< லூக்கா 17 >
1 ௧ பின்பு இயேசு தம்முடைய சீடர்களை நோக்கி: இடறல்கள் வராமல் இருக்கமுடியாது, ஆனாலும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!
ఇతః పరం యీశుః శిష్యాన్ ఉవాచ, విఘ్నైరవశ్యమ్ ఆగన్తవ్యం కిన్తు విఘ్నా యేన ఘటిష్యన్తే తస్య దుర్గతి ర్భవిష్యతి|
2 ௨ அவன் இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறதைவிட, அவனுடைய கழுத்தில் எந்திரக்கல் கட்டப்பட்டு, அவன் கடலில் தள்ளுண்டுபோவது அவனுக்கு நலமாக இருக்கும்.
ఏతేషాం క్షుద్రప్రాణినామ్ ఏకస్యాపి విఘ్నజననాత్ కణ్ఠబద్ధపేషణీకస్య తస్య సాగరాగాధజలే మజ్జనం భద్రం|
3 ௩ உங்களைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றம் செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனம் வருந்தினால், அவனுக்கு மன்னிப்பாயாக.
యూయం స్వేషు సావధానాస్తిష్ఠత; తవ భ్రాతా యది తవ కిఞ్చిద్ అపరాధ్యతి తర్హి తం తర్జయ, తేన యది మనః పరివర్త్తయతి తర్హి తం క్షమస్వ|
4 ௪ அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாகக் குற்றம் செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: நான் மனம் வருந்துகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக என்றார்.
పునరేకదినమధ్యే యది స తవ సప్తకృత్వోఽపరాధ్యతి కిన్తు సప్తకృత్వ ఆగత్య మనః పరివర్త్య మయాపరాద్ధమ్ ఇతి వదతి తర్హి తం క్షమస్వ|
5 ௫ அப்பொழுது அப்போஸ்தலர்கள் கர்த்த்தரை நோக்கி: எங்களுடைய விசுவாசத்தை பெருகப்பண்ணவேண்டும் என்றார்கள்.
తదా ప్రేరితాః ప్రభుమ్ అవదన్ అస్మాకం విశ్వాసం వర్ద్ధయ|
6 ௬ அதற்குக் கர்த்தர்: கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடு பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.
ప్రభురువాచ, యది యుష్మాకం సర్షపైకప్రమాణో విశ్వాసోస్తి తర్హి త్వం సమూలముత్పాటితో భూత్వా సముద్రే రోపితో భవ కథాయామ్ ఏతస్యామ్ ఏతదుడుమ్బరాయ కథితాయాం స యుష్మాకమాజ్ఞావహో భవిష్యతి|
7 ௭ உங்களில் ஒருவனுடைய வேலைக்காரன் உழுது அல்லது மந்தையை மேய்த்து வயலிலிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: நீ முன்புபோய்ச் சாப்பிட்டுவா என்று அவனுக்குச் சொல்வானோ?
అపరం స్వదాసే హలం వాహయిత్వా వా పశూన్ చారయిత్వా క్షేత్రాద్ ఆగతే సతి తం వదతి, ఏహి భోక్తుముపవిశ, యుష్మాకమ్ ఏతాదృశః కోస్తి?
8 ௮ நீ எனக்குச் சாப்பாடு ஆயத்தம்பண்ணி, பரிமாறும் உடை அணிந்துக்கொண்டு, ஆகாரம் உட்கொள்ளும்வரை எனக்கு வேலைச்செய், அதற்குப்பின் நீ புசித்துக் குடிக்கலாம் என்று அவனுக்குச் சொல்லுவானல்லவா?
వరఞ్చ పూర్వ్వం మమ ఖాద్యమాసాద్య యావద్ భుఞ్జే పివామి చ తావద్ బద్ధకటిః పరిచర పశ్చాత్ త్వమపి భోక్ష్యసే పాస్యసి చ కథామీదృశీం కిం న వక్ష్యతి?
9 ௯ தான் கட்டளையிட்டவைகளை அந்த வேலைக்காரன் செய்ததற்காக அவனுக்கு நன்றி சொல்லுவானோ? அப்படிச் செய்யமாட்டானே.
తేన దాసేన ప్రభోరాజ్ఞానురూపే కర్మ్మణి కృతే ప్రభుః కిం తస్మిన్ బాధితో జాతః? నేత్థం బుధ్యతే మయా|
10 ௧0 அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்தபின்பு: நாங்கள் பயனற்ற வேலைக்காரர்கள், செய்யவேண்டிய கடமையைமட்டும் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார்.
