் சேத்தின் குமாரன்; சேத் ஆதாமின் குமாரன்; ஆதாம் தேவனால் உண்டானவன்.
of Enos, Seth, Adam, the Son of God.