< லேவியராகமம் 27 >
1 ௧ பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
Awurade ka kyerɛɛ Mose sɛ,
2 ௨ “நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்: யாராவது ஒருவர் ஒரு விசேஷித்த பொருத்தனை செய்திருந்தால், பொருத்தனை செய்யப்பட்டவர்கள் உன் மதிப்பின்படி யெகோவாவுக்கு உரியவர்கள்.
“Ka kyerɛ Israelfoɔ no sɛ, ‘Sɛ onipa bi hyɛ bɔ sɛ ɔde obi bɛma Awurade a, na sɛ ɔpɛ sɛ ɔtua sika mmom a,
3 ௩ இருபது வயதுமுதல் அறுபது வயதிற்கு உட்பட்ட ஆண் ஒருவனை நீ பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலாகிய ஐம்பது வெள்ளிச்சேக்கலாகவும்,
ɔbɛtua dwetɛ gram ahanum ne aduɔson ama ɔbarima a wadi mfeɛ aduonu kɔsi mfeɛ aduosia,
4 ௪ பெண் ஒருவளை முப்பது சேக்கலாகவும் மதிப்பாயாக.
sɛ ɔyɛ ɔbaa a wadi mfeɛ aduonu kɔsi aduosia a, wɔbɛtua dwetɛ gram ahasa ne aduanan,
5 ௫ ஐந்து வயதுமுதல் இருபது வயதிற்கு உட்பட்ட ஆண்பிள்ளையை இருபது சேக்கலாகவும், பெண்பிள்ளையைப் பத்துச்சேக்கலாகவும்,
abarimaa a wadi mfeɛ enum kɔsi aduonu no nso wɔbɛtua dwetɛ gram ahanu ne aduasa. Sɛ ɔyɛ ɔbaa a, wɔbɛtua dwetɛ gram ɔha ne dunum.
6 ௬ ஒரு மாதம்முதல் ஐந்து வயதிற்கு உட்பட்ட ஆண்பிள்ளையை ஐந்து வெள்ளிச்சேக்கலாகவும், பெண்பிள்ளையை மூன்று வெள்ளிச்சேக்கலாகவும்,
Abarimaa a wadi bosome kɔsi mfeɛ enum no wɔbɛtua dwetɛ gram 60; na abaayewa nso wɔatua dwetɛ gram 35.
7 ௭ அறுபது வயதுதொடங்கி, அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்களைப் பதினைந்து சேக்கலாகவும், பெண்களைப் பத்துச் சேக்கலாகவும் மதிக்கக்கடவாய்.
Ɔbarima a wadi boro mfeɛ aduosia no wɔbɛtua dwetɛ gram ɔha aduɔson; na ɔbaa nso wɔatua dwetɛ gram ɔha ne dunum.
8 ௮ உன் மதிப்பின்படி செலுத்தமுடியாத ஏழையாக இருந்தால், அவன் ஆசாரியனுக்கு முன்பாக வந்து நிற்கக்கடவன்; ஆசாரியன் அவனை மதிப்பானாக; பொருத்தனைசெய்தவனுடைய தகுதிக்குத் தக்கபடி ஆசாரியன் அவனை மதிக்கக்கடவன்.
Na sɛ obi yɛ ohiani a ɔrentumi ntua saa sika yi a, ɔde saa onipa no bɛba ɔsɔfoɔ anim, na ɔsɔfoɔ no akyerɛ no sika a ɔbɛtumi atua.
9 ௯ “ஒருவன் பொருத்தனைசெய்தது யெகோவாவுக்குப் பலியிடப்படத்தக்க மிருகமானால் அவன் யெகோவாவுக்குக் கொடுக்கிற அவைகளெல்லாம் பரிசுத்தமாக இருப்பதாக.
“‘Sɛ ɔde aboa hyɛ bɔ sɛ afɔrebɔdeɛ a ɛfata ma Awurade a, saa aboa no a ɔde ama Awurade no bɛyɛ kronkron.
10 ௧0 அதை மாற்றாமலும் வேறுபடுத்தாமலும் இருப்பானாக; இளைத்துப்போனதற்குப் பதிலாக நலமானதையும், நலமானதற்குப் பதிலாக இளைத்துப்போனதையும் செலுத்தாமல் இருப்பானாக; அவன் மிருகத்திற்குப் பதிலாக மிருகத்தை மாற்றிக் கொடுப்பானாகில், அப்பொழுது அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுத்ததும் பரிசுத்தமாக இருப்பதாக.
