< லேவியராகமம் 16 >
1 ௧ ஆரோனின் இரண்டு மகன்கள் யெகோவாவுடைய சந்நிதியிலே சேர்ந்து மரணமடைந்தபின்பு, யெகோவா மோசேயை நோக்கி:
Sau cái chết của hai con trai A-rôn trước mặt Chúa Hằng Hữu, Chúa Hằng Hữu phán bảo Môi-se:
2 ௨ “கிருபாசனத்தின்மேல் ஒரு மேகத்தில் நான் காணப்படுவேன்; ஆதலால் உன் சகோதரனாகிய ஆரோன் மரணமடையாமலிருக்க, பரிசுத்த ஸ்தலத்திலே திரைக்கு உட்புறத்திலிருக்கிற பெட்டியின்மேலுள்ள கிருபாசன மூடிக்கு முன்பாக எல்லா நேரங்களிலும் வரவேண்டாம் என்று அவனுக்குச் சொல்.
“Hãy dặn A-rôn, anh con rằng không phải bất cứ lúc nào cũng có thể vào Nơi Chí Thánh, bên trong bức màn, trước nắp chuộc tội trên Hòm được. Nếu bất tuân sẽ chết, vì Ta hiện diện trong đám mây bên trên nắp chuộc tội.
3 ௩ ஆரோன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழையவேண்டிய விதமாவது: அவன் ஒரு காளையைப் பாவநிவாரணபலியாகவும், ஒரு ஆட்டுக்கடாவைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்தி நுழையவேண்டும்.
Nhưng mỗi khi vào nơi thánh, A-rôn phải đem theo một con bò đực con dâng làm tế lễ chuộc tội, và một con chiên đực dâng làm tế lễ thiêu.
4 ௪ அவன் பரிசுத்தமான சணல்நூல்சட்டையை அணிந்து, தன் இடுப்பிற்குச் சணல்நூல் உள்ளாடையைப் போட்டு, சணல்நூல் இடுப்புக்கச்சையைக் கட்டி, சணல்நூல் தலைப்பாகையைத் அணிந்துகொண்டிருக்கவேண்டும்; அவைகள் பரிசுத்த உடைகள்; அவன் தண்ணீரில் குளித்து, அவைகளை அணிந்துகொண்டு,
A-rôn cũng phải tắm sạch sẽ, mặc áo dài thánh và quần ngắn, thắt lưng, đội khăn, các thứ này toàn bằng vải gai.
5 ௫ இஸ்ரவேல் மக்களாகிய சபையாரிடத்திலே, பாவநிவாரணபலியாக இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும், சர்வாங்கதகனபலியாக ஒரு ஆட்டுகடாவையும் வாங்கக்கடவன்.
Người Ít-ra-ên cũng phải đem cho A-rôn hai con dê đực để dâng làm tế lễ chuộc tội, một con chiên dâng làm tế lễ thiêu.
6 ௬ பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி, தன்னுடைய பாவநிவாரணபலியின் காளையைச் சேரச்செய்து,
A-rôn phải dâng con bò đực làm tế lễ chuộc tội cho chính mình và cho nhà mình.
7 ௭ அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுடைய சந்நிதியில் நிறுத்தி,
Sau đó, người sẽ đem hai con dê đực đến cửa Đền Tạm, trước mặt Chúa Hằng Hữu.
8 ௮ அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் குறித்துக் யேகோவாக்கென்று ஒரு சீட்டும், போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக்கடாவுக்கென்று ஒரு சீட்டும் போட்டு,
Người sẽ rút thăm xem con dê nào thuộc về Chúa Hằng Hữu, con nào thuộc về A-xa-sên.
9 ௯ யெகோவாக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணபலியாகச் சேரச்செய்து,
Con dê rút thăm về phần Chúa Hằng Hữu sẽ được A-rôn dâng lên Ngài để làm sinh tế chuộc tội.
10 ௧0 போக்காடாக விடப்படச் சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவை, அதைக்கொண்டு பாவநிவிர்த்தி உண்டாக்கவும் அதைப் போக்காடாக வனாந்திரத்திலே போகவிடவும், யெகோவாவுடைய சந்நிதியில் உயிரோடே நிறுத்தி;
Còn con dê rút thăm để gánh tội sẽ được A-rôn đem trình lên Chúa Hằng Hữu, còn sống, để chuộc tội. Sau đó, nó sẽ được thả vào hoang mạc, mang theo tội của dân.
