< லூக்கா 23 >
1 ௧ அவர்களுடைய கூட்டத்தாரெல்லோரும் எழுந்திருந்து, அவரைப் பிலாத்துவினிடத்திற்குக் கொண்டுபோய்:
І зняли́ся всі їхні збори, і повели до Пилата Його.
2 ௨ இவன் தன்னைக் கிறிஸ்து என்னப்பட்ட ராஜாவென்றும், ராயருக்கு வரிகொடுக்க வேண்டியதில்லையென்றும் சொல்லி, மக்களைக் கலகப்படுத்தக் கண்டோம் என்று அவர்மேல் குற்றஞ்சுமத்தத் தொடங்கினார்கள்.
І зачали оскаржа́ти Його й говорити: „Ми стверди́ли, що Цей ворохо́бить народ наш, і забороняє податок давати кесареві, та й говорить, що Він, — Христос Цар“.
3 ௩ பிலாத்து அவரைப் பார்த்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான். அவர் அவனுக்கு மறுமொழியாக; நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
І Пила́т запитав Його, кажучи: „Чи Ти Цар Юдейський?“А Він відказав йому в відповідь: „Сам ти кажеш“...
4 ௪ அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் மக்களையும் பார்த்து: இந்த மனிதனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை என்றான்.
І Пилат сказав первосвященикам та до народу: „Я не знахо́джу жо́дної провини в Цій Люди́ні“.
5 ௫ அதற்கு அவர்கள்: இவன் கலிலேயா நாடுதொடங்கி இந்த இடம்வரைக்கும் யூதேயா தேசமெங்கும் உபதேசம் செய்து, மக்களைக் கலகப்படுத்துகிறான் என்று வைராக்கியத்தோடு சொன்னார்கள்.
А вони намагались, говорячи: „Він бунтує наро́д, навчаючи в усій Юдеї, від Галілеї почавши аж посі“.
6 ௬ கலிலேயா என்பதைப் பிலாத்து கேட்டபொழுது, இந்த மனிதன் கலிலேயனா என்று விசாரித்து,
А Пилат, вчувши про Галілею, спитав: „Хіба Він галіле́янин?“
7 ௭ அவர் ஏரோதின் அதிகாரத்திற்குள்ளானவர் என்று அறிந்து, அந்த நாட்களிலே எருசலேமிலே வந்திருந்த ஏரோதுவினிடத்திற்கு அவரை அனுப்பினான்.
І, дізнавшись, що Він із влади Ірода, відіслав Його Іродові, бо той в Єрусалимі також перебува́в тими днями.
8 ௮ ஏரோது இயேசுவைக்குறித்து அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருந்ததினாலும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்கவேண்டுமென்று விரும்பியிருந்ததினாலும், அவரைக் காணும்படி வெகுநாளாக ஆசைகொண்டிருந்தான். அந்தப்படி அவரைப் பார்த்தபோது, மிகவும் சந்தோஷப்பட்டு,
Коли ж Ірод побачив Ісуса, то дуже зрадів, бо він від давнього ча́су бажав Його бачити, — багато за Нього чував, і сподівався побачити чудо яке, що буває від Нього.
9 ௯ அநேக காரியங்களைக்குறித்து, அவரிடத்தில் கேள்வி கேட்டான். அவர் மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.
І багато питався Його, та нічого не відповідав Він йому.
10 ௧0 பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் அவர்மேல் பிடிவாதமாகக் குற்றஞ்சுமத்திக்கொண்டே நின்றார்கள்.
І стояли тут первосвященики й книжники, та завзя́то Його оскаржували.
11 ௧௧ அப்பொழுது ஏரோது தன் போர் வீரர்களோடுகூட அவரை நிந்தித்து, கேலிசெய்து மினுக்கான ஆடையை அவருக்கு அணிந்து, அவரைத் திரும்பப் பிலாத்துவினிடத்திற்கு அனுப்பினான்.
