< லூக்கா 16 >

1 பின்னும் அவர் தம்முடைய சீடர்களை நோக்கி: செல்வந்தனாகிய ஒரு மனிதனுக்கு நிர்வாகி ஒருவன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய சொத்துக்களை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது.
ⲁ̅ⲡⲉϫⲁϥ ⲇⲉ ⲛ̅ⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ ϫⲉ ⲛⲉⲩⲛⲟⲩⲣⲱⲙⲉ ⲣ̅ⲣⲙ̅ⲙⲁⲟ ⲉⲩⲛ̅ⲧⲁϥ ⲙ̅ⲙⲁⲩ ⲛⲟⲩⲟⲓⲕⲟⲛⲟⲙⲟⲥ ⲁⲩⲧⲁⲁϥ ⲇⲉ ⲛ̅ϣⲧⲟⲩⲏⲧʾ ϫⲉ ϥϫⲱⲱⲣⲉ ⲉⲃⲟⲗ ⲛ̅ⲛⲉϥϩⲩⲡⲁⲣⲭⲟⲛⲧⲁ
2 அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் நிர்வாகத்தின் கணக்கைக் கொடு, இனி நீ நிர்வாகியாக இருக்கக்கூடாது என்றான்.
ⲃ̅ⲁϥⲙⲟⲩⲧⲉ ⲉⲣⲟϥ ⲡⲉϫⲁϥ ⲛⲁϥ ϫⲉ ⲟⲩ ⲡⲉ ⲡⲁⲓ̈ ⲉϯⲥⲱⲧⲙ̅ ⲙ̅ⲙⲟϥ ⲉⲧⲃⲏⲧⲕ̅. ⲁⲩⲡⲱⲡ ⲛⲁⲓ̈ ⲛ̅ⲧⲉⲕⲟⲓⲕⲟⲛⲟⲙⲓⲁ ⲙ̅ⲙⲛ̅ϣϭⲟⲙ ⲅⲁⲣ ϫⲓⲛⲧⲉⲛⲟⲩ ⲉⲧⲣⲉⲕⲟⲓⲕⲟⲛⲟⲙⲓ.
3 அப்பொழுது அந்த நிர்வாகி: நான் என்ன செய்வேன், என் எஜமான் நிர்வாக பொறுப்பிலிருந்து என்னை நீக்கிப்போடுகிறானே நிலத்தை பண்படுத்துவதற்கும்; எனக்குப் பெலனில்லை, பிச்சையெடுக்கவும் வெட்கப்படுகிறேன்.
ⲅ̅ⲡⲉϫⲉⲡⲟⲓⲕⲟⲛⲟⲙⲟⲥ ⲇⲉ ϩⲙ̅ⲡⲉϥϩⲏⲧ ϫⲉ ⲉⲓ̈ⲛⲁⲣⲟⲩ ϫⲉ ⲡⲁϫⲟⲉⲓⲥ ⲛⲁϥⲓ ⲛ̅ⲧⲟⲓⲕⲟⲛⲟⲙⲓⲁ ⲛ̅ⲧⲟⲟⲧʾ ⲙ̅ⲙⲛ̅ϣϭⲟⲙ ⲙ̅ⲙⲟⲓ̈ ⲉϭⲣⲏ ⲁⲩⲱ ϯϣⲓⲡⲉ ⲉⲧⲱⲃⲁϩ.
4 நிர்வாகப் பொறுப்பைவிட்டு நான் நீக்கப்படும்போது, என்னைத் தங்களுடைய வீடுகளில் ஏற்றுக்கொள்ளுவார் உண்டாகும்படி செய்யவேண்டியது இன்னதென்று எனக்குத் தெரியவந்தது, என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு;
ⲇ̅ⲁⲓ̈ⲉ͡ⲓⲙⲉ ϫⲉ ⲉⲓ̈ⲛⲁⲣⲟⲩ ϫⲉⲕⲁⲥ ⲉⲩϣⲁⲛϥⲓⲧʾ ϩⲛⲧⲟⲓⲕⲟⲛⲟⲙⲓⲁ. ⲉⲩⲉϫⲓⲧʾ ⲉϩⲟⲩⲛ ⲉⲛⲉⲩⲏⲓ̈.
