< நியாயாதிபதிகள் 8 >

1 அப்பொழுது எப்பிராயீம் மனிதர்கள் அவனை நோக்கி: நீ மீதியானியர்கள்மேல் யுத்தம் செய்யப்போகிறபோது, எங்களை அழைக்கவில்லையே, இப்படி நீ எங்களுக்குச் செய்தது என்ன என்று, அவனோடு கடுமையாக வாக்குவாதம்செய்தார்கள்.
Entonces los hombres de Efraín le dijeron: ¿Qué es esto que hiciste con nosotros, de no llamarnos cuando fuiste a la guerra contra Madián? Y discutieron enérgicamente con él.
2 அதற்கு அவன்: நீங்கள் செய்ததற்கு நான் செய்தது எம்மாத்திரம்? அபியேஸ்ரியர்களின் திராட்சை பழத்தின் முழு அறுவடையை விட, எப்பிராயீமர்களின் மீதியான அறுவடை அதிகம் அல்லவா?
Pero él les dijo: ¿Qué hice yo en comparación con ustedes? ¿No son mejores los rebuscos de Efraín que la cosecha de Abiezer?
3 தேவன் உங்கள் கையிலே மீதியானியர்களின் அதிபதிகளாகிய ஓரேபையும் சேபையும் ஒப்புக்கொடுத்தாரே; நீங்கள் செய்ததிலும் நான் செய்யக்கூடியது எம்மாத்திரம் என்றான்; இந்த வார்த்தையை அவன் சொன்னபோது, அவன் மேலிருந்த அவர்களுடைய கோபம் நீங்கினது.
ʼElohim entregó en sus manos a Oreb y a Zeeb, jefes de Madián. ¿Qué podía hacer yo en comparación con ustedes? Cuando dijo esto, se aplacó su enojo hacia él.
4 கிதியோன் யோர்தானுக்கு வந்தபோது, அவனும் அவனோடிருந்த முந்நூறுபேரும் அதைக் கடந்துபோய், களைப்பாக இருந்தும் (எதிரியை) பின்தொடர்ந்தார்கள்.
Cuando Gedeón y los 300 hombres que tenía consigo llegaron al Jordán y lo cruzaron, estaban cansados, pero continuaron la persecución.
5 அவன் சுக்கோத்தின் மனிதர்களை நோக்கி: என்னோடிருக்கிற மக்களுக்குச் சில அப்பங்களைக் கொடுங்கள்; அவர்கள் களைப்பாக இருக்கிறார்கள், நான் மீதியானியர்களின் ராஜாக்களாகிய சேபாவையும் சல்முனாவையும் பின்தொடருகிறேன் என்றான்.
Y dijo a los hombres de Sucot: Les ruego que den algunos bocados de pan a la gente que me sigue, porque están cansados, y persigo a Zeba y a Zalmuna, reyes de Madián.
6 அதற்குச் சுக்கோத்தின் பிரபுக்கள்: உன் ராணுவத்திற்கு நாங்கள் அப்பம் கொடுக்கிறதற்குச் சேபா சல்முனா என்பவர்களின் கை உன்னுடைய கைவசம் வந்ததோ என்றார்கள்.
Pero los jefes de Sucot le respondieron: ¿Están ya en tu mano Zeba y Zalmuna, para que demos pan a tu tropa?
7 அப்பொழுது கிதியோன் அவர்களை நோக்கி: யெகோவா சேபாவையும் சல்முனாவையும் என்னுடைய கையில் ஒப்புக்கொடுக்கும்போது, உங்கள் சரீரத்தை வனாந்திரத்தின் நெரிஞ்சில்முட்களால் கிழித்துவிடுவேன் என்று சொல்லி,
Y Gedeón les contestó: Por esto, cuando Yavé entregue en mi mano a Zeba y a Zalmuna, trillaré la carne de ustedes con espinos y abrojos del desierto.
8 அவ்விடம் விட்டு, பெனூவேலுக்குப் போய், அந்த ஊர்க்காரர்களிடத்தில் அந்தப்படியே கேட்டான்; சுக்கோத்தின் மனிதர்கள் பதில் சொன்னபடியே பெனூவேலின் மனிதர்களும் அவனுக்குச் சொன்னார்கள்.
Subió de allí a Peniel y les dijo las mismas palabras. Y los hombres de Peniel le respondieron de la misma manera que los hombres de Sucot.
