< நியாயாதிபதிகள் 11 >
1 ௧ கீலேயாத்தியனான யெப்தா வல்லமையுள்ள வீரனாக இருந்தான்; அவன் வேசியின் மகன்; கிலெயாத் அவனைப் பெற்றான்.
Ja Jephta Gileadista oli väkevä sotamies, vaan hän oli äpärä; ja Gilead oli siittänyt Jephtan.
2 ௨ கிலெயாத்தின் மனைவியும் அவனுக்குக் மகன்களைப் பெற்றாள்; அவனுடைய மனைவி பெற்ற மகன்கள் பெரியவர்களானபின்பு, அவர்கள் யெப்தாவை நோக்கி: உனக்கு எங்களுடைய தகப்பன் வீட்டிலே சொத்து இல்லை; நீ அந்நிய பெண்ணின் மகன் என்று சொல்லி அவனைத் துரத்தினார்கள்.
Mutta kuin Gileadin emäntä synnytti hänelle lapsia, ja vaimon lapset tulivat isoiksi, ajoivat he Jephtan ulos, ja sanoivat hänelle: ei sinun pidä perimän meidän isämme huoneessa, sillä sinä olet vieraan vaimon poika.
3 ௩ அப்பொழுது யெப்தா: தன்னுடைய சகோதரர்களை விட்டு ஓடிப்போய், தோப் தேசத்திலே குடியிருந்தான்; வீணரான மனிதர்கள் யெப்தாவோடே கூடிக்கொண்டு, அவனோடு யுத்தத்திற்குப் போவார்கள்.
Niin pakeni Jephta veljeinsä edestä ja asui Tobin maalla; ja Jephtan tykö kokoontuivat joutilaat miehet ja menivät hänen kanssanssa.
4 ௪ சிலநாட்களுக்குப்பின்பு, அம்மோனிய மக்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்தார்கள்.
Ja kappaleen ajan perästä sotivat Ammonin lapset Israelia vastaan.
5 ௫ அவர்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்யும்போது கீலேயாத்தின் மூப்பர்கள் யெப்தாவைத் தோப் தேசத்திலிருந்து அழைத்துவரப்போய்,
Kuin Ammonin lapset sotivat Israelia vastaan, menivät Gileadin vanhimmat tuomaan Jephtaa Tobin maalta jällensä,
6 ௬ யெப்தாவை நோக்கி: நீ வந்து, நாங்கள் அம்மோன் மக்களோடு யுத்தம்செய்ய எங்களுடைய தளபதியாக இருக்கவேண்டும் என்றார்கள்.
Ja sanoivat hänelle: tule ja ole meidän päämiehemme, sotimaan Ammonin lapsia vastaan.
7 ௭ அதற்கு யெப்தா கீலேயாத்தின் மூப்பரைப் பார்த்து: நீங்கள் அல்லவா என்னைப் பகைத்து, என்னுடைய தகப்பன் வீட்டிலிருந்து என்னைத் துரத்தினவர்கள்? இப்பொழுது உங்களுக்கு ஆபத்து சம்பவித்திருக்கிற சமயத்தில் நீங்கள் என்னிடத்தில் ஏன் வருகிறீர்கள் என்றான்.
Vaan Jephta sanoi Gileadin vanhimmille: ettekö te minua vihanneet ja ajaneet minua isäni huoneesta ulos? ja nyt te tulette minun tyköni, kuin teillä tuska on?
8 ௮ அதற்குக் கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவை நோக்கி: நீ எங்களோடு வந்து, அம்மோன் மக்களோடு யுத்தம்செய்து, கீலேயாத்தின் குடிகளாகிய எங்கள் அனைவர்மேலும் தலைவனாக இருக்க வேண்டும்; இதற்காக இப்பொழுது உன்னிடம் வந்தோம் என்றார்கள்.
Gileadin vanhimmat sanoivat Jephtalle: sentähden me nyt tulemme jälleen sinun tykös, ettäs kävisit meidän kanssamme, ja sotisit Ammonin lapsia vastaan, ja olisit meidän päämiehemme ja kaikkein jotka Gileadissa asuvat.
9 ௯ அதற்கு யெப்தா: அம்மோன் மக்களோடு யுத்தம்செய்ய, நீங்கள் என்னைத் திரும்ப அழைத்துப்போனபின்பு, யெகோவா அவர்களை எனக்கு முன்பாக ஒப்புக்கொடுத்தால், என்னை உங்களுக்குத் தலைவனாக வைப்பீர்களா என்று கீலேயாத்தின் மூப்பரைக் கேட்டான்.