Ɛnsɛ sɛ ɔsesa saa aboa no. Ɛnsɛ sɛ ɔde deɛ ɛyɛ sesa deɛ ɛnyɛ anaa sɛ ɔde deɛ ɛnyɛ sesa deɛ ɛyɛ. Sɛ ɛba sɛ wɔyɛ saa nsesayɛ yi a, wɔbɛfa no sɛ mmoa mmienu no nyinaa ho te.
11 ௧௧ அது யெகோவாவுக்குப் பலியிடப்படத்தகாத சுத்தமில்லாத மிருகமானால், அதை ஆசாரியனுக்கு முன்பாக நிறுத்தக்கடவன்.
Sɛ aboa a ɔde rema Awurade no ho nte na ɛmfata sɛ wɔde yɛ afɔrebɔdeɛ ma Awurade a, ɛsɛ sɛ ne wura no de brɛ ɔsɔfoɔ.
12 ௧௨ ஆசாரியன் அது நல்லதானாலும் இளைத்ததானாலும் அதை மதிப்பீடு செய்வானாக; உன் மதிப்பின்படியே இருப்பதாக.
Ɔno na ɔbɛhwɛ sɛ aboa no di mu anaa sɛ ɔnte saa, na wakyerɛ sika dodoɔ a ɛsɛ sɛ ɔtua de si aboa no anan.
13 ௧௩ அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தானாகில், உன் மதிப்போடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்.
Sɛ aboa no yɛ deɛ ɛsɛ sɛ wɔde no bɔ afɔdeɛ nanso onipa a ɔde no reba no pɛ sɛ ɔsane gye nʼadeɛ a, ɔbɛtua sika ɔha mu nkyɛmu aduonu aka ɛboɔ a ɔsɔfoɔ no bɛtwa ama no sɛ ɔntua no ho.
14 ௧௪ “ஒருவன் தன் வீட்டைக் யெகோவாவுக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், ஆசாரியன் அதின் நலத்திற்கும், நிலைமைக்கும் தக்கதாக அதை மதிக்கக்கடவன்; ஆசாரியன் மதிக்கிறபடி அது இருப்பதாக.
“‘Sɛ obi de ne fie ma Awurade na sɛ ɔpɛ sɛ ɔsane gye a, ɔsɔfoɔ no bɛsese ne boɔ a ɔnte so,
15 ௧௫ தன் வீட்டைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், நீ மதிக்கும் பொருளுடன் ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுடையதாகும்.
na saa onipa no atua, asane atua ɛbo korɔ no ara ɔha mu nkyɛmu aduonu aka ho ansa na efie no abɛyɛ ne dea bio.
16 ௧௬ “ஒருவன் தனக்குச் சொந்தமான வயலில் யாதொரு பங்கைக் யெகோவாவுக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், உன் மதிப்பு அதின் விதைப்புக்குத்தக்கதாக இருக்கவேண்டும்; ஒரு கலம் வாற்கோதுமை விதைக்கிற வயல் ஐம்பது வெள்ளிச் சேக்கலாக மதிக்கப்படவேண்டும்.
“‘Sɛ ɔbarima bi pɛ sɛ ɔde nʼabusua asase fa bi bɔ afɔdeɛ ma Awurade a, wɔbɛgyina aba kɛntɛnma dodoɔ a ɛbɛhia sɛ wɔbɛdua wɔ so no so atwa asase no boɔ; aba kɛntɛnma biara boɔ yɛ dwetɛ gram ahanum ne aduɔson.
17 ௧௭ யூபிலி வருடம்முதல் அவன் தன் வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், அது உன் மதிப்பின்படி இருக்கவேண்டும்.
Mfirinhyia Aduonum Afahyɛ mu no, sɛ obi de nʼafuo kyɛ a, ne boɔ no rensesa.
18 ௧௮ யூபிலி வருடத்திற்குப்பின் தன் வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டானானால், யூபிலி வருடம்வரையுள்ள மற்ற வருடங்களின்படியே ஆசாரியன் பொருட்களைக் கணக்குப்பார்த்து, அதற்குத் தக்கதை உன் மதிப்பீட்டில் தள்ளுபடி செய்யவேண்டும்.
