< லூக்கா 20 >
1 ௧ அந்த நாட்களிலே, அவர் தேவாலயத்திலே மக்களுக்கு உபதேசித்து, நற்செய்தியைப் பிரசங்கித்தபோது, பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மூப்பர்களும் அவரிடத்தில் கூடிவந்து:
ಅಥೈಕದಾ ಯೀಶು ರ್ಮನಿದರೇ ಸುಸಂವಾದಂ ಪ್ರಚಾರಯನ್ ಲೋಕಾನುಪದಿಶತಿ, ಏತರ್ಹಿ ಪ್ರಧಾನಯಾಜಕಾ ಅಧ್ಯಾಪಕಾಃ ಪ್ರಾಞ್ಚಶ್ಚ ತನ್ನಿಕಟಮಾಗತ್ಯ ಪಪ್ರಚ್ಛುಃ
2 ௨ நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? அதை எங்களுக்குச் சொல்லும் என்றார்கள்.
ಕಯಾಜ್ಞಯಾ ತ್ವಂ ಕರ್ಮ್ಮಾಣ್ಯೇತಾನಿ ಕರೋಷಿ? ಕೋ ವಾ ತ್ವಾಮಾಜ್ಞಾಪಯತ್? ತದಸ್ಮಾನ್ ವದ|
3 ௩ அவர்களுக்கு அவர் மறுமொழியாக: நானும் உங்களிடம் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுங்கள்.
ಸ ಪ್ರತ್ಯುವಾಚ, ತರ್ಹಿ ಯುಷ್ಮಾನಪಿ ಕಥಾಮೇಕಾಂ ಪೃಚ್ಛಾಮಿ ತಸ್ಯೋತ್ತರಂ ವದತ|
4 ௪ யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனிதர்களால் உண்டாயிற்றோ? என்று கேட்டார்.
ಯೋಹನೋ ಮಜ್ಜನಮ್ ಈಶ್ವರಸ್ಯ ಮಾನುಷಾಣಾಂ ವಾಜ್ಞಾತೋ ಜಾತಂ?
5 ௫ அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைசெய்து: தேவனால் உண்டானது என்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை நம்பவில்லை என்று கேட்பார்.
ತತಸ್ತೇ ಮಿಥೋ ವಿವಿಚ್ಯ ಜಗದುಃ, ಯದೀಶ್ವರಸ್ಯ ವದಾಮಸ್ತರ್ಹಿ ತಂ ಕುತೋ ನ ಪ್ರತ್ಯೈತ ಸ ಇತಿ ವಕ್ಷ್ಯತಿ|
6 ௬ மனிதர்களால் உண்டானது என்று சொல்வோமானால், மக்களெல்லோரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறபடியினால் நம்மேல் கல்லெறிவார்கள் என்று சொல்லி:
ಯದಿ ಮನುಷ್ಯಸ್ಯೇತಿ ವದಾಮಸ್ತರ್ಹಿ ಸರ್ವ್ವೇ ಲೋಕಾ ಅಸ್ಮಾನ್ ಪಾಷಾಣೈ ರ್ಹನಿಷ್ಯನ್ತಿ ಯತೋ ಯೋಹನ್ ಭವಿಷ್ಯದ್ವಾದೀತಿ ಸರ್ವ್ವೇ ದೃಢಂ ಜಾನನ್ತಿ|
7 ௭ அது யாரால் உண்டாயிற்றோ, எங்களுக்குத் தெரியாது என்று மறுமொழி சொன்னார்கள்.
ಅತಏವ ತೇ ಪ್ರತ್ಯೂಚುಃ ಕಸ್ಯಾಜ್ಞಯಾ ಜಾತಮ್ ಇತಿ ವಕ್ತುಂ ನ ಶಕ್ನುಮಃ|
8 ௮ அப்பொழுது இயேசு: நானும் இன்ன அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லமாட்டேன் என்றார்.
ತದಾ ಯೀಶುರವದತ್ ತರ್ಹಿ ಕಯಾಜ್ಞಯಾ ಕರ್ಮ್ಮಾಣ್ಯೇತಾತಿ ಕರೋಮೀತಿ ಚ ಯುಷ್ಮಾನ್ ನ ವಕ್ಷ್ಯಾಮಿ|
9 ௯ பின்பு அவர் மக்களுக்கு சொல்லத்தொடங்கின உவமையாவது: ஒரு மனிதன் ஒரு திராட்சைத்தோட்டத்தை உண்டாக்கி, அதைத் தோட்டக்காரர்களுக்குக் குத்தகையாக விட்டு, நீண்ட நாட்களாக வெளிதேசத்திற்குச் சென்றிருந்தான்.
