< லேவியராகமம் 15 >

1 பின்னும் யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
OLELO mai la hoi o Iehova ia Mose a me Aarona, i mai la,
2 “நீங்கள் இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒருவனுக்கு விந்து கழிதல் உண்டானால், அதினாலே அவன் தீட்டானவன்.
E olelo olua i na mamo a Iseraela, e i aku ia lakou, O ke kanaka, he mai kahe mailoko aku o kona io; e haumia no ia, no kona hilo.
3 அவனுடைய மாம்சத்திலுள்ள விந்து ஊறிக்கொண்டிருந்தாலும், அவன் விந்து அடைபட்டிருந்தாலும், அதினால் அவனுக்குத் தீட்டுண்டாகும்.
O kona haumia no ia iloko o kono hilo; ina e kahe ana kona io i kona hilo, a ina i paa paha kona io, aole kahe i kona hilo, o kona haumia no ia.
4 விந்து கழிதல் உள்ளவன் படுக்கிற எந்தப் படுக்கையும் தீட்டாகும்; அவன் எதின்மேல் உட்காருகிறானோ அதுவும் தீட்டாகும்.
O kela moe keia moe a ka mea hilo e moe ai maluna iho, e haumia no ia; a o ka mea ana e noho ai maluna iho, e haumia no ia.
5 அவனுடைய படுக்கையைத் தொடுகிறவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளிக்கவேண்டும்; மாலைவரைத் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.
A o ka mea i pai kona moe, e holoi oia i kona mau kapa, a e auau i ka wai, a e haumia a hiki i ke ahiahi.
6 விந்து கழிதல் உள்ளவன் உட்கார்ந்த இடத்தில் உட்காருகிறவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
O ka mea e noho ma ka mea a ka mea hilo i noho ai, e auau oia i ka wai, a e haumia ia a hiki i ke ahiahi.
7 விந்து கழிதல் உள்ளவனின் உடலைத் தொடுகிறவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
A o ka mea i pa i ka io o ka mea hilo, e holoi oia i kona kapa, a e auau i ka wai, a e haumia a hiki i ke ahiahi.
8 விந்து கழிதல் உள்ளவன் சுத்தமாக இருக்கிற ஒருவன்மேல் துப்பினால், இவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
A ina e kuha ka mea hilo maluna o ka mea maemae; alaila e holoi oia i kona mau kapa, a e auau i ka wai, a e haumia a hiki i ke ahiahi.
9 விந்து கழிதல் உள்ளவன் ஏறும் எந்தச் சேணமும் தீட்டாயிருக்கும்.
A o ka noho lio a ka mea hilo e holo ai, e haumia ia.
10 ௧0 அவனுக்குக் கீழிருந்த எதையாகிலும் தொடுகிறவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்; அதை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
A o ka mea i pa i kekahi mea malalo oua, e haumia ia a hiki i ke ahiahi; a o ka mea e hali i kauwahi o ia mau mea, e holoi oia i kona mau kapa, a e auau hoi i ka wai, a e haumia no a hiki i ke ahiahi.
11 ௧௧ விந்து கழிதல் உள்ளவன் தன் கைகளைத் தண்ணீரினால் கழுவாமல் ஒருவனைத் தொட்டால், இவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
A o ka mea a ka mea hilo e hoopa aku ai, aole hoi i holoi kona lima i ka wai, e holoi oia i kona mau kapa, a e auau i ka wai, a e haumia hoi ia a hiki i ke ahiahi.
12 ௧௨ விந்து கழிதல் உள்ளவன் தொட்ட மண்பானை உடைக்கப்படவும், மரச்சாமான் அனைத்தும் தண்ணீரினால் கழுவப்படவும் வேண்டும்.
A o ka ipu lepo a ka mea hilo i pa ai, e wawahiia ia; a o na ipu laau, e holoiia ia i ka wai.
13 ௧௩ “விந்து கழிதல் உள்ளவன் தன் விந்து கழிதல் நீங்கிச் சுத்தமானால், தன் சுத்திகரிப்புக்கென்று ஏழுநாட்கள் எண்ணிக்கொண்டிருந்து, தன் உடைகளைத் துவைத்து, தன் உடலை ஊற்றுநீரில் கழுவுவானாக; அப்பொழுது சுத்தமாக இருப்பான்.
