< லேவியராகமம் 12 >
1 ௧ பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
The LORD spoke to Moses, saying,
2 ௨ “நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால்: ஒரு பெண் கர்ப்பவதியாகி ஆண்பிள்ளையைப் பெற்றால், அவள் மாதவிடாய் உள்ள பெண் விலக்கமாக இருக்கும் நாட்களுக்குச் சரியாக ஏழுநாட்கள் தீட்டாயிருப்பாள்.
“Speak to the children of Israel, saying, ‘If a woman conceives, and bears a male child, then she shall be unclean seven days; as in the days of her monthly period she shall be unclean.
3 ௩ எட்டாம் நாளிலே அந்த குழந்தையினுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படக்கடவது.
In the eighth day the flesh of his foreskin shall be circumcised.
4 ௪ பின்பு அவள் முப்பத்துமூன்று நாட்கள் தன் இரத்தச் சுத்திகரிப்பு நிலையிலே இருந்து, சுத்திகரிப்பின் நாட்கள் முடியும்வரை பரிசுத்தமான யாதொரு பொருளைத் தொடவும் பரிசுத்த ஸ்தலத்திற்குள் வரவும் கூடாது.
She shall continue in the blood of purification thirty-three days. She shall not touch any holy thing, nor come into the sanctuary, until the days of her purifying are completed.
5 ௫ பெண்குழந்தையைப் பெறுவாளென்றால், அவள், இரண்டு வாரங்கள் மாதவிடாய் உள்ள பெண்ணைப்போலத் தீட்டாயிருந்து, பின்பு அறுபத்தாறு நாட்கள் இரத்தச் சுத்திகரிப்பு நிலையிலே இருப்பாளாக.
But if she bears a female child, then she shall be unclean two weeks, as in her period; and she shall continue in the blood of purification sixty-six days.
6 ௬ “அவள் ஆண்குழந்தையையாவது பெண்குழந்தையையாவது பெற்றதற்காக அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் முடிந்தபின்பு, அவள் ஒருவயதுடைய ஆட்டுக்குட்டியை சர்வாங்கதகனபலியாகவும், ஒரு புறாக்குஞ்சையாவது காட்டுப்புறாவையாவது பாவநிவாரணபலியாகவும், ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் ஆசாரியனிடத்திற்குக் கொண்டுவரக்கடவள்.
“‘When the days of her purification are completed for a son or for a daughter, she shall bring to the priest at the door of the Tent of Meeting, a year old lamb for a burnt offering, and a young pigeon or a turtledove, for a sin offering.
7 ௭ அதை அவன் யெகோவாவுடைய சந்நிதியில் பலியிட்டு, அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்வானாக; அப்பொழுது அவள் தன் இரத்தப்போக்கின் தீட்டு நீங்கிச் சுத்தமாவாள். இது ஆண்குழந்தையையாவது பெண்குழந்தையையாவது பெற்றவளைக்குறித்த விதிமுறைகள்.
He shall offer it before the LORD, and make atonement for her; then she shall be cleansed from the fountain of her blood. “‘This is the law for her who bears, whether a male or a female.
8 ௮ ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவளுக்கு சக்தியில்லாதிருந்தால், இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஏதாவது ஒன்றை சர்வாங்க தகனபலியாகவும் மற்றொன்றைப் பாவநிவாரணபலியாகவும் கொண்டுவரக்கடவள்; அதினால் ஆசாரியன் அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவள் சுத்தமாவாள் என்று சொல்” என்றார்.
If she cannot afford a lamb, then she shall take two turtledoves or two young pigeons: the one for a burnt offering, and the other for a sin offering. The priest shall make atonement for her, and she shall be clean.’”