ಅಥ ಲೋಕಾನಾಂ ಸಾಕ್ಷಾತ್ ಸ ಇಮಾಂ ದೃಷ್ಟಾನ್ತಕಥಾಂ ವಕ್ತುಮಾರೇಭೇ, ಕಶ್ಚಿದ್ ದ್ರಾಕ್ಷಾಕ್ಷೇತ್ರಂ ಕೃತ್ವಾ ತತ್ ಕ್ಷೇತ್ರಂ ಕೃಷೀವಲಾನಾಂ ಹಸ್ತೇಷು ಸಮರ್ಪ್ಯ ಬಹುಕಾಲಾರ್ಥಂ ದೂರದೇಶಂ ಜಗಾಮ|
10 ௧0 அந்தத் தோட்டக்காரர்கள் திராட்சைத்தோட்டத்தின் கனிகளில் தன் பங்கைக் கொடுத்தனுப்பும்படி, பருவகாலத்திலே அவர்களிடத்தில் ஒரு வேலைக்காரனை அனுப்பினான். அந்தத் தோட்டக்காரர்கள் அவனை அடித்து, ஒன்றும் கொடுக்காமல் அனுப்பிவிட்டார்கள்.
ಅಥ ಫಲಕಾಲೇ ಫಲಾನಿ ಗ್ರಹೀತು ಕೃಷೀವಲಾನಾಂ ಸಮೀಪೇ ದಾಸಂ ಪ್ರಾಹಿಣೋತ್ ಕಿನ್ತು ಕೃಷೀವಲಾಸ್ತಂ ಪ್ರಹೃತ್ಯ ರಿಕ್ತಹಸ್ತಂ ವಿಸಸರ್ಜುಃ|
11 ௧௧ பின்பு அவன் வேறொரு வேலைக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் அடித்து, அவமானப்படுத்தி, ஒன்றும் கொடுக்காமல் அனுப்பிவிட்டார்கள்.
ತತಃ ಸೋಧಿಪತಿಃ ಪುನರನ್ಯಂ ದಾಸಂ ಪ್ರೇಷಯಾಮಾಸ, ತೇ ತಮಪಿ ಪ್ರಹೃತ್ಯ ಕುವ್ಯವಹೃತ್ಯ ರಿಕ್ತಹಸ್ತಂ ವಿಸಸೃಜುಃ|
12 ௧௨ அவன் மூன்றாம்முறையும் ஒரு வேலைக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் காயப்படுத்தி துரத்திவிட்டார்கள்.
ತತಃ ಸ ತೃತೀಯವಾರಮ್ ಅನ್ಯಂ ಪ್ರಾಹಿಣೋತ್ ತೇ ತಮಪಿ ಕ್ಷತಾಙ್ಗಂ ಕೃತ್ವಾ ಬಹಿ ರ್ನಿಚಿಕ್ಷಿಪುಃ|
13 ௧௩ அப்பொழுது திராட்சைத்தோட்டத்தின் எஜமான்: நான் என்ன செய்யலாம், எனக்குப் பிரியமான மகனை அனுப்பினால், அவனையாவது பார்த்து பயப்படுவார்கள் என்று நினைத்து, அவனை அனுப்பினான்.