A i ka wa e maemae ai ka mea hilo i kona hilo, alaila e hela oia nona i na la ehiku no kona hoomaomaeia'na, a e holoi i kona mau kapa, a o hoauau i kona io i ka wai kahe, a e maemae hoi ia.
14 ௧௪ எட்டாம்நாளிலே, அவன் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து, ஆசாரியனிடத்தில் கொடுக்கக்கடவன்.
A i ka walu o ka la, e lawe oia nona i na kuhukuku elua, a i ole ia, i elua manu nunu opiopio, a e hele mai imua o ke alo o Iehova, ma ka puka o ka halelewa o ke anaina, a e haawi ia mau mea i ke kahuna.
15 ௧௫ ஆசாரியன் அவைகளில் ஒன்றை பாவநிவாரணபலியும் மற்றொன்றைச் சர்வாங்கதகனபலியுமாக, அவனுக்காகக் யெகோவாவுடைய சந்நிதியில் அவனுடைய விந்து கழிதலின் காரணமாக பாவநிவிர்த்தி செய்யவேண்டும்.
A e kaumaha aku ke kahuna ia mau mea, hookahi i mohailawehala, a i kekahi i mohaikuni; a e hana ke kahuna i kalahala nona ma ke alo o Iehova, no kona hilo.
16 ௧௬ “ஒருவனிலிருந்து விந்து கழிந்ததுண்டானால், அவன் தண்ணீரில் குளிக்கவேண்டும்; மாலைவரை அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.
A ina e puka aku ka anoano o ke kanaka mailoko aku ona, alaila e holoi oia i kona kino okoa i ka wai, a e haumia hoi a hiki i ke ahiahi.
17 ௧௭ கழிந்த விந்து பட்ட உடையும் தோலும் தண்ணீரினால் கழுவப்பட்டு, மாலைவரைத் தீட்டாயிருப்பதாக.
A o ke kapa, a o ka ili, he anoano kanaka maluna iho, e holoiia ia i ka wai, a e haumia hoi a hiki i ke ahiahi.
18 ௧௮ விந்து கழிந்தவனோடே பெண் படுத்துக்கொண்டிருந்தால், இருவரும் தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பார்களாக.
A o ka wahine hoi a ke kanaka i moe aku ai, me ka anoano, e auau no laua i ka wai, a e haumia hoi a hiki i ke ahiahi.
19 ௧௯ “மாதவிடாய் உள்ள பெண் தன் உடலிலுள்ள இரத்தப்போக்கினிமித்தமாக ஏழுநாட்கள் தன் விலக்கத்தில் இருப்பாளாக; அவளைத் தொடுகிறவன் எவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
A ina he mai kahe ko ka wahine, a he koko ka mea kahe o kona io, e hookaawaleia'e oia i na la ehiku; a o ka mea i hoopa ia ia, e haumia oia a hiki i ke ahiahi.
20 ௨0 அவள் விலக்கத்தில் இருக்கும்போது, எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும்.
A o ka mea ana e moe ai maluna iho, i kona kaawale ana, e haumia ia; a o ka mea ana e noho ai maluna iho, e haumia no ia.
21 ௨௧ அவளுடைய படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
O ka mea i pa i kona wahi moe, e holoi oia i kona mau kapa, a e auau i ka wai, a e haumia hoi ia a hiki i ke ahiahi.
22 ௨௨ அவள் உட்கார்ந்த இருக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
O ka mea hoi i pa i ka mea ana i noho ai maluna iho, e holoi no hoi oia i kona mau kapa, a e auau i ka wai, a e haumia hoi a hiki i ke ahiahi.
23 ௨௩ அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த இருக்கையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
Ina hoi he mea maluna o ka moe, a maluna o kahi ana i noho ai maluna iho, aia pa aku ke kanaka ia, e haumia ia a hiki i ke ahiahi.
24 ௨௪ ஒருவன் அவளோடே படுத்துக்கொண்டதும், அவளுடைய தீட்டு, அவன்மேல் பட்டிருந்தால், அவன் ஏழுநாட்கள் தீட்டாயிருப்பானாக; அவன் படுக்கிற படுக்கையும் தீட்டுப்படும்.
A ina e moe ke kanaka me ia a pili kona koko ia ia, a haumia no ia i na la ehiku; a o ka moe a pau a ia kanaka i moe ai maluna iho, e haumia ia.
