< நியாயாதிபதிகள் 9 >
1 ௧ யெருபாகாலின் மகன் அபிமெலேக்கு சீகேமிலிருக்கிற தன்னுடைய தாயினுடைய சகோதரர்களிடம் போய், அவர்களையும் தன்னுடைய தாயின் தகப்பனுடைய வம்சமான அனைவரையும் நோக்கி:
Abimelech son of Jerub Baal went to his mother's relatives at Shechem and he said to them and to the whole clan of his mother's family,
2 ௨ யெருபாகாலின் மகன்கள் 70 பேரான எல்லோரும் உங்களை ஆள்வது உங்களுக்கு நல்லதோ, ஒருவன் மட்டும் உங்களை ஆள்வது உங்களுக்கு நல்லதோ என்று நீங்கள் சீகேமிலிருக்கிற எல்லா பெரிய மனிதர்களின் காதுகளும் கேட்கப்பேசுங்கள்; நான் உங்கள் எலும்பும் உங்கள் சரீரமுமானவன் என்று நினைத்துக் கொள்ளுங்கள் என்றான்.
“Please say this, so that all the leaders in Shechem may hear, 'Which is better for you, that all seventy sons of Jerub Baal rule over you, or that just one rule over you?' Remember that I am your bone and your flesh.”
3 ௩ அப்படியே அவன் தாயின் சகோதரர்கள் சீகேமிலிருக்கிற எல்லா பெரிய மனிதர்களின் காதுகளும் கேட்க இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்காகப் பேசினார்கள்; அப்பொழுது: அவன் நம்முடைய சகோதரன் என்று அவர்கள் சொன்னதினால், அவர்கள் இருதயம் அபிமெலேக்கைப் பின்பற்றும்படியாக மாறியது.
His mother's relatives spoke for him to the leaders of Shechem, and they agreed to follow Abimelech, for they said, “He is our brother.”
4 ௪ அவர்கள் பாகால் பேரீத்தின் கோவிலிலிருந்து 800 கிராம்ஸ் வெள்ளிக்காசை எடுத்து அவனுக்குக் கொடுத்தார்கள்; அவைகளால் அபிமெலேக்கு வீணரும் போக்கிரிகளுமான மனிதர்களை வேலைக்கு வைத்தான்; அவர்கள் அவனைப் பின்பற்றினார்கள்.
They gave him seventy pieces of silver out of the house of Baal-Berith, and Abimelech used it to hire men of lawless and reckless character, who followed him.
5 ௫ அவன் ஒப்ராவிலிருக்கிற தன்னுடைய தகப்பன் வீட்டிற்குப் போய், யெருபாகாலின் மகன்களான தன்னுடைய சகோதரர்கள் 70 பேரையும் ஒரே கல்லின்மேல் கொலைசெய்தான்; ஆனாலும் யெருபாகாலின் இளைய மகனான யோதாம் ஒளிந்திருந்தபடியால் அவன் தப்பினான்.
Abimelech went to his father's house at Ophrah, and upon one stone he murdered his seventy brothers, the sons of Jerub Baal. Only Jotham was left, the youngest son of Jerub Baal, for he hid himself.
6 ௬ பின்பு சீகேமிலிருக்கிற எல்லா பெரிய மனிதர்களும், மில்லோவின் குடும்பத்தார்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து போய், சீகேமிலிருக்கிற உயர்ந்த கர்வாலிமரத்தின் அருகில் அபிமெலேக்கை ராஜாவாக்கினார்கள்.
All the leaders of Shechem and Beth Millo came together and they went and made Abimelech king, beside the oak near the pillar which is in Shechem.
7 ௭ இது யோதாமுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் போய், கெரிசீம் மலையின் உச்சியில் ஏறி நின்று, உரத்த சத்தமிட்டுக்கூப்பிட்டு, அவர்களை நோக்கி: சீகேமின் பெரிய மனிதர்களே, தேவன் உங்களுக்குச் செவிகொடுக்கும்படி நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்.
When Jotham was told about this, he went and stood on the top of Mount Gerizim. He shouted and said to them, “Listen to me, you leaders of Shechem, so that God may listen to you.
8 ௮ மரங்கள் தங்களுக்கு ஒரு ராஜாவை அபிஷேகம்செய்யும்படி போய், ஒலிவமரத்தைப் பார்த்து: நீ எங்களுக்கு ராஜாவாக இரு என்றது.
