< லேவியராகமம் 15 >
1 ௧ பின்னும் யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
И рече Господь к Моисею и Аарону, глаголя:
2 ௨ “நீங்கள் இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒருவனுக்கு விந்து கழிதல் உண்டானால், அதினாலே அவன் தீட்டானவன்.
глаголи сыном Израилевым и речеши к ним: мужу, мужу, емуже аще будет излияние от тела его, излияние его нечисто есть.
3 ௩ அவனுடைய மாம்சத்திலுள்ள விந்து ஊறிக்கொண்டிருந்தாலும், அவன் விந்து அடைபட்டிருந்தாலும், அதினால் அவனுக்குத் தீட்டுண்டாகும்.
И сей закон нечистоты его: изливаяй семя из тела своего, от излияния, имже составлено есть тело его излиянием, сия нечистота его в нем: вся дни излияния тела его, имже составлено тело его излиянием его, нечистота его есть:
4 ௪ விந்து கழிதல் உள்ளவன் படுக்கிற எந்தப் படுக்கையும் தீட்டாகும்; அவன் எதின்மேல் உட்காருகிறானோ அதுவும் தீட்டாகும்.
всяко ложе, на немже аше ляжет изливаяй семя, нечисто есть: и всяк сосуд, на немже аще сядет верху его изливаяй семя, нечист будет:
5 ௫ அவனுடைய படுக்கையைத் தொடுகிறவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளிக்கவேண்டும்; மாலைவரைத் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.
и человек, иже аще прикоснется ложа его, да исперет ризы своя и да омыет тело свое водою, и нечист будет до вечера:
6 ௬ விந்து கழிதல் உள்ளவன் உட்கார்ந்த இடத்தில் உட்காருகிறவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
и седяй на сосуде, на немже аще сядет верху его изливаяй семя, да исперет ризы своя и да омыется водою, и нечист будет до вечера:
7 ௭ விந்து கழிதல் உள்ளவனின் உடலைத் தொடுகிறவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
и прикоснувыйся к плоти изливающаго семя да исперет ризы своя и да омыется водою, и нечист будет до вечера.
8 ௮ விந்து கழிதல் உள்ளவன் சுத்தமாக இருக்கிற ஒருவன்மேல் துப்பினால், இவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
Аще же плюнет изливаяй семя на чистаго, да исперет ризы своя и да измыется водою, и нечист будет до вечера:
9 ௯ விந்து கழிதல் உள்ளவன் ஏறும் எந்தச் சேணமும் தீட்டாயிருக்கும்.
и всяко седло ослее, на неже аще всядет верху его изливаяй семя, нечисто будет до вечера:
10 ௧0 அவனுக்குக் கீழிருந்த எதையாகிலும் தொடுகிறவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்; அதை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
и всяк прикоснувыйся всем, яже суть под ним, нечист будет до вечера: и вземляй я да исперет ризы своя и омыется водою, и нечист будет до вечера:
11 ௧௧ விந்து கழிதல் உள்ளவன் தன் கைகளைத் தண்ணீரினால் கழுவாமல் ஒருவனைத் தொட்டால், இவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
и еликим аще коснется изливаяй семя и рук своих не омыет водою, да исперет ризы своя и омыет тело водою, и нечист будет до вечера:
12 ௧௨ விந்து கழிதல் உள்ளவன் தொட்ட மண்பானை உடைக்கப்படவும், மரச்சாமான் அனைத்தும் தண்ணீரினால் கழுவப்படவும் வேண்டும்.
и сосуд глинян, емуже аще прикоснется изливаяй семя, да разбиется: а сосуд древяный да измыется водою, и чист будет.
13 ௧௩ “விந்து கழிதல் உள்ளவன் தன் விந்து கழிதல் நீங்கிச் சுத்தமானால், தன் சுத்திகரிப்புக்கென்று ஏழுநாட்கள் எண்ணிக்கொண்டிருந்து, தன் உடைகளைத் துவைத்து, தன் உடலை ஊற்றுநீரில் கழுவுவானாக; அப்பொழுது சுத்தமாக இருப்பான்.
Аще же очистится изливаяй семя от излияния своего, и изчислит себе седмь дний на очищение свое, и исперет ризы своя и омыет тело свое водою живою, и чист будет:
14 ௧௪ எட்டாம்நாளிலே, அவன் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து, ஆசாரியனிடத்தில் கொடுக்கக்கடவன்.
и в день осмый да возмет себе два горличища или два птенца голубина, и да принесет я пред Господа к дверем скинии свидения, и даст я жерцу:
15 ௧௫ ஆசாரியன் அவைகளில் ஒன்றை பாவநிவாரணபலியும் மற்றொன்றைச் சர்வாங்கதகனபலியுமாக, அவனுக்காகக் யெகோவாவுடைய சந்நிதியில் அவனுடைய விந்து கழிதலின் காரணமாக பாவநிவிர்த்தி செய்யவேண்டும்.
и сотворит я жрец един греха ради, и другий во всесожжение: и да помолится о нем жрец пред Господем о излиянии его.
16 ௧௬ “ஒருவனிலிருந்து விந்து கழிந்ததுண்டானால், அவன் தண்ணீரில் குளிக்கவேண்டும்; மாலைவரை அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.
И человек, емуже аще изыдет от ложа его семя, и да омыет водою все тело свое, и нечист будет до вечера:
17 ௧௭ கழிந்த விந்து பட்ட உடையும் தோலும் தண்ணீரினால் கழுவப்பட்டு, மாலைவரைத் தீட்டாயிருப்பதாக.
и всяка риза и всяка кожа, на нейже аще будет ложе семенное, да измыется водою, и нечиста будет до вечера.