11 ௧௧ “பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி, தன்னுடைய பாவநிவாரணத்திற்கான காளையைக் கொண்டுவந்து, அதைக் கொன்று,
Sau khi dâng con bò đực làm lễ chuộc tội cho chính mình và nhà mình,
12 ௧௨ யெகோவாவுடைய சந்நிதியிலிருக்கும் பலிபீடத்தின்மேலுள்ள நெருப்புத்தணலினால் தூபகலசத்தை நிரப்பி, பொடியாக்கப்பட்ட நறுமண தூபவர்க்கத்திலே தன் கைப்பிடிகள் நிறைய எடுத்து, திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து,
A-rôn sẽ gắp than cháy đỏ trên bàn thờ, trước mặt Chúa Hằng Hữu, bỏ đầy lư hương, rồi bốc hương bột đầy tay, đem vào bên trong bức màn.
13 ௧௩ தான் மரணமடையாமலிருக்க தூபமேகமானது சாட்சிப்பெட்டியின்மேல் இருக்கும் கிருபாசனத்தை மூடத்தக்கதாக, யெகோவாவுவுடைய சந்நிதியில் நெருப்பின்மேல் தூபவர்க்கத்தைப் போடக்கடவன்.
Ở đó, A-rôn bỏ hương lên trên than đang cháy trước mặt Chúa Hằng Hữu, để khói hương xông lên phủ kín nắp chuộc tội trên Hòm Giao Ước, như vậy A-rôn mới khỏi chết.
14 ௧௪ பின்பு காளையின் இரத்தத்திலே கொஞ்சம் எடுத்து, கீழ்ப்புறமாக நின்று, தன் விரலினால் கிருபாசனத்தின்மேல் தெளித்து, அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துக் கிருபாசனத்திற்கு முன்பாக ஏழுமுறை தன் விரலினால் தெளிக்கக்கடவன்.
A-rôn sẽ lấy một ít máu bò đực, dùng ngón tay rảy lên đầu hướng về phía đông của nắp chuộc tội, rồi rảy phía trước nắp này bảy lần.
15 ௧௫ பின்பு மக்களுடைய பாவநிவாரணபலியான வெள்ளாட்டுக்கடாவை அவன் கொன்று, அதின் இரத்தத்தைத் திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து, காளையின் இரத்தத்தைத் தெளித்ததுபோல, அதின் இரத்தத்தையும் கிருபாசனத்தின்மேலும் அதற்கு முன்பாகவும் தெளித்து,
Sau đó, A-rôn giết con dê đực làm lễ chuộc tội cho dân, đem máu vào trong màn, rảy bên trên và phía trước nắp chuộc tội như đã rảy máu bò đực trước đây.
16 ௧௬ இஸ்ரவேல் மக்களுடைய தீட்டுகளினிமித்தமும், அவர்களுடைய சகல பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய மீறுதல்களினிமித்தமும், பரிசுத்த ஸ்தலத்திற்காகப் பிராயச்சித்தம்செய்து, அவர்களிடத்தில் அவர்களுடைய தீட்டுகளுக்குள்ளே நிற்கிற ஆசரிப்புக்கூடாரத்திற்காகவும் அப்படியே செய்யக்கடவன்.
Như vậy, người làm lễ chuộc tội cho Nơi Chí Thánh đã bị tội lỗi của người Ít-ra-ên làm cho ô uế; người cũng chuộc tội cho Đền Tạm, vì đền ở ngay giữa quần chúng không sạch.
17 ௧௭ பாவநிவிர்த்தி செய்யும்படி அவன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைந்து, தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் இஸ்ரவேல் சபையார் அனைவருக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, வெளியே வருமளவும் ஆசரிப்புக்கூடாரத்தில் ஒருவரும் இருக்கக்கூடாது.
Không một ai được phép ở trong Lều Hội Kiến, trong lúc A-rôn vào Nơi Chí Thánh làm lễ chuộc tội cho mình, nhà mình và cho toàn dân Ít-ra-ên xong, cho đến khi người từ đó đi ra.