Na sɛ ɔde asase no ma wɔ Mfirinhyia Aduonum Afahyɛ no akyi a, ɔsɔfoɔ no bɛgyina mfeɛ a aka ansa na Mfirinhyia Aduonum Afahyɛ a ɛdi so no so asese ne boɔ, na wɔbɛtumi ate so.
19 ௧௯ வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், உன் மதிப்பான பொருட்களுடன் ஐந்தில் ஒரு பங்கை சேர்த்துக்கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு உறுதியாகும்.
Na sɛ ɔbarima no pɛ sɛ ɔgye nʼasase a, ɔsɔfoɔ no boɔ a ɔbɛbɔ no, ɔbɛtua ɔha mu nkyɛmu aduonu aka ho ansa na asase no abɛyɛ ne dea bio.
20 ௨0 அவன் வயலை மீட்டுக்கொள்ளாமல், வயலை வேறொருவனுக்கு விற்றுப்போட்டால், அது திரும்ப மீட்கப்படாமல்,
Na sɛ nso ɔyɛ nʼadwene sɛ ɔmpɛ sɛ ɔgye asase no bio, anaasɛ sɛ watɔn asase no ama obi foforɔ a, ɛnneɛ wɔrentumi nnye bio.
21 ௨௧ யூபிலி வருடத்தில் மீட்கப்படும்போது, சாபத்தீடான வயலாகக் யெகோவாவுக்கென்று நியமிக்கப்பட்டதாக இருப்பதாக; அது ஆசாரியனுக்குச் சொந்தமான நிலமாகும்.
Sɛ wɔdane asase no ma wɔ Mfirinhyia Aduonum Afahyɛ no mu a, ɛbɛyɛ asase kronkron. Wɔde ato hɔ ama Awurade. Ɛbɛyɛ asɔfoɔ no agyapadeɛ.
22 ௨௨ ஒருவன் தனக்குச் சொந்தமான வயலாக இல்லாமல், தான் விலைக்கு வாங்கின ஒரு வயலைக் யெகோவாவுக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால்,
“‘Sɛ obi bi de asase a watɔ ma Awurade, na sɛ asase no nyɛ nʼabusua asase a,
23 ௨௩ அது யூபிலி வருடம்வரை, உன் மதிப்பின்படி பெறும்விலை இன்னதென்று ஆசாரியன் அவனோடே கணக்குப்பார்த்து, அந்த உன் மதிப்பை, யெகோவாவுக்குப் பரிசுத்தமாக இருக்கும்படி, அவன் அந்நாளிலே கொடுக்கக்கடவன்.
ɔsɔfoɔ no bɛgyina mfeɛ a aka ama wɔadi Mfirinhyia Aduonum Afahyɛ no so asese ne boɔ. Ɛsɛ sɛ onipa ko no tua ɛboɔ no ɛda no ara, na ɛyɛ afɔrebɔdeɛ kronkron ma Awurade.
24 ௨௪ யார் கையிலே அந்த வயலை வாங்கினானோ, அந்த நிலத்திற்குச் சொந்தக்காரனிடம் அது யூபிலி வருடத்தில் திரும்பச்சேரும்.
Mfirinhyia Aduonum Afahyɛ no duru so a, asase no bɛsane akɔ deɛ ɔtɔneɛ no nkyɛn anaasɛ deɛ na ɔyɛ asase no wura no.
25 ௨௫ உன் மதிப்பீடெல்லாம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்காயிருக்கக்கடவது; ஒரு சேக்கலானது இருபது கேரா.
Wɔbɛsese ɛho ka no nyinaa wɔ nnwetɛbena a wɔgye wɔ hyiadan mu, a ɛyɛ gram dubaako.
26 ௨௬ “முதற்பிறந்தவைகள் யெகோவாவுடையது, ஆகையால் ஒருவரும் முதற்பிறந்தவைகளாகிய மிருகங்களைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொள்ளக்கூடாது; அது மாடானாலும் ஆடானாலும் யெகோவாவுடையது.
“‘Ɛnsɛ sɛ obiara de aboa bi abakan ma Awurade, ɛfiri sɛ abakan biara, sɛ ɔyɛ nantwie anaa odwan no, yɛ Awurade dea dada.