ತದಾ ಕ್ಷೇತ್ರಪತಿ ರ್ವಿಚಾರಯಾಮಾಸ, ಮಮೇದಾನೀಂ ಕಿಂ ಕರ್ತ್ತವ್ಯಂ? ಮಮ ಪ್ರಿಯೇ ಪುತ್ರೇ ಪ್ರಹಿತೇ ತೇ ತಮವಶ್ಯಂ ದೃಷ್ಟ್ವಾ ಸಮಾದರಿಷ್ಯನ್ತೇ|
14 ௧௪ தோட்டக்காரர்கள் அவனைக் கண்டபோது: இவனே வாரிசு, சொத்தை நம்முடையதாக்கும்படிக்கு இவனைக் கொன்று போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு,
ಕಿನ್ತು ಕೃಷೀವಲಾಸ್ತಂ ನಿರೀಕ್ಷ್ಯ ಪರಸ್ಪರಂ ವಿವಿಚ್ಯ ಪ್ರೋಚುಃ, ಅಯಮುತ್ತರಾಧಿಕಾರೀ ಆಗಚ್ಛತೈನಂ ಹನ್ಮಸ್ತತೋಧಿಕಾರೋಸ್ಮಾಕಂ ಭವಿಷ್ಯತಿ|
15 ௧௫ அவனைத் திராட்சைத்தோட்டத்திற்குப் வெளியே தள்ளி, கொன்றுபோட்டார்கள். இப்படியிருக்க, திராட்சைத்தோட்டத்தின் எஜமான் அவர்களை என்ன செய்வான்?
ತತಸ್ತೇ ತಂ ಕ್ಷೇತ್ರಾದ್ ಬಹಿ ರ್ನಿಪಾತ್ಯ ಜಘ್ನುಸ್ತಸ್ಮಾತ್ ಸ ಕ್ಷೇತ್ರಪತಿಸ್ತಾನ್ ಪ್ರತಿ ಕಿಂ ಕರಿಷ್ಯತಿ?
16 ௧௬ அவன் வந்து அந்தத் தோட்டக்காரர்களை அழித்து, திராட்சைத்தோட்டத்தை வேறு தோட்டக்காரர்களிடத்தில் கொடுப்பான் அல்லவா என்றார். அவர்கள் அதைக்கேட்டு, அப்படியாகாதிருப்பதாக என்றார்கள்.
ಸ ಆಗತ್ಯ ತಾನ್ ಕೃಷೀವಲಾನ್ ಹತ್ವಾ ಪರೇಷಾಂ ಹಸ್ತೇಷು ತತ್ಕ್ಷೇತ್ರಂ ಸಮರ್ಪಯಿಷ್ಯತಿ; ಇತಿ ಕಥಾಂ ಶ್ರುತ್ವಾ ತೇ ಽವದನ್ ಏತಾದೃಶೀ ಘಟನಾ ನ ಭವತು|
17 ௧௭ அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லானது என்று எழுதியிருக்கிற வேதவாக்கியத்தின் பொருள் என்ன?
ಕಿನ್ತು ಯೀಶುಸ್ತಾನವಲೋಕ್ಯ ಜಗಾದ, ತರ್ಹಿ, ಸ್ಥಪತಯಃ ಕರಿಷ್ಯನ್ತಿ ಗ್ರಾವಾಣಂ ಯನ್ತು ತುಚ್ಛಕಂ| ಪ್ರಧಾನಪ್ರಸ್ತರಃ ಕೋಣೇ ಸ ಏವ ಹಿ ಭವಿಷ್ಯತಿ| ಏತಸ್ಯ ಶಾಸ್ತ್ರೀಯವಚನಸ್ಯ ಕಿಂ ತಾತ್ಪರ್ಯ್ಯಂ?
18 ௧௮ அந்தக் கல்லின்மேல் விழுகிறவன் எவனோ அவன் நொறுங்கிப்போவான், அது எவன்மேல் விழுமோ அவனை அழித்துப்போடும்” என்றார்.
ಅಪರಂ ತತ್ಪಾಷಾಣೋಪರಿ ಯಃ ಪತಿಷ್ಯತಿ ಸ ಭಂಕ್ಷ್ಯತೇ ಕಿನ್ತು ಯಸ್ಯೋಪರಿ ಸ ಪಾಷಾಣಃ ಪತಿಷ್ಯತಿ ಸ ತೇನ ಧೂಲಿವಚ್ ಚೂರ್ಣೀಭವಿಷ್ಯತಿ|
19 ௧௯ பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் தங்களைக்குறித்து இந்த உதாரணத்தைச் சொன்னாரென்று அறிந்து, அந்த நேரத்திலே அவரைப் பிடிக்க வகைதேடியும் மக்களுக்குப் பயந்திருந்தார்கள்.
