< யோசுவா 9 >
1 ௧ யோர்தான் நதிக்கு மேற்கு திசையிலுள்ள மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் லீபனோனுக்கு எதிரான மத்திய தரை சமுத்திரத்தின் கரையோரமெங்குமுள்ள ஏத்தியர்களும், எமோரியர்களும், கானானியர்களும், பெரிசியர்களும், ஏவியர்களும், எபூசியர்களும் அவர்களுடைய எல்லா ராஜாக்களும் அதைக் கேள்விப்பட்டபோது,
А когато чуха това всичките царе оттатък Иордан, в хълмистите места и в полетата и във всичките крайбрежия на голямото море до срещу Ливан сиреч, хетейците, аморейците, ханаанците, ферезейците, евейците и евусейците,
2 ௨ அவர்கள் ஒருமனப்பட்டு, யோசுவாவோடும் இஸ்ரவேலர்களோடும் யுத்தம்செய்ய ஒன்றாகக் கூடினார்கள்.
събраха се единодушно да се бият с Исуса и Израиля.
3 ௩ எரிகோவுக்கும் ஆயீக்கும் யோசுவா செய்ததைக் கிபியோனின் குடிகள் கேள்விப்பட்டபோது,
А жителите на Гаваон, като чуха що бе сторил Исус на Ерихон и Гай,
4 ௪ ஒரு தந்திரமான யோசனைசெய்து, தங்களைப் தேச பிரதிநிதிகளைப் போலக்காண்பித்து, பழைய சாக்குப் பைகளையும், பீறலும் பொத்தலுமான பழைய திராட்சைரசத் தோல்பைகளையும் தங்களுடைய கழுதைகள்மேல் வைத்து,
постъпиха хитро, като отидоха та се престориха на посланици и взеха стари вретища та ги туриха на ослите си и стари и раздрани и вързани мехове за вино,
5 ௫ பழுதுபார்க்கப்பட்ட பழைய காலணிகளைத் தங்களுடைய கால்களில் அணிந்து, பழைய உடைகளை உடுத்திக்கொண்டார்கள்; வழிக்கு அவர்கள் கொண்டுபோன அப்பங்களெல்லாம் உலர்ந்ததும் பூசணம் பூத்ததுமாக இருந்தது.
и стари и кърпени обуща на нозете си, и стари дрехи на сабе си, и всичкият хляб, който си доставиха за храна, беше сух и плесенясал.
6 ௬ அவர்கள் கில்காலில் இருக்கிற கூடாரத்திற்கு யோசுவாவிடம் போய், அவனையும் இஸ்ரவேல் மனிதர்களையும் நோக்கி: நாங்கள் தூரதேசத்திலிருந்து வந்தவர்கள், எங்களோடு உடன்படிக்கைசெய்யுங்கள் என்றார்கள்.
Та дойдоха при Исуса в стана в Галгал, та рекоха нему и на Израилевите мъже: От далечна страна сме дошли; сега, прочее, направете договор с нас.
7 ௭ அப்பொழுது இஸ்ரவேல் மனிதர்கள் அந்த ஏவியர்களை நோக்கி: நீங்கள் எங்கள் நடுவிலே குடியிருக்கிறவர்கள்; நாங்கள் எப்படி உங்களுடன் உடன்படிக்கை செய்யமுடியும் என்றார்கள்.
Но Израилевите мъже рекоха на евейците: Да не би вие да живеете всред нас; и как ще направим договор с вас?
8 ௮ அவர்கள் யோசுவாவை நோக்கி: நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள்; அதற்கு யோசுவா: நீங்கள் யார், எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான்.
А те казаха на Исуса: Твои слуги сме. И Исус им рече: Кои сте? и от где идете?
9 ௯ அதற்கு அவர்கள்: உம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தைக் கேள்விப்பட்டு, உமது அடியார்களாகிய நாங்கள் வெகு தூரதேசத்திலிருந்து வந்தோம்; அவருடைய புகழ்ச்சியையும், அவர் எகிப்திலே செய்த எல்லாவற்றையும்,
А те му казаха: От много далечна земя дойдоха слугите ви поради името на Иеова твоя Бог; защото чухме славата Му и всичко що извършил в Египет,
10 ௧0 அவர் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனும் அஸ்தரோத்திலிருந்த பாசானின் ராஜாவாகிய ஓகும் என்கிற யோர்தானுக்கு மறுபுறத்திலிருந்த எமோரியர்களின் இரண்டு ராஜாக்களுக்கும் செய்த எல்லாவற்றையும் கேள்விப்பட்டோம்.
