< யோசுவா 7 >
1 ௧ இஸ்ரவேல் மக்கள் சபிக்கப்பட்டவைகளினாலே துரோகம் செய்தார்கள்; எப்படியென்றால், யூதாகோத்திரத்தின் சேராகுடைய மகனாகிய சப்தியின் மகன் கர்மீக்குப் பிறந்த ஆகான் என்பவன், சபிக்கப்பட்டவைகளிலே சிலவற்றை எடுத்துக்கொண்டான்; ஆகையால் இஸ்ரவேல் மக்களின்மீது யெகோவாவுடைய கோபம் மூண்டது.
И прегрешиша сынове Израилевы прегрешением великим, и взяша от клятвы: взя бо Ахар сын Хармии, сына Замврии, сына Зары, от племене Иудина, от клятвы. И разгневася Господь яростию на сыны Израилевы.
2 ௨ யோசுவா எரிகோவிலிருந்து பெத்தேலுக்குக் கிழக்கில் உள்ள பெத்தாவேனுக்கு அருகில் இருக்கிற ஆயீ பட்டணத்திற்குப் போகும்படி ஆட்களை அனுப்பி: நீங்கள் போய், அந்த நாட்டை வேவுபாருங்கள் என்றான்; அந்த மனிதர்கள் போய், ஆயீயை வேவுபார்த்து,
И посла Иисус мужы от Иерихона в Гай, иже есть противу Вифавн на восток Вефиля, и рече им, глаголя: шедше соглядайте землю. И идоша мужие и соглядаша Гай.
3 ௩ யோசுவாவிடம் திரும்பிவந்து, அவனை நோக்கி: மக்கள் எல்லோரும் போகவேண்டியதில்லை; ஏறக்குறைய இரண்டாயிரம் மூவாயிரம்பேர் போய், ஆயீயை முறியடிக்கலாம்; எல்லா மக்களையும் அங்கே போகும்படி வருத்தப்படுத்தவேண்டியதில்லை; அவர்கள் கொஞ்சம்பேர்தான் என்றார்கள்.
И возвратишася ко Иисусу и рекоша ему: да не идут вси людие, но яко две тысящы или три тысящы мужей да идут и да воюют Гай: да не ведеши тамо всех людий, мало бо есть их (тамо).
4 ௪ அப்படியே மக்களில் ஏறக்குறைய 3,000 பேர் அந்த இடத்திற்குப் போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஆயீயின் மனிதர்களிடம் தோல்வியடைந்து ஓடிப்போனார்கள்.
И идоша от людий тамо, аки три тысящы мужей, и побегоша от лица мужей Гайских:
5 ௫ ஆயீயின் மனிதர்கள் அவர்களில் ஏறக்குறைய முப்பத்தாறுபேரை வெட்டிப்போட்டார்கள்; பட்டணவாசலின் வெளியிலிருந்து செபாரீம்வரைக்கும் அவர்களைத் துரத்தி, மலையடிவாரத்தில் அவர்களை வெட்டினார்கள்; மக்களின் இருதயம் கரைந்து தண்ணீராகப்போனது.
и убиша от них мужие Гайстии яко тридесять и шесть мужей, и отгнаша их от врат, дондеже сокрушиша их на стремнине: и ужасеся сердце людий, и бысть яко вода.
6 ௬ அப்பொழுது யோசுவா தன்னுடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, அவனும் இஸ்ரவேலின் மூப்பர்களும் மாலைநேரம்வரைக்கும் யெகோவாவின் பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து, தங்களுடைய தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு கிடந்தார்கள்.
И растерза Иисус ризы своя, и паде на земли на лице свое пред Господем даже до вечера, сам и старцы Израилевы: и посыпаша персть на главы своя.
7 ௭ யோசுவா: ஆ, யெகோவாவாகிய ஆண்டவரே, எங்களை அழிக்கும்படிக்கு எமோரியர்களின் கைகளில் ஒப்புக்கொடுப்பதற்காகவா இந்த மக்களை யோர்தான் நதியைக் கடக்கச்செய்தீர்? நாங்கள் யோர்தானுக்கு மறுபுறத்தில் மனதிருப்தியாக இருந்துவிட்டோமானால் நலமாக இருக்கும்.
