< நியாயாதிபதிகள் 21 >

1 இஸ்ரவேலர்கள் மிஸ்பாவிலே இருக்கும்போது: நம்மில் ஒருவனும் தன்னுடைய மகளைப் பென்யமீனர்களுக்கு திருமணம் செய்துகொடுப்பதில்லை என்று சத்தியம் செய்திருந்தார்கள்.
А синови Израиљеви беху се заклели у Миспи рекавши: Ниједан између нас да не да кћери своје за жену сину Венијаминовом.
2 ஆகவே, மக்கள் பெத்தேலுக்குப்போய், அங்கே தேவனுக்கு முன்பாக மாலைவரை உட்கார்ந்திருந்து, சத்தமிட்டு மிகவும் அழுது:
Зато отиде народ к дому Божјем, и осташе онде до вечери пред Богом, и подигавши глас свој плакаше врло,
3 இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் குறைந்துபோகும்படி இஸ்ரவேலில் இந்தக் காரியம் சம்பவித்தது என்ன என்றார்கள்.
И рекоше: Зашто се, Господе Боже Израиљев, догоди ово у Израиљу, данас да нестане једног племена из Израиља?
4 மறுநாளிலே, மக்கள் அதிகாலையில் எழுந்து, அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்கதகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினார்கள்.
И сутра дан урани народ, и начини онде олтар, и принесоше жртве паљенице и жртве захвалне.
5 யெகோவாவுடைய சந்நிதியில் மிஸ்பாவுக்கு வராதவன் நிச்சயமாகக் கொலைசெய்யப்படவேண்டும் என்று அவர்கள் பெரிய ஆணையிட்டிருந்தபடியால், இஸ்ரவேல் மக்கள்: யெகோவாவுடைய சந்நிதியில் சபைகூடினபோது, இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலுமிருந்து வராமல்போனவர்கள் யார் என்று விசாரித்தார்கள்.
Тада рекоше синови Израиљеви: Има ли ко да није дошао на збор из свих племена Израиљевих ка Господу? Јер се беху тешко заклели за оног ко не дође у Миспу ка Господу рекавши: Да се погуби.
6 இஸ்ரவேல் மக்கள் தங்கள் சகோதரனாகிய பென்யமீனனை நினைத்து, வேதனையடைந்து: இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் அறுப்புண்டு போயிற்றே.
Јер се синовима Израиљевим сажали за Венијамином братом њиховим, и рекоше: Данас се истреби једно племе из Израиља.
7 மீதியாக இருப்பவர்களுக்கு மனைவிகள் கிடைக்க நாம் அவர்களுக்கு என்ன செய்யலாம்? நம்முடைய மகள்களில் ஒருத்தியையும் அவர்களுக்குக் கொடுப்பதில்லை என்று நாம் யெகோவா மேல் ஆணையிட்டுக் கொண்டோமே.
Шта ћемо чинити с онима што су остали да би имали жене, кад се заклесмо Господом да им не дамо кћери својих за жене?
8 இஸ்ரவேலின் கோத்திரங்களில் மிஸ்பாவிலே யெகோவாவுடைய சந்நிதியில் வராமல் போனவர் உண்டோ என்று விசாரித்தார்கள்; அப்பொழுது கீலேயாத்திலுள்ள யாபேசின் மனிதர்களில் ஒருவரும் முகாமில் சபைகூடினபோது வரவில்லை.
Па рекоше: Има ли ко из племена Израиљевих да није дошао у Миспу ка Господу? И гле, не беше дошао на војску, на збор, нико из Јависа Галадовог.
9 மக்கள் கணக்கு பார்க்கப்பட்டபோது, கீலேயாத்திலிருக்கிற யாபேசின் குடியிருப்புகளில் அங்கே ஒருவரும் இருக்கவில்லை.
Јер кад се народ преброја, гле, не беше онде ниједног од оних који живе у Јавису Галадовом.
