< நியாயாதிபதிகள் 10 >
1 ௧ அபிமெலேக்குக்கு இறந்தப் பின்பு, தோதோவின் மகனான பூவாவின் மகன் தோலா என்னும் இசக்கார் கோத்திரத்தான் இஸ்ரவேலை காப்பாற்ற எழும்பினான்; அவன் எப்பிராயீம் மலைத்தேசத்து ஊராகிய சாமீரிலே குடியிருந்தான்.
Po Abimeleku powstał, aby bronić Izraela, Tola, syn Puy, syna Doda, mężczyzna z [pokolenia] Issachara. Mieszkał on w Szamir, na górze Efraim.
2 ௨ அவன் இஸ்ரவேலை 23 வருடங்கள் நியாயம் விசாரித்து, பின்பு இறந்து, சாமீரிலே அடக்கம் செய்யப்பட்டான்.
Sądził on Izraela przez dwadzieścia trzy lata, po czym umarł i został pogrzebany w Szamir.
3 ௩ தோலா இறந்தப் பின்பு, கீலேயாத்தியனான யாவீர் எழும்பி, இஸ்ரவேலை 22 வருடங்கள் நியாயம் விசாரித்தான்.
A po nim powstał Jair Gileadczyk, który sądził Izraela przez dwadzieścia dwa lata.
4 ௪ முப்பது கழுதைக்குட்டிகளின்மேல் ஏறும் முப்பது மகன்கள் அவனுக்கு இருந்தார்கள்; அவர்களுக்கு முப்பது ஊர்களும் இருந்தது; கீலேயாத் தேசத்திலிருக்கிற அவைகளுக்கு இந்த நாள்வரைக்கும் யாவீரின் கிராமங்கள் என்கிற பெயர் இருக்கிறது.
Miał on trzydziestu synów, którzy jeździli na trzydziestu oślętach, a mieli trzydzieści miast zwanych do dziś Chawot-Jair, a [są one] w ziemi Gilead.
5 ௫ யாவீர் இறந்து, காமோன் பட்டணத்தில் அடக்கம் செய்யப்பட்டான்.
Umarł Jair i został pogrzebany w Kamon.
6 ௬ இஸ்ரவேல் மக்கள், மறுபடியும் யெகோவாவின் பார்வைக்குத் தீமையானவைகளைச் செய்து, யெகோவாவை வணங்காமல் அவரை விட்டுப்போய், பாகால்களையும், அஸ்தரோத்தையும், சீரியாவின் தெய்வங்களையும், சீதோனின் தெய்வங்களையும், மோவாபின் தெய்வங்களையும், அம்மோன் மக்களின் தெய்வங்களையும், பெலிஸ்தர்களின் தெய்வங்களையும் தொழுதுகொண்டார்கள்.
A synowie Izraela znowu czynili to, co złe w oczach PANA, służąc Baalom i Asztartom, bogom Syrii, bogom Sydonu, bogom Moabu, bogom synów Ammona i bogom filistyńskim, a opuścili PANA i nie służyli mu.
7 ௭ அப்பொழுது யெகோவா இஸ்ரவேலின்மேல் கோபமடைந்து, அவர்களைப் பெலிஸ்தர்கள் கையிலும், அம்மோனியர்களின் கையிலும் ஒப்புக்கொடுத்தார்.
Dlatego gniew PANA zapłonął przeciw Izraelowi i wydał ich w ręce Filistynów oraz w ręce synów Ammona.
8 ௮ அவர்கள் அந்த ஆண்டுமுதல் 18 வருடங்களாக யோர்தான் நதிக்கு அப்பாலே கீலேயாத்திலுள்ள எமோரியர்களின் தேசத்தில் இருக்கிற இஸ்ரவேல் மக்களையெல்லாம் நெருக்கி ஒடுக்கினார்கள்.
Oni trapili i uciskali synów Izraela od tego roku przez osiemnaście lat – wszystkich synów Izraela, którzy byli za Jordanem w ziemi Amorytów, która jest w Gileadzie.
9 ௯ அம்மோனியர்கள் யூதாவின்மேலும், பென்யமீன்மேலும், எப்பிராயீம் குடும்பத்தினர்மேலும் யுத்தம்செய்ய யோர்தான் நதியைக் கடந்துவந்தார்கள்; இஸ்ரவேலர்கள் மிகவும் நெருக்கப்பட்டார்கள்.