ಸೋಸ್ಮಾಕಂ ವಿರುದ್ಧಂ ದೃಷ್ಟಾನ್ತಮಿಮಂ ಕಥಿತವಾನ್ ಇತಿ ಜ್ಞಾತ್ವಾ ಪ್ರಧಾನಯಾಜಕಾ ಅಧ್ಯಾಪಕಾಶ್ಚ ತದೈವ ತಂ ಧರ್ತುಂ ವವಾಞ್ಛುಃ ಕಿನ್ತು ಲೋಕೇಭ್ಯೋ ಬಿಭ್ಯುಃ|
20 ௨0 அவர்கள் நேரம் பார்த்து, தேசாதிபதியின் ஆளுகைக்கும் அதிகாரத்திற்கும் அவரை ஒப்புக்கொடுக்கும்படி அவருடைய பேச்சிலே குற்றம் கண்டுபிடிக்கலாமென்று, தங்களை உண்மையுள்ளவர்களாக நடிக்கிற ஒற்றர்களை அவரிடத்தில் அனுப்பினார்கள்.
ಅತಏವ ತಂ ಪ್ರತಿ ಸತರ್ಕಾಃ ಸನ್ತಃ ಕಥಂ ತದ್ವಾಕ್ಯದೋಷಂ ಧೃತ್ವಾ ತಂ ದೇಶಾಧಿಪಸ್ಯ ಸಾಧುವೇಶಧಾರಿಣಶ್ಚರಾನ್ ತಸ್ಯ ಸಮೀಪೇ ಪ್ರೇಷಯಾಮಾಸುಃ|
21 ௨௧ அவர்கள் வந்து: போதகரே, நீர் நிதானமாகப் பேசி உபதேசிக்கிறீரென்றும், பட்சபாதமில்லாமல் தேவனுடைய வழிமுறைகளை உண்மையாகப் போதிக்கிறீரென்றும் அறிந்திருக்கிறோம்.
ತದಾ ತೇ ತಂ ಪಪ್ರಚ್ಛುಃ, ಹೇ ಉಪದೇಶಕ ಭವಾನ್ ಯಥಾರ್ಥಂ ಕಥಯನ್ ಉಪದಿಶತಿ, ಕಮಪ್ಯನಪೇಕ್ಷ್ಯ ಸತ್ಯತ್ವೇನೈಶ್ವರಂ ಮಾರ್ಗಮುಪದಿಶತಿ, ವಯಮೇತಜ್ಜಾನೀಮಃ|
22 ௨௨ இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமா இல்லையா, எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்.
ಕೈಸರರಾಜಾಯ ಕರೋಸ್ಮಾಭಿ ರ್ದೇಯೋ ನ ವಾ?
23 ௨௩ அவர்களுடைய தந்திரத்தை அவர் அறிந்து, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்?
ಸ ತೇಷಾಂ ವಞ್ಚನಂ ಜ್ಞಾತ್ವಾವದತ್ ಕುತೋ ಮಾಂ ಪರೀಕ್ಷಧ್ವೇ? ಮಾಂ ಮುದ್ರಾಮೇಕಂ ದರ್ಶಯತ|
24 ௨௪ ஒரு நாணயத்தை எனக்குக் காண்பியுங்கள். இதிலிருக்கிற உருவமும் எழுத்தும் யாருடையது என்று கேட்டார். அதற்கு அவர்கள்: இராயனுடையது என்றார்கள்.
ಇಹ ಲಿಖಿತಾ ಮೂರ್ತಿರಿಯಂ ನಾಮ ಚ ಕಸ್ಯ? ತೇಽವದನ್ ಕೈಸರಸ್ಯ|
25 ௨௫ அதற்கு அவர்: அப்படியானால், இராயனுக்குரியதை இராயனுக்கும், தேவனுக்குரியதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.
ತದಾ ಸ ಉವಾಚ, ತರ್ಹಿ ಕೈಸರಸ್ಯ ದ್ರವ್ಯಂ ಕೈಸರಾಯ ದತ್ತ; ಈಶ್ವರಸ್ಯ ತು ದ್ರವ್ಯಮೀಶ್ವರಾಯ ದತ್ತ|
26 ௨௬ அவர்கள் அவரை மக்களுக்கு முன்பாகப் பேச்சிலே குற்றம்பிடிக்கக்கூடாமல், அவர் சொன்ன பதிலைக்குறித்து ஆச்சரியப்பட்டு, மவுனமாக இருந்தார்கள்.