5 தன் எஜமானிடத்தில் கடன்பட்டவர்களை ஒவ்வொருவனாக வரவழைத்து: முதலாவது வந்தவனை நோக்கி: நீ என் எஜமானிடத்தில் பட்ட கடன் எவ்வளவு என்றான்.
ⲉ̅ⲁϥⲙⲟⲩⲧⲉ ⲇⲉ ⲉⲡⲟⲩⲁ ⲡⲟⲩⲁ ⲛ̅ⲛⲉⲧⲉⲟⲩⲛⲧⲉⲡⲉϥϫⲟⲉⲓⲥ ⲉⲣⲟⲟⲩ. ⲡⲉϫⲁϥ ⲙ̅ⲡϣⲟⲣⲡ̅ ϫⲉ ⲟⲩⲛⲧⲉⲡⲁϫⲟⲉⲓⲥⲟⲩⲏⲣ ⲉⲣⲟⲕ
6 அவன்: நூறுகுடம் எண்ணெய் என்றான். அப்பொழுது நிர்வாகி அவனை நோக்கி: நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, ஐம்பது என்று சீக்கிரமாக எழுது என்றான்.
ⲋ̅ⲛ̅ⲧⲟϥ ⲇⲉ ⲡⲉϫⲁϥ ϫⲉ ϣⲉ ⲃ̅ⲃⲁⲧⲟⲥ ⲛ̅ⲛⲉϩ. ⲡⲉϫⲁϥ ⲛⲁϥ ϫⲉ ϫⲓⲡⲉⲕⲥϩⲁⲓ̈ ⲛⲅ̅ϩⲙⲟⲟⲥ ϭⲉⲡⲏ ⲛⲅ̅ⲥϩⲁⲓ̈ ⲉⲧⲁⲓ̈ⲟⲩ.
7 பின்பு அவன் வேறொருவனை நோக்கி: நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறு மூட்டை கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டை வாங்கி, எண்பது என்று எழுது என்றான்.
ⲍ̅ⲙ̅ⲙⲛ̅ⲛ̅ⲥⲱⲥ ⲡⲉϫⲁϥ ⲛ̅ⲕⲉⲟⲩⲁ ϫⲉ ⲛ̅ⲧⲟⲕ ⲟⲩⲛⲟⲩⲏⲣ ⲉⲣⲟⲕ. ⲡⲉϫⲁϥ ϫⲉ ϣⲉ ⲛ̅ⲕⲟⲣⲟⲥ ⲛ̅ⲥⲟⲩⲟ. ⲡⲉϫⲁϥ ϫⲉ ϫⲓⲡⲉⲕⲥϩⲁⲓ̈ ⲛⲅ̅ⲥϩⲁⲓ̈ ⲉϩⲙⲉⲛⲉ.
8 அநீதியுள்ள அந்த நிர்வாகி புத்தியாகச் செய்தான் என்று எஜமான் பார்த்து அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாக ஒளியின் மக்களைவிட இந்த உலகத்தின் மக்கள் தங்களுடைய சந்ததியில் அதிக புத்திமான்களாக இருக்கிறார்கள். (aiōn g165)
ⲏ̅ⲁⲡϫⲟⲉⲓⲥ ⲇⲉ ⲉⲡⲁⲓⲛⲟⲩ ⲙ̅ⲡⲟⲓⲕⲟⲛⲟⲙⲟⲥ ⲙ̅ⲡʾϫⲓ ⲛϭⲟⲛⲥ̅ ϫⲉ ⲁϥⲉ͡ⲓⲣⲉ ϩⲛ̅ⲟⲩⲙⲛⲧ̅ⲣⲙ̅ⲛ̅ϩⲏⲧʾ ϫⲉ ϩⲉⲛⲥⲁⲃⲉ ⲛⲉ ⲛ̅ϣⲏⲣⲉ ⲙ̅ⲡⲉⲓ̈ⲁⲓⲱⲛ ⲉϩⲟⲩⲉⲛ̅ϣⲏⲣⲉ ⲙ̅ⲡⲟⲩⲟⲓ̈ⲛ ⲉⲧⲉⲩⲅⲉⲛⲉⲁ. (aiōn g165)
9 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மரிக்கும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்ளுவோர் உண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்கு நண்பர்களைச் சம்பாதியுங்கள். (aiōnios g166)
ⲑ̅ⲁⲛⲟⲕ ϩⲱ ϯϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ⲛⲏⲧⲛ̅ ϫⲉ. ⲕⲁϩⲉⲛϣⲃⲏⲣ ⲛⲏⲧⲛ̅ ⲉⲃⲟⲗ ϩⲙ̅ⲡⲁⲙⲙⲱⲛⲁⲥ ⲛⲧⲁⲇⲓⲕⲓⲁ ϫⲉⲕⲁⲥ ⲉϥϣⲁⲛⲱ̑ϫⲛ̅. ⲉⲩⲉϫⲓⲧⲏⲩⲧⲛ ⲉϩⲟⲩⲛ ⲉⲛⲉⲥⲕⲏⲛⲏ ⲛ̅ϣⲁⲉⲛⲉϩ. (aiōnios g166)
10 ௧0 கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாக இருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாக இருக்கிறான்.