и всичко що сторил на двамата аморейски царе, които бяха оттатък Иордан, на есевонския цар Сион и на васанския цар Ог, който живееше в Астарот.
11 ௧௧ ஆகவே, எங்கள் மூப்பர்களும் எங்கள் தேசத்தின் குடிகளெல்லோரும் எங்களை நோக்கி: உங்களுடைய கைகளில் வழிக்கு ஆகாரம் எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களிடம்: நாங்கள் உங்களுடைய அடியார்கள், எங்களோடு உடன்படிக்கை செய்யவேண்டும் என்று சொல்லச்சொன்னார்கள்.
За това ни говориха старейшините ни и всичките жители на нашата земя, казвайки: Вземете в ръката си храна за из пътя та идете да ги посрещнете, и речете им: Ваши слуги сме; и тъй, сега направете договор с нас.
12 ௧௨ உங்களிடம் வர நாங்கள் புறப்படுகிற அன்றே, எங்களுடைய வழிப்பிரயாணத்திற்கு இந்த அப்பத்தைச் சுடச்சுட எங்கள் வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வந்தோம்; இப்பொழுது, இதோ, உலர்ந்து பூசணம் பூத்திருக்கிறது.
Този наш хляб беше топъл, когато си го доставихме от къщите си за храна в деня, когато излязохме, за да дойдем при вас; а, ето, сега е сух и плесенясал.
13 ௧௩ நாங்கள் இந்தத் திராட்சைரசத் தோல்பைகளை நிரப்பும்போது புதிதாக இருந்தது; ஆனாலும், இதோ, கிழிந்துபோனது; எங்கள் உடைகளும், காலணிகளும் நெடுந்தூர பிரயாணத்தினாலே பழையதாகப்போனது என்றார்கள்.
Тия мехове за вино бяха нови, като ги напълнихме, а ето, съдрани са; и тия наши дрехи и обущата ни овехтяха от много дългия ни път.
14 ௧௪ அப்பொழுது இஸ்ரவேலர்கள்: யெகோவாவுடைய வார்த்தையைக் கேட்காமல் அவர்களுடைய உணவுப்பதார்த்தங்களிலே சிறிது வாங்கிக்கொண்டார்கள்.
Тогава израилтяните приеха мъжете по причина на храната им; а до Господа не се допитаха.
15 ௧௫ யோசுவா அவர்களோடு சமாதானம்செய்து, அவர்களை உயிரோடு காப்பாற்றும் உடன்படிக்கையை அவர்களோடு செய்தான்; அதற்காக சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு வாக்குக்கொடுத்தார்கள்.
Исус сключи мир с тях, и свърза договор с тях, че ще се опази живота им: и началниците на обществото им се заклеха.
16 ௧௬ அவர்களோடு உடன்படிக்கைசெய்து, மூன்று நாட்கள் சென்றபின்பு, அவர்கள் தங்களுடைய அயலகத்தார்கள் என்றும் தங்கள் நடுவில் குடியிருக்கிறவர்கள் என்றும் கேள்விப்பட்டார்கள்.
А три дена след като свързаха договор с тях чуха, че им били съседи и че живеели между тях;
17 ௧௭ இஸ்ரவேல் மக்கள் பிரயாணம்செய்யும்போது, மூன்றாம் நாளில் அவர்கள் பட்டணங்களுக்கு வந்தார்கள்; அந்தப் பட்டணங்கள் கிபியோன், கெபிரா, பேரோத், கீரியாத்யெயாரீம் என்பவைகள்.
и като пътуваха израилтяните, пристигнаха в градовете им на третия ден. А градовете им бяга Гаваон, Хефира, Вирот и Кириатиарим.
18 ௧௮ சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தில் ஆணையிட்டிருந்தபடியால், இஸ்ரவேல் மக்கள் அவர்களைத் தாக்கவில்லை; ஆனாலும் சபையார்கள் எல்லோரும் பிரபுக்களுக்கு எதிராக முறுமுறுத்தார்கள்.
Но израилтяните не ги поразиха, защото началниците на обществото бяха им се заклели в Господа Израилевия Бог. А цялото общество роптаеше против началниците.
19 ௧௯ அப்பொழுது எல்லா பிரபுக்களும், சபையார்கள் அனைவரையும் நோக்கி: நாங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தில் அவர்களுக்கு வாக்குக்கொடுத்தோம்; ஆகவே அவர்களை நாம் தொடக்கூடாது.
