< லேவியராகமம் 1 >
1 ௧ யெகோவா ஆசரிப்புக்கூடாரத்திலிருந்து மோசேயை அழைத்து அவனை நோக்கி:
RAB Musa'yı çağırıp Buluşma Çadırı'ndan ona şöyle seslendi:
2 ௨ “நீ இஸ்ரவேல் மக்களிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் யெகோவாவுக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டுமந்தையிலாவது ஆட்டுமந்தையிலாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து பலிசெலுத்தவேண்டும்.
“İsrail halkıyla konuş, onlara de ki, ‘İçinizden biri RAB'be sunu olarak bir hayvan sunacağı zaman, sığır ya da davar sunmalı.
3 ௩ அவன் செலுத்துவது மாட்டுமந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; யெகோவாவுடைய சந்நிதியில், தான் அங்கீகரிக்கப்படுவதற்கு, அவன் அதை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் கொண்டுவந்து,
“‘Eğer yakmalık sunu sığırsa, kusursuz ve erkek olmalı. RAB'bin sunuyu kabul etmesi için onu Buluşma Çadırı'nın giriş bölümünde sunmalı.
4 ௪ தன் பாவநிவிர்த்திக்கென்று அது அங்கீகரிக்கப்படுவதற்கு தன் கையை அதின் தலையின்மேல் வைத்து,
Elini yakmalık sununun başına koymalı. Sunu kişinin günahlarının bağışlanması için kabul edilecektir.
5 ௫ யெகோவாவுடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தை எடுத்து, அதை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் இருக்கிற பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
Boğayı RAB'bin önünde kesmeli. Harun soyundan gelen kâhinler boğanın kanını getirip Buluşma Çadırı'nın giriş bölümündeki sunağın her yanına dökecekler.
6 ௬ பின்பு அவன் அந்தச் சர்வாங்க தகனபலியைத் தோலுரித்து, அதைத் துண்டுதுண்டாக வெட்டவேண்டும்.
Sonra kişi yakmalık sunuyu yüzüp parçalara ayırmalı.
7 ௭ அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோனின் மகன்கள் பலிபீடத்தின்மேல் நெருப்பை மூட்டி, நெருப்பின்மேல் கட்டைகளை அடுக்கி,
Kâhin Harun'un oğulları sunakta ateş yakıp üzerine odun dizecekler.
8 ௮ அவனுடைய மகன்களாகிய ஆசாரியர்கள், துண்டுகளையும், தலையையும், கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைப்பார்களாக.
Hayvanın başını, iç yağını, parçalarını sunakta yanan odunların üzerine yerleştirecekler.
9 ௯ அதின் குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியாக எரிக்கக்கடவன்; இது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி.
Kişi hayvanın işkembesini, bağırsaklarını ve ayaklarını yıkayacak. Kâhin de hepsini yakmalık sunu, yakılan sunu ve RAB'bi hoşnut eden koku olarak sunağın üzerinde yakacaktır.
10 ௧0 “அவன் செலுத்துவது செம்மறியாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது வெள்ளாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், பழுதற்ற ஒரு கடாவைக் கொண்டுவந்து,
“‘Eğer kişi yakmalık sunu olarak davar, yani koyun ya da keçi sunmak istiyorsa, sunusu kusursuz ve erkek olmalı.
11 ௧௧ யெகோவாவுடைய சந்நிதியில் பலிபீடத்தின் வடக்குப் பகுதியில் அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
Onu sunağın kuzeyinde, RAB'bin önünde kesmeli. Harun soyundan gelen kâhinler kanı sunağın her yanına dökecekler.
12 ௧௨ பின்பு அவன் அதைத் துண்டுகளாக வெட்டி, அதின் தலையையும் கொழுப்பையும் அதனுடன் வைப்பானாக; அவைகளை ஆசாரியன் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைப்பானாக.
Kişi başını, iç yağını kesip hayvanı parçalara ayırmalı. Kâhin bunları sunakta yanan odunların üzerine yerleştirecek.
13 ௧௩ குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் கொண்டுவந்து பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி.
Kişi hayvanın işkembesini, bağırsaklarını, ayaklarını yıkamalı. Kâhin bunları sunak üzerinde yakarak sunmalı. Bu yakmalık sunu, yakılan sunu ve RAB'bi hoşnut eden kokudur.
14 ௧௪ “அவன் யெகோவாவுக்குச் செலுத்துவது பறவைகளிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், காட்டுப் புறாக்களிலாவது புறாக்குஞ்சுகளிலாவது எடுத்து செலுத்தக்கடவன்.
“‘Eğer kişi yakmalık sunu olarak RAB'be kuş sunmak istiyorsa, kumru ya da güvercin sunmalı.
15 ௧௫ அதை ஆசாரியன் பலிபீடத்தின் அருகில் கொண்டுவந்து, அதின் தலையைக் கிள்ளி, பலிபீடத்தில் எரித்து, அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின் அருகில் சிந்தவிட்டு,
Kâhin sunuyu sunağa getirecek, başını ayırıp sunağın üzerinde yakacak. Kuşun kanı sunağın yan tarafından akıtılacak.
16 ௧௬ அதின் இரைப்பையையும் அதின் உள்ளவைகளையும் எடுத்து, அதைப் பலிபீடத்தின் அருகில் கிழக்குப் பகுதியில் சாம்பல் இருக்கிற இடத்திலே எறிந்துவிட்டு,
Kâhin kuşun kursağını pisliğiyle birlikte çıkarıp sunağın doğusundaki küllüğe atacak.
17 ௧௭ பின்பு அதின் இறக்கைகளுடன் அதை இரண்டாக்காமல் பிளப்பானாக; பின்பு ஆசாரியன் அதைப் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற கட்டைகளின்மேல் எரிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி.
Kanatlarını tutarak kuşu ikiye bölecek, ama tümüyle ayırmayacak. Sonra kuşu sunakta yanan odunların üstünde yakmalı. Bu yakmalık sunu, yakılan sunu ve RAB'bi hoşnut eden kokudur.’”