< நியாயாதிபதிகள் 10 >

1 அபிமெலேக்குக்கு இறந்தப் பின்பு, தோதோவின் மகனான பூவாவின் மகன் தோலா என்னும் இசக்கார் கோத்திரத்தான் இஸ்ரவேலை காப்பாற்ற எழும்பினான்; அவன் எப்பிராயீம் மலைத்தேசத்து ஊராகிய சாமீரிலே குடியிருந்தான்.
А после Авимелеха уста да избави Израиља Тола син Фуве сина Додовог, човек племена Исахаровог, који сеђаше у Самиру у гори Јефремовој.
2 அவன் இஸ்ரவேலை 23 வருடங்கள் நியாயம் விசாரித்து, பின்பு இறந்து, சாமீரிலே அடக்கம் செய்யப்பட்டான்.
И би судија Израиљу двадесет и три године, па умре и би погребен у Самиру.
3 தோலா இறந்தப் பின்பு, கீலேயாத்தியனான யாவீர் எழும்பி, இஸ்ரவேலை 22 வருடங்கள் நியாயம் விசாரித்தான்.
После њега уста Јаир од племена Галадовог, и би судија Израиљу двадесет и две године;
4 முப்பது கழுதைக்குட்டிகளின்மேல் ஏறும் முப்பது மகன்கள் அவனுக்கு இருந்தார்கள்; அவர்களுக்கு முப்பது ஊர்களும் இருந்தது; கீலேயாத் தேசத்திலிருக்கிற அவைகளுக்கு இந்த நாள்வரைக்கும் யாவீரின் கிராமங்கள் என்கிற பெயர் இருக்கிறது.
И имаше тридесет синова, који јахаху на тридесеторо магаради, и имаху тридесет градова, који се зову села Јаирова до данас и јесу у земљи Галадовој.
5 யாவீர் இறந்து, காமோன் பட்டணத்தில் அடக்கம் செய்யப்பட்டான்.
И умре Јаир, и би погребен у Камону.
6 இஸ்ரவேல் மக்கள், மறுபடியும் யெகோவாவின் பார்வைக்குத் தீமையானவைகளைச் செய்து, யெகோவாவை வணங்காமல் அவரை விட்டுப்போய், பாகால்களையும், அஸ்தரோத்தையும், சீரியாவின் தெய்வங்களையும், சீதோனின் தெய்வங்களையும், மோவாபின் தெய்வங்களையும், அம்மோன் மக்களின் தெய்வங்களையும், பெலிஸ்தர்களின் தெய்வங்களையும் தொழுதுகொண்டார்கள்.
А синови Израиљеви опет чинише што је зло пред Господом, и служише Валима и Астаротама, и боговима сирским, и боговима сидонским, и боговима моавским, и боговима синова Амонових и боговима филистејским; и оставише Господа и не служаху Му.
7 அப்பொழுது யெகோவா இஸ்ரவேலின்மேல் கோபமடைந்து, அவர்களைப் பெலிஸ்தர்கள் கையிலும், அம்மோனியர்களின் கையிலும் ஒப்புக்கொடுத்தார்.
Зато се разгневи Господ на Израиља, те их даде у руке Филистејима и у руке синовима Амоновим.
8 அவர்கள் அந்த ஆண்டுமுதல் 18 வருடங்களாக யோர்தான் நதிக்கு அப்பாலே கீலேயாத்திலுள்ள எமோரியர்களின் தேசத்தில் இருக்கிற இஸ்ரவேல் மக்களையெல்லாம் நெருக்கி ஒடுக்கினார்கள்.
А они газише и сатираше синове Израиљеве од оне године осамнаест година, све синове Израиљеве који беху с оне стране Јордана, у земљи аморејској, која је у Галаду.
9 அம்மோனியர்கள் யூதாவின்மேலும், பென்யமீன்மேலும், எப்பிராயீம் குடும்பத்தினர்மேலும் யுத்தம்செய்ய யோர்தான் நதியைக் கடந்துவந்தார்கள்; இஸ்ரவேலர்கள் மிகவும் நெருக்கப்பட்டார்கள்.