10 ௧0 உடனே சபையார் பெலவான்களில் பன்னிரண்டாயிரம்பேரை அங்கே அழைத்து: நீங்கள் கீலேயாத்திலுள்ள யாபேசிற்குப் போய், பெண்களையும் பிள்ளைகளையும்கூட கூர்மையான பட்டயத்தால் கொன்றுபோடுங்கள்.
Зато посла збор онамо дванаест хиљада храбрих људи, и заповеди им говорећи: Идите и побијте становнике у Јавису Галадовом оштрим мачем и жене и децу.
11 ௧௧ எல்லா ஆண்பிள்ளைகளையும், திருமணமான எல்லா பெண்பிள்ளைகளையும் கொன்றுபோடவேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளை கொடுத்து அனுப்பினார்கள்.
Ово ћете дакле учинити: све мушкиње и све женскиње што је познало човека побијте.
12 ௧௨ இவர்கள் கீலேயாத்திலுள்ள யாபேசின் குடியிருக்கிறவர்களிடத்தில் திருமணமாகாத 400 கன்னிப்பெண்களைக் கண்டுபிடித்து, அவர்களைக் கானான்தேசமான சீலோவிலிருக்கிற முகாமிற்கு கொண்டுவந்தார்கள்.
И нађоше међу становницима Јависа Галадовог четири стотине девојака, које не беху познале човека, и доведоше их у логор у Силом, који је у земљи хананској.
13 ௧௩ அப்பொழுது ரிம்மோன் கன்மலையிலிருக்கிற பென்யமீன் மக்களோடு பேசவும், அவர்களுக்குச் சமாதானம் கூறவும், சபையார் எல்லோரும் செய்தி அனுப்பினார்கள்.
Тада посла сав збор, те говорише синовима Венијаминовим који беху у стени Римону, и објавише им мир.
14 ௧௪ எனவே, அக்காலத்தில் பென்யமீனர்கள் திரும்ப வந்தார்கள்; கீலேயாத்திலிருக்கிற யாபேசின் பெண்களில் உயிரோடு வைத்த பெண்களை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படிச் செய்தும் அவர்கள் எல்லோருக்கும் பெண்கள் போதாமலிருந்தது.
Тако се вратише синови Венијаминови у то време, и дадоше им жене које оставише у животу између жена из Јависа Галадовог; али их не беше доста за њих.
15 ௧௫ இஸ்ரவேல் கோத்திரங்களிலே யெகோவா ஒரு பிரிவை உண்டாக்கினார் என்று மக்கள் பென்யமீனர்களுக்காக மனவேதனை அடைந்தார்கள்.
А народу беше жао Венијамина што Господ окрњи племена Израиљева.
16 ௧௬ பென்யமீன் கோத்திர பெண்கள் இறந்தபடியினாலே, மீதியான மற்றவர்களுக்கும் மனைவிகள் கிடைக்கும்படி என்ன செய்யலாம் என்று சபையின் மூப்பர்கள் கேட்டு,
Па рекоше старешине од збора: Шта ћемо чинити с овима што су остали да би имали жене? Јер су изгинуле жене у племену Венијаминовом.
17 ௧௭ இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் அழிந்துபோகாதபடி, தப்பினவர்களுடைய சுதந்தரம் பென்யமீனுக்கு இருக்கவேண்டுமே,
Потом рекоше: Наследство Венијаминово припада онима што су остали, да се не би затрло племе из Израиља.
18 ௧௮ நாமோ நம்முடைய மகள்களில் அவர்களுக்கு பெண் கொடுக்கக்கூடாது; பென்யமீனர்களுக்குப் பெண் கொடுக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று, இஸ்ரவேல் மக்கள் ஆணையிட்டார்களே என்றார்கள்.
А ми им не можемо дати жена између кћери својих; јер су се заклели синови Израиљеви рекавши: Да је проклет ко да жену синовима Венијаминовим.