18 ௧௮ பின்பு அவன் யெகோவாவுடைய சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தண்டை வந்து, அதற்காகப் பிராயச்சித்தம்செய்து, காளையின் இரத்தத்திலும் வெள்ளாட்டுக் கடாவின் இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்துக் கொம்புகளின்மேல் சுற்றிலும் பூசி,
Sau đó A-rôn sẽ ra đến bàn thờ trước mặt Chúa Hằng Hữu, làm lễ chuộc tội cho bàn thờ, lấy máu bò đực và máu dê đực bôi lên khắp các sừng của bàn thờ.
19 ௧௯ தன் விரலினால் அந்த இரத்தத்தில் எடுத்து, ஏழுமுறை அதின்மேல் தெளித்து, அதை இஸ்ரவேல் மக்களின் தீட்டுகள் நீங்கச் சுத்திகரித்து, பரிசுத்தப்படுத்தவேண்டும்.
Người cũng lấy ngón tay rảy máu trên bàn thờ bảy lần, tẩy sạch sự ô uế của người Ít-ra-ên, và thánh hóa bàn thờ.
20 ௨0 “அவன் இப்படிப் பரிசுத்த ஸ்தலத்திற்கும் ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் பிராயச்சித்தம் செய்துமுடிந்தபின்பு, உயிரோடிருக்கிற வெள்ளாட்டுக்கடாவைச் சேரச்செய்து,
Sau khi làm xong lễ chuộc tội cho Nơi Chí Thánh, Đền Tạm, và bàn thờ, A-rôn sẽ đem con dê đực đến.
21 ௨௧ அதின் தலையின்மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின்மேல் இஸ்ரவேல் மக்களுடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக்கடாவினுடைய தலையின்மேல் சுமத்தி, அதை அதற்கான ஒருவன் கையில் கொடுத்து வனாந்திரத்திற்கு அனுப்பிவிடுவானாக.
Người đặt tay mình lên đầu nó, xưng tất cả tội của người Ít-ra-ên trên đầu nó để nó mang tội của toàn dân, và một người được chỉ định sẵn sẽ đem nó vào hoang mạc.
22 ௨௨ அந்த வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய அக்கிரமங்களையெல்லாம் தன்மேல் சுமந்துகொண்டு, குடியில்லாத தேசத்திற்குப் போவதாக; அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவை வனாந்திரத்திலே போகவிடக்கடவன்.
Người ấy sẽ thả nó ra, con dê sẽ mang tất cả tội lỗi của dân đi vào nơi vắng vẻ, trong hoang mạc.
23 ௨௩ “ஆரோன் ஆசரிப்புக்கூடாரத்திற்குள் வந்து, தான் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழையும்போது, அணிந்திருந்த சணல்நூல் உடைகளைக் கழற்றி, அங்கே வைத்துவிட்டு,
Xong, A-rôn vào Đền Tạm, cởi tất cả y phục vải gai mình đã mặc để đi vào Nơi Chí Thánh, và bỏ tất cả ở đó.
24 ௨௪ பரிசுத்த இடத்திலே தண்ணீரில் குளித்து, தன் உடைகளை அணிந்துகொண்டு, வெளியே வந்து, தன் சர்வாங்கதகனபலியையும் மக்களின் சர்வாங்கதகனபலியையும் செலுத்தி, தனக்காகவும் மக்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து,
Người sẽ tắm tại một nơi thánh, mặc áo, đi ra dâng tế lễ thiêu của mình và của dân, để chuộc tội cho mình và cho dân.
25 ௨௫ பாவநிவாரணபலியின் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்.
Người cũng đốt mỡ của sinh tế chuộc tội trên bàn thờ.
26 ௨௬ போகவிடப்படும் போக்காடாகிய வெள்ளாட்டுக்கடாவைக் கொண்டுபோய் விட்டவன், தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, பின்பு முகாமிற்குள் வருவானாக.
Còn người đem con dê vào hoang mạc phải giặt quần áo, tắm rửa, xong mới được vào nơi đóng trại.
