< லூக்கா 14 >
1 ௧ ஒரு ஓய்வுநாளிலே பரிசேயர்களில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே அவர் உணவு உட்கொள்ளும்படிக்குச் சென்றிருந்தார்.
အနန္တရံ ဝိၑြာမဝါရေ ယီၑော် ပြဓာနသျ ဖိရူၑိနော ဂၖဟေ ဘောက္တုံ ဂတဝတိ တေ တံ ဝီက္ၐိတုမ် အာရေဘိရေ၊
2 ௨ அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனிதன் அவருக்கு முன்பாக இருந்தான். அவனுக்கு என்ன செய்வாரோவென்று மக்கள் அவர்மேல் நோக்கமாக இருந்தார்கள்.
တဒါ ဇလောဒရီ တသျ သမ္မုခေ သ္ထိတး၊
3 ௩ இயேசு நியாயப்பண்டிதர்களையும் பரிசேயர்களையும் பார்த்து: ஓய்வுநாளிலே சுகமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்.
တတး သ ဝျဝသ္ထာပကာန် ဖိရူၑိနၑ္စ ပပြစ္ဆ, ဝိၑြာမဝါရေ သွာသ္ထျံ ကရ္တ္တဝျံ န ဝါ? တတသ္တေ ကိမပိ န ပြတျူစုး၊
4 ௪ அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, சுகமாக்கி, அனுப்பிவிட்டு,
တဒါ သ တံ ရောဂိဏံ သွသ္ထံ ကၖတွာ ဝိသသရ္ဇ;
5 ௫ அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் கிணற்றில் விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடமாட்டானா என்றார்.
တာနုဝါစ စ ယုၐ္မာကံ ကသျစိဒ် ဂရ္ဒ္ဒဘော ဝၖၐဘော ဝါ စေဒ် ဂရ္တ္တေ ပတတိ တရှိ ဝိၑြာမဝါရေ တတ္က္ၐဏံ သ ကိံ တံ နောတ္ထာပယိၐျတိ?
6 ௬ அதற்கு உத்தரவுசொல்ல அவர்களால் கூடாமற்போனது.
တတသ္တေ ကထာယာ ဧတသျား ကိမပိ ပြတိဝက္တုံ န ၑေကုး၊
7 ௭ விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்துகொண்டதை அவர் பார்த்து, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்:
အပရဉ္စ ပြဓာနသ္ထာနမနောနီတတွကရဏံ ဝိလောကျ သ နိမန္တြိတာန် ဧတဒုပဒေၑကထာံ ဇဂါဒ,
8 ௮ ஒருவனால் திருமணவிருந்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே; உன்னைவிட மதிப்புக்குரியவன் ஒருவேளை அவனால் அழைக்கப்பட்டிருப்பான்.
တွံ ဝိဝါဟာဒိဘောဇျေၐု နိမန္တြိတး သန် ပြဓာနသ္ထာနေ မောပါဝေက္ၐီး၊ တွတ္တော ဂေါ်ရဝါနွိတနိမန္တြိတဇန အာယာတေ
9 ௯ அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து: இவருக்கு இடங்கொடு என்பான்; அப்பொழுது நீ வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும்.
နိမန္တြယိတာဂတျ မနုၐျာယဲတသ္မဲ သ္ထာနံ ဒေဟီတိ ဝါကျံ စေဒ် ဝက္ၐျတိ တရှိ တွံ သင်္ကုစိတော ဘူတွာ သ္ထာန ဣတရသ္မိန် ဥပဝေၐ္ဋုမ် ဥဒျံသျသိ၊
10 ௧0 நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, கடைசி இடத்தில்போய் உட்காரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து: நண்பனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனே கூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்குப் பெருமையுண்டாகும்.
အသ္မာတ် ကာရဏာဒေဝ တွံ နိမန္တြိတော ဂတွာ'ပြဓာနသ္ထာန ဥပဝိၑ, တတော နိမန္တြယိတာဂတျ ဝဒိၐျတိ, ဟေ ဗန္ဓော ပြောစ္စသ္ထာနံ ဂတွောပဝိၑ, တထာ သတိ ဘောဇနောပဝိၐ္ဋာနာံ သကလာနာံ သာက္ၐာတ် တွံ မာနျော ဘဝိၐျသိ၊
11 ௧௧ தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
ယး ကၑ္စိတ် သွမုန္နမယတိ သ နမယိၐျတေ, ကိန္တု ယး ကၑ္စိတ် သွံ နမယတိ သ ဥန္နမယိၐျတေ၊
12 ௧௨ அன்றியும் அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி: நீ பகல்விருந்தாவது இராவிருந்தாவது பண்ணும்போது, உன் நண்பர்களையாவது உன் சகோதரர்களையாவது, உன் உறவினர்களையாவது, செல்வமுள்ள அண்டை வீட்டாரையாவது அழைக்கவேண்டாம்; அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள், அப்பொழுது உனக்குப் பதிலுக்குப்பதில் செய்ததாகும்.