Jephta sanoi Gileadin vanhimmille: jos te viette minun sotimaan Ammonin lapsia vastaan, ja Herra antaa heidät minun eteeni, pitääkö minun oleman teidän päämiehenne?
10 ௧0 கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவைப் பார்த்து: நாங்கள் உன்னுடைய வார்த்தையின்படியே செய்யாவிட்டால், யெகோவா நமக்கு நடுவாக நின்று கேட்பாராக என்றார்கள்.
Gileadin vanhimmat sanoivat Jephtalle: Herra olkoon kuulia meidän välillämme, jos emme sitä tee, mitä sinä sanonut olet.
11 ௧௧ அப்பொழுது யெப்தா கீலேயாத்தின் மூப்பர்களோடு போனான்; மக்கள் அவனைத் தங்கள்மேல் தலைவனும் தளபதியுமாக வைத்தார்கள். யெப்தா தன்னுடைய காரியங்களையெல்லாம் மிஸ்பாவிலே யெகோவாவுடைய சந்நிதியிலே சொன்னான்.
Ja Jephta meni Gileadin vanhimpain kanssa, ja kansa asetti hänen itsellensä päämieheksi ja johdattajaksi. Ja Jephta puhui Herran edessä kaikki sanansa Mitspassa.
12 ௧௨ பின்பு யெப்தா அம்மோன் மக்களின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி: நீ என்னுடைய தேசத்தில் எனக்கு விரோதமாக யுத்தம்செய்ய வருகிறதற்கு, எனக்கும் உனக்கும் என்ன வழக்கு இருக்கிறது என்று கேட்கச் சொன்னான்.
Silloin lähetti Jephta sanansaattajat Ammonin lasten kuninkaan tykö, sanoen: mitä sinun on minun kanssani, ettäs tulet sotimaan minua ja minun maakuntaani vastaan?
13 ௧௩ அம்மோன் மக்களின் ராஜா யெப்தாவின் தூதுவர்களை நோக்கி: இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வருகிறபோது, அர்னோன் துவங்கி யாப்போக், யோர்தான்வரை இருக்கிற என்னுடைய தேசத்தைக் பிடித்துக்கொண்டார்களே; இப்பொழுது அதை எனக்குச் சமாதானமாகத் திரும்பக் கொடுத்துவிடவேண்டும் என்று சொல்லுங்கள் என்றான்.
Ammonin lasten kuningas vastasi Jephtan sanansaattajia: että Israel otti minun maani, silloin kuin hän läksi Egyptistä, Arnonista Jabbokiin ja Jordaniin asti, anna siis ne jällensä hyvällä sovinnolla.
14 ௧௪ யெப்தா மறுபடியும் அம்மோன் மக்களின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி, அவனுக்குச் சொல்லச் சொன்னதாவது:
Jephta lähetti taas sanansaattajat Ammonin lasten kuninkaan tykö,
15 ௧௫ யெப்தா சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலர்கள் மோவாபியர்களின் தேசத்தையாகிலும், அம்மோன் மக்களின் தேசத்தையாகிலும் பிடித்துக்கொண்டதில்லையே.
Jotka sanoivat hänelle: näin sanoo Jephta: ei Israel ottanut maakuntaa Moabilaisilta eikä Ammonin lapsilta:
16 ௧௬ இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வருகிறபோது, வனாந்திரத்தில் சிவந்த சமுத்திரம்வரை நடந்து, பின்பு காதேசுக்கு வந்து,
Sillä kuin he läksivät Egyptistä, matkusti Israel korven lävitse Punaiseen mereen asti, ja tuli Kadekseen.
17 ௧௭ இஸ்ரவேலர்கள் ஏதோமின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி: நாங்கள் உன்னுடைய தேசத்தின் வழியாகக் கடந்துபோகிறோம் என்று சொல்லச்சொன்னார்கள்; அதற்கு ஏதோமின் ராஜா செவிகொடுக்கவில்லை; அப்படியே மோவாபின் ராஜாவினிடத்திற்கும் அனுப்பினார்கள்; அவனும் சம்மதிக்கவில்லை. ஆதலால் இஸ்ரவேலர்கள் காதேசிலே தங்கியிருந்து,
Ja Israel lähetti sanansaattajat Edomilaisten kuninkaan tykö, sanoen: anna minun käydä sinun maas lävitse. Mutta Edomilaisten kuningas ei kuullut heitä. Ja hän lähetti myös Moabilaisten kuninkaan tykö, joka ei myöskään tahtonut. Niin oli Israel Kadeksessa,
18 ௧௮ பின்பு வனாந்திரவழியாக நடந்து ஏதோம் தேசத்தையும் மோவாப் தேசத்தையும் சுற்றிப்போய், மோவாபின் தேசத்திற்குக் கிழக்கேவந்து, மோவாபின் எல்லைக்குள் நுழையாமல், மோவாபின் எல்லையான அர்னோன் நதிக்கு அப்பாலே முகாமிட்டார்கள்.