9 அப்பொழுது அவன், பெனூவேலின் மனிதர்களைப் பார்த்து: நான் சமாதானத்தோடு திரும்பிவரும்போது, இந்தக் கோபுரத்தை இடித்துப்போடுவேன் என்றான்.
Entonces él dijo también a los hombres de Peniel: Cuando yo regrese en paz, derribaré esta torre.
10 ௧0 சேபாவும் சல்முனாவும் அவர்களோடு அவர்களுடைய படைகளும் ஏறக்குறைய 15,000 பேர் கர்கோரில் இருந்தார்கள்; பட்டயம் உருவத்தக்கவர்கள் 1,20,000 பேர் விழுந்தபடியால், கிழக்குப்பகுதி மக்கள் எல்லா ராணுவத்திலும் இவர்கள் மட்டும் மீதியாக இருந்தார்கள்.
Zeba y Zalmuna estaban en Carcor con su ejército de como 15.000 hombres, los que quedaron de todo el campamento de los hijos del oriente, pues cayeron 120.000 hombres que sacaban espada.
11 ௧௧ கிதியோன் கூடாரங்களில் குடியிருக்கிறவர்கள் வழியாக நோபாகுக்கும், யொகிபெயாவுக்கும் கிழக்கில் போய், அந்த ராணுவம் பயமில்லை என்று இருந்தபோது, அதை முறியடித்தான்.
Entonces Gedeón subió por el camino de los que habitan en tiendas al oriente de Noba y de Jogbeá, y atacó al ejército cuando no estaba en guardia.
12 ௧௨ சேபாவும் சல்முனாவும் ஓடிப்போனார்கள்; அவனோ அவர்களைத் தொடர்ந்து, சேபா சல்முனா என்னும் மீதியானியர்களின் இரண்டு ராஜாக்களையும் பிடித்து, ராணுவம் முழுவதையும் கலங்கடித்தான்.
Zeba y Zalmuna huyeron, pero él los persiguió y capturó a los dos reyes de Madián, a Zeba y a Zalmuna. Llenó de terror a todo su ejército.
13 ௧௩ யோவாசின் மகனான கிதியோன் யுத்தம்செய்து, சூரியன் உதிக்கும் முன்னே திரும்பிவந்தபோது,
Luego Gedeón, hijo de Joas, regresó de la batalla por la cuesta de Heres,
14 ௧௪ சுக்கோத்தின் மனிதர்களில் ஒரு வாலிபனைப் பிடித்து, அவனிடத்தில் விசாரித்தான்; அவன் சுக்கோத்தின் பிரபுக்களும் அதின் மூப்பர்களுமாகிய 77 மனிதர்களின் பேரை அவனுக்கு எழுதிக்கொடுத்தான்.
y detuvo a un joven de los hombres de Sucot y lo interrogó. Éste le dio por escrito los nombres de los jefes de Sucot y de sus ancianos: 76 varones.
15 ௧௫ அவன் சுக்கோத்து ஊர்க்காரர்களிடத்தில் வந்து: இதோ, களைத்திருக்கிற உன் மனிதர்களுக்கு நாங்கள் அப்பம் கொடுக்கிறதற்குச் சேபா சல்முனா என்பவர்களின் கை உன்னுடைய கைவசம் வந்ததோ என்று நீங்கள் என்னை நிந்தித்துச் சொன்ன சேபாவும் சல்முனாவும் இங்கே இருக்கிறார்கள் என்று சொல்லி,
Cuando llegó ante los hombres de Sucot, les dijo: Miren a Zeba y a Zalmuna, quienes se burlaron de mí y dijeron: ¿Están ya en tu mano Zeba y Zalmuna, para que demos pan a tus hombres cansados?
16 ௧௬ பட்டணத்தின் மூப்பரைப் பிடித்து, வனாந்தரத்தின் நெரிஞ்சில்முட்களை கொண்டுவந்து, அவைகளால் சுக்கோத்தின் மனிதர்களுக்குப் புத்திவரச்செய்து,
Tomó a los ancianos de la ciudad, y azotó a los varones de Sucot con espinos y abrojos del desierto.
17 ௧௭ பெனூவேலின் கோபுரத்தை இடித்து, அந்த ஊர் மனிதர்களையும் கொன்றுபோட்டான்.
También derribó la torre de Peniel y mató a los varones de la ciudad.