တဒါ သ နိမန္တြယိတာရံ ဇနမပိ ဇဂါဒ, မဓျာဟ္နေ ရာတြော် ဝါ ဘောဇျေ ကၖတေ နိဇဗန္ဓုဂဏော ဝါ ဘြာတၖဂဏော ဝါ ဇ္ဉာတိဂဏော ဝါ ဓနိဂဏော ဝါ သမီပဝါသိဂဏော ဝါ ဧတာန် န နိမန္တြယ, တထာ ကၖတေ စေတ် တေ တွာံ နိမန္တြယိၐျန္တိ, တရှိ ပရိၑောဓော ဘဝိၐျတိ၊
13 ௧௩ நீ விருந்து பண்ணும்போது ஏழைகளையும் நடக்கமுடியாதவர்களையும், முடவர்களையும், பார்வையற்றவர்களையும் அழைப்பாயாக.
ကိန္တု ယဒါ ဘေဇျံ ကရောၐိ တဒါ ဒရိဒြၑုၐ္ကကရခဉ္ဇာန္ဓာန် နိမန္တြယ,
14 ௧௪ அப்பொழுது நீ பாக்கியவானாக இருப்பாய்; அவர்களால் உனக்குத் திரும்பச் செய்யமுடியாது; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்கு திரும்பச்செய்யப்படும் என்றார்.
တတ အာၑိၐံ လပ္သျသေ, တေၐု ပရိၑောဓံ ကရ္တ္တုမၑက္နုဝတ္သု ၑ္မၑာနာဒ္ဓါရ္မ္မိကာနာမုတ္ထာနကာလေ တွံ ဖလာံ လပ္သျသေ၊
15 ௧௫ அவரோடுகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவன் இவைகளைக் கேட்டபொழுது, அவரை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தில் உணவு உட்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றான்.
အနန္တရံ တာံ ကထာံ နိၑမျ ဘောဇနောပဝိၐ္ဋး ကၑ္စိတ် ကထယာမာသ, ယော ဇန ဤၑွရသျ ရာဇျေ ဘောက္တုံ လပ္သျတေ သဧဝ ဓနျး၊
16 ௧௬ அதற்கு அவர்: ஒரு மனிதன் பெரியவிருந்தை ஆயத்தம்பண்ணி, அநேகரை அழைப்பித்தான்.
တတး သ ဥဝါစ, ကၑ္စိတ် ဇနော ရာတြော် ဘေဇျံ ကၖတွာ ဗဟူန် နိမန္တြယာမာသ၊
17 ௧௭ விருந்து நேரத்தில் தன் வேலைக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில்போய், எல்லாம் ஆயத்தமாக இருக்கிறது வாருங்கள் என்று சொல்லென்று அவனை அனுப்பினான்.
တတော ဘောဇနသမယေ နိမန္တြိတလောကာန် အာဟွာတုံ ဒါသဒွါရာ ကထယာမာသ, ခဒျဒြဝျာဏိ သရွွာဏိ သမာသာဒိတာနိ သန္တိ, ယူယမာဂစ္ဆတ၊
18 ௧௮ அவர்களெல்லோரும் சாக்குப்போக்குச்சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன்: ஒரு வயலை வாங்கியிருக்கிறேன், நான் கட்டாயமாகப்போய் அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
ကိန္တု တေ သရွွ ဧကဲကံ ဆလံ ကၖတွာ က္ၐမာံ ပြာရ္ထယာဉ္စကြိရေ၊ ပြထမော ဇနး ကထယာမာသ, က္ၐေတြမေကံ ကြီတဝါနဟံ တဒေဝ ဒြၐ္ဋုံ မယာ ဂန္တဝျမ်, အတဧဝ မာံ က္ၐန္တုံ တံ နိဝေဒယ၊
19 ௧௯ வேறொருவன்: ஐந்து ஏர்மாடுகள் வாங்கியிருக்கிறேன், அதை ஓட்டிப்பார்க்கப்போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
အနျော ဇနး ကထယာမာသ, ဒၑဝၖၐာနဟံ ကြီတဝါန် တာန် ပရီက္ၐိတုံ ယာမိ တသ္မာဒေဝ မာံ က္ၐန္တုံ တံ နိဝေဒယ၊
20 ௨0 வேறொருவன்: எனக்கு இப்போதுதான் திருமணம் முடிந்திருக்கிறது, அதினால் நான் வரக்கூடாது என்றான்.