Тоді Ірод із ві́йськом своїм ізневажив Його й насміявся, зодягнувши Його в яснобі́лу одіж, і відіслав до Пилата Його.
12 ௧௨ முன்னே ஒருவருக்கொருவர் விரோதிகளாக இருந்த பிலாத்துவும் ஏரோதும் அன்றையதினம் நண்பர்களானார்கள்.
І того дня стали Ірод із Пилатом за при́ятелів між собою, бо давніш ворожне́ча між ними була́.
13 ௧௩ பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் அதிகாரிகளையும் மக்களையும் கூடிவரச்செய்து,
А Пилат скликав первосвящеників, і старшин, і наро́д,
14 ௧௪ அவர்களைப் பார்த்து: மக்களைக் கலகத்திற்குத் தூண்டிவிடுகிறவனாக இந்த மனிதனை என்னிடத்தில் கொண்டுவந்தீர்கள்; நான் உங்களுக்கு முன்பாக விசாரித்தபோது, இவன்மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை.
і промовив до них: „Привели́ ви мені Чоловіка Цього́, як того́, що бунтує наро́д. А ось я перед вами розвідав, — і не знахо́джу в Люди́ні Оцій ані однієї провини такої, про що ви оскаржуєте.
15 ௧௫ உங்களை ஏரோதினிடத்திற்கும் அனுப்பினேன்; அவரும் இவனிடத்தில் குற்றம் காணவில்லை; மரணத்திற்கு ஏதுவாக இவன் ஒன்றும் செய்யவில்லையே.
Також Ірод, бо він відіслав Його нам. І ось нічого, що на смерть заслуго́вувало б, Він не вчинив.
16 ௧௬ எனவே இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.
Отже я покараю Його й відпущу́“.
17 ௧௭ பண்டிகைதோறும் அவர்களுக்கு ஒருவனை அவன் விடுதலையாக்குவது வழக்கமாக இருந்தபடியால் அப்படிச் சொன்னான்.
Бо пови́нен був їм відпустити одно́го на свято.
18 ௧௮ மக்களெல்லோரும் அதைக்கேட்டு: இவனை அகற்றும், பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும் என்று சத்தமிட்டுக்கேட்டார்கள்.
А наро́д став кричати й казати: Візьми Цього́, — відпусти ж нам Вара́вву!“
19 ௧௯ அந்த பரபாஸ் என்பவன் நகரத்தில் நடந்த ஒரு கலவரத்தினிமித்தமும் கொலை குற்றத்தினிமித்தமும் காவலிலே வைக்கப்பட்டிருந்தான்.
А той за повста́ння одне, яке сталося в місті, і за вбивство посаджений був до в'язни́ці.
20 ௨0 பிலாத்து இயேசுவை விடுதலையாக்க விரும்பி, மறுபடியும் அவர்களிடத்தில் பேசினான்.
І зно́ву сказав їм Пилат, хотячи́ відпустити Ісуса.
21 ௨௧ அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று கூச்சலிட்டார்கள்.
Та кричали вони й говорили: „Розіпни, розіпни Його!“
22 ௨௨ அவன் மூன்றாம்முறை அவர்களைப் பார்த்து: ஏன், இவன் என்ன குற்றம் செய்தான்? மரணத்திற்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே; ஆகவே, நான் இவனை தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.
Він же втретє промовив до них: „Яке ж зло вчинив Він? Я нічого, що на смерть заслуго́вувало б, на Нім не знайшов. Отже я покараю Його й відпущу́“.
23 ௨௩ அப்படியிருந்தும் அவரை சிலுவையில் அறையவேண்டுமென்று அவர்கள் உரத்த சத்தத்தோடு கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். அவர்களும் பிரதான ஆசாரியர்களும் இட்ட சத்தம் மேற்கொண்டது.
А вони сильним криком свого домага́лися, та вимагали розп'я́сти Його. І взяв го́ру крик їхній та первосвящеників.