18 ௧௮ பின்பு அவன் சேபாவையும் சல்முனாவையும் நோக்கி: நீங்கள் தாபோரிலே கொன்றுபோட்ட அந்த மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: நீர் எப்படிப்பட்டவரோ அவர்களும் அப்படிப்பட்டவர்களே; ஒவ்வொருவனும் பார்வைக்கு ராஜகுமாரனைப்போல் இருந்தான் என்றார்கள்.
Luego preguntó a Zeba y a Zalmuna: ¿Qué aspecto tenían los hombres que ustedes mataron en Tabor? Y ellos respondieron: Como tú, así eran ellos. Cada uno parecía el hijo del rey.
19 ௧௯ அப்பொழுது அவன்: அவர்கள் என்னுடைய சகோதரர்களும் என்னுடைய தாயின் பிள்ளைகளுமாக இருந்தார்கள்; அவர்களை உயிரோடே வைத்திருந்தீர்களானால். உங்களைக் கொல்லாதிருப்பேன் என்று யெகோவாவின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று சொல்லி,
Y él dijo: ¡Eran mis hermanos! ¡Los hijos de mi madre! Vive Yavé, que si los hubieron dejado vivos, yo no los mataría a ustedes.
20 ௨0 தன்னுடைய மூத்தமகனான யெத்தேரை நோக்கி: நீ எழுந்து, இவர்களை வெட்டிப்போடு என்றான்; அந்த வாலிபன் தான் இளைஞனானபடியால் பயந்து தன்னுடைய பட்டயத்தை உருவாமல் இருந்தான்.
Y dijo a Jéter, su primogénito: ¡Levántate, mátalos! Pero el joven no desenvainó su espada, pues tuvo temor, porque aún era un muchacho.
21 ௨௧ அப்பொழுது சேபாவும் சல்முனாவும்: நீரே எழுந்து எங்களைக் கொல்லும்; மனிதன் எப்படியோ அப்படியே அவன் பெலனும் இருக்கும் என்றார்கள்; கிதியோன் எழுந்து, சேபாவையும் சல்முனாவையும் கொன்றுபோட்டு, அவர்கள் ஒட்டகங்களின் கழுத்துகளில் இருந்த பொன்னால் அலங்கரிக்கப்பட்ட பிறை வடிவமான ஆபரணங்களை எடுத்துக்கொண்டான்.
Entonces Zeba y Zalmuna dijeron: ¡Levántate tú y mátanos, pues como es el varón, así es su valentía! Y Gedeón se levantó y mató a Zeba y a Zalmuna, y tomó las lunetas que sus camellos llevaban en el cuello.
22 ௨௨ அப்பொழுது இஸ்ரவேல் மனிதர்கள் கிதியோனை நோக்கி: நீர் எங்களை மீதியானியர்கள் கைக்கு தப்புவித்தபடியால் நீரும் உம்முடைய மகனும், உம்முடைய மகனின் மகனும், எங்களை ஆண்டுகொள்ளக்கடவீர்கள் என்றார்கள்.
Los hombres de Israel dijeron a Gedeón: Gobiérnanos tú, tu hijo y tu nieto, pues nos libraste de la mano de Madián.
23 ௨௩ அதற்குக் கிதியோன்: நான் உங்களை ஆளமாட்டேன்; என்னுடைய மகனும் உங்களை ஆளமாட்டான்; யெகோவாவே உங்களை ஆளுவாராக என்றான்.
Pero Gedeón respondió: Yo no los gobernaré, ni mi hijo. Yavé los gobernará.
24 ௨௪ பின்பு கிதியோன் அவர்களை நோக்கி: உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன்; நீங்கள் அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான். அவர்கள் இஸ்மவேலர்களாக இருந்தபடியால் அவர்களிடத்தில் பொன்கடுக்கன்கள் இருந்தது.
Sin embargo, Gedeón les dijo: Les hago una petición: que cada uno me dé los zarcillos de su botín, pues [los madianitas] tenían zarcillos de oro, porque eran ismaelitas.
25 ௨௫ இஸ்ரவேலர்கள்: சந்தோஷமாகக் கொடுப்போம் என்று சொல்லி, ஒரு துணியை விரித்து, அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை அதிலே போட்டார்கள்.
Ellos dijeron: Con mucho gusto te los daremos. Y tendieron el manto y allí echó cada uno los zarcillos de su botín.
