< லூக்கா 17 >

1 பின்பு இயேசு தம்முடைய சீடர்களை நோக்கி: இடறல்கள் வராமல் இருக்கமுடியாது, ஆனாலும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!
А ученицима рече: Није могуће да не дођу саблазни; али тешко ономе с кога долазе;
2 அவன் இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறதைவிட, அவனுடைய கழுத்தில் எந்திரக்கல் கட்டப்பட்டு, அவன் கடலில் தள்ளுண்டுபோவது அவனுக்கு நலமாக இருக்கும்.
Боље би му било да му се воденични камен обеси о врату, и да га баце у море, него да саблазни једног од ових малих.
3 உங்களைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றம் செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனம் வருந்தினால், அவனுக்கு மன்னிப்பாயாக.
Чувајте се. Ако ти сагреши брат твој, накарај га; па ако се покаје, опрости му.
4 அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாகக் குற்றம் செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: நான் மனம் வருந்துகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக என்றார்.
И ако ти седам пута на дан сагреши, и седам пута на дан дође к теби и рече: Кајем се, опрости му.
5 அப்பொழுது அப்போஸ்தலர்கள் கர்த்த்தரை நோக்கி: எங்களுடைய விசுவாசத்தை பெருகப்பண்ணவேண்டும் என்றார்கள்.
И рекоше апостоли Господу: Дометни нам вере.
6 அதற்குக் கர்த்தர்: கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடு பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.
А Господ рече: Кад бисте имали вере колико зрно горушичино, и рекли бисте овом дубу: Ишчупај се и усади се у море, и послушао би вас.
7 உங்களில் ஒருவனுடைய வேலைக்காரன் உழுது அல்லது மந்தையை மேய்த்து வயலிலிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: நீ முன்புபோய்ச் சாப்பிட்டுவா என்று அவனுக்குச் சொல்வானோ?
Који пак од вас кад има слугу који оре или чува стоку па кад дође из поља, каже му: Ходи брзо и седи за трпезу?
8 நீ எனக்குச் சாப்பாடு ஆயத்தம்பண்ணி, பரிமாறும் உடை அணிந்துக்கொண்டு, ஆகாரம் உட்கொள்ளும்வரை எனக்கு வேலைச்செய், அதற்குப்பின் நீ புசித்துக் குடிக்கலாம் என்று அவனுக்குச் சொல்லுவானல்லவா?
Него не каже ли му: Уготови ми да вечерам, и запрегни се те ми служи док једем и пијем, па онда и ти једи и пиј?
9 தான் கட்டளையிட்டவைகளை அந்த வேலைக்காரன் செய்ததற்காக அவனுக்கு நன்றி சொல்லுவானோ? அப்படிச் செய்யமாட்டானே.
Еда ли ће он захвалити слузи том кад сврши шта му се заповеди? Не верујем.
10 ௧0 அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்தபின்பு: நாங்கள் பயனற்ற வேலைக்காரர்கள், செய்யவேண்டிய கடமையைமட்டும் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார்.
Тако и ви кад свршите све што вам је заповеђено, говорите: Ми смо залудне слуге, јер учинисмо шта смо били дужни чинити.
11 ௧௧ பின்பு அவர் எருசலேமுக்குப் பயணமாகபோகும்போது, அவர் சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின்வழியாக நடந்துபோனார்.
И кад иђаше у Јерусалим, Он пролажаше између Самарије и Галилеје.
12 ௧௨ அவர் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தபோது, குஷ்டரோகமுள்ள மனிதர்கள் பத்துபேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று:
И кад улажаше у једно село сретоше Га десет губавих људи, који сташе издалека,
13 ௧௩ இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள்.
И подигоше глас говорећи: Исусе учитељу! Помилуј нас.
14 ௧௪ அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகும்போது சுகமானார்கள்.
И видевши их рече им: Идите и покажите се свештеницима. И они идући очистише се.
15 ௧௫ அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தமாக தேவனை மகிமைப்படுத்தி,
А један од њих видевши да се исцели поврати се хвалећи Бога гласно,
16 ௧௬ அவருடைய பாதத்தருகே முகங்குப்புறவிழுந்து, அவருக்கு நன்றி செலுத்தினான்; அவன் சமாரியனாக இருந்தான்.
И паде ничице пред ноге Његове, и захвали Му. И то беше Самарјанин.
17 ௧௭ அப்பொழுது இயேசு: சுகமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே?