ⲓ̅ⲡ̅ⲡⲓⲥⲧⲟⲥ ϩⲛ̅ⲟⲩⲕⲟⲩⲓ̈. ⲟⲩⲡⲓⲥⲧⲟⲥ ⲟⲛ ⲡⲉ ϩⲛ̅ⲟⲩⲛⲟϭ. ⲁⲩⲱ ⲡⲁⲇⲓⲕⲟⲥ ϩⲛ̅ⲟⲩⲕⲟⲩⲓ̈. ⲟⲩⲁⲇⲓⲕⲟⲥ ⲟⲛ ⲡⲉ ϩⲛ̅ⲟⲩⲛⲟϭ.
11 ௧௧ அநீதியான உலகப்பொருளில் நீங்கள் உண்மையாக இல்லாவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடம் நேர்மையான சொத்தை ஒப்புவிப்பார்கள்?
ⲓ̅ⲁ̅ⲉϣϫⲉⲙ̅ⲡⲉⲧⲛ̅ϣⲱⲡⲉ ϭⲉ ⲙ̅ⲡⲓⲥⲧⲟⲥ ϩⲙ̅ⲡⲁⲙⲙⲱⲛⲁⲥ ⲛ̅ⲁⲇⲓⲕⲟⲥ ⲛⲓⲙ ⲡⲉⲧⲛⲁⲧⲁⲛϩⲉⲧʾⲧⲏⲟⲩⲧⲛ̅ ⲉⲡⲉⲧⲉϩⲱⲱϥ ⲡⲉ.
12 ௧௨ வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாக இல்லாவிட்டால், உங்களுக்கு ஏதாவதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்?
ⲓ̅ⲃ̅ⲁⲩⲱ ⲉϣϫⲉⲙ̅ⲡⲉⲧⲛ̅ⲣ̅ⲡⲓⲥⲧⲟⲥ ϩⲙ̅ⲡⲉⲧⲉⲙ̅ⲡⲱⲧⲛ̅ ⲁⲛ ⲡⲉ. ⲛⲓⲙ ⲡⲉⲧⲛⲁϯ ⲛⲏⲧⲛ̅ ⲙ̅ⲡⲉⲧⲉⲡⲱⲧⲛ̅ ⲡⲉ.
13 ௧௩ எந்த வேலைக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு பணிவிடை செய்யமுடியாது; ஒருவனைப் பகைத்து மற்றவனை நேசிப்பான், அல்லது ஒருவனைப்பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் வேலைசெய்ய உங்களாலே கூடாது என்றார்.
ⲓ̅ⲅ̅ⲙ̅ⲙⲛϣϭⲟⲙ ⲗ̅ⲗⲁⲁⲩ ⲉⲣ̅ϩⲙ̅ϩⲁⲗ ⲛϫⲟⲉⲓⲥ ⲥⲛⲁⲩ. ⲏ ⲅⲁⲣ ϥⲛⲁⲙⲉⲥⲧⲉⲟⲩⲁ ⲛϥ̅ⲙⲉⲣⲉⲟⲩⲁ. ⲏ ⲛϥ̅ⲁⲛⲉⲭⲉⲟⲩⲁ ⲛϥ̅ⲕⲁⲧⲁⲫⲣⲟⲛⲓⲟⲩⲁ. ⲙⲙⲛϣϭⲟⲙ ⲙ̅ⲙⲱⲧⲛ̅ ⲉⲧⲣⲉⲧⲛ̅ⲣϩⲙ̅ϩⲁⲗ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ ⲛⲙ̅ⲡⲁⲙⲙⲱⲛⲁⲥ.