ఇత్థం నిరూపితేషు సర్వ్వకర్మ్మసు కృతేషు సత్ము యూయమపీదం వాక్యం వదథ, వయమ్ అనుపకారిణో దాసా అస్మాభిర్యద్యత్కర్త్తవ్యం తన్మాత్రమేవ కృతం|
11 ௧௧ பின்பு அவர் எருசலேமுக்குப் பயணமாகபோகும்போது, அவர் சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின்வழியாக நடந்துபோனார்.
స యిరూశాలమి యాత్రాం కుర్వ్వన్ శోమిరోణ్గాలీల్ప్రదేశమధ్యేన గచ్ఛతి,
12 ௧௨ அவர் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தபோது, குஷ்டரோகமுள்ள மனிதர்கள் பத்துபேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று:
ఏతర్హి కుత్రచిద్ గ్రామే ప్రవేశమాత్రే దశకుష్ఠినస్తం సాక్షాత్ కృత్వా
13 ௧௩ இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள்.
దూరే తిష్ఠనత ఉచ్చై ర్వక్తుమారేభిరే, హే ప్రభో యీశో దయస్వాస్మాన్|
14 ௧௪ அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகும்போது சுகமானார்கள்.
తతః స తాన్ దృష్ట్వా జగాద, యూయం యాజకానాం సమీపే స్వాన్ దర్శయత, తతస్తే గచ్ఛన్తో రోగాత్ పరిష్కృతాః|
15 ௧௫ அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தமாக தேவனை மகிமைப்படுத்தி,
తదా తేషామేకః స్వం స్వస్థం దృష్ట్వా ప్రోచ్చైరీశ్వరం ధన్యం వదన్ వ్యాఘుట్యాయాతో యీశో ర్గుణాననువదన్ తచ్చరణాధోభూమౌ పపాత;
16 ௧௬ அவருடைய பாதத்தருகே முகங்குப்புறவிழுந்து, அவருக்கு நன்றி செலுத்தினான்; அவன் சமாரியனாக இருந்தான்.
స చాసీత్ శోమిరోణీ|
17 ௧௭ அப்பொழுது இயேசு: சுகமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே?
తదా యీశురవదత్, దశజనాః కిం న పరిష్కృతాః? తహ్యన్యే నవజనాః కుత్ర?
18 ௧௮ தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனைத்தவிர மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி,
ఈశ్వరం ధన్యం వదన్తమ్ ఏనం విదేశినం వినా కోప్యన్యో న ప్రాప్యత|
19 ௧௯ அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.
తదా స తమువాచ, త్వముత్థాయ యాహి విశ్వాసస్తే త్వాం స్వస్థం కృతవాన్|
20 ௨0 தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர்கள் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் மறுமொழியாக: தேவனுடைய ராஜ்யம் கண்களுக்குத் தெரியும்படியாக வராது.
అథ కదేశ్వరస్య రాజత్వం భవిష్యతీతి ఫిరూశిభిః పృష్టే స ప్రత్యువాచ, ఈశ్వరస్య రాజత్వమ్ ఐశ్వర్య్యదర్శనేన న భవిష్యతి|
21 ௨௧ இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவாக இருக்காது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்.
అత ఏతస్మిన్ పశ్య తస్మిన్ వా పశ్య, ఇతి వాక్యం లోకా వక్తుం న శక్ష్యన్తి, ఈశ్వరస్య రాజత్వం యుష్మాకమ్ అన్తరేవాస్తే|
22 ௨௨ பின்பு அவர் சீடர்களை நோக்கி: மனிதகுமாரனுடைய நாட்களிலொன்றைக் காணவேண்டுமென்று நீங்கள் ஆசைப்படுங்காலம் வரும்; ஆனாலும் அதைக் காணமாட்டீர்கள்.
తతః స శిష్యాన్ జగాద, యదా యుష్మాభి ర్మనుజసుతస్య దినమేకం ద్రష్టుమ్ వాఞ్ఛిష్యతే కిన్తు న దర్శిష్యతే, ఈదృక్కాల ఆయాతి|
23 ௨௩ இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும், சிலர் உங்களிடம் சொல்லுவார்கள்; நீங்களோ போகாமலும் பின்தொடராமலும் இருங்கள்.
తదాత్ర పశ్య వా తత్ర పశ్యేతి వాక్యం లోకా వక్ష్యన్తి, కిన్తు తేషాం పశ్చాత్ మా యాత, మానుగచ్ఛత చ|
24 ௨௪ மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனிதகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார்.