ತಸ್ಮಾಲ್ಲೋಕಾನಾಂ ಸಾಕ್ಷಾತ್ ತತ್ಕಥಾಯಾಃ ಕಮಪಿ ದೋಷಂ ಧರ್ತುಮಪ್ರಾಪ್ಯ ತೇ ತಸ್ಯೋತ್ತರಾದ್ ಆಶ್ಚರ್ಯ್ಯಂ ಮನ್ಯಮಾನಾ ಮೌನಿನಸ್ತಸ್ಥುಃ|
27 ௨௭ உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிற சதுசேயர்களில் சிலர் அவரிடத்தில் வந்து:
ಅಪರಞ್ಚ ಶ್ಮಶಾನಾದುತ್ಥಾನಾನಙ್ಗೀಕಾರಿಣಾಂ ಸಿದೂಕಿನಾಂ ಕಿಯನ್ತೋ ಜನಾ ಆಗತ್ಯ ತಂ ಪಪ್ರಚ್ಛುಃ,
28 ௨௮ போதகரே, ஒருவன் மனைவியையுடையவனாக இருந்து சந்ததியில்லாமல் மரித்துப்போனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியைத் திருமணம்செய்து, தன் சகோதரனுக்குச் சந்ததியுண்டாக்கவேண்டும் என்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே.
ಹೇ ಉಪದೇಶಕ ಶಾಸ್ತ್ರೇ ಮೂಸಾ ಅಸ್ಮಾನ್ ಪ್ರತೀತಿ ಲಿಲೇಖ ಯಸ್ಯ ಭ್ರಾತಾ ಭಾರ್ಯ್ಯಾಯಾಂ ಸತ್ಯಾಂ ನಿಃಸನ್ತಾನೋ ಮ್ರಿಯತೇ ಸ ತಜ್ಜಾಯಾಂ ವಿವಹ್ಯ ತದ್ವಂಶಮ್ ಉತ್ಪಾದಯಿಷ್ಯತಿ|
29 ௨௯ சகோதரர்கள் ஏழுபேரிருந்தார்கள், அவர்களில் மூத்தவன் ஒரு பெண்ணைத் திருமணம்செய்து சந்ததியில்லாமல் மரித்துப்போனான்.
ತಥಾಚ ಕೇಚಿತ್ ಸಪ್ತ ಭ್ರಾತರ ಆಸನ್ ತೇಷಾಂ ಜ್ಯೇಷ್ಠೋ ಭ್ರಾತಾ ವಿವಹ್ಯ ನಿರಪತ್ಯಃ ಪ್ರಾಣಾನ್ ಜಹೌ|
30 ௩0 பின்பு இரண்டாம் சகோதரன் அவளைத் திருமணம்செய்து அவனும் சந்ததியில்லாமல் மரித்துப்போனான்.
ಅಥ ದ್ವಿತೀಯಸ್ತಸ್ಯ ಜಾಯಾಂ ವಿವಹ್ಯ ನಿರಪತ್ಯಃ ಸನ್ ಮಮಾರ| ತೃತೀಯಶ್ಚ ತಾಮೇವ ವ್ಯುವಾಹ;
31 ௩௧ மூன்றாம் சகோதரனும் அவளை திருமணம் செய்தான். அப்படியே ஏழுபேரும் அவளைத் திருமணம்செய்து சந்ததியில்லாமல் மரித்துப்போனார்கள்.
ಇತ್ಥಂ ಸಪ್ತ ಭ್ರಾತರಸ್ತಾಮೇವ ವಿವಹ್ಯ ನಿರಪತ್ಯಾಃ ಸನ್ತೋ ಮಮ್ರುಃ|
32 ௩௨ எல்லோருக்கும்பின்பு அந்த பெண்ணும் மரித்துப்போனாள்.
ಶೇಷೇ ಸಾ ಸ್ತ್ರೀ ಚ ಮಮಾರ|
33 ௩௩ இவ்விதமாக ஏழுபேரும் அவளைத் திருமணம் செய்திருக்க, உயிர்த்தெழுதலில் அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாக இருப்பாள் என்று கேட்டார்கள்.