27 ௨௭ சுத்தமல்லாத மிருகத்தினுடைய முதற்பிறந்ததாக இருந்தால், அதை அவன் உன் மதிப்பின்படி மீட்டுக்கொண்டு, அதனுடனே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன்; மீட்கப்படாமலிருந்தால், உன் மதிப்பின்படி அது விற்கப்படக்கடவது.
Sɛ ɔyɛ mmoa a wɔn ho nteɛ no bi a, onipa no bɛtumi atua ne boɔ no, na ɔde ɛboɔ no mu nkyɛmu enum mu baako aka ho. Sɛ onipa no antɔ bio deɛ a, wɔbɛtɔn aboa no sɛdeɛ ne boɔ teɛ.
28 ௨௮ “ஒருவன் தன்னிடத்திலுள்ள மனிதர்களிலாவது, மிருகங்களிலாவது, சொந்தமான நிலத்திலாவது, எதையாகிலும் யெகோவாவுக்கென்று நேர்ந்துகொண்டால், அது விற்கப்படவும் மீட்கப்படவும் கூடாது; நேர்ந்துகொள்ளப்பட்டவைகளெல்லாம் யெகோவாவுக்காகப் பரிசுத்தமாக இருக்கும்.
“‘Adeɛ biara a wɔde ama Awurade no, sɛ ɛyɛ nnipa, mmoa anaa abusuasase no, ɛnsɛ sɛ wɔtɔn anaa wɔsane gye, ɛfiri sɛ, biribiara a ɛte saa no yɛ kronkron ma Awurade.
29 ௨௯ மனிதர்களில் சாபத்தீடாக நியமிக்கப்பட்டவர்களெல்லாம் மீட்கப்படாமல் கொலைசெய்யப்படக்கடவர்கள்.
“‘Onipa biara a Awurade ayi no asi nkyɛn ama ɔsɛeɛ no, wɔmmfa biribi ntua ne tiri ka. Ɛsɛ sɛ wɔkum no.
30 ௩0 “தேசத்திலே நிலத்தின் வித்திலும், மரங்களின் பழங்களிலும், தசமபாகம் எல்லாம் யெகோவாவுக்கு உரியது; அது யெகோவாவுக்குப் பரிசுத்தமானது.
“‘Asase no so nnɔbaeɛ nkyɛmu edu mu baako, sɛ ɛyɛ aburoo anaa aduaba no yɛ Awurade dea. Ɛyɛ kronkron.
31 ௩௧ ஒருவன் தன் தசமபாகத்திலே எவ்வளவாவது மீட்டுக்கொள்ள விருப்பமாக இருந்தான் என்றால், அதனுடன் ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்.
Sɛ obi pɛ sɛ ɔsane tɔ saa aduaba anaa aburoo no a, ɛsɛ sɛ ɔde ne boɔ nkyɛmu enum mu baako ka ho.
32 ௩௨ மேய்ப்பனின் கோலின் கீழ்ப்பட்ட ஆடுமாடுகளிலே பத்தில் ஒரு பங்காகிறதெல்லாம் யெகோவாவுக்குப் பரிசுத்தமானது.
Anantwie ne nnwan no ntotosoɔ dudu nyinaa, aboa biara a ɔtɔ so edu a ɔfa odwanhwɛfoɔ nsam no yɛ kronkron ma Awurade.
33 ௩௩ அது நல்லதோ குறைபாடுள்ளதோ என்று அவன் பார்க்கவேண்டாம்; அதை மாற்றவும் வேண்டாம்; மாற்றினால், அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுக்கப்பட்டதுமாகிய இரண்டும் பரிசுத்தமாகும்; அது மீட்கப்படக்கூடாதென்று அவர்களோடே சொல்” என்றார்.
Aboa a ɔtɔ so edu a wɔde bɛma Awurade no, wɔnhwɛ sɛ ɔyɛ anaa ɔnyɛ, na wɔmmfa biribiara nsi nʼananmu, ɛfiri sɛ, sɛ wɔde biribiara si ananmu a, ne nyinaa bɛyɛ kronkron, a obiara rentumi nnye bio.’”
34 ௩௪ இஸ்ரவேல் மக்களுக்குச் சொல்லும்படி யெகோவா சீனாய்மலையில் மோசேக்கு விதித்த கட்டளைகள் இவைகளே.
Yeinom ne mmara a Awurade de maa Mose wɔ Sinai Bepɔ so sɛ ɔnka nkyerɛ Israelfoɔ no.