အပရး ကထယာမာသ, ဝျူဎဝါနဟံ တသ္မာတ် ကာရဏာဒ် ယာတုံ န ၑက္နောမိ၊
21 ௨௧ அந்த வேலைக்காரன் வந்து, இவைகளைத் தன் எஜமானுக்கு அறிவித்தான். அப்பொழுது வீட்டெஜமான் கோபமடைந்து, தன் வேலைக்காரனை நோக்கி: நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாகப்போய், ஏழைகளையும் நடக்கமுடியாதவர்களையும், முடவர்களையும், பார்வையற்றவர்களையும் இங்கே அழைத்துக்கொண்டுவா என்றான்.
ပၑ္စာတ် သ ဒါသော ဂတွာ နိဇပြဘေား သာက္ၐာတ် သရွွဝၖတ္တာန္တံ နိဝေဒယာမာသ, တတောသော် ဂၖဟပတိး ကုပိတွာ သွဒါသံ ဝျာဇဟာရ, တွံ သတွရံ နဂရသျ သန္နိဝေၑာန် မာရ္ဂာံၑ္စ ဂတွာ ဒရိဒြၑုၐ္ကကရခဉ္ဇာန္ဓာန် အတြာနယ၊
22 ௨௨ வேலைக்காரன் அப்படியே செய்து: ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடம் இருக்கிறது என்றான்.
တတော ဒါသော'ဝဒတ်, ဟေ ပြဘော ဘဝတ အာဇ္ဉာနုသာရေဏာကြိယတ တထာပိ သ္ထာနမသ္တိ၊
23 ௨௩ அப்பொழுது எஜமான் வேலைக்காரனை நோக்கி: நீ சாலையோரங்களிலும் குறுகியவழி அருகிலும்போய், என் வீடு நிறையும்படியாக மக்களை உள்ளே வரும்படி வற்புறுத்தி அழைத்துக்கொண்டுவா;
တဒါ ပြဘုး ပုန ရ္ဒာသာယာကထယတ်, ရာဇပထာန် ဝၖက္ၐမူလာနိ စ ယာတွာ မဒီယဂၖဟပူရဏာရ္ထံ လောကာနာဂန္တုံ ပြဝရ္တ္တယ၊
24 ௨௪ அழைக்கப்பட்டிருந்த அந்த மனிதர்களில் ஒருவன்கூட என் விருந்தை ருசிபார்ப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றான் என்று சொன்னார்.
အဟံ ယုၐ္မဘျံ ကထယာမိ, ပူရွွနိမန္တြိတာနမေကောပိ မမာသျ ရာတြိဘောဇျသျာသွာဒံ န ပြာပ္သျတိ၊
25 ௨௫ பின்பு அநேக மக்கள் அவரோடுகூடப் பயணமாகப் போகும்போது, அவர்களிடமாக அவர் திரும்பிப்பார்த்து:
အနန္တရံ ဗဟုၐု လောကေၐု ယီၑေား ပၑ္စာဒ် ဝြဇိတေၐု သတ္သု သ ဝျာဃုဋျ တေဘျး ကထယာမာသ,
26 ௨௬ யாராவது ஒருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீடனாக இருக்கமாட்டான்.
ယး ကၑ္စိန် မမ သမီပမ် အာဂတျ သွသျ မာတာ ပိတာ ပတ္နီ သန္တာနာ ဘြာတရော ဘဂိမျော နိဇပြာဏာၑ္စ, ဧတေဘျး သရွွေဘျော မယျဓိကံ ပြေမ န ကရောတိ, သ မမ ၑိၐျော ဘဝိတုံ န ၑက္ၐျတိ၊
27 ௨௭ தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என் பின்னே வராதவன் எனக்குச் சீடனாக இருக்கமுடியாது.