14 ௧௪ இவைகளையெல்லாம் பொருளாசைக்காரர்களாகிய பரிசேயர்களும் கேட்டு, அவரைப் பரிகாசம்பண்ணினார்கள்.
ⲓ̅ⲇ̅ⲁⲛⲉⲫⲁⲣⲓⲥⲥⲁⲓⲟⲥ ⲇⲉ ⲥⲱⲧⲙ̅ ⲉⲛⲁⲓ̈ ⲧⲏⲣⲟⲩ ⲉϩⲉⲛⲙⲁⲓ̈ϩⲟⲙⲛ̅ⲧ ⲛⲉ. ⲁⲩⲕⲱⲙϣ̅ ⲛ̅ⲥⲱϥ.
15 ௧௫ அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனிதர்கள் முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்களுடைய இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனிதர்களுக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்குமுன்பாக அருவருப்பாக இருக்கிறது.
ⲓ̅ⲉ̅ⲡⲉϫⲁϥ ⲇⲉ ⲛⲁⲩ ϫⲉ ⲛ̅ⲧⲱⲧⲛ̅ ⲛⲉⲧʾⲧⲙⲁⲓ̈ⲟ ⲙ̅ⲙⲱⲧⲛ̅ ⲙ̅ⲡⲉⲙⲧⲟ ⲉⲃⲟⲗ ⲛⲣ̅ⲣⲱⲙⲉ. ⲡⲛⲟⲩⲧⲉ ⲇⲉ ⲥⲟⲟⲩⲛ ⲛ̅ⲛⲉⲧⲛϩⲏⲧʾ ϫⲉ ⲧⲙⲛ̅ⲧϫⲁⲥⲓϩⲏⲧʾ ⲉⲧϩⲛ̅ⲣ̅ⲣⲱⲙⲉ. ⲟⲩⲃⲟⲧⲉ ⲧⲉ ⲙ̅ⲡⲉⲙⲧⲟ ⲉⲃⲟⲗ ⲙⲡⲛⲟⲩⲧⲉ.
16 ௧௬ நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் யோவான்வரைக்கும் இருந்தது; அதுமுதல் தேவனுடைய ராஜ்யம் நற்செய்தியாக அறிவிக்கப்பட்டுவருகிறது, அனைவரும் பலவந்தமாக அதில் பிரவேசிக்கிறார்கள்.
ⲓ̅ⲋ̅ⲡⲛⲟⲙⲟⲥ ⲛⲙ̅ⲛⲉⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ⲛ̅ⲧⲁⲩⲡⲱϩ ϣⲁⲓ̈ⲱϩⲁⲛⲛⲏⲥ. ϫⲓⲛⲡⲉⲩⲟⲉⲓϣ ⲉⲧⲙ̅ⲙⲁⲩ ⲥⲉⲉⲩⲁⲅⲅⲉⲗⲓⲍⲉ ⲛ̅ⲧⲙⲛ̅ⲧⲉⲣⲟ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ ⲁⲩⲱ ⲟⲩⲟⲛ ⲛⲓⲙ ϫⲓ ⲙ̅ⲙⲟϥ ⲛ̅ϭⲟⲛⲥ̅ ⲉⲣⲟⲥ.
17 ௧௭ வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு ஒழிந்துபோவதைவிட, வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும்.
ⲓ̅ⲍ̅ⲥⲙⲟⲧⲛ̅ ⲇⲉ ⲉⲧⲣⲉⲧⲡⲉ ⲛⲙ̅ⲡⲕⲁϩ ⲡⲁⲣⲁⲅⲉ ⲏ ⲉⲧⲣⲉⲟⲩϣⲱⲗϩ̅ ⲛⲟⲩⲱⲧʾ ϩⲉ ⲉⲃⲟⲗ ϩⲙ̅ⲡⲛⲟⲙⲟⲥ.