19 ௧௯ பின்னும், இதோ, பெத்தேலுக்கு வடக்கில் பெத்தேலிலிருந்து சீகேமுக்குப் போகிற பாதைக்குக் கிழக்காகவும் லிபோனாவுக்குத் தெற்காகவும் இருக்கிற சீலோவிலே ஒவ்வொரு வருடமும் யெகோவாவுக்குப் பண்டிகை கொண்டாடப்படுகிறதே என்று சொல்லி,
Потом рекоше: Ево, годишњи је празник Господњи у Силому, који је са севера Ветиљу, к истоку, на путу који иде од Ветиља у Сихем, и с југа Левони.
20 ௨0 அவர்கள் பென்யமீன் மனிதர்களை நோக்கி: நீங்கள் போய், திராட்சைத் தோட்டங்களிலே மறைந்திருந்து,
И заповедише синовима Венијаминовим говорећи: Идите, и заседите по виноградима.
21 ௨௧ சீலோவின் பெண்பிள்ளைகள் கீதவாத்தியத்தோடு நடனம் செய்கிறவர்களாகப் புறப்பட்டு வருகிறதை நீங்கள் பார்க்கும்போது, திராட்சைத் தோட்டங்களிலிருந்து விரைந்து, உங்களில் அவரவர் சீலோவின் பெண்பிள்ளைகளில் ஒவ்வொரு பெண்ணைப் பிடித்துப் பென்யமீன் தேசத்திற்குக் கொண்டுபோங்கள்.
И пазите: Па кад изиђу кћери силомске да играју, изиђите из винограда и отмите сваки себи жену између кћери силомских; и идите у земљу Венијаминову.
22 ௨௨ அவர்களுடைய தகப்பன்மார்களாகிலும், சகோதரர்களாகிலும் எங்களிடத்தில் முறையிட வரும்போது, நாங்கள் அவர்களை நோக்கி: எங்களுக்காக அவர்களுக்குத் தயவு செய்யுங்கள்; நாங்கள் யுத்தம் செய்து, அவனவனுக்கு மனைவியைப் பிடித்துக்கொடுக்கவில்லை; உங்கள்மேல் குற்றமுண்டாக, இப்போது நீங்கள் அவர்களுக்கு உங்கள் மகள்களைக் கொடுக்கவும் இல்லை என்போம் என்று சொன்னார்கள்.
А кад дођу оци њихови или браћа њихова к нама да се суде, ми ћемо им казати: Смилујте им се нас ради, јер у овом рату нисмо заробили жене за сваког њих; а ви им нисте дали, и тако нећете бити криви.
23 ௨௩ பென்யமீன் மக்கள் அப்படியே செய்து, நடனம்செய்கிறவர்களிலே தங்கள் எண்ணிக்கைக்குச் சரியான பெண்களை மனைவிகளாகப் பிடித்துக்கொண்டு, தங்கள் சுதந்தரத்திற்குத் திரும்பிப்போய், பட்டணங்களைப் புதுப்பித்துக் கட்டி, அவைகளில் குடியிருந்தார்கள்.
Тада синови Венијаминови учинише тако, и доведоше жене према броју свом између играчица које отеше, и отишавши вратише се на наследство своје, и сазидаше опет градове и населише се у њима.
24 ௨௪ இஸ்ரவேல் மக்களும் அக்காலத்திலே அவ்விடம் விட்டு அவரவர் தங்கள் கோத்திரத்திற்கும் தங்கள் குடும்பத்திற்கும் போய், அவரவர் தங்கள் சுதந்தரத்தில் சேர்ந்தார்கள்.
И тако разиђоше се синови Израиљеви оданде у оно време сваки у своје племе и у породицу своју, и отидоше оданде сваки на своје наследство.
25 ௨௫ அந்த நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன்னுடைய பார்வைக்குச் சரியானபடி செய்து வந்தான்.
У оно време не беше цара у Израиљу; сваки чињаше шта му беше драго.

< நியாயாதிபதிகள் 21 >