< லேவியராகமம் 19 >
1 ௧ பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
Ubangiji ya ce wa Musa,
2 ௨ “நீ இஸ்ரவேல் மக்களின் சபை அனைத்தோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் தேவனும் யெகோவாவாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராக இருங்கள்.
“Yi wa taron jama’ar Isra’ila gaba ɗaya magana, ka ce musu, ‘Ku zama masu tsarki, domin Ni, Ubangiji Allahnku, mai tsarki ne.
3 ௩ உங்களில் அவனவன் தன்தன் தாய்க்கும் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வு நாட்களை அனுசரிக்கவும்கடவீர்கள்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.
“‘Dole kowannenku yă girmama mahaifiyarsa da mahaifinsa, dole kuma ku kiyaye Asabbacina. Ni ne Ubangiji Allahnku.
4 ௪ சிலைகளை நாடாமலும், வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.
“‘Kada ku juyo ga gumaka, ko ku yi wa kanku allolin da aka yi zubi da ƙarfe. Ni ne Ubangiji Allahnku.
5 ௫ “நீங்கள் சமாதானபலியைக் யெகோவாவுக்குச் செலுத்தினால், அதை மன உற்சாகமாகச் செலுத்துங்கள்.
“‘Sa’ad da kuka miƙa hadaya ta salama ga Ubangiji, ku miƙa ta yadda za tă karɓu a madadinku.
6 ௬ நீங்கள் அதைச் செலுத்துகிற நாளிலும் மறுநாளிலும் அதைச் சாப்பிடவேண்டும்; மூன்றாம் நாள்வரை மீதியானது நெருப்பிலே சுட்டெரிக்கப்படக்கடவது.
Za a ci ta a ranar da kuka miƙa ta, ko kuwa a kashegarin; duk abin da ya rage har kwana ta uku dole a ƙone shi.
7 ௭ மூன்றாம் நாளில் அதில் எதையாகிலும் சாப்பிட்டால் அருவருப்பாயிருக்கும்; அது அங்கீகரிக்கப்படமாட்டாது.
In aka ci ta a rana ta uku, marar tsabta ce, ba kuma za a karɓe ta ba.
8 ௮ அதைச் சாப்பிடுகிறவன் யெகோவாவுக்குப் பரிசுத்தமானதைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினதினால் அவன் தன் அக்கிரமத்தைச் சுமந்து, தன் மக்களுக்குள் இல்லாதபடி அறுப்புண்டுபோவான்.
Duk wanda ya ci ta zai zama da laifi domin ya ƙazantar da abin da yake da tsarki ga Ubangiji, dole a raba mutumin nan da mutanensa.
9 ௯ “நீங்கள் தேசத்தின் பயிரை அறுக்கும்போது, உன் வயலின் ஓரத்தில் இருக்கிறதை முற்றிலும் அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும்,
“‘Sa’ad da kuka yi girbin amfanin gonarku, kada ku girbe har zuwa gefen gonar, ko ku yi kalan girbinku.
10 ௧0 உன் திராட்சைத்தோட்டத்திலே பின் அறுப்பை அறுக்காமலும், அதிலே சிந்திக்கிடக்கிற பழங்களைப் பொறுக்காமலும், அவைகளை ஏழைகளுக்கும் பரதேசிக்கும் விட்டுவிடுவாயாக; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.
Kada ku koma gonar inabinku kuna kala, ko ku tattara’ya’yan inabin da suka fāffāɗi. Ku bar su domin matalauta da kuma baƙi. Ni ne Ubangiji Allahnku.
11 ௧௧ “நீங்கள் திருடாமலும், வஞ்சனைசெய்யாமலும், ஒருவருக்கொருவர் பொய் சொல்லாமலும் இருங்கள்.
“‘Kada ku yi sata. “‘Kada ku yi ƙarya. “‘Kada ku ruɗe juna.
12 ௧௨ என் நாமத்தைக்கொண்டு பொய்யாணையிடுகிறதினால், உங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமலும் இருப்பீர்களாக; நான் யெகோவா.
“‘Kada ku rantse bisa ƙarya da sunana, ta haka har ku ƙasƙantar da sunan Allahnku. Ni ne Ubangiji.
13 ௧௩ “பிறனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருப்பாயாக; கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம்வரை உன்னிடத்தில் இருக்கக்கூடாது.
“‘Kada ku zalunci maƙwabcinku, ko ku yi masa ƙwace. “‘Kada ku riƙe albashin ma’aikaci yă kwana.
14 ௧௪ செவிடனை நிந்திக்காமலும், குருடனுக்கு முன்னே தடைகளை வைக்காமலும், உன் தேவனுக்குப் பயந்திருப்பாயாக; நான் யெகோவா.