Ja vaelsi korvessa, ja kävi Edomilaisten ja Moabilaisten maita ympäri, ja tuli auringon nousemisen puolelta Moabilaisten maahan, ja sioitti itsensä tuolla puolella Arnonia; ja ei tulleet Moabilaisten rajan sisälle, sillä Arnon on Moabilaisten raja.
19 ௧௯ அப்பொழுது இஸ்ரவேலர்கள் எஸ்போனில் ஆளுகிற சீகோன் என்னும் எமோரியர்களின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி: நாங்கள் உன்னுடைய தேசத்தின் வழியாக எங்களுடைய இடத்திற்கு கடந்துபோக இடங்கொடு என்று சொல்லச்சொன்னார்கள்.
Ja Israel lähetti sanansaattajat Sihonin Amorilaisten kuninkaan, Hesbonin kuninkaan tykö, ja sanoi hänelle: salli meidän käydä sinun maas lävitse omaan paikkaani asti.
20 ௨0 சீகோன் இஸ்ரவேலர்களை நம்பாததால், தன்னுடைய எல்லையைக் கடந்துபோகிறதற்கு இடங்கொடாமல் தன்னுடைய மக்களையெல்லாம் கூட்டி, யாகாசிலே முகாமிட்டு, இஸ்ரவேலர்களோடு யுத்தம்செய்தான்.
Mutta ei Sihon uskonut Israelia käymään rajansa ohitse, vaan kokosi kaiken väkensä, ja sioittivat itsensä Jaksassa, ja soti Israelia vastaan.
21 ௨௧ அப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சீகோனையும் அவனுடைய எல்லா மக்களையும் இஸ்ரவேலரின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறியடித்தார்கள்; அப்படியே இஸ்ரவேலர்கள் அந்த தேசத்திலே குடியிருந்த எமோரியர்களின் நாடுகளையெல்லாம் பிடித்து, அர்னோன் துவக்கி,
Mutta Herra Israelin Jumala antoi Sihonin kaiken väkensä kanssa Israelin käsiin, että he löivät heidät: ja niin omisti Israel kaiken maan Amorilaisilta, jotka siinä maassa asuivat,
22 ௨௨ யாப்போக்வரை, வனாந்திரம் துவக்கி யோர்தான்வரை இருக்கிற எமோரியரின் எல்லைகளையெல்லாம் சொந்தமாக பிடித்துக்கொண்டார்கள்.
Ja omistivat myös kaikki Amorilaisten rajat, ruveten Arnonista Jabbokiin asti ja korvesta Jordaniin asti.
23 ௨௩ இப்படி இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா எமோரியர்களை தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு முன்பாகத் துரத்தியிருக்க, நீர் அந்த தேசத்தை பிடித்துக்கொள்ளமுடியுமா?
Näin on Herra Israelin Jumala ajanut Amorilaiset kansansa Israelin edestä pois: ja sinä nyt sen omistaisit.
24 ௨௪ உம்முடைய தேவனாகிய காமோஸ் உமக்கு முன்பாகத் துரத்துகிறவர்களின் தேசத்தை நீர் பிடித்துக்கொள்ளமாட்டீரோ? அப்படியே எங்கள் தேவனாகிய யெகோவா எங்களுக்கு முன்பாகத் துரத்துகிறவர்களின் தேசத்தையெல்லாம் நாங்களும் பிடித்துக்கொள்கிறோம்.
Jos sinun jumalas Kamos on jonkun ajanut pois, omista se, ja anna meidän omistaa kaikki ne, jotka Herra meidän Jumalamme meidän edestämme on ajanut pois.
25 ௨௫ மேலும் சிப்போரின் மகனான பாலாக் என்னும் மோவாபின் ராஜாவைவிட உமக்கு அதிக நியாயம் உண்டோ? அவன் இஸ்ரவேலர்களோடு எப்போதாவது வாதாடினானா? எப்போதாவது அவர்களுக்கு எதிராக யுத்தம்செய்தானா?