Synowie Ammona przeprawili się też za Jordan, aby walczyć z Judą i Beniaminem, a także z domem Efraima, i Izrael był bardzo uciskany.
10 ௧0 அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் யெகோவாவை நோக்கி முறையிட்டு: உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நாங்கள் எங்களுடைய தேவனைவிட்டு, பாகால்களைத் தொழுதுகொண்டோம் என்றார்கள்.
Wtedy synowie Izraela wołali do PANA: Zgrzeszyliśmy przeciw tobie, bo opuściliśmy naszego Boga, a służyliśmy Baalom.
11 ௧௧ யெகோவா இஸ்ரவேல் மக்களை நோக்கி: எகிப்தியர்களும், எமோரியர்களும், அம்மோனியர்களும், பெலிஸ்தர்களும்,
I PAN powiedział do synów Izraela: Czy [nie wybawiłem] was od Egipcjan, od Amorytów, od synów Ammona i od Filistynów?
12 ௧௨ சீதோனியர்களும், அமலேக்கியர்களும், மாகோனியர்களும், உங்களை ஒடுக்கும் நேரங்களில், நீங்கள் என்னை நோக்கி முறையிட்டபோது, நான் உங்களை அவர்களுடைய கைக்கு விலக்கி இரட்சிக்கவில்லையா?
I od Sydończyków, Amalekitów i Mahanitów, którzy was gnębili? Gdy wołaliście do mnie, czy nie wybawiłem was z ich rąk?
13 ௧௩ அப்படியிருந்தும் நீங்கள் என்னைவிட்டு, அந்நிய தெய்வங்களை ஆராதனை செய்தீர்கள்; ஆகையால் இனி உங்களை இரட்சிக்கமாட்டேன்.
Lecz wy mnie opuściliście i służyliście obcym bogom. Dlatego już was więcej nie wybawię.
14 ௧௪ நீங்கள் போய், உங்களுக்காகத் தெரிந்துகொண்ட தெய்வங்களை நோக்கி முறையிடுங்கள்; அவைகள் உங்களுடைய ஆபத்தின் காலத்தில் உங்களை இரட்சிக்கட்டும் என்றார்.
Idźcie i wołajcie do bogów, których sobie wybraliście. Niech oni was wybawią w czasie waszego ucisku.
15 ௧௫ இஸ்ரவேல் மக்கள் யெகோவாவை நோக்கி: பாவஞ்செய்தோம், தேவரீர் உம்முடைய பார்வைக்கு நலமானதை எங்களுக்குச் செய்யும்; இன்றைக்குமட்டும் எங்களை இரட்சித்தருளும் என்று சொல்லி,
Synowie Izraela odpowiedzieli PANU: Zgrzeszyliśmy. Uczyń z nami, co wydaje się dobre w twoich oczach, tylko wybaw nas, prosimy, dzisiaj.
16 ௧௬ அந்நிய தெய்வங்களைத் தங்கள் நடுவிலிருந்து விலக்கிவிட்டு, யெகோவாவுக்கு ஆராதனை செய்தார்கள்; அப்பொழுது அவர் இஸ்ரவேலின் துயரத்தைப் பார்த்து மனதுருகினார்.
Wyrzucili więc obcych bogów spośród siebie i służyli PANU, a [PAN] wzruszył się niedolą Izraela.
17 ௧௭ அம்மோனியர்கள் கூட்டங்கூடி, கீலேயாத்திலே முகாமிட்டார்கள்; இஸ்ரவேல் மக்களும் கூடிக்கொண்டு, மிஸ்பாவிலே முகாமிட்டார்கள்.
Tymczasem synowie Ammona zebrali się i rozbili obóz w Gileadzie. Także synowie Izraela zebrali się i rozbili obóz w Mispie.
18 ௧௮ அப்பொழுது கீலேயாத்தின் மக்களும் பிரபுக்களும் ஒருவரையொருவர் நோக்கி: அம்மோனியர்கள்மேல் முதலில் யுத்தம்செய்யப்போகிற மனிதன் யார்? அவனே கீலேயாத்தின் குடியிருப்புகளுக்கெல்லாம் தலைவனாக இருப்பான் என்றார்கள்.
Wtedy lud i przełożeni Gileadu mówili między sobą: Kto pierwszy podejmie walkę z synami Ammona, ten stanie na czele wszystkich mieszkańców Gileadu.