The trees once went out to anoint a king over them. For they said to the olive tree, 'Reign over us.'
9 ௯ அதற்கு ஒலிவமரம்: தேவனையும் மனிதனையும் கனப்படுத்துகிற என்னிலுள்ள என்னுடைய எண்ணெயை நான் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது.
But the olive tree said to them, 'Should I give up my oil, which is used to honor gods and mankind, so I may go return, just to sway over the other trees?'
10 ௧0 அப்பொழுது மரங்கள் அத்திமரத்தைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாக இரு என்றது.
The trees said to the fig tree, 'Come and reign over us.'
11 ௧௧ அதற்கு அத்திமரம்: நான் என்னுடைய இனிமையையும் என்னுடைய நற்கனியையும் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது.
But the fig tree said to them, 'Should I give up my sweetness and my good fruit, just so I could return and sway over the other trees?'
12 ௧௨ அப்பொழுது மரங்கள் திராட்சைச்செடியைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாக இரு என்றது.
The trees said to the vine, 'Come and reign over us.'
13 ௧௩ அதற்குத் திராட்சைச்செடி: தெய்வங்களையும் மனிதர்களையும் மகிழச்செய்யும் என்னுடைய ரசத்தை நான் விட்டு மரங்களை அரசாளப்போவேனோ என்றது.
The vine said to them, 'Should I give up my new wine, which cheers gods and mankind, and return and sway over the other trees?'
14 ௧௪ அப்பொழுது மரங்களெல்லாம் முட்செடியைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாக இரு என்றது.
Then said all the trees to the thornbush, 'Come and reign over us.'
15 ௧௫ அதற்கு முட்செடியானது மரங்களைப் பார்த்து: நீங்கள் என்னை உங்களுக்கு ராஜாவாக அபிஷேகம் செய்கிறது உண்மையானால், என்னுடைய நிழலிலே வந்தடையுங்கள்; இல்லாவிட்டால் முட்செடியிலிருந்து அக்கினி புறப்பட்டு லீபனோனின் கேதுரு மரங்களை எரிக்கட்டும் என்றது.
The thornbush said to the trees, 'If you truly want to anoint me as king over you, then come and find safety under my shade. If not, then let fire come out of the thornbush and let it burn up the cedars of Lebanon.'
16 ௧௬ என் தகப்பன் உங்களுக்காக யுத்தம்செய்து, தன்னுடைய ஜீவனை நினைக்காமற்போய், உங்களை மீதியானியர்களின் கையிலிருந்து காப்பாற்றினார்.
Now therefore, if you have acted in truth and honesty, when you made Abimelech king, and if you have done well concerning Jerub Baal and his house, and if you have punished him as he deserves—
17 ௧௭ நீங்களோ இன்று என்னுடைய தகப்பனுடைய குடும்பத்திற்கு எதிராக எழும்பி, அவருடைய மகன்களான 70 பேரையும் ஒரே கல்லின்மேல் கொலைசெய்து, அவருடைய வேலைக்காரியின் மகனான அபிமெலேக்கு உங்கள் சகோதரனானபடியால், அவனைச் சீகேம் பட்டணத்தார்களுக்கு ராஜாவாக்கினீர்கள்.
—and to think that my father fought for you, risked his life, and rescued you out of the hand of Midian—
18 ௧௮ இப்போதும் நீங்கள் அவனை ராஜாவாக்கின செய்கை உண்மையும் உத்தமமுமான செய்கையாக இருந்தால்,
but today you have risen up against my father's house and have killed his sons, seventy persons, upon one stone. Then you have made Abimelech, the son of his female servant, king over the leaders of Shechem, because he is your relative.
19 ௧௯ நீங்கள் யெருபாகாலையும் அவர் குடும்பத்தாரையும் நன்மையாக நடத்தி, அவர் கைகளின் செய்கைக்குத் தகுந்ததை அவருக்குச் செய்து, இப்படி இந்த நாளில் அவரையும் அவர் குடும்பத்தாரையும் நடத்தினது உண்மையும் உத்தமுமாக இருக்குமானால், அபிமெலேக்கின்மேல் நீங்களும் சந்தோஷமாக இருங்கள்; உங்கள்மேல் அவனும் சந்தோஷமாக இருக்கட்டும்.