18 ௧௮ தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொரு பெண்ணைத் திருமணம் செய்கிறவன் விபசாரம் செய்கிறான், கணவனாலே விவாகரத்து செய்யப்பட்டவளைத் திருமணம் செய்கிறவனும் விபசாரம் செய்கிறான்.
ⲓ̅ⲏ̅ⲟⲩⲟⲛ ⲛⲓⲙ ⲉⲧⲛⲁⲛⲉϫⲧⲉϥⲥϩⲓⲙⲉ ⲉⲃⲟⲗ ⲛϥ̅ϩⲙⲟⲟⲥ ⲛⲙ̅ⲕⲉⲩⲉ͡ⲓ ϥⲟ ⲛ̅ⲛⲟⲉⲓⲕ. ⲁⲩⲱ ⲡⲉⲧⲛⲁϩⲙⲟⲟⲥ ⲛⲙ̅ⲕⲉⲩⲉ͡ⲓ ⲉⲁⲡⲉⲥϩⲁⲓ̈ ⲛⲟϫⲥ̅ ⲉⲃⲟⲗ. ϥⲟ ⲛ̅ⲛⲟⲉⲓⲕ·
19 ௧௯ செல்வந்தனாகிய ஒரு மனிதன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையுயர்ந்த உடையும் அணிந்து, அநுதினமும் ஆடம்பரமாக வாழ்ந்துகொண்டிருந்தான்.
ⲓ̅ⲑ̅ⲛⲉⲩⲛⲟⲩⲣⲱⲙⲉ ⲇⲉ ⲣ̅ⲣⲙ̅ⲙⲁⲟ ⲉⲡⲉϥⲣⲁⲛ ⲡⲉ ⲛⲓⲛⲉⲩⲏ ⲉϣⲁϥϯ ϩⲓⲱⲱϥ ⲛ̅ⲟⲩϫⲏϭⲉ ⲛⲙ̅ⲟⲩϣⲛ̅ⲥ ⲉϥⲉⲩⲫⲣⲁⲛⲉ ⲙ̅ⲙⲏⲛⲉ ⲕⲁⲗⲱⲥ.
20 ௨0 லாசரு என்னும் பெயர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் சரீர முழுவதும் கொப்பளங்கள் நிறைந்தவனாக, அந்த செல்வந்தனுடைய வாசலின் அருகே தங்கி,
ⲕ̅ⲛⲉⲩⲛⲟⲩϩⲏⲕⲉ ⲇⲉ ⲉⲡⲉϥⲣⲁⲛ ⲡⲉ ⲗⲁⲍⲁⲣⲟⲥ ⲉϥⲛⲏϫ ϩⲛ̅ⲧⲉϥϩⲁⲓ̈ⲧʾ ⲉϥⲟ̅ ⲛ̅ⲥⲁϣ
21 ௨௧ அவனுடைய மேஜையிலிருந்து விழுந்த துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாக இருந்தான்; நாய்கள் வந்து அவன் கொப்பளங்களை நக்கிற்று.
ⲕ̅ⲁ̅ⲉϥⲉⲡⲓⲑⲩⲙⲓ ⲉⲥⲓ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲛⲉϣⲁⲩϩⲉ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲧⲉⲧⲣⲁⲡⲉⲍⲁ ⲙ̅ⲡⲣⲙ̅ⲙⲁⲟ̅. ⲁⲗⲗⲁ ⲛ̅ⲕⲉⲟⲩϩⲟⲟⲣ ϣⲁⲩⲉ͡ⲓ ⲛ̅ⲥⲉⲗⲱϫϩ̅ ⲛ̅ⲛⲉϥⲥⲁϣ.
22 ௨௨ பின்பு அந்த தரித்திரன் மரித்து, தேவதூதர்களால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; செல்வந்தனும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்.