И пређоше синови Амонови преко Јордана да се бију и с Јудом и с Венијамином и с домом Јефремовим; и би Израиљ у великој невољи.
10 ௧0 அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் யெகோவாவை நோக்கி முறையிட்டு: உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நாங்கள் எங்களுடைய தேவனைவிட்டு, பாகால்களைத் தொழுதுகொண்டோம் என்றார்கள்.
Тада вапише синови Израиљеви ка Господу говорећи: Сагрешисмо Ти што остависмо Бога свог и служисмо Валима.
11 ௧௧ யெகோவா இஸ்ரவேல் மக்களை நோக்கி: எகிப்தியர்களும், எமோரியர்களும், அம்மோனியர்களும், பெலிஸ்தர்களும்,
А Господ рече синовима Израиљевим: Од Мисираца и Амореја и од синова Амонових и од Филистеја,
12 ௧௨ சீதோனியர்களும், அமலேக்கியர்களும், மாகோனியர்களும், உங்களை ஒடுக்கும் நேரங்களில், நீங்கள் என்னை நோக்கி முறையிட்டபோது, நான் உங்களை அவர்களுடைய கைக்கு விலக்கி இரட்சிக்கவில்லையா?
И од Сидоњана и од Амалика и од Амонаца, који вас мучише, нисам ли вас избављао кад вапијасте к мени?
13 ௧௩ அப்படியிருந்தும் நீங்கள் என்னைவிட்டு, அந்நிய தெய்வங்களை ஆராதனை செய்தீர்கள்; ஆகையால் இனி உங்களை இரட்சிக்கமாட்டேன்.
Али ви остависте мене и служисте другим боговима; зато вас више нећу избављати.
14 ௧௪ நீங்கள் போய், உங்களுக்காகத் தெரிந்துகொண்ட தெய்வங்களை நோக்கி முறையிடுங்கள்; அவைகள் உங்களுடைய ஆபத்தின் காலத்தில் உங்களை இரட்சிக்கட்டும் என்றார்.
Идите и вичите оне богове које сте изабрали, нека вас они избаве у невољи вашој.
15 ௧௫ இஸ்ரவேல் மக்கள் யெகோவாவை நோக்கி: பாவஞ்செய்தோம், தேவரீர் உம்முடைய பார்வைக்கு நலமானதை எங்களுக்குச் செய்யும்; இன்றைக்குமட்டும் எங்களை இரட்சித்தருளும் என்று சொல்லி,
А синови Израиљеви рекоше Господу: Сагрешисмо; чини с нама шта Ти је драго, само нас сада избави.
16 ௧௬ அந்நிய தெய்வங்களைத் தங்கள் நடுவிலிருந்து விலக்கிவிட்டு, யெகோவாவுக்கு ஆராதனை செய்தார்கள்; அப்பொழுது அவர் இஸ்ரவேலின் துயரத்தைப் பார்த்து மனதுருகினார்.
И побацаше између себе богове туђе, и стадоше служити Господу; и сажали Му се ради муке синова Израиљевих.
17 ௧௭ அம்மோனியர்கள் கூட்டங்கூடி, கீலேயாத்திலே முகாமிட்டார்கள்; இஸ்ரவேல் மக்களும் கூடிக்கொண்டு, மிஸ்பாவிலே முகாமிட்டார்கள்.
А синови Амонови скупише се и стадоше у логор у Галаду; скупише се и синови Израиљеви и стадоше у логор у Миспи.
18 ௧௮ அப்பொழுது கீலேயாத்தின் மக்களும் பிரபுக்களும் ஒருவரையொருவர் நோக்கி: அம்மோனியர்கள்மேல் முதலில் யுத்தம்செய்யப்போகிற மனிதன் யார்? அவனே கீலேயாத்தின் குடியிருப்புகளுக்கெல்லாம் தலைவனாக இருப்பான் என்றார்கள்.
А народ и кнезови галадски рекоше један другом: Ко ће почети бој са синовима Амоновим? Он нека буде поглавар свима који живе у Галаду.

< நியாயாதிபதிகள் 10 >