< லூக்கா 18 >

1 சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக்குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
彼はまた,いつも祈っていなければならず,あきらめてはならないことを,彼らにたとえで話して
2 ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனிதர்களை மதிக்காதவனுமாக இருந்தான்.
言った,「ある町に,神を恐れず,人をも敬わない一人の裁判官がいた。
3 அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம்பண்ணினாள்.
その町には一人のやもめがおり,何度も彼のもとに来ては,『わたしを訴える者からわたしを弁護してください!』と言っていた。
4 வெகுநாட்கள்வரை அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன்: நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனிதர்களை மதிக்காமலும் இருந்தும்,
彼は,しばらくの間はそうしようとはしなかったが,後になって自分に言った,『わたしは神を恐れず,人をも敬わないが,
5 இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னைத் தொந்தரவுசெய்யாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார்.
それでもこのやもめがわたしを煩わすので,彼女を弁護してやろう。そうしないと,彼女は絶え間なくやって来て,わたしを疲れ果てさせるだろう』」 。
6 பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி: அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள்.
主は言った,「この不義の裁判官の言うことを聞きなさい。
7 அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் காரியத்தில் நீடிய பொறுமையுள்ளவராக இருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?
まして神は,昼も夜もご自分に向かって叫んでいる,ご自分の選ばれた者たちのあだを討たずに,彼らのことを我慢し続けられることがあるだろうか。
8 சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆனாலும் மனிதகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.
あなた方に告げるが,神は速やかに彼らのあだを討たれるだろう。それでも,人の子が来る時,地上に信仰を見いだすだろうか」 。
9 அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாக எண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
彼はまた,自分の義を確信しており,他のすべての人たちをさげすんでいたある人々に対して,次のたとえを語った。
10 ௧0 இரண்டு மனிதர்கள் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்திற்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் வரி வசூலிப்பவன்.
「二人の人が祈るために神殿に上って行った。一人はファリサイ人で,もう一人は徴税人だった。
11 ௧௧ பரிசேயன் நின்று: தேவனே! நான் கொள்ளைக்காரர்கள், அநியாயக்காரர்கள், விபசாரக்காரர்கள் ஆகிய மற்ற மனிதர்களைப்போலவும், இந்த வரி வசூலிப்பவனைப்போலவும் இராததினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
ファリサイ人は立って,自分の中でこのように祈った。『神よ,わたしがほかの者たち,すなわち,奪い取る者たち,不義の者たち,姦淫を犯す者たちのようでなく,さらにはこの徴税人のようでさえないことに感謝します。
12 ௧௨ வாரத்தில் இரண்டுமுறை உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் பத்தில் ஒரு பங்கு காணிக்கை செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.
わたしは週に二度断食しています。自分の得るすべてのものの十分の一税をささげています』。
13 ௧௩ வரி வசூலிப்பவன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்திற்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாக இரும் என்றான்.
だが,徴税人は,遠くに立ち,目を天に上げようともせず,胸を打ちながら言った,『神よ,罪人のわたしをあわれんでください!』
14 ௧௪ அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாகத் தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனென்றால், தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
あなた方に告げるが,この人は,最初の人よりも義とされて自分の家に下って行った。だれでも自分を高くする者は低くされ,自分を低くする者は高くされるのだ」 。
15 ௧௫ பின்பு குழந்தைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். சீடர்கள் அதைக் கண்டு, கொண்டுவந்தவர்களை அதட்டினார்கள்.
人々はまた,彼に触ってもらおうとして,赤子たちを彼のもとに連れて来ていた。しかし,弟子たちはそれを見て,彼らをしかりつけた。
16 ௧௬ இயேசுவோ அவர்களைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டு: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.
イエスは彼らを呼び寄せて言った,「幼子たちがわたしのところに来るままにしておきなさい。彼らをとどめてはいけない。神の王国はこのような者たちのものだからだ。
17 ௧௭ எவனாவது சிறு பிள்ளையைப்போல தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
本当にはっきりとあなた方に告げる。神の王国を幼子のように受け入れない者は,決してその中に入ることはない」 。
18 ௧௮ அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனை பெற்றுக்கொள்வதற்க்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios g166)
ある支配者が彼に尋ねて言った,「善い先生,永遠の命を受け継ぐためには何をしたらよいでしょうか」。 (aiōnios g166)
19 ௧௯ அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்லுவானேன்? தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.
イエスは彼に答えた,「なぜ,わたしのことを善いと呼ぶのか。神おひとりのほかに善い者はいない。
20 ௨0 விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கட்டளைகளை நீ தெரிந்திருக்கிறாயே என்றார்.
あなたはおきてを知っている。『姦淫を犯してはいけない』,『殺してはいけない』,『盗んではいけない』,『偽りの証言をしてはいけない』,『だまし取ってはいけない』,『あなたの父と母を敬いなさい』」 。
21 ௨௧ அதற்கு அவன்: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான்.
