< நியாயாதிபதிகள் 12 >

1 எப்பிராயீம் மனிதர்கள் ஒன்றாகக் கூடி யோர்தான் நதியை கடந்து வடக்கே உள்ள சாபோன் ஊருக்குப் போய், யெப்தாவை நோக்கி: நீ எங்களை உன்னோடு வரும்படி அழைக்காமல் அம்மோனியர்கள்மேல் யுத்தம்செய்யப்போனதென்ன? உன்னுடைய வீட்டையும் உன்னையும் அக்கினியால் சுட்டுப்போடுவோம் என்றார்கள்.
А људи од племена Јефремовог скупише се, и прешавши на север рекоше Јефтају: Зашто си ишао у бој на синове Амонове а нас ниси позвао да идемо с тобом? Спалићемо огњем дом твој и тебе.
2 அதற்கு யெப்தா: எனக்கும் என்னுடைய மக்களுக்கும் அம்மோனியர்களோடு பெரிய வழக்கு இருக்கும்போது, நான் உங்களைக் கூப்பிட்டேன்; நீங்கள் என்னை அவர்கள் கைக்கு விலக்கி காப்பாற்றவில்லை.
А Јефтај им рече: Имах велику распру са синовима Амоновим ја и мој народ, и позвах вас, али ме не избависте из руку његових.
3 நீங்கள் என்னை காப்பாற்றவில்லை என்று நான் பார்த்தபோது, நான் என்னுடைய ஜீவனை என்னுடைய கையிலே பிடித்துக்கொண்டு, அம்மோன் மக்களுக்கு எதிராகப்போனேன்; யெகோவா அவர்களை என்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்படியிருக்க, நீங்கள் என்மேல் யுத்தம்செய்ய, இன்று என்னிடத்திற்கு வரவேண்டியது என்ன என்று சொன்னான்.
Па видећи да ме не избависте, ставих душу своју у руку своју и отидох на синове Амонове, и Господ ми их даде у руке; па што сте сада дошли к мени да се бијете са мном?
4 பின்பு யெப்தா கீலேயாத் மனிதர்களையெல்லாம் கூட்டி, எப்பிராயீமர்களோடு யுத்தம்செய்தான்; எப்பிராயீமுக்கும் மனாசேக்கும் நடுவே குடியிருக்கிற கீலேயாத்தியர்களான நீங்கள் எப்பிராயீமைவிட்டு ஓடிப்போனவர்கள் என்று எப்பிராயீமர்கள் சொன்னபடியினால், கீலேயாத் மனிதர்கள் அவர்களை முறியடித்தார்கள்.
Тада Јефтај скупи све људе од Галада, и удари на Јефрема; и људи од Галада побише Јефрема; јер говораху: Бегунци сте Јефремови ви, људи од Галада, који се бавите међу Јефремом и међу Манасијом.
5 கீலேயாத்தியர்கள் எப்பிராயீமர்களை முந்தி யோர்தானின் துறைமுகங்களைப் பிடித்தார்கள்; அப்பொழுது எப்பிராயீமர்களிலே தப்பினவர்களில் யாராவது வந்து: நான் அக்கரைக்குப் போகட்டும் என்று சொல்லும்போது, கீலேயாத் மனிதர்கள்: நீ எப்பிராயீமனா என்று அவனைக் கேட்பார்கள்; அவன் அல்ல என்றால்,
И Галад узе Јефрему бродове јорданске. И кад који од Јефрема добеже и рече: Пусти ме да пређем, рекоше му они од Галада: Јеси ли од Јефрема? И кад он рече: Нисам,
6 நீ ஷிபோலேத் என்று சொல் என்பார்கள்; அப்பொழுது அவன் அப்படி உச்சரிக்க முடியாமல், சிபோலேத் என்பான்; அப்பொழுது அவனைப் பிடித்து, யோர்தான் துறைமுகத்திலே வெட்டிப்போடுவார்கள்; அக்காலத்திலே எப்பிராயீமில் 42,000 பேர் இறந்தார்கள்.
Онда му рекоше: Реци: Шиболет. А он рече: Сиболет, не могући добро изговорити. Тада га ухватише и заклаше на броду јорданском. И погибе у оно време из племена Јефремовог четрдесет и две хиљаде.
7 யெப்தா இஸ்ரவேலை ஆறு வருடங்கள் நியாயம் விசாரித்தான்; பின்பு கீலேயாத்தியனான யெப்தா இறந்து, கீலேயாத்திலுள்ள ஒரு பட்டணத்தில் அடக்கம் செய்யப்பட்டான்.
И Јефтај би судија Израиљу шест година; и умре, и би погребен у граду галадском.
8 அவனுக்குப்பின்பு பெத்லெகேம் ஊரானாகிய இப்சான் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
А после њега би судија Израиљу Авесан из Витлејема.
9 அவனுக்கு 30 மகன்களும் 30 மகள்களும் இருந்தார்கள்; 30 மகள்களையும் வேறு இனத்திலே திருமணம் செய்துகொடுத்து, தன்னுடைய மகன்களுக்கு 30 பெண்களை வேறு இனத்திலிருந்து எடுத்தான்; அவன் இஸ்ரவேலை ஏழு வருடங்கள் நியாயம் விசாரித்தான்.
И имаше тридесет синова и тридесет кћери, које разуда из куће, а тридесет девојака доведе синовима својим из других кућа; и би судија Израиљу седам година.
10 ௧0 பின்பு இப்சான் இறந்து, பெத்லெகேமிலே அடக்கம் செய்யப்பட்டான்.
И потом умре Авесан, и би погребен у Витлејему.
11 ௧௧ அவனுக்குப் பின்பு செபுலோனியனாகிய ஏலோன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்; அவன் பத்து வருடங்கள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
А после њега би судија Израиљу Елон о д Завулона; он би судија Израиљу десет година.
12 ௧௨ பின்பு செபுலோனியனாகிய ஏலோன் இறந்து, செபுலோன் தேசமான ஆயலோன் ஊரில் அடக்கம் செய்யப்பட்டான்.
Потом умре Елон од Завулона и би погребен у Ајалону у земљи Завулоновој.
13 ௧௩ அவனுக்குப்பின்பு இல்லேலின் மகனான பிரத்தோனியனான அப்தோன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
После њега би судија у Израиљу Авдон син Елилов Фаратоњанин.
14 ௧௪ அவனுக்கு 40 மகன்களும் 30 பேரப்பிள்ளைகளும் இருந்தார்கள்; அவர்கள் 70 கழுதைகளின்மேல் ஏறுவார்கள்; அவன் இஸ்ரவேலை எட்டு வருடங்கள் நியாயம் விசாரித்தான்.
Он имаше четрдесет синова и тридесет унука, који јахаху седамдесеторо магаради. И би судија Израиљу осам година.
15 ௧௫ பின்பு பிரத்தோனியனான இல்லேலின் மகனான அப்தோன் இறந்து, எப்பிராயீம் தேசத்தில் அமலேக்கியர் மலையிலிருக்கிற பிரத்தோனிலே அடக்கம் செய்யப்பட்டான்.
Потом умре Авдон син Елилов Фаратоњанин, и би погребен у Фаратону у земљи Јефремовој на гори амаличкој.

< நியாயாதிபதிகள் 12 >