И рече Иисус: молюся, Господи Господи, вскую преведе раб Твой люди сия чрез Иордан предати их Аморреом на погубление? От, да быхом пребыли и вселилися у Иордана:
8 ௮ ஆ, ஆண்டவரே, இஸ்ரவேலர்கள் தங்களுடைய எதிரிகளுக்கு முதுகைக் காட்டினார்கள்; இப்பொழுது நான் என்ன சொல்லுவேன்.
Господи, что реку? Понеже отврати Израиль выю свою пред враги своими:
9 ௯ கானானியர்களும் தேசத்தின் குடிகள் அனைவரும் இதைக்கேட்டு, எங்களைச் சுற்றி வளைத்துக்கொண்டு, எங்களுடைய பெயரை பூமியில் இல்லாதபடிக்கு வேரில்லாமற்போகச் செய்வார்களே; அப்பொழுது உமது மகத்தான நாமத்திற்கு என்ன செய்வீர் என்றான்.
и услышав Хананей и вси живущии на земли обыдут нас и потребят нас от земли: и что сотвориши имени Твоему великому?
10 ௧0 அப்பொழுது யெகோவா யோசுவாவை நோக்கி: எழுந்திரு, நீ இப்படி முகங்குப்புற விழுந்துகிடக்கிறது என்ன?
И рече Господь ко Иисусу: востани, вскую ты пал еси на лице твое?
11 ௧௧ இஸ்ரவேலர்கள் பாவம் செய்தார்கள்; நான் அவர்களுக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையை மீறினார்கள்; சபிக்கப்பட்டவைகளில் சிலவற்றை எடுத்துக்கொண்டதும், திருடியதும், ஏமாற்றியதும், தங்களுடைய பொருட்களுக்குள்ளே வைத்ததும் உண்டே.
Согрешиша людие и преступиша завет Мой, егоже завещах к ним, и украдше от клятвы, скрыша в сосудех своих:
12 ௧௨ ஆகவே, இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய எதிரிகளுக்கு முன்பாக நிற்க முடியாமல், தங்களுடைய எதிரிகளுக்கு முதுகைக் காட்டினார்கள்; அவர்கள் சபிக்கப்பட்டவர்களானார்கள்; நீங்கள் சபிக்கப்பட்டவைகளை உங்கள் நடுவிலிருந்து அழிக்காவிட்டால், இனி உங்களோடு இருக்கமாட்டேன்.
сего ради не могут сынове Израилевы стати пред лицем врагов своих, но хребет обратят пред враги своими, яко клятвою сташася: не приложу ксему быти с вами, аще не измете клятвы от себе самих:
13 ௧௩ எழுந்திரு, நீ மக்களைப் பரிசுத்தம்செய்யச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நாளையதினத்திற்கு உங்களைப் பரிசுத்தம் செய்துகொள்ளுங்கள்; இஸ்ரவேலர்களே, சபிக்கப்பட்டவைகள் உங்கள் நடுவே இருக்கிறது; நீங்கள் சபிக்கப்பட்டவைகளை உங்கள் நடுவிலிருந்து அகற்றாமலிருக்கும்வரை, நீங்கள் உங்களுடைய எதிரிகளுக்கு முன்பாக நிற்கமுடியாது என்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார்.
востав очисти люди и рцы: очиститеся на утро: яко сия глаголет Господь Бог Израилев: клятва есть в вас, не возможете стати пред враги вашими, дондеже измете от себе самих клятву:
14 ௧௪ காலையிலே நீங்கள் கோத்திரம் கோத்திரமாக வரவேண்டும்; அப்பொழுது யெகோவா குறிக்கிற கோத்திரம் வம்சம் வம்சமாக வரவேண்டும்; யெகோவா குறிக்கிற வம்சம் குடும்பம் குடும்பமாக வரவேண்டும்; யெகோவா குறிக்கிற குடும்பம் பேர்பேராக வரவேண்டும் என்று சொல்.