Всичките началници, обаче, рекоха на цялото общество: Ние им се заклехме в Господа Израилевия Бог; и тъй, сега не можем да се допрем до тях.
20 ௨0 கடுங்கோபம் நம்மேல் வராதபடிக்கு, நாம் அவர்களுக்குக் கொடுத்த வாக்கின்படி நாம் அவர்களை உயிரோடு வைத்து, அவர்களுக்கு ஒன்று செய்வோம்.
Ето какво ще сторим с тях: ще запазим живота им, за да не бъде Божият гняв на нас поради клетвата, с който им се заклехме.
21 ௨௧ பிரபுக்களாகிய நாங்கள் அவர்களுக்குச் சொன்னபடி அவர்கள் உயிரோடிருந்து, சபையார்கள் எல்லோருக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும், தண்ணீர் எடுக்கிறவர்களாகவும் இருங்கள் என்று பிரபுக்கள் அவர்களிடம் சொன்னார்கள்.
Началниците им казаха още: нека останат живи; но да бъдат дървосечци и водоносци на цялото общество, - според както началниците бяха им говорили.
22 ௨௨ பின்பு யோசுவா அவர்களை அழைத்து: நீங்கள் எங்கள் நடுவில் குடியிருக்கும்போது: நாங்கள் உங்களுக்கு வெகுதூரமாக இருக்கிறவர்கள் என்று சொல்லி, எங்களை ஏமாற்றியது ஏன்?
Тогава Исус ги свика та им говори, казвайки: Защо ни излъгахте като рекохте: Много далеч сме от вас, - когато вие сте живеели между нас?
23 ௨௩ இப்பொழுதும் நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; என் தேவனுடைய ஆலயத்திற்கு விறகு வெட்டுகிறவர்களும், தண்ணீர் எடுக்கிறவர்களுமான வேலைக்காரர்களாக இருப்பீர்கள்; இந்த வேலை உங்களைவிட்டு நீங்காது என்றான்.
Сега, прочее, проклети сте; и никога няма да липсва от вас слуги, които да бъдат и дървосечци и водоносци за дома на моя Бог.
24 ௨௪ அவர்கள் யோசுவாவுக்கு மறுமொழியாக: தேசத்தையெல்லாம் உங்களுக்கு ஒப்புக்கொடுக்கவும், தேசத்தின் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாக அழிக்கவும் உம்முடைய தேவனாகிய யெகோவா தமது ஊழியக்காரனாகிய மோசேக்குக் கட்டளையிட்டது உமது அடியார்களுக்கு நிச்சயமாகவே அறிவிக்கப்பட்டதினால், நாங்கள் எங்களுடைய ஜீவனுக்காக உங்களுக்கு மிகவும் பயந்து, இந்தக் காரியத்தைச் செய்தோம்.
А те в отговор на Исуса казаха: Понеже слугите бяха добре предизвестени за онова, което Иеова твоят Бог заповядал на слугата Си Моисей, да ви даде цялата земя, и да изтреби от пред вас всичките жители на земята, за това много се уплашихме от вас за живота си, и сторихме това нещо.
25 ௨௫ இப்போதும், இதோ, உமது கைகளில் இருக்கிறோம், உம்முடைய பார்வைக்கு நன்மையும் நியாயமுமாகத் தோன்றுகிறபடி எங்களுக்குச் செய்யும் என்றார்கள்.
Сега, ето, в ръцете ти сме; каквото ти се вижда добро и право да ни сториш, стори.
26 ௨௬ அப்படியே யோசுவா அவர்களுக்குச் செய்து, இஸ்ரவேல் மக்கள் அவர்களைக் கொன்றுபோடாதபடி, அவர்களை இவர்கள் கைகளிலிருந்து தப்புவித்தான்.
Той, прочее, стори с тях така, и ги избави от ръката на израилтяните, та не ги убиха.
27 ௨௭ இந்தநாள்வரை இருக்கிறபடியே, அந்தநாளில் அவர்களைச் சபைக்கும், யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்திலிருக்கும் அவருடைய பலிபீடத்திற்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும், தண்ணீர் எடுக்கிறவர்களாகவும் வைத்தான்.
И в същия ден Исус ги направи дървосечци и водоносци на обществото и на олтара на Господа в мястото, което Той би избрал, както са и до днес.