26 ௨௬ பிறை வடிவிலான ஆபரணங்களும், ஆரங்களும், மீதியானியர்களின் ராஜாக்கள் போர்த்துக்கொண்டிருந்த விலையுயர்ந்த ஊதா நிற ஆடைகளும், அவர்களுடைய ஒட்டகங்களின் கழுத்துகளிலிருந்த சங்கலிகளும் அல்லாமல், அவன் கேட்டு வாங்கின பொன்கடுக்கன்களின் நிறை ஆயிரத்து எழுநூறு பொன் சேக்கலின் நிறையாக இருந்தது.
El peso de los zarcillos de oro que él pidió fue 18,7 kilogramos de oro, aparte de las lunetas, los pendientes y las ropas de púrpura que llevaban los reyes de Madián, y aparte de los collares que llevaban sus camellos.
27 ௨௭ அதினால் கிதியோன் ஒரு ஏபோத்தை உண்டாக்கி, அதைத் தன்னுடைய ஊரான ஒப்ராவிலே வைத்தான்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அதைத் தொழுதுகொண்டதால் விபசாரம் செய்தவர்களானார்கள்; அது கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும் கண்ணியானது.
Gedeón hizo con ellos un efod y lo puso en Ofra, su ciudad. Todo Israel se prostituyó allí con aquello, y se convirtió en una trampa para Gedeón y su familia.
28 ௨௮ இப்படியாக மீதியானியர்கள் திரும்ப தலை தூக்காதபடி, இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள்; தேசமானது கிதியோனின் நாட்களில் 40 வருடங்கள் அமைதியாக இருந்தது.
Así Madián fue sometido ante los hijos de Israel y no volvieron a levantar sus cabezas. Y la tierra tuvo 40 años de descanso en los días de Gedeón.
29 ௨௯ யோவாசின் மகனான யெருபாகால் (கிதியோனின் மற்றொரு பெயர்) போய், தன்னுடைய வீட்டிலே வாழ்ந்து வந்தான்.
Jerobaal, hijo de Joás, fue y vivió en su casa.
30 ௩0 கிதியோனுக்கு அநேகம் மனைவிகள் இருந்தார்கள்; அவனுடைய கர்ப்பப்பிறப்பான மகன்கள் எழுபதுபேர்.
Gedeón tuvo 70 hijos que fueron sus descendientes porque tenía muchas mujeres.
31 ௩௧ சீகேமிலிருந்த அவனுடைய மறுமனையாட்டியும் அவனுக்கு ஒரு மகனைப்பெற்றாள்; அவனுக்கு அபிமெலேக்கு என்று பெயரிட்டான்.
Su concubina, que vivía en Siquem, también le dio un hijo, y lo llamó Abimelec.
32 ௩௨ பின்பு யோவாசின் மகனான கிதியோன் நல்ல முதிர்வயதிலே இறந்து, ஒப்ராவிலே தன்னுடைய தகப்பனான யோவாஸ் என்னும் அபியேஸ்ரியனுடைய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டான்.
Gedeón, hijo de Joás, murió en buena vejez. Fue sepultado en el sepulcro de Joás, su padre, en Ofra de los abiezeritas.
33 ௩௩ கிதியோன் இறந்தபின்பு இஸ்ரவேல் மக்கள் திரும்பவும் பாகால்களைத் தொழுதுகொண்டதால் விபசாரம் செய்தவர்களாகி, பாகால்பேரீத்தைத் தங்களுக்கு தேவனாக வைத்துக்கொண்டார்கள்.
Pero aconteció que cuando Gedeón murió, los hijos de Israel volvieron a prostituirse al seguir a los baales y escogieron a Baal-berit como su ʼelohim.
34 ௩௪ இஸ்ரவேல் மக்கள் தங்களைச் சுற்றிலுமிருந்த தங்கள் எல்லா எதிரிகளின் கைகளிலிருந்தும் தங்களை இரட்சித்த தங்கள் தேவனாகிய யெகோவாவை நினைக்காமலும்,
Los hijos de Israel no se acordaron de Yavé su ʼElohim, Quien los libró de mano de todos sus enemigos de alrededor.
35 ௩௫ கிதியோன் என்னும் யெருபாகால் இஸ்ரவேலுக்குச் செய்த எல்லா நன்மைகளுக்குத்தகுந்த தயவை அவன் வீட்டாருக்குப் பாராட்டாமலும் போனார்கள்.
Tampoco se mostraron agradecidos con la casa de Jerobaal, quien es Gedeón, por todo el bien que hizo a Israel.

< நியாயாதிபதிகள் 8 >