“‘Kada ku zagi kurma, ko ku sa abin tuntuɓe a gaban makaho, amma ku ji tsoron Allahnku. Ni ne Ubangiji.
15 ௧௫ “நியாயவிசாரணையில் அநியாயம் செய்யாதிருங்கள்; சிறியவனுக்கு முகதாட்சிணியம் செய்யாமலும், பெரியவனுடைய முகத்திற்கு பயப்படாமலும், நீதியாகப் பிறனுக்கு நியாயந்தீர்ப்பாயாக.
“‘Kada ku yi rashin adalci cikin shari’a; kada ku nuna sonkai ga matalauci, ko ku goyi bayan mai arziki, amma ku shari’anta maƙwabci cikin gaskiya.
16 ௧௬ உன் மக்களுக்குள்ளே அங்கும் இங்கும் கோள்சொல்லித் திரியாதே; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் யெகோவா.
“‘Kada ku yi ta yawo kuna yaɗa ƙarya a cikin mutanenku. “‘Kada ku yi wani abin da zai sa ran maƙwabcinku cikin hatsari. Ni ne Ubangiji.
17 ௧௭ “உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகைக்காதே; பிறன்மேல் பாவம் சுமராதபடி அவனை எப்படியும் கடிந்து கொள்ளவேண்டும்.
“‘Kada ka yi ƙiyayyar ɗan’uwanka a zuciya. Ka tsawata wa maƙwabcinka da gaske don kada ka sami rabo cikin laifinsa.
18 ௧௮ பழிக்குப்பழி வாங்காமலும் உன் மக்கள்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூறுவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் யெகோவா.
“‘Kada ka nemi yin ramuwa, ko ka riƙe wani cikin mutanenka a zuciya, amma ka ƙaunaci maƙwabcinka kamar kanka. Ni ne Ubangiji.
19 ௧௯ “என் கட்டளைகளைக் கைக்கொள்வீர்களாக; உன் மிருகங்களை வேறு இனத்தோடே பெருகச்செய்யாதே; உன் வயலிலே வெவ்வேறு வகையான விதைகளைக் கலந்து விதைக்காதே; சணல்நூலும் கம்பளிநூலும் கலந்த உடையை அணியாதே
“‘Ku kiyaye farillaina. “‘Kada ku sa dabbobin da ba iri ɗaya ba su yi barbara. “‘Kada ku yi shuki iri biyu a gonarku. “‘Kada ku sa rigar da aka saƙa da yadi iri biyu.
20 ௨0 “ஒருவனுக்கு அடிமையானவள் ஒரு ஆணுக்கு நியமிக்கப்பட்டவளாக இருந்து, முற்றிலும் மீட்கப்படாமலும் தன்னிச்சையாக விடப்படாமலுமிருக்க, அவளோடே ஒருவன் காம உணர்வுடன் உடலுறவுகொண்டால், அவர்கள் கொலை செய்யப்படாமல், அடிக்கப்படவேண்டும்; அவள் சுதந்திரமுள்ளவள் அல்ல.
“‘In wani ya kwana da mace wadda take baiwa, wadda aka yi wa wani alkawari amma bai fanshe ta ba, ko kuwa ba a’yantar da ita ba, dole a yi hukuncin da ya dace. Duk da haka ba za a kashe su ba, domin ba a’yantar da ita ba.
21 ௨௧ அவன் தன் குற்றநிவாரணபலியாக ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுடைய சந்நிதியில் ஒரு ஆட்டுக்கடாவைக் கொண்டுவரக்கடவன்.
Dole mutumin da ya kwana da ita yă kawo rago a ƙofar Tentin Sujada domin hadaya don laifi ga Ubangiji.
22 ௨௨ அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தினிமித்தம் அவனுக்காகக் யெகோவாவுடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் செய்த பாவம் அவனுக்கு மன்னிக்கப்படும்.
Da ragon hadaya don laifin ne firist zai yi kafara saboda mutumin a gaban Ubangiji saboda zunubin da ya yi, za a kuwa gafarta zunubinsa.
23 ௨௩ “நீங்கள் அந்த தேசத்தில் வந்து, சாப்பிடத்தக்க பழங்களைத் தருகிற பலவித மரங்களை நாட்டினபின்பு அவைகளின் பழங்களை விருத்தசேதனம் இல்லாதவைகளென்று கருதுவீர்களாக; மூன்று வருடங்கள் அது சாப்பிடப்படாமல், விருத்தசேதனம் இல்லாததாக உங்களுக்கு கருதப்படவேண்டும்.
“‘Sa’ad da kuka shiga ƙasar kuka kuma shuka kowane irin itace mai’ya’ya na ci, ku ɗauki’ya’yan itatuwan nan a matsayi an hana ku ci. Shekara uku za ku ɗauka a matsayi an hana ku, ba za ku ci su ba.