If you acted with honesty and integrity with Jerub Baal and his house, then you should rejoice in Abimelech, and let him also rejoice in you.
20 ௨0 இல்லாவிட்டால் அபிமெலேக்கிலிருந்து அக்கினி புறப்பட்டு, சீகேம் பட்டணத்தார்களையும், மில்லோவின் குடும்பத்தினரையும் எரிக்கவும், சீகேம் பட்டணத்தார்களிலும் மில்லோவின் குடும்பத்தினரிலுமிருந்து அக்கினி புறப்பட்டு, அபிமெலேக்கை எரிப்பதாக என்று யோதாம் சொல்லி,
But if not, let fire come out from Abimelech and burn up the men of Shechem and Beth Millo. Let fire come out from the men of Shechem and Beth Millo, to burn up Abimelech.”
21 ௨௧ தன்னுடைய சகோதரனான அபிமெலேக்குக்குப் பயந்து, தப்பியோடி, பேயேருக்குப் போய், அங்கே குடியிருந்தான்.
Jotham fled and ran away, and he went to Beer. He lived there because it was far away from Abimelech, his brother.
22 ௨௨ அபிமெலேக்கு இஸ்ரவேலை மூன்று வருடங்கள் அரசாண்டபின்பு,
Abimelech ruled over Israel for three years.
23 ௨௩ அபிமெலேக்குக்கும் சீகேமின் பெரிய மனிதர்களுக்கும் நடுவே தீங்கை உண்டாக்கும் ஆவியை தேவன் வரச்செய்தார்.
God sent an evil spirit between Abimelech and the leaders of Shechem. The leaders of Shechem betrayed the trust they had with Abimelech.
24 ௨௪ யெருபாகாலின் 70 மகன்களுக்குச் செய்யப்பட்ட கொடுமை வந்து பலித்தது, அவர்களுடைய இரத்தப்பழி அவர்களைக் கொன்ற அவர்களுடைய சகோதரனான அபிமெலேக்கின்மேலும், தன்னுடைய சகோதரர்களைக் கொல்ல அவனுடைய கைகளை பெலப்படுத்தின சீகேம் மனிதர்கள் மேலும் சுமரும்படியாகச் சீகேமின் பெரிய மனிதர்கள் அபிமெலேக்குக்கு துரோகம் செய்தார்கள்.
God did this so the violence done to the seventy sons of Jerub Baal might be avenged, and Abimelech their brother would be held responsible for murdering them, and the men of Shechem would be held responsible because they helped him murder his brothers.
25 ௨௫ சீகேமின் மனிதர்கள் மலைகளின் உச்சியில் அவனுக்கு ஒளிந்திருக்கிறவர்களை வைத்தார்கள்; அவர்கள் தங்கள் அருகே வழிநடந்துபோகிற எல்லோரையும் கொள்ளையிட்டார்கள்; அது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டது.
So the leaders of Shechem positioned men to lie in wait on the hilltops that they might ambush him, and they robbed all who passed by them along that road. This was reported to Abimelech.
26 ௨௬ ஏபேதின் மகனான காகால் தன்னுடைய சகோதரர்களோடு சீகேமுக்குள் போனான்; சீகேமின் பெரிய மனிதர்கள் அவனை நம்பி,
Gaal son of Ebed came with his relatives and they went over to Shechem. The leaders of Shechem had confidence in him.
27 ௨௭ வெளியே புறப்பட்டு, தங்கள் திராட்சை தோட்டங்களின் பழங்களை அறுத்து, ஆலையில் ஆட்டி, ஆடிப்பாடி, தங்கள் தேவனின் வீட்டிற்குள் போய், சாப்பிட்டுக்குடித்து, அபிமெலேக்கை சபித்தார்கள்.
They went out into the field and gathered grapes from the vineyards, and they trampled on them. They held a festival in the house of their god, where they ate and drank, and they cursed Abimelech.
28 ௨௮ அப்பொழுது ஏபேதின் மகனான காகால்: அபிமெலேக்கு யார்? சீகேம் யார்? நாம் அவனுக்கு பணியாற்றவேண்டியது என்ன? அவன் யெருபாகாலின் மகன் அல்லவா? சேபூல் அவனுடைய காரியதரிசி அல்லவா? சீகேமின் தகப்பனான ஏமோரின் மனிதர்களையே பணிந்துகொள்ளுங்கள்; அவனை நாங்கள் பணிந்துகொள்வானேன்?
