< லேவியராகமம் 3 >
1 ௧ “ஒருவன் சமாதானபலியைப் படைக்கவேண்டுமென்று, மாட்டுமந்தையிலிருந்து எடுத்துச் செலுத்துவானாகில், அது காளையானாலும் பசுவானாலும் சரி, பழுது இல்லாமலிருப்பதை யெகோவாவுடைய சந்நிதியில் செலுத்தக்கடவன்.
А якщо його жертва — ми́рна, якщо з великої худоби він приносить чи самця́, чи сами́цю, — він принесе її безва́дну перед Господнє лице,
2 ௨ அவன் தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
і покладе свою руку на голову жертви своєї, та й заріже її при вході до скинії заповіту. А Ааронові сини, священики, покроплять тією кров'ю на жертівника навколо.
3 ௩ பின்பு சமாதான பலியிலே குடல்களை மூடிய கொழுப்பையும், குடல்களிலுள்ள கொழுப்பு முழுவதையும்,
І принесе він із мирної жертви огняну́ жертву для Господа, — лій, що закриває ну́трощі, та ввесь лій, що на ну́трощах,
4 ௪ இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், சிறுநீரகங்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, யெகோவாவுக்குத் தகனபலியாகச் செலுத்துவானாக.
і оби́дві ни́рки, і лій, що на них, що на сте́гнах, а сальника́ на печінці — зді́йме його з ни́рками.
5 ௫ அதை ஆரோனின் மகன்கள் பலிபீடத்தின் நெருப்பிலுள்ள கட்டைகளின்மேல் வைக்கப்பட்டிருக்கும் சர்வாங்க தகனபலியின்மேல் போட்டு எரிக்கக்கடவர்கள்; இது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி.
І спалять те сини Ааронові на жертівнику на цілопа́лення, що на дро́вах, яке на огні, — це огняна́ жертва, пахощі любі для Господа.
6 ௬ “அவன் யெகோவாவுக்குச் சமாதானபலியைப் படைக்கவேண்டுமென்று ஆட்டு மந்தையிலிருந்து எடுத்துச் செலுத்துவானாகில், அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சரி, பழுது இல்லாமலிருப்பதைச் செலுத்துவானாக.
А якщо з дрібної худоби його жертва на мирну жертву для Господа, саме́ць чи сами́ця, то безва́дну принесе її́.
7 ௭ அவன் ஆட்டுக்குட்டியைப் பலியாகச் செலுத்தவேண்டுமானால், அதைக் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து,
Якщо приносить він на жертву вівцю́, то принесе її перед Господнє лице,
8 ௮ தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
і покладе свою руку на голову жертви своєї, та й заріже її перед скинією заповіту. А Ааронові сини покро́плять кров'ю її на жертівника навколо.
9 ௯ பின்பு அவன் சமாதானபலியிலே அதின் கொழுப்பையும், நடு எலும்பிலிருந்து எடுத்த முழு வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும் அவைகளின்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும்,
І він принесе з мирної жертви огняну́ жертву для Господа, — ці́лого курдюка́, якого здійме при хребті, і лій, що закриває ну́трощі, і ввесь лій, що на ну́трощах,
10 ௧0 இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், சிறுநீரகங்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, யெகோவாவுக்குத் தகனபலியாகச் செலுத்தக்கடவன்.
і обидві нирки та лій, що на них, що на сте́гнах, а сальника на печінці — зді́йме його з нирками.
11 ௧௧ அதை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்; இது யெகோவாவுக்குச் செலுத்தும் தகன ஆகாரம்.
І священик спалить те на жертівнику, — хліб огняно́ї жертви для Господа.
12 ௧௨ “அவன் செலுத்துவது வெள்ளாடாக இருக்குமானால், அவன் அதைக் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து,
А якщо жертва його коза, то піднесе її перед лице Господнє,
13 ௧௩ அதின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
і покладе свою руку на голову її, та й заріже її перед скинією заповіту. А Ааронові сини́ покро́плять кров'ю її на жертівника навколо.
14 ௧௪ அவன் அதிலே குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகள் மேலிருக்கிற கொழுப்பு முழுவதையும்,
І він принесе з неї жертву свою, жертву для Господа, — лій, що закриває ну́трощі, та ввесь лій, що на ну́трощах,
15 ௧௫ இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், சிறுநீரகங்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, யெகோவாவுக்குத் தகனபலியாகச் செலுத்தக்கடவன்.
і оби́дві нирки, і лій, що на них, що на стегнах, а сальника на печінці — здійме його з нирками.
16 ௧௬ ஆசாரியன் பலிபீடத்தின்மேல் அவைகளை எரிக்கக்கடவன்; இது நறுமண வாசனையான தகன ஆகாரம்; கொழுப்பு முழுவதும் யெகோவாவுடையது.
І священик спалить їх на жертівнику, — це пожива, огняна́ жертва на любі пахощі; увесь лій — для Господа.
17 ௧௭ கொழுப்பையாவது இரத்தத்தையாவது நீங்கள் சாப்பிடக்கூடாது; இது உங்களுடைய குடியிருப்புகள் எங்கும் உங்கள் தலைமுறைதோறும் நிரந்தரமான கட்டளையாக இருக்கும் என்று சொல் என்றார்.
Оце постанова вічна для ваших родів у всіх оса́дах ваших: жодного лою й жодної крови не будете їсти“.