Vai luuletkos sinun paljoa paremmaksi kuin Balak Zipporin poika Moabilaisten kuningas oli? eikö hän riidellyt ja sotinut kappaletta aikaa Israelia vastaan?
26 ௨௬ இஸ்ரவேலர்கள் எஸ்போனிலும் அதின் கிராமங்களிலும், ஆரோவேரிலும் அதின் கிராமங்களிலும், அர்னோன் நதியின் அருகே எல்லா ஊர்களிலும், முந்நூறு வருடங்கள் குடியிருக்கும்போது, இவ்வளவு காலமாக நீங்கள் அதைத் திருப்பிக்கொள்ளாமல் போனதென்ன?
Kuin Israel asui Hesbonissa ja hänen tyttärissänsä, Aroerissa ja hänen tyttärissänsä, ja kaikissa kaupungeissa, jotka ovat läsnä Arnonia, kolmesataa ajastaikaa; miksi ette ottaneet sitä silloin pois.
27 ௨௭ நான் உமக்கு எதிராகக் குற்றம் செய்யவில்லை; நீர் எனக்கு எதிராக யுத்தம்செய்கிறதினால் நீர்தான் எனக்கு அநியாயம் செய்கிறீர்; நியாயாதிபதியாகிய யெகோவா இன்று இஸ்ரவேல் மக்களுக்கும் அம்மோன் மக்களுக்கும் நடுநின்று நியாயம் தீர்க்கக்கடவர் என்று சொல்லி அனுப்பினான்.
Ja en minä mitään rikkonut sinua vastaan, ja sinä teet niin pahoin minun kanssani, ettäs sodit minua vastaan: Herra joka on tuomari, tuomitkoon tänäpänä Israelin lasten ja Ammonin lasten välillä.
28 ௨௮ ஆனாலும் அம்மோன் மக்களின் ராஜா தனக்கு யெப்தா சொல்லியனுப்பின வார்த்தைகளை கேட்காமற்போனான்.
Mutta Ammonin lasten kuningas ei pitänyt lukua Jephtan sanoista, jotka hän oli hänen tykönsä lähettänyt.
29 ௨௯ அப்பொழுது யெகோவாவுடைய ஆவி யெப்தாவின்மேல் இறங்கினார்; அவன் கீலேயாத்தையும் மனாசே நாட்டையும் கடந்துபோய், கீலேயாத்திலிருக்கிற மிஸ்பாவுக்கு வந்து, அங்கேயிருந்து அம்மோன் மக்களுக்கு எதிராகப் போனான்.
Silloin tuli Herran henki Jephtan päälle, ja hän kävi Gileadin ja Manassen lävitse, ja Mitspan lävitse, joka on Gileadissa, ja Mitspasta Gileadissa kävi hän Ammonin lasten ylitse.
30 ௩0 அப்பொழுது யெப்தா யெகோவாவுக்கு ஒரு பொருத்தனையைச் செய்து: தேவரீர் அம்மோன் மக்களை என் கையில் ஒப்புக்கொடுத்தால்,
Ja Jephta lupasi Herralle lupauksen ja sanoi: jos sinä kokonansa annat Ammonin lapset minun käsiini:
31 ௩௧ நான் அம்மோன் மக்களிடத்திலிருந்து சமாதானத்தோடு திரும்பி வரும்போது, என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது யெகோவாவுக்கு உரியதாகும், அதைச் சர்வாங்கதகனபலியாகச் செலுத்துவேன் என்றான்.
Mitä ikänä minun huoneeni ovesta kohtaa minua, kuin minä rauhassa palajan Ammonin lapsilta, se pitää oleman Herran, ja minä uhraan sen polttouhriksi.
32 ௩௨ யெப்தா அம்மோன் மக்களின்மேல் யுத்தம்செய்ய, அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டுப்போனான்; யெகோவா அவர்களை அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.
Niin Jephta meni sotimaan Ammonin lapsia vastaan, ja Herra antoi heidät hänen käsiinsä.
33 ௩௩ அவன் அவர்களை ஆரோவேர் துவக்கி மின்னித்திற்குப் போகும்வரை, திராட்சைத் தோட்டத்து நிலங்கள்வரைக்கும், பேரழிவாக முறியடித்து, இருபது பட்டணங்களைப் பிடித்தான்; இப்படி அம்மோன் மக்கள் இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள்.
Ja hän löi heidät, Aroerista Minnitiin asti, kaksikymmenstä kaupunkia, ja Abelin viinamäkeen asti sangen suurella tapolla. Ja niin Ammonin lapset alennettiin Israelin lasten edestä.