Gaal son of Ebed, said, “Who is Abimelech, and who is Shechem, that we should serve him? Is he not the son of Jerub Baal? Is Zebul not his officer? Serve the men of Hamor, Shechem's father! Why should we serve Abimelech?
29 ௨௯ இந்த மக்கள்மட்டும் என்னுடைய கைக்குள் இருக்கட்டும்; நான் அபிமெலேக்கைத் துரத்திவிடுவேன் என்றான். உன் படையைப் பெருகச்செய்துப் புறப்பட்டுவா என்று, அவன் அபிமெலேக்குக்குச் சொல்லியனுப்பினான்.
I wish that this people were under my command! Then would I remove Abimelech. I would say to Abimelech, 'Call out all your army.'”
30 ௩0 பட்டணத்தின் அதிகாரியாகிய சேபூல் ஏபேதின் மகனான காகாலின் வார்த்தைகளைக் கேட்டபோது, கோபமடைந்து,
When Zebul, the official of the city, heard the words of Gaal son of Ebed his anger was kindled.
31 ௩௧ இரகசியமாக அபிமெலேக்கினிடத்திற்கு ஆட்களை அனுப்பி: இதோ, ஏபேதின் மகனான காகாலும் அவனுடைய சகோதரர்களும் சீகேமுக்கு வந்திருக்கிறார்கள்; பட்டணத்தை உமக்கு எதிராக எழுப்புகிறார்கள்.
He sent messengers to Abimelech in order to deceive, saying, “See, Gaal son of Ebed and his relatives are coming to Shechem, and they are stirring up the city against you.
32 ௩௨ ஆகையால் நீர் உம்மோடிருக்கும் மக்களோடு இரவில் எழுந்து வந்து வெளியிலே ஒளிந்திருந்து,
Now, get up during the night, you and the soldiers with you, and prepare an ambush in the fields.
33 ௩௩ காலையில் சூரியன் உதிக்கும்போது எழுந்து, பட்டணத்தின்மேல் விழுந்து, அவனும் அவனோடிருக்கிற மக்களும் உமக்கு எதிரே புறப்படும்போது, நீர் செய்ய நினைத்ததை அவனுக்குச் செய்யும் என்று சொல்லியனுப்பினான்.
Then in the morning, as soon as the sun is up, rise early and make a raid on the city. When he and the people with him come out against you, do whatever you can to them.”
34 ௩௪ அப்படியே அபிமெலேக்கும், அவனோடிருந்த எல்லா மக்களும், இரவில் எழுந்துபோய், சீகேமுக்கு எதிராக நான்கு படைகளாக ஒளிந்திருந்தார்கள்.
So Abimelech got up during the night, he and all the men who were with him, and they set an ambush against Shechem—dividing into four units.
35 ௩௫ ஏபேதின் மகன் காகால் புறப்பட்டு, பட்டணத்தின் நுழைவுவாயிலில் நின்றான்; அப்பொழுது ஒளிந்திருந்த அபிமெலேக்கு தன்னோடிருக்கிற மக்களோடு எழும்பி வந்தான்.
Gaal son of Ebed went out and stood in the entrance of the city gate. Abimelech and the men who were with him came out of their hiding place.
36 ௩௬ காகால் அந்த மக்களைப் பார்த்து: இதோ, மலைகளின் உச்சிகளிலிருந்து மக்கள் இறங்கி வருகிறார்கள் என்று சேபூலோடு சொன்னான். அதற்குச் சேபூல்: நீ மலைகளின் நிழலைப் பார்த்து, மனிதர்கள் என்று நினைக்கிறாய் என்றான்.
When Gaal saw the men, he said to Zebul, “See, men are coming down from the hilltops!” Zebul said to him, “You are seeing the shadows on the hills like they are men.”
37 ௩௭ காகாலோ திரும்பவும்: இதோ, மக்கள் தேசத்தின் மத்தியிலிருந்து இறங்கிவந்து, ஒரு படை மெயொனெனீமின் கர்வாலிமரத்தின் வழியாக வருகிறார்கள் என்றான்.
Gaal spoke again and said, “Look, men are coming down in the middle of the land, and one unit is coming by way of the oak of the diviners.”