ಅತಏವ ಶ್ಮಶಾನಾದುತ್ಥಾನಕಾಲೇ ತೇಷಾಂ ಸಪ್ತಜನಾನಾಂ ಕಸ್ಯ ಸಾ ಭಾರ್ಯ್ಯಾ ಭವಿಷ್ಯತಿ? ಯತಃ ಸಾ ತೇಷಾಂ ಸಪ್ತಾನಾಮೇವ ಭಾರ್ಯ್ಯಾಸೀತ್|
34 ௩௪ இயேசு அவர்களுக்குப் மறுமொழியாக: இந்த உலகத்தின் மக்கள் பெண் எடுத்தும் பெண் கொடுத்தும் வருகிறார்கள். (aiōn )
ತದಾ ಯೀಶುಃ ಪ್ರತ್ಯುವಾಚ, ಏತಸ್ಯ ಜಗತೋ ಲೋಕಾ ವಿವಹನ್ತಿ ವಾಗ್ದತ್ತಾಶ್ಚ ಭವನ್ತಿ (aiōn )
35 ௩௫ மறுமையையும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்குதலையும் அடைய தகுதியானவராக எண்ணப்படுகிறவர்களோ பெண் எடுப்பதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை. (aiōn )
ಕಿನ್ತು ಯೇ ತಜ್ಜಗತ್ಪ್ರಾಪ್ತಿಯೋಗ್ಯತ್ವೇನ ಗಣಿತಾಂ ಭವಿಷ್ಯನ್ತಿ ಶ್ಮಶಾನಾಚ್ಚೋತ್ಥಾಸ್ಯನ್ತಿ ತೇ ನ ವಿವಹನ್ತಿ ವಾಗ್ದತ್ತಾಶ್ಚ ನ ಭವನ್ತಿ, (aiōn )
36 ௩௬ அவர்கள் இனி மரிக்கவும் மாட்டார்கள்; அவர்கள் உயிர்த்தெழுதலின் மக்களானபடியால் தேவதூதர்களுக்கு நிகரானவர்களுமாக, தேவனுடைய மக்களுமாக இருப்பார்கள்.
ತೇ ಪುನ ರ್ನ ಮ್ರಿಯನ್ತೇ ಕಿನ್ತು ಶ್ಮಶಾನಾದುತ್ಥಾಪಿತಾಃ ಸನ್ತ ಈಶ್ವರಸ್ಯ ಸನ್ತಾನಾಃ ಸ್ವರ್ಗೀಯದೂತಾನಾಂ ಸದೃಶಾಶ್ಚ ಭವನ್ತಿ|
37 ௩௭ அல்லாமலும் மரித்தோர் உயிரோடு எழுந்திருப்பார்களென்பதை மோசேயும் முட்செடியைப்பற்றிய வாக்கியத்தில் காண்பித்திருக்கிறார். எப்படியென்றால், யெகோவாவை ஆபிரகாமின் தேவனென்றும் ஈசாக்கின் தேவனென்றும் யாக்கோபின் தேவனென்றும் சொல்லியிருக்கிறார்.
ಅಧಿಕನ್ತು ಮೂಸಾಃ ಸ್ತಮ್ಬೋಪಾಖ್ಯಾನೇ ಪರಮೇಶ್ವರ ಈಬ್ರಾಹೀಮ ಈಶ್ವರ ಇಸ್ಹಾಕ ಈಶ್ವರೋ ಯಾಕೂಬಶ್ಚೇಶ್ವರ ಇತ್ಯುಕ್ತ್ವಾ ಮೃತಾನಾಂ ಶ್ಮಶಾನಾದ್ ಉತ್ಥಾನಸ್ಯ ಪ್ರಮಾಣಂ ಲಿಲೇಖ|
38 ௩௮ அவர் மரித்தோரின் தேவனாக இல்லாமல், ஜீவனுள்ளோரின் தேவனாக இருக்கிறார்; எல்லோரும் அவருக்குள் பிழைத்திருக்கிறார்களே என்றார்.
ಅತಏವ ಯ ಈಶ್ವರಃ ಸ ಮೃತಾನಾಂ ಪ್ರಭು ರ್ನ ಕಿನ್ತು ಜೀವತಾಮೇವ ಪ್ರಭುಃ, ತನ್ನಿಕಟೇ ಸರ್ವ್ವೇ ಜೀವನ್ತಃ ಸನ್ತಿ|
39 ௩௯ அப்பொழுது வேதபண்டிதர்களில் சிலர் அதைக்கேட்டு: போதகரே, நன்றாகச் சொன்னீர் என்றார்கள்.