యతస్తడిద్ యథాకాశైకదిశ్యుదియ తదన్యామపి దిశం వ్యాప్య ప్రకాశతే తద్వత్ నిజదినే మనుజసూనుః ప్రకాశిష్యతే|
25 ௨௫ அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுகள்பட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாக இருக்கிறது.
కిన్తు తత్పూర్వ్వం తేనానేకాని దుఃఖాని భోక్తవ్యాన్యేతద్వర్త్తమానలోకైశ్చ సోఽవజ్ఞాతవ్యః|
26 ௨௬ நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனிதகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்.
నోహస్య విద్యమానకాలే యథాభవత్ మనుష్యసూనోః కాలేపి తథా భవిష్యతి|
27 ௨௭ நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரை மக்கள் புசித்துக் குடித்தார்கள், பெண் எடுத்தும் பெண் கொடுத்தும் இருந்தார்கள்; பெருவெள்ளம் வந்து எல்லோரையும் அழித்துப்போட்டது.
యావత్కాలం నోహో మహాపోతం నారోహద్ ఆప్లావివార్య్యేత్య సర్వ్వం నానాశయచ్చ తావత్కాలం యథా లోకా అభుఞ్జతాపివన్ వ్యవహన్ వ్యవాహయంశ్చ;
28 ௨௮ லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; மக்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள்.
ఇత్థం లోటో వర్త్తమానకాలేపి యథా లోకా భోజనపానక్రయవిక్రయరోపణగృహనిర్మ్మాణకర్మ్మసు ప్రావర్త్తన్త,
29 ௨௯ லோத்து சோதோமைவிட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் பெய்து, எல்லோரையும் அழித்துப்போட்டது.
కిన్తు యదా లోట్ సిదోమో నిర్జగామ తదా నభసః సగన్ధకాగ్నివృష్టి ర్భూత్వా సర్వ్వం వ్యనాశయత్
30 ௩0 மனிதகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.
తద్వన్ మానవపుత్రప్రకాశదినేపి భవిష్యతి|
31 ௩௧ அந்த நாளிலே வீட்டின்மேலிருப்பவன் வீட்டிலுள்ள தன் பொருட்களை எடுத்துக்கொண்டுபோக இறங்காமல் இருக்கவேண்டும்; அப்படியே வயலிலிருக்கிறவன் பின்னிட்டுத் திரும்பாமலும் இருக்கவேண்டும்.
తదా యది కశ్చిద్ గృహోపరి తిష్ఠతి తర్హి స గృహమధ్యాత్ కిమపి ద్రవ్యమానేతుమ్ అవరుహ్య నైతు; యశ్చ క్షేత్రే తిష్ఠతి సోపి వ్యాఘుట్య నాయాతు|
32 ௩௨ லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்.
లోటః పత్నీం స్మరత|
33 ௩௩ தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்துபோவான்; இழந்துபோகிறவன் அதை உயிர்ப்பித்துக்கொள்ளுவான்.
యః ప్రాణాన్ రక్షితుం చేష్టిష్యతే స ప్రాణాన్ హారయిష్యతి యస్తు ప్రాణాన్ హారయిష్యతి సఏవ ప్రాణాన్ రక్షిష్యతి|
34 ௩௪ அந்த இரவில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான்.
యుష్మానహం వచ్మి తస్యాం రాత్రౌ శయ్యైకగతయో ర్లోకయోరేకో ధారిష్యతే పరస్త్యక్ష్యతే|
35 ௩௫ மாவரைக்கிற இரண்டு பெண்களில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள்.
స్త్రియౌ యుగపత్ పేషణీం వ్యావర్త్తయిష్యతస్తయోరేకా ధారిష్యతే పరాత్యక్ష్యతే|
36 ௩௬ வயலிலிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
పురుషౌ క్షేత్రే స్థాస్యతస్తయోరేకో ధారిష్యతే పరస్త్యక్ష్యతే|
37 ௩௭ அவர்கள் அவருக்கு மறுமொழியாக: எங்கே, ஆண்டவரே, என்றார்கள். அதற்கு அவர்: பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்றார்.
తదా తే పప్రచ్ఛుః, హే ప్రభో కుత్రేత్థం భవిష్యతి? తతః స ఉవాచ, యత్ర శవస్తిష్ఠతి తత్ర గృధ్రా మిలన్తి|