24 ௨௪ அப்பொழுது அவர்கள் கேட்டுக்கொண்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்புசெய்து,
І Пилат присудив, щоб було́, як просили вони:
25 ௨௫ கலவரத்தினிமித்தமும் கொலைக் குற்றத்தினிமித்தமும் காவலில் போடப்பட்டிருந்த பரபாசை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்கள் விருப்பத்திற்கு ஒப்புக்கொடுத்தான்.
відпустив їм Вара́вву, поса́дженого за повста́ння та вбивство в в'язницю, за якого просили вони, а Ісуса віддав їхній волі...
26 ௨௬ அவர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவருக்குப் பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள்.
І як Його повели́, то схопи́ли якогось Си́мона із Кіріне́ї, що з поля вертався, і поклали на нього хреста, щоб він ніс за Ісусом!
27 ௨௭ திரள்கூட்டமான மக்களும் அவருக்காகப் கதறி அழுகிற பெண்களும் அவருக்குப் பின்னே சென்றார்கள்.
А за Ним ішов на́товп великий людей і жінок, які плакали та голосили за Ним.
28 ௨௮ இயேசு அவர்கள் பக்கமாகத் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்களுடைய பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.
А Ісус обернувся до них та й промовив: „Дочки єрусалимські, не ридайте за Мною, — за собою ридайте й за ді́тьми своїми!
29 ௨௯ இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத மார்பகங்களும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும்.
Бо ось дні настають, коли скажуть: „Блаженні неплідні, та утро́би, які не родили, і груди, що не годували“.
30 ௩0 அப்பொழுது மலைகளைப் பார்த்து: எங்களின்மேல் விழுங்களென்றும், குன்றுகளைப் பார்த்து: எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள்.
Тоді стануть казати гора́м: „Поспадайте на нас“, а узгі́р'ям: „Покрийте нас!“
31 ௩௧ பச்சைமரத்திற்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்திற்கு என்ன செய்யமாட்டார்கள்” என்றார்.
Бо коли таке роблять зеленому дереву, то що́ буде сухому?“
32 ௩௨ குற்றவாளிகளாகிய வேறு இரண்டுபேரும் அவரோடுகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்கள்.
І вели́ з Ним також двох злочинників інших, щоб убити.
33 ௩௩ கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள்.
А коли прибули́ на те місце, що звуть „Черепо́вище“, розп'яли́ тут Його та злочинників, — одно́го право́руч, а одного ліво́руч.
34 ௩௪ அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய ஆடைகளை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.
Ісус же промовив: „Отче, відпусти їм, — бо не знають, що чинять вони!“А як Його одіж ділили, то кидали же́реба.
35 ௩௫ மக்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களோடு அதிகாரிகளும் அவரை ஏளனம்செய்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள்.
А люди стояли й дивились... Насміхалися з ними й старши́ни, говорячи: „Він інших спасав, — нехай Сам Себе ви́зволить, коли Він Христос, Божий Обра́нець!“
36 ௩௬ போர்வீரர்களும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து:
І вояки́ глузували з Нього: приступаючи, о́цет Йому подавали,
37 ௩௭ நீ யூதர்களின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைக் கேலிசெய்தார்கள்.
і казали: „Коли Цар Ти Юдейський, — спаси Себе Сам!“
38 ௩௮ இவன் யூதர்களுடைய ராஜா என்று, கிரேக்கு, லத்தீன், எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது.
Був же й напис над Ним письмом грецьким, латинським і гебрейським написаний: „Це — Цар Юдейський“.
39 ௩௯ அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இழிவாகப் பேசினான்.
А один із розп'я́тих злочинників став зневажати Його й говорити: „Чи Ти не Христос? То спаси Себе й нас!“
40 ௪0 மற்றவன் அவனைப் பார்த்து: நீ இந்த தண்டனைக்குட்பட்டவனாக இருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?
Обізвався ж той другий, і докоряв йому, кажучи: „Чи не боїшся ти Бога, коли й сам на те саме засуджений?