ಇತಿ ಶ್ರುತ್ವಾ ಕಿಯನ್ತೋಧ್ಯಾಪಕಾ ಊಚುಃ, ಹೇ ಉಪದೇಶಕ ಭವಾನ್ ಭದ್ರಂ ಪ್ರತ್ಯುಕ್ತವಾನ್|
40 ௪0 அதன்பின்பு அவர்கள் அவரிடத்தில் வேறொன்றும் கேட்கத் துணியவில்லை.
ಇತಃ ಪರಂ ತಂ ಕಿಮಪಿ ಪ್ರಷ್ಟಂ ತೇಷಾಂ ಪ್ರಗಲ್ಭತಾ ನಾಭೂತ್|
41 ௪௧ அவர் அவர்களைப் பார்த்து: கிறிஸ்து தாவீதின் குமாரனென்று எப்படிச் சொல்லுகிறார்கள்?
ಪಶ್ಚಾತ್ ಸ ತಾನ್ ಉವಾಚ, ಯಃ ಖ್ರೀಷ್ಟಃ ಸ ದಾಯೂದಃ ಸನ್ತಾನ ಏತಾಂ ಕಥಾಂ ಲೋಕಾಃ ಕಥಂ ಕಥಯನ್ತಿ?
42 ௪௨ நான் உம்முடைய விரோதிகளை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்று,
ಯತಃ ಮಮ ಪ್ರಭುಮಿದಂ ವಾಕ್ಯಮವದತ್ ಪರಮೇಶ್ವರಃ| ತವ ಶತ್ರೂನಹಂ ಯಾವತ್ ಪಾದಪೀಠಂ ಕರೋಮಿ ನ| ತಾವತ್ ಕಾಲಂ ಮದೀಯೇ ತ್ವಂ ದಕ್ಷಪಾರ್ಶ್ವ ಉಪಾವಿಶ|
43 ௪௩ யெகோவா என் ஆண்டவருடனே சொன்னார் என்று தாவீது தானே சங்கீத புத்தகத்தில் சொல்லுகிறானே.
ಇತಿ ಕಥಾಂ ದಾಯೂದ್ ಸ್ವಯಂ ಗೀತಗ್ರನ್ಥೇಽವದತ್|
44 ௪௪ தாவீது அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாக இருப்பது எப்படி” என்றார்.
ಅತಏವ ಯದಿ ದಾಯೂದ್ ತಂ ಪ್ರಭುಂ ವದತಿ, ತರ್ಹಿ ಸ ಕಥಂ ತಸ್ಯ ಸನ್ತಾನೋ ಭವತಿ?
45 ௪௫ பின்பு மக்களெல்லோரும் கேட்கும்போது அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து:
ಪಶ್ಚಾದ್ ಯೀಶುಃ ಸರ್ವ್ವಜನಾನಾಂ ಕರ್ಣಗೋಚರೇ ಶಿಷ್ಯಾನುವಾಚ,
46 ௪௬ “நீண்ட அங்கிகளை அணிந்துகொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வணக்கங்களைப் பெறவும், ஜெப ஆலயங்களில் முதன்மையான இருக்கைகளில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி,
ಯೇಽಧ್ಯಾಪಕಾ ದೀರ್ಘಪರಿಚ್ಛದಂ ಪರಿಧಾಯ ಭ್ರಮನ್ತಿ, ಹಟ್ಟಾಪಣಯೋ ರ್ನಮಸ್ಕಾರೇ ಭಜನಗೇಹಸ್ಯ ಪ್ರೋಚ್ಚಾಸನೇ ಭೋಜನಗೃಹಸ್ಯ ಪ್ರಧಾನಸ್ಥಾನೇ ಚ ಪ್ರೀಯನ್ತೇ
47 ௪௭ விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்செய்கிற வேதபண்டிதர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள், அவர்கள் அதிக தண்டனையை அடைவார்கள்” என்றார்.
ವಿಧವಾನಾಂ ಸರ್ವ್ವಸ್ವಂ ಗ್ರಸಿತ್ವಾ ಛಲೇನ ದೀರ್ಘಕಾಲಂ ಪ್ರಾರ್ಥಯನ್ತೇ ಚ ತೇಷು ಸಾವಧಾನಾ ಭವತ, ತೇಷಾಮುಗ್ರದಣ್ಡೋ ಭವಿಷ್ಯತಿ|