ⲕ̅ⲃ̅ⲁⲥϣⲱⲡⲉ ⲇⲉ ϩⲙⲡⲧⲣⲉⲡϩⲏⲕⲉ ⲙⲟⲩ ⲛ̅ⲥⲉϫⲓⲧϥ̅ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲛ̅ⲛ̅ⲛⲁⲅⲅⲉⲗⲟⲥ ⲉⲕⲟⲩⲛϥ̅ ⲛⲁⲃⲣⲁϩⲁⲙ ⲁⲡⲕⲉⲣⲙ̅ⲙⲁⲟ ⲇⲉ ⲙⲟⲩ ⲁⲩⲧⲟⲙⲥϥ̅.
23 ௨௩ பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். (Hadēs g86)
ⲕ̅ⲅ̅ⲁϥϥⲓⲁⲧϥ̅ ⲇⲉ ⲉϩⲣⲁⲓ̈ ϩⲛⲁⲙⲛ̅ⲧⲉ ⲉϥϣⲟⲟⲡ ϩⲛ̅ϩⲉⲛⲃⲁⲥⲁⲛⲟⲥ ⲁϥⲛⲁⲩ ⲉⲁⲃⲣⲁϩⲁⲙ ⲙⲡⲟⲩⲉ. ⲁⲩⲱ ⲗⲁⲍⲁⲣⲟⲥ ϩⲛ̅ⲕⲟⲩⲛϥ̅ (Hadēs g86)
24 ௨௪ அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணிரீல் தோய்த்து, என் நாக்கைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினியில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்.
ⲕ̅ⲇ̅ⲁϥⲙⲟⲩⲧⲉ ⲇⲉ ⲡⲉ(ϫⲁϥ) ϫⲉ ⲡⲓⲱⲧʾ ⲁⲃⲣⲁϩⲁⲙ ⲛ͡ⲁ ⲛⲁⲓ̈. ⲙⲁⲧⲛ̅ⲛⲉⲩⲗⲁⲍⲁⲣⲟⲥ ⲛϥ̅ⲥⲉⲡϩⲧⲏϥ ⲙⲡⲉϥⲧⲏⲏⲃⲉ ⲙ̅ⲙⲟⲟⲩ ⲛϥ̅ⲕⲃⲉⲡⲁⲗⲁⲥ ϫⲉ ϯⲙⲟⲕϩ̅ ⲁⲛⲟⲕ ϩⲙ̅ⲡⲉⲓ̈ⲕⲱϩⲧ̅ʾ.
25 ௨௫ அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடு இருக்கும் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அனுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்.
ⲕ̅ⲉ̅ⲡⲉϫⲉⲁⲃⲣⲁϩⲁⲙ ⲇⲉ ϫⲉ ⲡⲁϣⲏⲣⲉ ⲁⲣⲓⲡⲙⲉⲉⲩⲉ ϫⲉ ⲁⲕϫⲓ ⲛ̅ⲛⲉⲕⲁⲅⲁⲑⲟⲛ ϩⲙ̅ⲡⲉⲕⲱⲛⲁϩ. ⲁⲩⲱ ⲗⲁⲍⲁⲣⲟⲥ ϩⲱⲱϥ ϩⲛ̅ϩⲉⲛⲡⲉⲑⲟⲟⲩ. ⲧⲉⲛⲟⲩ ⲇⲉ ⲥⲉⲥⲟⲗⲥⲗ̅ ⲙ̅ⲙⲟϥ ⲙ̅ⲡⲉⲓ̈ⲙⲁ. ⲛ̅ⲧⲟⲕ ⲇⲉ ⲥⲉⲙⲟⲩⲕϩ̅ ⲙ̅ⲙⲟⲕ.
26 ௨௬ அதுவுமல்லாமல், இந்த இடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அந்த இடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளவு உண்டாக்கப்பட்டிருக்கிறது என்றான்.