38 ௩௮ அதற்குச் சேபூல்: அபிமெலேக்கை நாம் பணிந்துகொள்வதற்கு அவன் யார் என்று நீ சொன்ன உன்னுடைய வாய் இப்பொழுது எங்கே? நீ நிந்தித்த மக்கள் அவர்கள் அல்லவா? இப்பொழுது நீ புறப்பட்டு, அவர்களோடு யுத்தம்செய் என்றான்.
Then Zebul said to him, “Where are your proud words now, you who said, 'Who is Abimelech that we should serve him?' Are these not the men you despised? Go out now and fight against them.”
39 ௩௯ அப்பொழுது காகால் சீகேமின் மனிதர்களுக்கு முன்பாகப் புறப்பட்டுப்போய், அபிமெலேக்கோடு யுத்தம்செய்தான்.
Gaal went out and he was leading the men of Shechem, and he fought Abimelech.
40 ௪0 அபிமெலேக்கு அவனைத் துரத்த, அவன் அவனுக்கு முன்பாக ஓடினான்; பட்டணவாசல்வரை அநேகர் வெட்டப்பட்டு விழுந்தார்கள்.
Abimelech chased him, and Gaal fled before him. Many fell with deadly wounds before the entrance to the city gate.
41 ௪௧ அபிமெலேக்கு அருமாவில் இருந்து விட்டான்; சேபூல் காகாலையும் அவனுடைய சகோதரர்களையும் சீகேமிலே குடியிருக்கவிடாதபடி துரத்திவிட்டான்.
Abimelech stayed in Arumah. Zebul forced Gaal and his relatives out of Shechem.
42 ௪௨ மறுநாளிலே மக்கள் வெளியிலே வயலுக்குப் போனார்கள்; அது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டபோது,
On the next day the people of Shechem went out into the field, and this was reported to Abimelech.
43 ௪௩ அவன் மக்களைக் கூட்டிக்கொண்டு, அவர்களை மூன்று படைகளாக பிரித்து, வெளியிலே ஒளிந்திருந்து, அந்த மக்கள் பட்டணத்திலிருந்து புறப்பட்டுவருகிறதைப் பார்த்து, அவர்களைத் தாக்கிக் கொன்றான்.
He took his people, divided them into three units, and they set an ambush in the fields. He looked and saw the people coming out from the city and he attacked and killed them.
44 ௪௪ அபிமெலேக்கும் அவனோடிருந்த படையும் பாய்ந்துவந்து, பட்டணத்தின் நுழைவுவாயிலில் நின்றார்கள்; மற்ற இரண்டு படைகளோ வெளியிலிருக்கிற அனைவரையும் தாக்கி, அவர்களைக் கொன்றார்கள்.
Abimelech and the units that were with him attacked and blocked the entrance to the city gate. The other two units attacked all who were in the field and killed them.
45 ௪௫ அபிமெலேக்கு அந்த நாள் முழுதும் பட்டணத்தின்மேல் யுத்தம்செய்து, பட்டணத்தைப் பிடித்து, அதிலிருந்த மக்களைக்கொன்று, பட்டணத்தை இடித்துவிட்டு, அதில் உப்பு விதைத்தான்.
Abimelech fought against the city all that day. He captured the city, and killed the people who were in it. He tore down the city walls and spread salt over it.
46 ௪௬ அதைச் சீகேம் கோபுரத்து மனிதர்கள் எல்லோரும் கேள்விப்பட்டபோது, அவர்கள் பேரீத் தெய்வத்தினுடைய கோவில் கோட்டைக்குள் நுழைந்தார்கள்.
When all the leaders of the tower of Shechem heard of it, they entered the stronghold of the house of El-Berith.
47 ௪௭ சீகேம் கோபுரத்து மனிதர்கள் எல்லோரும் அங்கே கூடியிருக்கிறது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டபோது,
Abimelech was told that all the leaders had gathered together at the tower of Shechem.
48 ௪௮ அபிமெலேக்கு தன்னோடிருந்த எல்லா மக்களோடும் சல்மோன் மலையில் ஏறி, தன்னுடைய கையிலே கோடரியைப் பிடித்து, ஒரு மரத்தின் கிளையை வெட்டி, அதை எடுத்து, தன்னுடைய தோளின்மேல் போட்டுக்கொண்டு, தன்னோடிருந்த மக்களைப் பார்த்து: நான் என்ன செய்கிறேன் என்று பார்க்கிறீர்களே, நீங்களும் விரைவாக என்னைப்போலச் செய்யுங்கள் என்றான்.