18 ௧௮ விந்து கழிந்தவனோடே பெண் படுத்துக்கொண்டிருந்தால், இருவரும் தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பார்களாக.
И аще ляжет муж с женою своею на ложи семене, да измыются водою, и нечисты будут до вечера.
19 ௧௯ “மாதவிடாய் உள்ள பெண் தன் உடலிலுள்ள இரத்தப்போக்கினிமித்தமாக ஏழுநாட்கள் தன் விலக்கத்தில் இருப்பாளாக; அவளைத் தொடுகிறவன் எவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
И жена яже аще будет кровь точащи, и будет течение ея в телеси ея, седмь дний да будет в скверне своей: и всяк прикасаяйся ей нечист будет до вечера:
20 ௨0 அவள் விலக்கத்தில் இருக்கும்போது, எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும்.
и все, на немже аще седит в течении своем, нечисто будет, и всяко, на неже аще присядет (она), нечисто будет:
21 ௨௧ அவளுடைய படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
и всяк, иже аще прикоснется ложа ея, да исперет ризы своя и да измыет водою тело свое, и нечист будет до вечера:
22 ௨௨ அவள் உட்கார்ந்த இருக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
и всяк прикасаяйся всякому сосуду, на немже аще сядет, да исперет ризы своя и да измыется водою, и нечист будет до вечера:
23 ௨௩ அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த இருக்கையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
аще же на ложи ей сущей, или на сосуде, на немже аще сядет (она), егда прикоснется кто ей, нечист будет до вечера.
24 ௨௪ ஒருவன் அவளோடே படுத்துக்கொண்டதும், அவளுடைய தீட்டு, அவன்மேல் பட்டிருந்தால், அவன் ஏழுநாட்கள் தீட்டாயிருப்பானாக; அவன் படுக்கிற படுக்கையும் தீட்டுப்படும்.
Аще же кто будет на ложи с нею, и будет нечистота ея на нем, нечист будет седмь дний: и всяко ложе, на немже аще ляжет, нечисто будет.
25 ௨௫ “ஒரு பெண் விலகியிருக்க வேண்டியகாலம் அல்லாமல் அவளுடைய இரத்தம் அநேகநாட்கள் ஊறிக்கொண்டிருந்தால், அல்லது அந்தக் காலத்திற்கும் அதிகமாக அது இருக்கும் நாட்களெல்லாம் ஊறிக்கொண்டிருந்தால், தன் விலக்கத்தின் நாட்களிலிருந்ததுபோல அவள் தீட்டாயிருப்பாளாக.
И жена аще точит течение крове дни многи, не во время скверны ея, аше и течет по осквернении ея, вся дни течения нечистоты ея, якоже дни скверны ея, нечиста будет:
26 ௨௬ அந்த நாட்களெல்லாம் அவள் படுக்கும் எந்தப் படுக்கையும், அவள் விலக்கத்தின் படுக்கையைப்போல, அவளுக்குத் தீட்டாயிருக்கும்; அவள் உட்கார்ந்த இருக்கையும், அவளுடைய விலக்கத்தின் தீட்டைப்போலவே தீட்டாயிருக்கும்.
и всяко ложе, на немже аще ляжет вся дни течения ея, по ложи скверны ея будет ей: и всяк сосуд, на немже аще сядет, нечист будет по нечистоте скверны ея:
27 ௨௭ அப்படிப்பட்டவைகளைத் தொடுகிறவன் எவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
и всяк прикасаяйся ей нечист будет, да исперет ризы своя и омыет водою тело свое, и нечист будет до вечера.
28 ௨௮ அவள் தன் இரத்தப்போக்கு நின்று சுத்தமானபோது, அவள் ஏழுநாட்கள் எண்ணிக்கொள்வாளாக; அதின்பின்பு சுத்தமாக இருப்பாள்.
Аще же очистится от течения своего, да сочтет себе седмь дний, и по сих чиста будет:
29 ௨௯ எட்டாம்நாளிலே இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவள்.
и во осмый день да возмет себе два горличища или два птенца голубина, и принесет я к жерцу к дверем скинии свидения,
30 ௩0 ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக, அவளுக்காகக் யெகோவாவுடைய சந்நிதியில் அவளுடைய இரத்தப்போக்கினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
и да сотворит жрец, един греха ради и другий во всесожжение, и да помолится о ней жрец пред Господем о течении нечистоты ея.
31 ௩௧ “இஸ்ரவேல் மக்கள் தங்கள் நடுவே இருக்கிற என்னுடைய வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, தங்கள் தீட்டுகளால் மரணமடையாமலிருக்க, இப்படி நீங்கள் அவர்களுடைய தீட்டுகளுக்கு அவர்களை விலக்கிவைப்பீர்களாக”.
И благоговейны сотворите сыны Израилевы от нечистот их: и да не умрут нечистоты ради своея, внегда осквернити им скинию Мою яже в них.
32 ௩௨ விந்து கழிதல் உள்ளவனுக்கும், விந்து கழிந்ததினாலே தீட்டானவனுக்கும்,
Сей закон изливающему семя, и аще кому изыдет из него ложе семенное, якоже осквернитися в нем,
33 ௩௩ இரத்தப்போக்கு பலவீனமுள்ளவளுக்கும், விந்து கழிதல் உள்ள பெண்களுக்கும், ஆண்களுக்கும், தீட்டாயிருக்கிறவளோடே படுத்துக்கொண்டவனுக்கும் உரிய விதிமுறைகள் இதுவே என்றார்.
и точащей кровь в скверне своей, и изливающему семя во излиянии своем мужеску полу или женску, и мужу, иже аще поспит со сквернавою.