ⲕ̅ⲋ̅ⲙⲛ̅ⲛ̅ⲥⲁⲛⲁⲓ̈ ⲇⲉ ⲧⲏⲣⲟⲩ ⲟⲩⲛⲟⲩⲛⲟϭ ⲛ̅ⲭⲁⲥⲙⲁ ⲧⲁϫⲣⲏⲟⲩ ϩⲛⲧⲉⲛⲙⲏⲧⲉ ϩⲓⲟⲩⲥⲟⲡ ϫⲉⲕⲁⲥ ⲛⲉⲧⲟⲩⲱϣ ⲉϫⲓⲟⲟⲣ ⲙ̅ⲡⲉⲓ̈ⲙⲁ ϣⲁⲣⲱⲧⲛ̅ ⲛ̅ⲛⲉⲩⲉϣϭⲙ̅ϭⲟⲙ. ⲟⲩⲇⲉ ⲛ̅ⲛⲉⲩⲉϣϫⲓⲟⲟⲣ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲉⲧⲏⲟⲩⲧⲛ̅ ⲛⲁⲛ.
27 ௨௭ அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரர்கள் உண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்திற்கு வராதபடி, அவன்போய் அவர்களுக்கு சாட்சியாக அறிவிக்கும்படியாக,
ⲕ̅ⲍ̅ⲡⲉϫⲁϥ ⲇⲉ ϫⲉ ϯⲥⲟⲡⲥ̅ ⲛ̅ⲧⲟⲟⲩⲛ ⲙⲙⲟⲕ ⲡⲁⲓ̈ⲱⲧʾ ϫⲉ ⲉⲕⲉϫⲟⲟⲩϥ ⲉⲡⲏⲓ̈ ⲙ̅ⲡⲁⲓ̈ⲱⲧʾ
28 ௨௮ நீர் அவனை என் தகப்பன் வீட்டிற்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
ⲕ̅ⲏ̅ⲟⲩⲛ̅ϯϯⲟⲩ ⲅⲁⲣ ⲛ̅ⲥⲟⲛ ϫⲉ ⲉϥⲉⲣ̅ⲙⲛ̅ⲧⲣⲉ ⲛⲁⲩ ϫⲉ ⲛ̅ⲛⲉⲩⲉ͡ⲓ ϩⲱⲟⲩ ⲉⲡⲉⲓ̈ⲙⲁ ⲃ̅ⲃⲁⲥⲁⲛⲟⲥ.
29 ௨௯ ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான்.
ⲕ̅ⲑ̅ⲡⲉϫⲉⲁⲃⲣⲁϩⲁⲙ ⲇⲉ ⲛⲁϥ ϫⲉ ⲟⲩⲛⲧⲟⲩⲙⲱⲩ̈ⲥⲏⲥ ⲙ̅ⲙⲁⲩ ⲛⲙ̅ⲛⲉⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ⲙⲁⲣⲟⲩⲥⲱⲧⲙ̅ ⲛ̅ⲥⲱⲟⲩ.
30 ௩0 அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப்போனால் மனந்திரும்புவார்கள் என்றான்.
ⲗ̅ⲛ̅ⲧⲟϥ ⲇⲉ ⲡⲉϫⲁϥ ϫⲉ ⲙ̅ⲙⲟⲛ ⲡⲓⲱⲧʾ ⲁⲃⲣⲁϩⲁⲙ. ⲁⲗⲗⲁ ⲉⲣϣⲁⲛⲟⲩⲁ ⲃⲱⲕ ϣⲁⲣⲟⲟⲩ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲛⲉⲧⲙⲟⲟⲩⲧʾ ⲥⲉⲛⲁⲙⲉⲧⲁⲛⲟⲓ̈
31 ௩௧ அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் உயிரோடு எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்.
ⲗ̅ⲁ̅ⲡⲉϫⲁϥ ⲇⲉ ⲛⲁϥ ϫⲉ. ⲉϣϫⲉⲛ̅ⲥⲉⲛⲁⲥⲱⲧⲙ̅ ⲁⲛ ⲛ̅ⲥⲁⲙⲱⲩ̈ⲥⲏⲥ ⲛⲙ̅ⲛⲉⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ. ⲉⲓ̈ⲉ ⲉⲣϣⲁⲛⲟⲩⲁ ⲟⲛ ⲧⲱⲟⲩⲛ ⲉⲃⲟⲗ ϩⲛⲛⲉⲧⲙⲟⲟⲩⲧʾ. ⲛ̅ⲥⲉⲛⲁⲥⲱⲧⲙ̅ ⲛ̅ⲥⲱϥ ⲁⲛ·

< லூக்கா 16 >