ယး ကၑ္စိတ် သွီယံ ကြုၑံ ဝဟန် မမ ပၑ္စာန္န ဂစ္ဆတိ, သောပိ မမ ၑိၐျော ဘဝိတုံ န ၑက္ၐျတိ၊
28 ௨௮ உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்டவிருப்பமாக இருந்து,
ဒုရ္ဂနိရ္မ္မာဏေ ကတိဝျယော ဘဝိၐျတိ, တထာ တသျ သမာပ္တိကရဏာရ္ထံ သမ္ပတ္တိရသ္တိ န ဝါ, ပြထမမုပဝိၑျ ဧတန္န ဂဏယတိ, ယုၐ္မာကံ မဓျ ဧတာဒၖၑး ကောသ္တိ?
29 ௨௯ அஸ்திபாரம் போட்டப்பின்பு வேலையை முடிக்கமுடியாமற்போனால், பார்க்கிறவர்களெல்லோரும்:
နောစေဒ် ဘိတ္တိံ ကၖတွာ ၑေၐေ ယဒိ သမာပယိတုံ န ၑက္ၐျတိ,
30 ௩0 இந்த மனிதன் கட்டத்தொடங்கி, முடிக்க முடியாமற்போனான் என்று சொல்லி தன்னை ஏளனமாக பேசாதபடிக்கு, அதைக் கட்டிமுடிப்பதற்கு தனக்கு வேண்டிய பொருளாதாரம் உண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செலவாகும் தொகையைக் கணக்குப்பார்க்காமல் இருப்பானோ?
တရှိ မာနုၐောယံ နိစေတုမ် အာရဘတ သမာပယိတုံ နာၑက္နောတ်, ဣတိ ဝျာဟၖတျ သရွွေ တမုပဟသိၐျန္တိ၊
31 ௩௧ அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடு போர்செய்யப்போகிறபோது, தன்மேல் இருபதாயிரம் போர்வீரர்களோடு வருகிற அவனைத் தான் பத்தாயிரம் போர்வீரர்களைக்கொண்டு எதிர்க்கக்கூடுமோ கூடாதோ என்று முன்னமே உட்கார்ந்து ஆலோசனை செய்யாமலிருப்பானோ?
အပရဉ္စ ဘိန္နဘူပတိနာ သဟ ယုဒ္ဓံ ကရ္တ္တုမ် ဥဒျမျ ဒၑသဟသြာဏိ သဲနျာနိ ဂၖဟီတွာ ဝိံၑတိသဟသြေး သဲနျဲး သဟိတသျ သမီပဝါသိနး သမ္မုခံ ယာတုံ ၑက္ၐျာမိ န ဝေတိ ပြထမံ ဥပဝိၑျ န ဝိစာရယတိ ဧတာဒၖၑော ဘူမိပတိး ကး?
32 ௩௨ கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, தூதுவரை அனுப்பி, சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே.
ယဒိ န ၑက္နောတိ တရှိ ရိပါဝတိဒူရေ တိၐ္ဌတိ သတိ နိဇဒူတံ ပြေၐျ သန္ဓိံ ကရ္တ္တုံ ပြာရ္ထယေတ၊
33 ௩௩ அப்படியே உங்களில் எவனாவது தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீடனாக இருக்கமாட்டான்.
တဒွဒ် ယုၐ္မာကံ မဓျေ ယး ကၑ္စိန် မဒရ္ထံ သရွွသွံ ဟာတုံ န ၑက္နောတိ သ မမ ၑိၐျော ဘဝိတုံ န ၑက္ၐျတိ၊
34 ௩௪ உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்?
လဝဏမ် ဥတ္တမမ် ဣတိ သတျံ, ကိန္တု ယဒိ လဝဏသျ လဝဏတွမ် အပဂစ္ဆတိ တရှိ တတ် ကထံ သွာဒုယုက္တံ ဘဝိၐျတိ?
35 ௩௫ அது நிலத்துக்காவது எருவுக்காவது உதவாது, அதை வெளியே கொட்டிப்போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்றார்.
တဒ ဘူမျရ္ထမ် အာလဝါလရာၑျရ္ထမပိ ဘဒြံ န ဘဝတိ; လောကာသ္တဒ် ဗဟိး က္ၐိပန္တိ၊ ယသျ ၑြောတုံ ၑြောတြေ သ္တး သ ၑၖဏောတု၊