24 ௨௪ பின்பு நான்காம் வருடத்திலே அவைகளின் பழங்களெல்லாம் யெகோவாவுக்குத் துதிசெலுத்துகிறதற்கேற்ற பரிசுத்தமாக இருக்கும்.
A shekara ta huɗu, dukan’ya’yansu za su zama tsarkakakku, hadaya ta yabo ga Ubangiji.
25 ௨௫ ஐந்தாம் வருடத்திலே அவைகளின் பழங்களைச் சாப்பிடலாம்; இப்படி அவைகளின் பலன் உங்களுக்குப் பெருகும்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.
Amma a shekara ta biyar, za ku iya cin’ya’yan itatuwan. Ta haka girbinku zai ƙaru. Ni ne Ubangiji Allahnku.
26 ௨௬ “யாதொன்றையும் இரத்தத்துடன் சாப்பிடவேண்டாம். குறிகேட்காமலும், நாள்பார்க்காமலும் இருப்பீர்களாக.
“‘Kada ku ci wani abinci tare da jini a cikinsa. “‘Kada ku yi duba ko sihiri.
27 ௨௭ உங்கள் தலைமுடியைச் சுற்றி ஒதுக்காமலும், தாடியின் ஓரங்களைக் கத்தரிக்காமலும்,
“‘Ba za ka aske gefe-gefe na gashin kanka ba, ko ku aske gemunku.
28 ௨௮ செத்தவனுக்காக உங்கள் உடலைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துக்களை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான் யெகோவா.
“‘Kada ku tsattsaga jikunanku saboda matattu, ba kuwa za ku yi wa kanku zāne-zāne a jiki ba. Ni ne Ubangiji.
29 ௨௯ “தேசத்தார் வேசித்தனம்செய்து தேசமெங்கும் முறைகேடான பாவம் நிறையாதபடி உன் மகளை வேசித்தனம்செய்ய விடுகிறதினாலே பரிசுத்தக் குலைச்சலாக்காதே.
“‘Kada ka ƙasƙantar da’yarka ta wurin mai da ita karuwa, in ba haka ba ƙasar za tă juya ga karuwanci tă kuma cika da mugunta.
30 ௩0 என் ஓய்வுநாட்களை அனுசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாக இருப்பீர்களாக; நான் யெகோவா.
“‘Ku kiyaye Asabbacina, ku kuma girmama wuri mai tsarkina. Ni ne Ubangiji.
31 ௩௧ “மாந்திரீகம் செய்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்படவேண்டாம்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.
“‘Kada ku juya ga masu duba, ko ku nemi shawarar bokaye, gama za ku ƙazantu ta wurinsu. Ni ne Ubangiji Allahnku.
32 ௩௨ “நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனப்படுத்தி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக; நான் யெகோவா.
“‘Ku miƙe tsaye a gaban tsofaffi, ku nuna bangirma ga waɗanda suka tsufa, ku kuma girmama Allahnku. Ni ne Ubangiji.
33 ௩௩ “யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம்.
“‘Sa’ad da baƙo yana zama tare da ku a ƙasarku, kada ku wulaƙanta shi.
34 ௩௪ உங்களிடத்தில் குடியிருக்கிற அந்நியனை இஸ்ரவேலனைப்போல கருதி, நீங்கள் உங்களில் அன்புசெலுத்துவதுபோல அவனிலும் அன்புசெலுத்துவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியர்களாக இருந்தீர்களே; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.
Dole ku ɗauki baƙon da yake zama tare da ku kamar haifaffe ɗan ƙasa. Ku ƙaunace shi kamar kanku, gama dā ku ma baƙi ne a Masar. Ni ne Ubangiji Allahnku.
35 ௩௫ “நியாயவிசாரணையிலும், அளவிலும், நிறையிலும், படியிலும் அநியாயம் செய்யாதிருப்பீர்களாக.
“‘Kada ku yi amfani da mudun ƙarya sa’ad da kuke awon tsawo, nauyi, ko yawan abu.
36 ௩௬ நியாயமான தராசும், நியாயமான நிறைகல்லும், நியாயமான மரக்காலும், நியாயமான படியும் உங்களுக்கு இருக்கவேண்டும்; நான் உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த உங்கள் தேவனாகிய யெகோவா.
Ku yi amfani da ma’auni na gaskiya da mudu na gaskiya, da kuma magwaji na gaskiya. Ni ne Ubangiji Allahnku, wanda ya fitar da ku daga Masar.
37 ௩௭ ஆகையால் என்னுடைய கட்டளைகள், நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு, அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; நான் யெகோவா என்று சொல்” என்றார்.
“‘Ku kiyaye dukan farillaina da kuma dukan dokokina, ku kuma bi su. Ni ne Ubangiji.’”