< யூதா 1 >
1 ௧ இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாக இருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசுகிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது:
这封信函来自耶稣基督的仆人、雅各的兄弟犹大,写给那些被蒙招之人,那些被父上帝所爱、由受耶稣基督保护之人。
2 ௨ உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் அன்பும் பெருகட்டும்.
愿你们感受到上帝更多的怜悯、平安和慈爱。
3 ௩ பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதுவதற்கு நான் மிகவும் கருத்துள்ளவனாக இருக்கும்போது, பரிசுத்தவான்களுக்கு ஒருமுறை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாகப் போராடவேண்டும் என்று, உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாகத் தெரிந்தது.
我的朋友们,我非常期待在信中讲述我们所分享的救赎。但现在我需要通过信函紧急告诉你们,鼓励你们大力捍卫关于上帝的真理,这些真理已经一次性且永远地全部赐给上帝的圣徒。
4 ௪ ஏனென்றால், நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்திற்குரியதாக மாற்றி, நம்முடைய ஒரே ஆண்டவராகிய தேவனையும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தி இல்லாதவர்களாகிய சிலர் இரகசியவழியாக நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த தண்டனைக்கு உள்ளாவார்கள் என்று ஆரம்பத்திலே எழுதியிருக்கிறது.
因为有些人悄悄混入你们中间。很久以前就有人写到他们,对他们进行谴责,因为他们是邪恶之人,歪曲上帝的恩典,将其变成不道德的放纵行为,同时否认我们的主和主耶稣基督。
5 ௫ நீங்கள் முன்னமே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறது என்னவென்றால், கர்த்தர் தமது மக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, இரட்சித்து, பின்பு விசுவாசிக்காதவர்களை அழித்தார்.
尽管你们已经知道了,但我还是要提醒你们,主虽然把他的百姓从埃及的土地上救了出来,但后来他还是毁灭了那些不信之人。
6 ௬ தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குச் சொந்தமான வசிக்கும் இடத்தை விட்டுவிட்ட சாத்தானுடைய தூதர்களையும், தேவனுடைய நாளின் நியாயத்தீர்ப்புக்காக நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகார இருளில் அடைத்து வைத்திருக்கிறார். (aïdios )
即使是那些不满足于上帝所赐地位、放弃其应有位置的天使,上帝也会将其置于永恒的黑暗锁链中,直到那伟大的审判日。 (aïdios )
7 ௭ அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தைச் சேர்ந்தவர்களும், அவைகளைச் சுற்றியுள்ள பட்டணத்து மக்களும், அவர்களைப்போல விபசாரம்பண்ணி, இயற்கைக்கு மாறான இச்சைகளிலே விழுந்து, நித்திய அக்கினியின் தண்டனையைப் பெற்று அடையாளமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். (aiōnios )
同样,所多玛、蛾摩拉和附近那些追逐不道德和变态淫乱的城镇,也是将遭受永恒之火惩罚的例子。 (aiōnios )
8 ௮ அதைப்போலவே, சொப்பனக்காரர்களாகிய இவர்களும் சரீரத்தை அசுத்தப்படுத்திக்கொண்டு, கர்த்தரின் அதிகாரத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களை அவமதிக்கிறார்கள்.
同样,这些梦想家污染了自己的身体藐视权威,毁谤神圣之人。
9 ௯ பிரதான தூதனாகிய மிகாவேல் மோசேயினுடைய சரீரத்தைக்குறித்துப் பிசாசோடு வாக்குவாதம்பண்ணினபோது, அவனை அவமதித்து குற்றப்படுத்தத் துணிவில்லாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக என்று சொன்னான்.
即使是天使长米迦勒,当他为了摩西的尸体与魔鬼争论时,也不敢用毁谤的语言定他的罪,只说:“愿主责备你!”
10 ௧0 இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளை அவமதிக்கிறார்கள்; புத்தி இல்லாத மிருகங்களைப்போல சுபாவத்தின்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள்.
但这些人嘲笑他们不理解的东西;而他们理解的东西却像不思考的动物一样本能地追随--这就是摧毁他们的原因。。
11 ௧௧ இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே வேகமாக ஓடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்.