Abimelech went up to Mount Zalmon, he and all the men who were with him. Abimelech took an ax and cut off branches. He put it on his shoulder and ordered the men with him, “What you have seen me do, hurry and do as I have done.”
49 ௪௯ அப்படியே எல்லா மக்களும் அவரவர் ஒவ்வொரு கிளைகளை வெட்டி, அபிமெலேக்குக்குப் பின்சென்று, அவைகளை அந்தக் கோட்டைக்கு அருகே போட்டு, அக்கினி கொளுத்தி அந்த கோட்டையை எரித்துப்போட்டார்கள்; அதினால் ஆண்களும் பெண்களும் ஏறக்குறைய 1,000 சீகேம் கோபுரத்து மனிதர்கள் எல்லோரும் இறந்தார்கள்.
So every one cut off branches and followed Abimelech. They piled them against the wall of the tower, and they set it on fire, so that all the people of the tower of Shechem also died, about a thousand men and women.
50 ௫0 பின்பு அபிமெலேக்கு தேபேசுக்குப் போய், அதற்கு எதிராக முகாமிட்டு, அதைப் பிடித்தான்.
Then Abimelech went to Thebez, and he encamped against Thebez and captured it.
51 ௫௧ அந்தப் பட்டணத்தின் நடுவே பலத்த கோபுரம் இருந்தது; அங்கே எல்லா ஆண்களும் பெண்களும் பட்டணத்து மனிதர்கள் அனைவரும் ஓடிப் புகுந்து, கதவைப் பூட்டிக்கொண்டு, கோபுரத்தின்மேல் ஏறினார்கள்.
But there was a strong tower in the city, and all the men and women and all the leaders of the city fled to it and shut themselves in. Then they went up to the roof of the tower.
52 ௫௨ அபிமெலேக்கு அந்த கோபுரம்வரை வந்து, அதின்மேல் யுத்தம்செய்து, கோபுரத்தின் கதவைச் சுட்டெரித்துப் போடும்படி, வாசலின் அருகே வந்தான்.
Abimelech came to the tower and fought against it, and he came up near to the door of the tower to burn it.
53 ௫௩ அப்பொழுது ஒரு பெண் ஒரு மாவரைக்கும் கல்லின் துண்டை அபிமெலேக்குடைய தலையின்மேல் போட்டாள்; அது அவனுடைய மண்டையை உடைத்தது.
But a woman dropped an upper millstone on Abimelech's head and it cracked his skull.
54 ௫௪ உடனே அவன் தன்னுடைய ஆயுதம் ஏந்திய வேலைக்காரனைக் கூப்பிட்டு: ஒரு பெண் என்னைக் கொன்றாள் என்று என்னைக் குறித்துச் சொல்லாதபடி, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் கொன்று போடு என்று அவனோடு சொன்னான்; அப்படியே அவன் வேலைக்காரன் அவனை, பட்டயம் மறுபக்கம் துளையிட்டு வெளியேறுமாறு குத்தினான், அவன் இறந்துபோனான்.
Then he called urgently to the young man who was his armor-bearer, and said to him, “Draw your sword and kill me, so no one will say about me, 'A woman killed him.'” So his young man pierced him through, and he died.
55 ௫௫ அபிமெலேக்கு இறந்துபோனதை இஸ்ரவேல் மனிதர்கள் பார்த்தபோது, அவர்கள் தங்கள்தங்கள் இடங்களுக்குப் போய் விட்டார்கள்.
When the men of Israel saw that Abimelech was dead, they went home.
56 ௫௬ இப்படியே அபிமெலேக்கு தன்னுடைய 70 சகோதரர்களைக் கொலை செய்ததால், தன்னுடைய தகப்பனுக்குச் செய்த தீங்கை தேவன் அவன்மேல் திரும்பும்படி செய்தார்.
So God avenged the evil of Abimelech that he did to his father by murdering his seventy brothers.
57 ௫௭ சீகேம் மனிதர்கள் செய்த எல்லா தீமையையும் தேவன் அவர்கள் தலையின்மேல் திரும்பும்படி செய்தார்; யெருபாகாலின் மகன் யோதாமின் சாபம் அவர்களுக்குப் பலித்தது.
God made all the evil of the men of Shechem turn back on their own heads and on them came the curse of Jotham son of Jerub Baal.