41 ௪௧ நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் செய்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் செய்யவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,
Але ми справедливо засу́джені, і належну заплату за вчинки свої беремо́, — Цей же жодного зла не вчинив“.
42 ௪௨ இயேசுவைப் பார்த்து: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.
І сказав до Ісуса: „Спогада́й мене, Господи, коли при́йдеш у Царство Своє!“
43 ௪௩ இயேசு அவனைப் பார்த்து: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
І промовив до нього Ісус: „Попра́вді кажу́ тобі: ти бу́деш зо Мною сьогодні в раю́!“
44 ௪௪ அப்பொழுது ஏறக்குறைய பகல் பன்னிரண்டு மணியாக இருந்தது; மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் இருளுண்டானது.
Наближалася шоста година, — і те́мрява стала по ці́лій землі аж до години дев'ятої.
45 ௪௫ சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது.
І сонце затьми́лось, і в храмі завіса роздерлась надво́є.
46 ௪௬ இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.
І, скрикнувши голосом гучним, промовив Ісус: „Отче, у руки Твої віддаю Свого духа!“І це прорікши, Він духа віддав.
47 ௪௭ நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனிதன் நீதிமானாக இருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்.
Коли ж сотник побачив, що́ сталось, він Бога просла́вив, говорячи: „Дійсно праведний був Чоловік Цей!“
48 ௪௮ இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த மக்களெல்லோரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்களுடைய மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.
І ввесь на́товп, який зійшовсь на видо́вище це, як побачив, що́ сталось, — бив у гру́ди себе та вертався.
49 ௪௯ அவருக்கு அறிமுகமானவர்களெல்லோரும், கலிலேயாவிலிருந்து அவருக்குப் பின்னே சென்ற பெண்களும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
Усі ж знайо́мі Його й ті жінки́, що прийшли були з Ним із Галілеї, здалека стояли й дивились на це.
50 ௫0 யோசேப்பு என்னும் பெயர்கொண்ட ஒரு ஆலோசனைக்காரன் இருந்தான்; அவன் உத்தமனும் நீதிமானுமாக இருந்தான்.
І ось муж, на ім'я́ йому Йо́сип, що був радником синедріону, люди́на шановна і праведна, —
51 ௫௧ அவன் யூதர்களுடைய பட்டணங்களில் ஒன்றாகிய அரிமத்தியாவிலிருந்து வந்தவனும், தேவனுடைய ராஜ்யத்திற்குக் காத்திருந்தவனும், யூதர்களுடைய ஆலோசனைக்கும் செய்கைக்கும் சம்மதிக்காதவனுமாக இருந்தான்.
не пристав він до ради та чину їх, — із Аримате́ї, юдейського міста, що й сам сподівався Божого Царства, —
52 ௫௨ அவன் பிலாத்துவினிடத்தில்போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு,
цей прийшов до Пилата, і тіла Ісусового став просити.
53 ௫௩ அதை இறக்கி, மெல்லிய துணியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதும் ஒருபோதும் ஒருவனும் வைக்கப்படாததுமாக இருந்த ஒரு கல்லறையிலே வைத்தான்.
І Йо́сип, знявши Його, обгорнув у полотно, і покла́в Його в гро́бі, що в скелі був ви́січений, і що в ньому ніко́ли ніхто не лежав.
54 ௫௪ அந்த நாள் ஆயத்தநாளாக இருந்தது; ஓய்வுநாளும் ஆரம்பமானது.
День той був Приготува́ння, і наставала субота.
55 ௫௫ கலிலேயாவிலிருந்து அவருடன் வந்திருந்த பெண்களும் பின்னேசென்று, கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து,
А жінки́, що прийшли були з Ним із Галілеї, ішли слідо́м, і вони бачили гро́ба, і як покладене тіло Його.
56 ௫௬ திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கட்டளையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.
Повернувшись, вони наготува́ли па́хощів і мира, а в суботу, за заповіддю, спочивали.