34 ௩௪ யெப்தா மிஸ்பாவிலிருக்கிற தன்னுடைய வீட்டிற்கு வருகிறபோது, இதோ, அவன் மகள் தம்புரு வாசித்து நடனமாடி, அவனுக்கு எதிர்கொண்டு வந்தாள்; அவள் அவனுக்கு ஒரே பிள்ளை; அவளைத்தவிர அவனுக்கு மகனும் இல்லை மகளும் இல்லை.
Kuin Jephta tuli huoneesensa Mitspaan, katso, niin hänen tyttärensä kävi häntä vastaan kanteleilla ja hypyillä; ja se oli ainoa lapsi, eikä hänellä ollut yhtäkään muuta poikaa eli tytärtä.
35 ௩௫ அவன் அவளைப் பார்த்தவுடனே தன்னுடைய உடைகளைக் கிழித்துக்கொண்டு: ஐயோ, என் மகளே, என்னை மிகவும் மனவேதனை அடையவும் கலங்கவும் செய்கிறாய்; நான் யெகோவாவை நோக்கி என் வாயைத் திறந்து சொல்லிவிட்டேன்; அதை நான் மாற்றக்கூடாது என்றான்.
Ja kuin hän näki hänen, repäisi hän vaatteensa ja sanoi: ah, minun tyttäreni, sinä painat alas ja sangen surulliseksi saatat minun; sillä minä avasin suuni Herralle, ja en saa sitä ottaa takaperin.
36 ௩௬ அப்பொழுது அவள்: என் தகப்பனே, நீர் யெகோவாவை நோக்கி உம்முடைய வாயைத் திறந்து பேசினீரல்லவோ? அம்மோன் மக்களாகிய உம்முடைய எதிரிகளுக்கு நீதியைச் சரிக்கட்டும் ஜெயத்தைக் யெகோவா உமக்குக் கட்டளையிட்டபடியால், உம்முடைய வாயிலிருந்து புறப்பட்டபடியே எனக்குச் செய்யும் என்றாள்.
Mutta hän vastasi: isäni, jos avasit suus Herralle, niin tee minun kanssani niinkuin sinun suustas on lähtenyt, että Herra on kostanut sinun vihollisilles, Ammonin lapsille.
37 ௩௭ பின்னும் அவள் தன்னுடைய தகப்பனை நோக்கி: நீர் எனக்கு ஒரு காரியம் செய்யவேண்டும்; நான் மலைகளின்மேல் போய்த்திரிந்து, நானும் என்னுடைய தோழிகளும் என்னுடைய கன்னிமையினிமித்தம் துக்கங்கொண்டாட, எனக்கு இரண்டு மாதங்கள் தவணைகொடும் என்றாள்.
Ja sanoi isällensä: tee se ainoastansa minulle, ettäs soisit minun kaksi kuukautta mennä vuorelle ja itkeä minun neitsyyttäni tuttavain piikain kanssa.
38 ௩௮ அதற்கு அவன்: போய்வா என்று அவளை இரண்டு மாதத்திற்கு அனுப்பிவிட்டான்; அவள் தன்னுடைய தோழிகளோடு போய்த் தன்னுடைய கன்னிமையினிமித்தம் மலைகளின்மேல் துக்கங்கொண்டாடி,
Hän sanoi: mene, ja laski hänen menemään kahdeksi kuukaudeksi; niin meni hän tuttavain piikain kanssa, ja itki neitsyyttänsä vuorilla.
39 ௩௯ இரண்டு மாதம் முடிந்தபின்பு, தன்னுடைய தகப்பனிடம் திரும்பிவந்தாள்; அப்பொழுது அவன் செய்திருந்த தன்னுடைய பொருத்தனையின்படி அவளுக்குச் செய்தான்; அவள் திருமணம் ஆகாத கன்னியாகவே வாழ்ந்து மரித்து விட்டாள்.
Ja kahden kuukauden perästä tuli hän isänsä tykö, ja hän täytti lupauksensa hänestä niin kuin hän luvannut oli; ja ei hän tuntenut miestä: ja se oli tapa Israelissa.
40 ௪0 இதினிமித்தம் இஸ்ரவேலின் மகள்கள் வருடந்தோறும் போய், நான்கு நாட்கள் கீலேயாத்தியனான யெப்தாவின் மகளைக்குறித்துப் புலம்புவது இஸ்ரவேலிலே வழக்கமானது.
Ja Israelin tyttäret menivät itkemään joka vuosi Jephtan Gileadilaisen tytärtä neljä päivää ajastajassa.