他们现在面对可怕的灾祸,因为他们走上了该隐的道路,就像巴兰和他的妄想,他们出于利益的动机而放弃了自己。就像可拉和他的叛乱,他们毁灭了自己。
12 ௧௨ இவர்கள் உங்களுடைய அன்பின் விருந்துகளில் கறைகளாக இருந்து, பயம் இல்லாமல் விருந்து சாப்பிட்டு, தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்கிற மேய்ப்பராக இருக்கிறார்கள்; இவர்கள் காற்றுகளால் அடிபட்டு ஓடுகிற தண்ணீர் இல்லாத மேகங்களும், இலைகள் உதிர்ந்து, கனிகள் இல்லாமல் இரண்டுமுறை காய்ந்தும் வேர் இல்லாத மரங்களும்,
这些人破坏其他人的饭菜,因为他们是自私的牧羊人,没有丝毫羞耻心,只顾自己。它们是被风吹走的云,不会带来雨水。它们是光秃秃的树,不会结果——两次死亡,连根拔起。
13 ௧௩ தங்களுடைய அவமானங்களை நுரைதள்ளுகிற இரைச்சலான கடல் அலைகளும், வழிதப்பி அலைகிற நட்சத்திரங்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது. (aiōn )
它们是汹涌的海浪,溅起耻辱的泡沫。他们是虚假的星辰,注定永远陷入黑暗。 (aiōn )
14 ௧௪ ஆதாமுக்கு ஏழாம் தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லோருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் எல்லோரும் அவபக்தியாகச் செய்துவந்த எல்லா அவபக்தியான செய்கைகளினாலும்,
亚当第七世孙以诺也曾对这些人做出预言:“看!主正在与他千万圣者降临,
15 ௧௫ தமக்கு விரோதமாக அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடினமான வார்த்தைகள் எல்லாவற்றினாலும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரம் ஆயிரமான தமது பரிசுத்தவான்களோடு கர்த்தர் வருகிறார் என்று முன்னமே அறிவித்தான்.
审判众人,揭露世人所做的一切恶事,以及敌对的罪人对其说的所有可怕之语。”
16 ௧௬ இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்களுடைய இச்சைகளின்படி நடக்கிறவர்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுடைய வாய் பெருமையானவைகளைப் பேசும்; தற்புகழ்ச்சிக்காக முகஸ்துதி செய்வார்கள்.
这样的人总是在发牢骚,总是在抱怨。他们追随自己的邪恶欲望,自吹自擂,通过奉承他人获得他们想要的东西。
17 ௧௭ நீங்களோ பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலர்களால் முன்பே சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைத்துப்பாருங்கள்.
但你们呢,亲爱朋友们,请记住我们主耶稣基督的使徒从前所说的话。
18 ௧௮ கடைசிக்காலத்திலே தங்களுடைய துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரிகாசக்காரர்கள் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே.
他们曾向你们解释:在末世,必有喜欢嘲弄之人,追随自己的邪恶欲望。
19 ௧௯ இவர்கள் பிரிந்துபோகிறவர்களும், ஜென்மசுபாவம் உள்ளவர்களும், ஆவியானவர் இல்லாதவர்களுமாமே.
这些人会分裂,他们是没有灵的世俗之人。
20 ௨0 நீங்களோ பிரியமானவர்களே, உங்களுடைய மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவியானவருக்குள் ஜெபம்பண்ணி,
但我的朋友们,你们要通过对上帝的信任来成就自己。以圣灵的名义进行祈祷,
21 ௨௧ தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்குரிய நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளக் காத்திருங்கள். (aiōnios )
在上帝的爱中保护自己,等候带来永生之主耶稣基督的怜悯。 (aiōnios )
22 ௨௨ அல்லாமலும், நீங்கள் பகுத்தறிவு உள்ளவர்களாக இருந்து, சிலருக்கு இரக்கம் காட்டி, சிலரை அக்கினியில் இருந்து இழுத்துவிட்டு, பயத்தோடு இரட்சித்து,
向心里疑惑之人予以怜悯;
23 ௨௩ பாவத்தினால் கறைப்பட்டிருக்கிற அவர்களுடைய ஆடையையும்கூட வெறுத்துத்தள்ளுங்கள்.
在你力所能及的情况下,把他们从火中抢救出来。显示你的怜悯,但要非常小心,甚至要憎恨那些被罪恶人性污染的“衣服。”
24 ௨௪ உங்களை இடறிவிழாமல் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே அதிக மகிழ்ச்சியோடு உங்களை மாசு இல்லாதவர்களாக நிறுத்தவும், வல்லமை உள்ளவரும்,
现在,通过我们的主耶稣基督,愿那可以保护你们不会坠落的主,那能以无可挑剔的方式带来极大喜乐、将你们带到其荣耀之地的主,
25 ௨௫ தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும், மகத்துவமும், வல்லமையும், அதிகாரமும், இப்பொழுதும், எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென். (aiōn )
那唯一的上帝、我们的救世主, 愿他在过去、现在和未来,拥有所有荣耀、威严、能力和权威。 阿门。 (aiōn )