< லூக்கா 13 >
1 ௧ அந்த நேரத்திலே அங்கே இருந்தவர்களில் சிலர் இயேசுவிடம் வந்து, பிலாத்து சில கலிலேயர்களுடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடு கலந்தான் என்ற செய்தியை அவருக்கு அறிவித்தார்கள்.
Ki kwama curo nubo kangem wi yico ker dor nobo Galiliye wo Bilatu ceikangum bwiyale ceu kange wabi.
2 ௨ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: அந்தக் கலிலேயர்களுக்கு அப்படிப்பட்டவைகள் நடந்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயர்களைவிட அவர்கள் பாவிகளாக இருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?
La kiritti yici, “kom kwatiri Galatiyawambo bwiran kere ka?
3 ௩ அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லோரும் அப்படியே அழிந்துபோவீர்கள்.
Nyonin, min yi komti. No kom dobbori gwam kume kom bwiyarangi na ci.
4 ௪ சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேர் மரித்தார்களே; எருசலேமில் குடியிருக்கிற மனிதர்களெல்லோரிலும் அவர்கள் குற்றவாளிகளாக இருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?
Kakaa nobo kwobcilombo naurube ciloam wo luwe cwemi nyeu yar cinenti dorceer ci bwiyarangume, kom kwatiri ciin la tangnum nobeu urucalimau biranke?
5 ௫ அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லோரும் அப்படியே அழிந்துபோவீர்கள் என்றார்.
O-ong, miki. Lano gwam niwo ko dobka ri ciyan bwiya rangum.
6 ௬ அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சைத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங்காணவில்லை.
Kiritti tok dangke wuro,”Nii kange wi ki tii nyongjong wo ci fiken mor take ce la cin bou na ci ca bituttuiyeri la tiyo man ki cari.
7 ௭ அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருடங்களாக இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிவருகிறேன்; ஒன்றையுங்காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான்.
Dila nii curo yi nii tokako,'to, coro ta'ar naweu, ma do bituttuiti fo nyongjongo nin di mafiyabo tom co ye bwi ba dob coti ten fiye ti koniye?'
8 ௮ அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருடமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங்கொத்தி, எருப்போடுவேன்,
Co nii tokakko ciya toki neye kumeni nyo bi dob na kam nan yoti cinenti kilongwi
9 ௯ கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்.
No mabi tuttidi cortini boti yeri tano mabobi tuttiri nan mwatum co.
10 ௧0 ஒரு ஓய்வுநாளில் அவர் ஜெப ஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார்.
Bi di kange Kiriti ma mrngkati fiye bi wabe kange bidiye fob ka.
11 ௧௧ அப்பொழுது பதினெட்டு வருடங்களாகப் பலவீனப்படுத்தும் ஆவியைக்கொண்ட ஒரு பெண் அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாக இருந்தாள்.
Di la naweu kangee bou wo dii curo kwob cilombo narub wiki twirak yuwa bwir gwam kange fwinka mani do taka ti.
12 ௧௨ இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: பெண்ணே, உன் பலவீனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி,
Kambo Kiriti to ce cin cuwaco yico cin cukum twirako wo.
13 ௧௩ அவள்மேல் தமது கரங்களை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்.
La kiriti yoti kanko dor ce tabbo. buri can cando cin tarken cet co ter bilonge liyar kwamma.
14 ௧௪ இயேசு ஓய்வுநாளிலே சுகமாக்கினபடியால், ஜெப ஆலயத்தலைவன் கோபமடைந்து, மக்களை நோக்கி: வேலைசெய்கிறதற்கு ஆறு நாட்கள் உண்டே, அந்த நாட்களிலே நீங்கள் வந்து சுகமாக்கிக்கொள்ளுங்கள், ஓய்வுநாளிலே அப்படிச் செய்யலாகாது என்றான்.
Di ni kur biwaro manfunerr dige bwiyeu Kiriti nangen bi Fob ka di ni bi wabiro nyi nubo kume ni wi nyo nukku na nangen do ce kom bow na makimen ddi La kebbo ki bidiko fobka.
15 ௧௫ கர்த்தர் அவனுக்கு மறுமொழியாக மாயக்காரர்களே: உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய், அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா?
Di la teluwe kar cimen ki kom nubo bwir no nyori mi wor tiber kimer mi kange wo ca ki gelbati na fiye ci tekume nemwem bidiye fobka ka?
16 ௧௬ இதோ, சாத்தான் பதினெட்டு வருடங்களாகக் கட்டியிருந்த ஆபிரகாமின் மகளாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார்.
No nyori wuro bibwe Abrame wo be kelkele no bwamco ki coro kwab culom nanrube, tano nyo mania kwi cati kibi diye fubka ka?
17 ௧௭ அவர் அப்படிச் சொன்னபோது, அவரை விரோதித்திருந்த அனைவரும் வெட்கப்பட்டார்கள். மக்களெல்லோரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக்குறித்தும் மகிழ்ந்தார்கள்.
Kambo co tokki nyo weri nubo ma kwab kangka ti kange coweu cin nuwa kwenduwe. Gwam tare al cin ma fur nener ki dikero kendo wuro ci mane.
18 ௧௮ அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யம் எதற்கொப்பாக இருக்கிறது; அதை எதற்கு ஒப்பிடுவேன்?