27 ௨௭ பாவநிவிர்த்திக்கென்று பரிசுத்த ஸ்தலத்திற்குள் இரத்தம் கொண்டுவரப்பட்ட பாவநிவாரணபலியாகிய காளையையும், பாவநிவாரணபலியாகிய வெள்ளாட்டுக்கடாவையும், முகாமிற்கு வெளியே கொண்டுபோய், அவைகளின் தோலையும், மாம்சத்தையும், சாணியையும் நெருப்பிலே சுட்டெரிக்கக்கடவர்கள்.
Về con bò đực và dê đực dùng làm sinh tế chuộc tội, máu của nó sẽ được A-rôn đem vào Nơi Chí Thánh làm lễ chuộc tội; còn da, thịt và phân của nó sẽ được đem ra khỏi nơi đóng trại đốt đi.
28 ௨௮ அவைகளைச் சுட்டெரித்தவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, பின்பு முகாமிற்குள் வருவானாக.
Người đốt sẽ phải giặt quần áo, tắm rửa xong mới được trở vào nơi đóng trại.
29 ௨௯ “ஏழாம் மாதம் பத்தாம் தேதியிலே, இஸ்ரவேலனானாலும், உங்களுக்குள் தங்கும் அந்நியனானாலும், தங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்துவதுமன்றி, ஒரு வேலையும் செய்யாமல் இருக்கவேண்டும்; இது உங்களுக்கு நிரந்தரமான கட்டளையாக இருப்பதாக.
Luật sau đây có tính cách vĩnh viễn: Ngày mồng mười tháng bảy, mọi người phải hạ mình tĩnh tâm, nghỉ mọi công việc. Luật này áp dụng cho người dân bản xứ lẫn ngoại kiều.
30 ௩0 யெகோவாவுடைய சந்நிதியில் உங்கள் பாவமெல்லாம் நீங்கிச் சுத்திகரிக்கப்படும்படி, அந்நாளில் உங்களைச் சுத்திகரிக்க, உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும்.
Vì trong ngày hôm ấy, các ngươi được chuộc tội, tẩy sạch lỗi trước mặt Chúa Hằng Hữu.
31 ௩௧ உங்களுக்கு அது விசேஷித்த ஓய்வுநாள்; அதிலே உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தக்கடவீர்கள்; இது நிரந்தரமான கட்டளை.
Đó là một ngày lễ cuối tuần long trọng, một ngày nghỉ ngơi, mọi người phải hãm mình tĩnh tâm. Luật này áp dụng đời đời.
32 ௩௨ அபிஷேகம் பெற்றவனும், தன் தகப்பனுடைய பட்டத்திற்கு வந்து ஆசாரிய ஊழியம்செய்யப் பிரதிஷ்டை செய்யப்பட்டவனுமாகிய ஆசாரியனே பாவநிவிர்த்தி செய்யக்கடவன். அவன் பரிசுத்த உடைகளாகிய சணல்நூல் உடைகளை அணிந்துகொண்டு,
Thầy tế lễ được xức dầu thánh để thay thế cha mình giữ chức trưởng tế phải làm lễ chuộc tội. Người sẽ mặc áo vải gai thánh,
33 ௩௩ பரிசுத்த ஸ்தலத்திற்கும் ஆசரிப்புக்கூடாரத்திற்கும், பலிபீடத்திற்கும், பிராயச்சித்தம்செய்து, ஆசாரியர்களுக்காகவும் சபையின் சகல மக்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
đứng ra làm lễ chuộc tội cho Nơi Chí Thánh, Đền Tạm, bàn thờ, cho các thầy tế lễ khác và toàn dân.
34 ௩௪ இப்படி வருடத்தில் ஒருமுறை இஸ்ரவேல் மக்களுக்காக, அவர்களுடைய சகல பாவங்களுக்கும் பாவநிவிர்த்தி செய்வது, உங்களுக்கு நிரந்தரமான கட்டளையாக இருப்பதாக என்று சொல் என்றார். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் செய்தான்.
Luật này không thay đổi qua các thời đại, liên hệ đến việc chuộc tội cho người dân Ít-ra-ên hằng năm, vì tội họ phạm.” Môi-se tuân theo mọi lời Chúa Hằng Hữu phán dạy.