А Исус одговарајући рече: Не исцелише ли се десеторица? Где су дакле деветорица?
18 ௧௮ தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனைத்தவிர மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி,
Како се међу њима који не нађе да се врати да захвали Богу, него сам овај туђин?
19 ௧௯ அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.
И рече му: Устани, иди; вера твоја поможе ти.
20 ௨0 தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர்கள் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் மறுமொழியாக: தேவனுடைய ராஜ்யம் கண்களுக்குத் தெரியும்படியாக வராது.
А кад Га упиташе фарисеји: Кад ће доћи царство Божије? Одговарајући рече им: Царство Божије неће доћи да се види;
21 ௨௧ இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவாக இருக்காது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்.
Нити ће се казати: Ево га овде или онде; јер гле, царство је Божије унутра у вама.
22 ௨௨ பின்பு அவர் சீடர்களை நோக்கி: மனிதகுமாரனுடைய நாட்களிலொன்றைக் காணவேண்டுமென்று நீங்கள் ஆசைப்படுங்காலம் வரும்; ஆனாலும் அதைக் காணமாட்டீர்கள்.
А ученицима рече: Доћи ће време кад ћете зажелети да видите један дан Сина човечијег, и нећете видети.
23 ௨௩ இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும், சிலர் உங்களிடம் சொல்லுவார்கள்; நீங்களோ போகாமலும் பின்தொடராமலும் இருங்கள்.
И рећи ће вам: Ево овде је, или: Ено онде; али не излазите, нити тражите.
24 ௨௪ மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனிதகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார்.
Јер као што муња сине с неба, и засветли се преко свега што је под небом, тако ће бити и Син човечији у свој дан.
25 ௨௫ அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுகள்பட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாக இருக்கிறது.
Али Му најпре треба много пострадати, и окривљеном бити од рода овог.
26 ௨௬ நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனிதகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்.
И како је било у време Нојево онако ће бити у дане Сина човечијег:
27 ௨௭ நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரை மக்கள் புசித்துக் குடித்தார்கள், பெண் எடுத்தும் பெண் கொடுத்தும் இருந்தார்கள்; பெருவெள்ளம் வந்து எல்லோரையும் அழித்துப்போட்டது.
Јеђаху, пијаху, жењаху се, удаваху се до оног дана кад Ноје уђе у ковчег, и дође потоп и погуби све.
28 ௨௮ லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; மக்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள்.
Тако као што би у дане Лотове: јеђаху, пијаху, куповаху, продаваху, сађаху, зидаху;
29 ௨௯ லோத்து சோதோமைவிட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் பெய்து, எல்லோரையும் அழித்துப்போட்டது.
А у дан кад изиђе Лот из Содома, удари огањ и сумпор из неба и погуби све.
30 ௩0 மனிதகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.
Тако ће бити и у онај дан кад ће се јавити Син човечији.
31 ௩௧ அந்த நாளிலே வீட்டின்மேலிருப்பவன் வீட்டிலுள்ள தன் பொருட்களை எடுத்துக்கொண்டுபோக இறங்காமல் இருக்கவேண்டும்; அப்படியே வயலிலிருக்கிறவன் பின்னிட்டுத் திரும்பாமலும் இருக்கவேண்டும்.
У онај дан који се деси на крову, а покућство његово у кући, нека не силази да га узме; и који се деси у пољу, тако нека се не враћа натраг.
32 ௩௨ லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்.
Опомињите се жене Лотове.
33 ௩௩ தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்துபோவான்; இழந்துபோகிறவன் அதை உயிர்ப்பித்துக்கொள்ளுவான்.
Који пође да сачува душу своју, изгубиће је; а који је изгуби, оживеће је.
34 ௩௪ அந்த இரவில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான்.
Кажем вам: у ону ноћ биће два на једном одру, један ће се узети а други ће се оставити;
35 ௩௫ மாவரைக்கிற இரண்டு பெண்களில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள்.
Две ће млети заједно, једна ће се узети а друга ће се оставити;
36 ௩௬ வயலிலிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Два ће бити на њиви, један ће се узети а други ће се оставити.
37 ௩௭ அவர்கள் அவருக்கு மறுமொழியாக: எங்கே, ஆண்டவரே, என்றார்கள். அதற்கு அவர்: பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்றார்.
И одговарајући рекоше Му: Где, Господе? А Он им рече: Где је стрвина онамо ће се и орлови скупити.

< லூக்கா 17 >