彼は言った,「わたしはそうした事すべてを幼いころから守ってきました」。
22 ௨௨ இயேசு அதைக்கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரர்களுக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்கு செல்வம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
イエスはこれらの事を聞いて,彼に言った,「あなたにはまだ一つのことが足りない。自分の持ち物をみな売って,貧しい人々に配りなさい。あなたは天に宝を持つことになる。来て,わたしに従いなさい」 。
23 ௨௩ அவன் அதிக செல்வந்தனானபடியினால், இதைக் கேட்டபொழுது, மிகுந்த துக்கமடைந்தான்.
しかし,彼はこれらの事を聞いてひどく悲しんだ。非常に富んでいたからである。
24 ௨௪ அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாக இருக்கிறது.
彼がひどく悲しむのを見ながら,イエスは言った,「富んだ人たちが神の王国に入るのは,何と難しいことか!
25 ௨௫ செல்வந்தன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்றார்.
富んだ人が神の王国に入るよりは,ラクダが針の穴を通り抜ける方が易しいのだ」 。
26 ௨௬ அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள்.
彼らはこれを聞いて言った,「それでは,だれが救いを得られるのですか」。
27 ௨௭ அதற்கு அவர்: மனிதர்களால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்.
しかし彼は言った,「人には不可能な事柄でも,神には可能なのだ」 。
28 ௨௮ அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே என்றான்.
ペトロが言った,「ご覧ください,わたしたちは何もかも後にして,あなたに従いました」。
29 ௨௯ அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் வீட்டையாவது, பெற்றோரையாவது, சகோதரர்களையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது விட்டுவிட்ட எவனும்,
イエスは言った,「本当にはっきりとあなた方に告げる。神の王国のために,家,妻,兄弟たち,両親,あるいは子供たちを後にする者で,
30 ௩0 இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (aiōn g165, aiōnios g166)
今この時に何倍も受け,また来たるべき世で永遠の命を受けない者はいない」 。 (aiōn g165, aiōnios g166)
31 ௩௧ பின்பு அவர் பன்னிருவரையும் தம்மிடத்தில் அழைத்து: இதோ, எருசலேமுக்குப் போகிறோம், மனிதகுமாரனைக்குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவைகளெல்லாம் நிறைவேறும்.
彼は十二人をわきに連れて行き,彼らに言った,「見よ,わたしたちはエルサレムに上って行く。そして,人の子について,預言者たちを通して書かれたことはみな成し遂げられるだろう。
32 ௩௨ எப்படியென்றால், அவர் யூதரல்லாதவரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, பரிகாசமும் நிந்தையும் அடைந்து, துப்பப்படுவார்.
彼は異邦人たちに引き渡され,あざけられ,ひどい扱いを受け,つばをかけられる。
33 ௩௩ அவரை சாட்டையினால் அடித்து, கொலைசெய்வார்கள்; மூன்றாம்நாளிலே அவர் உயிரோடு எழுந்திருப்பார் என்றார்.
彼らは彼をむち打ち,殺すだろう。三日目に彼は生き返る」 。
34 ௩௪ இவைகளில் ஒன்றையும் அவர்கள் உணரவில்லை; அவைகளின் பொருள் அவர்களுக்கு மறைவாக இருந்தது, அவர் சொன்னவைகளை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.
彼らはこれらのことを理解しなかった。この言葉は彼らから隠されており,彼らは語られたことを理解しなかったのである。
35 ௩௫ பின்பு இயேசு எரிகோவிற்கு சமீபமாக வந்தபோது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.
彼がエリコに近づいていた時のこと,ある盲人が道ばたに座って物ごいをしていた。
36 ௩௬ மக்கள் நடக்கிற சத்தத்தை அவன் கேட்டு, இதென்ன என்று விசாரித்தான்.
群衆が通り過ぎるのを耳にして,これは何事かと尋ねた。
37 ௩௭ நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அவன்: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான்.
人々は,ナザレのイエスが通って行くのだと彼に告げた。
38 ௩௮ முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ: இயேசுவே தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாகக் கூப்பிட்டான்.
彼は叫んで言った,「ダビデの子イエスよ,わたしをあわれんでください!」
39 ௩௯ இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார்.
先を行く者たちが彼をしかりつけ,黙らせようとしたが,彼はますます,「ダビデの子よ,わたしをあわれんでください!」と叫び続けた。
40 ௪0 அவன் அருகில் வந்தபோது, இயேசு அவனை நோக்கி:
イエスは立ち止まって,彼を連れて来るようにと命じた。彼が近づいて来ると,イエスは彼に尋ねた,
41 ௪௧ நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்.
「何をして欲しいのか」 。 彼は言った,「主よ,また見えるようになることです」。
42 ௪௨ இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.
イエスは彼に言った,「見えるようになりなさい。あなたの信仰があなたをいやしたのだ」 。
43 ௪௩ உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக்கொண்டே, அவருக்குப் பின்னேசென்றான். மக்களெல்லோரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள்.
すぐに彼は見えるようになり,神に栄光をささげながらイエスに従った。それを見て,人々はみな神をたたえた。

< லூக்கா 18 >