25 ௨௫ “ஒரு பெண் விலகியிருக்க வேண்டியகாலம் அல்லாமல் அவளுடைய இரத்தம் அநேகநாட்கள் ஊறிக்கொண்டிருந்தால், அல்லது அந்தக் காலத்திற்கும் அதிகமாக அது இருக்கும் நாட்களெல்லாம் ஊறிக்கொண்டிருந்தால், தன் விலக்கத்தின் நாட்களிலிருந்ததுபோல அவள் தீட்டாயிருப்பாளாக.
A ina he heekoko ko ka wahine i na la he nui mawaho o ka wa o kona kaawale ana, a ina e kahe hou no ia mahope o ka pau ana o kona wa kaawale, e like no hoi na la a pau o kona haumia me na la o kona kaawale ana, e haumia no ia.
26 ௨௬ அந்த நாட்களெல்லாம் அவள் படுக்கும் எந்தப் படுக்கையும், அவள் விலக்கத்தின் படுக்கையைப்போல, அவளுக்குத் தீட்டாயிருக்கும்; அவள் உட்கார்ந்த இருக்கையும், அவளுடைய விலக்கத்தின் தீட்டைப்போலவே தீட்டாயிருக்கும்.
O kela moe keia moe ana e moe ai i na la a pau o kona heekoko ana, e like no ia ia ia me ka moe o kona kaawale ana; a o ka mea ana i noho ai maluna iho, e haumia ia, e like me ka haumia o kona kaawale ana.
27 ௨௭ அப்படிப்பட்டவைகளைத் தொடுகிறவன் எவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
A o ka mea i pa ia mau mea, e haumia no ia, a e holoi i kona mau kapa, a e auau i ka wai, a e haumia hoi a hiki i ke ahiahi.
28 ௨௮ அவள் தன் இரத்தப்போக்கு நின்று சுத்தமானபோது, அவள் ஏழுநாட்கள் எண்ணிக்கொள்வாளாக; அதின்பின்பு சுத்தமாக இருப்பாள்.
Aka ina i hoomaemaeia oia i kona heekoko ana, alaila e helu oia nona i na la ehiku, a mahope iho e maemae no ia.
29 ௨௯ எட்டாம்நாளிலே இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவள்.
A i ka walu o ka la, e lawe oia nana i elua kuhukuku, a i ole ia, i elua manu nunu opiopio, a e hali mai i ke kahuna ma ka puka o ka halelewa o ke anaina.
30 ௩0 ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக, அவளுக்காகக் யெகோவாவுடைய சந்நிதியில் அவளுடைய இரத்தப்போக்கினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
A e kaumaha aku ke kahuna i kekahi i mohailawehala, a o kekahi i mohaikuni; a e hana ke kahuna i kalahala nona imua o Iehova no kona heekoko haumia.
31 ௩௧ “இஸ்ரவேல் மக்கள் தங்கள் நடுவே இருக்கிற என்னுடைய வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, தங்கள் தீட்டுகளால் மரணமடையாமலிருக்க, இப்படி நீங்கள் அவர்களுடைய தீட்டுகளுக்கு அவர்களை விலக்கிவைப்பீர்களாக”.
Pela e hookaawale ai oukou i na mamo a Iseraela mai ko lakou haumia ana, i ole ai lakou e make iloko o ko lakou haumia, i ko lakou hoohaumia ana i kuu halelewa iwaena o lakou.
32 ௩௨ விந்து கழிதல் உள்ளவனுக்கும், விந்து கழிந்ததினாலே தீட்டானவனுக்கும்,
Oia ke kanawai no ka mea hilo, a no ka mea ua puka mailoko ae ona kona anoano i haumia ai oia;
33 ௩௩ இரத்தப்போக்கு பலவீனமுள்ளவளுக்கும், விந்து கழிதல் உள்ள பெண்களுக்கும், ஆண்களுக்கும், தீட்டாயிருக்கிறவளோடே படுத்துக்கொண்டவனுக்கும் உரிய விதிமுறைகள் இதுவே என்றார்.
A no ka wahine mai heekoko hoi, a me ka mea hilo; o ke kanaka, a o ka wahine, a me ka mea moe me ka wahine haumia.

< லேவியராகமம் 15 >