Kiriti toki kiye ba tak liyar kwama ti cike yilo ye ba dang ti cike?
19 ௧௯ அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு மனிதன் எடுத்துத் தன் தோட்டத்திலே போட்டான்; அது வளர்ந்து, பெரிய மரமானது; ஆகாயத்துப் பறவைகள் வந்து, அதின் கிளைகளில் அடைந்தது என்றார்.
Wi nyo na nun nying cin wuro ni kange wabi takece Landim nyo gili gili la bilibe tini manag cor tini kani ce nen.
20 ௨0 மேலும் அவர்: தேவனுடைய ராஜ்யத்தை நான் எதற்கு ஒப்பிடுவேன்?
Yila con tokko liyar kwararo ba tok kiye?
21 ௨௧ அது புளித்த மாவிற்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு பெண் எடுத்து முழுவதும் புளிக்கும்வரைக்கும் மூன்றுபடி மாவோடு பிசைந்து வைத்தாள் என்றார்.
Wi nyo ca fuwam di la kange nawiye mwe kange mim murduwe bidigle tar na fumco.
22 ௨௨ அவர் எருசலேமுக்குப் பயணமாகப் போகும்போது, பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் உபதேசம் செய்துகொண்டே போனார்.
Kiriti ker kan cinar lor kange bwar lor, wi nuro wo yakenti Ucalima ci mernag cinneti.
23 ௨௩ அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, விடுதலையாக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்:
La cin yi co teluwa nubo biro ciya fiya dob kakko bi dob nyo ka? La cin yici.
24 ௨௪ இடுக்கமான வாசல்வழியாக உள்ளே பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உள்ளே பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Ki ma dige dateneu. ki do nure bwa ki do nure bwabwa leli nyori mi nyi kom, nudo ducce ci cwi doka ti di la ci fiyabo doka.
25 ௨௫ வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு, நீங்கள் வெளியே நின்று: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் மறுமொழியாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார்.
No niluwe kwri kwenum nungum yilokko la kan tiken kale kom kwa kwabang nyi lokkoti teluwa, teluwe do nyo nyi do mour di cin ciya cotaki mi nyomkombo keno kom cirou feri.
26 ௨௬ அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் உணவு உண்டோமே, நீர் எங்களுடைய வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள்.
Di la ka tok komki nyim ca nyin no for kabum mwem. di la mun merang nyinen dor nure nyim bo nin.
27 ௨௭ ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரர்களாகிய நீங்களெல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
La can ciya ci tokki.
28 ௨௮ நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் எல்லாத் தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும்.
Ciyan ci wiye kange kuka nunne ki bidiye kom to muca, kange Isaku kange Yakubu gwam nob dugume firer liyar kwama kumeu ciyan merken kom kale.
29 ௨௯ கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்த மக்கள் வந்து, தேவனுடைய ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள்.
Ci ya bo twat mee, bang, kole ci ya ca tokam cari iyar kwama.
30 ௩0 அப்பொழுது முந்தினோர் பிந்தினோராவார்கள், பிந்தினோர் முந்தினோராவார்கள் என்றார்.
Ki nyim comm wuro nob kaba nyim lam nubo cuwa bwire nubo cuwa bwireu co nubo yilam kaba.
31 ௩௧ அந்த நாளிலே சில பரிசேயர்கள் அவரிடத்தில் வந்து: நீர் இந்த இடத்தைவிட்டுப்போய்விடும்; ஏரோது உம்மைக் கொலைசெய்ய மனதாக இருக்கிறான் என்றார்கள்.
Di kutabo kangem faricawa cin bou ciki Musa, kubom fo dike bwiyeu Hiridus cwi twalka mwekti.
32 ௩௨ அதற்கு அவர்: நான் இன்றைக்கும் நாளைக்கும் பிசாசுகளைத் துரத்தி, வியாதியுள்ளவர்களை, சுகமாக்கி மூன்றாம்நாளில் நிறைவடைவேன்.
Kirititi tokki com ya Bicura kom ki to min co kom ninga nubo fiya fulo ki di ki kume take cwiti a murangu bibeiyo na wuro bicate ki murang de bi bei loce mwor tangum cem la kom ciyabo.
33 ௩௩ இன்றைக்கும் நாளைக்கும் மறுநாளைக்கும் நான் நடமாடவேண்டும்; எருசலேமுக்கு வெளியே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்துபோகிறதில்லையென்று நான் சொன்னதாக நீங்கள் போய் அந்த நரிக்குச் சொல்லுங்கள்.
To ci miran lomwe la mi, yikomti mani ka to yeti tano diye ki tokke luma drek tam nyo ki den kwamar.
34 ௩௪ எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளுவதைப்போல நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள விருப்பமாக இருந்தேன்; உங்களுக்கோ விருப்பமில்லாமற்போனது.
Bwentano a manyiri yam mimbo ya kenti duwen, fini cike daten bo ciya twalum teluwe kutom kange Ursalima.
35 ௩௫ இதோ, உங்களுடைய வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்; கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் வாழ்த்தப்படத்தக்கவர் என்று நீங்கள் சொல்லும் காலம் வரும்வரைக்கும் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Kom to lo kumeu cin cwutanwi No kom tok kumki luma ki no kan bibwe nii wo bilang kwama yeu.