и соберитеся вси заутра по племеном (вашым), и будет племя, еже покажет Господь, да приведете по сонмом: и сонм, егоже покажет Господь, да приведете по домом: и дом, егоже покажет Господь, да приведете по мужем:
15 ௧௫ அப்பொழுது சபிக்கப்பட்டவைகளை எடுத்தவனாகக் கண்டுபிடிக்கப்படுகிறவன், யெகோவாவின் உடன்படிக்கையை மீறி, இஸ்ரவேலிலே மதிகேடான காரியத்தைச் செய்தபடியினால், அவனும் அவனுக்குண்டான அனைத்தும் அக்கினியில் சுட்டெரிக்கப்படவேண்டும் என்றார்.
и иже обличится, да сожжется огнем, сам и вся елика суть его, яко преступи завет Господень и сотвори беззаконие во Израили.
16 ௧௬ யோசுவா அதிகாலையில் எழுந்திருந்து, இஸ்ரவேலர்களைக் கோத்திரம் கோத்திரமாக வரச்செய்தான்; அப்பொழுது, யூதாவின் கோத்திரம் குறிக்கப்பட்டது.
И воста Иисус заутра, и приведе людий по племеном: и обличися племя Иудино.
17 ௧௭ அவன் யூதாவின் வம்சங்களை வரச்செய்தபோது, சேராகியர்களின் வம்சம் குறிக்கப்பட்டது; அவன் சேராகியர்களின் வம்சத்தைப் பேர்பேராக வரச்செய்தபோது, சப்தி குறிக்கப்பட்டான்.
И приведеся по сонмом, и обличися сонм Зараин: и приведеся сонм Зараин по мужем, и обличися дом Замвриин.
18 ௧௮ அவனுடைய வீட்டாரை அவன் பேர்பேராக வரச்செய்தபோது, யூதா கோத்திரத்தின் சேராகின் மகனாகிய சப்திக்குப் பிறந்த கர்மீயின் மகன் ஆகான் குறிக்கப்பட்டான்.
И приведеся дом его по мужем, и обличися Ахар сын Хармиин сына Замвриина, сына Зараня, от племене Иудина.
19 ௧௯ அப்பொழுது யோசுவா ஆகானை நோக்கி: மகனே, நீ இப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை மகிமைப்படுத்து, அவருக்கு முன்பாக அறிக்கைசெய்து, நீ செய்ததை எனக்குச் சொல்லு; அதை எனக்கு மறைக்காதே என்றான்.
И рече Иисус Ахару: сыне мой, даждь славу днесь Господу Богу Израилеву, и даждь Ему исповедание, и исповеждь ми, что сотворил еси, и не утай от мене.
20 ௨0 அப்பொழுது ஆகான் யோசுவாவுக்கு மறுமொழியாக: உண்மையாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்தேன்; இன்னின்ன விதமாகச் செய்தேன்.
И отвеща Ахар Иисусу и рече: поистинне аз согреших пред Господем Богом Израилевым: сице и сице сотворих:
21 ௨௧ கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், 200 வெள்ளிச் சேக்கலையும், 550 கிராம் நிறையுள்ள ஒரு தங்கக் கட்டியையும் நான் கண்டு, அவைகளை ஆசைப்பட்டு எடுத்துக்கொண்டேன்; இதோ, அவைகள் என் கூடாரத்தின் நடுவில் நிலத்திற்குள் புதைக்கப்பட்டிருக்கிறது, வெள்ளி அதற்கு அடியில் இருக்கிறது என்றான்.
видех в плене ризу красну и добру и двести дидрахм сребра, и сосуд един злат, пятьдесят дидрахм вес его: и помыслив на ня взях: и се, сия сокровенна суть в земли в кущи моей, и сребро сокровенно под ними.
22 ௨௨ உடனே யோசுவா ஆட்களை அனுப்பினான்; அவர்கள் கூடாரத்திற்கு ஓடினார்கள்; அவனுடைய கூடாரத்தில் அது புதைக்கப்பட்டிருந்தது, வெள்ளியும் அதின் கீழ் இருந்தது.
И посла Иисус послы, и идоша в кущу в полк: и сия бяху сокровенна в кущи его, и сребро под ними,
23 ௨௩ அவைகளைக் கூடாரத்தின் நடுவிலிருந்து எடுத்து, யோசுவாவிடமும் இஸ்ரவேல் மக்கள் எல்லோரிடமும் கொண்டுவந்து, யெகோவாவுடைய சமூகத்தில் வைத்தார்கள்.
и изнесоша я из кущи, и принесоша ко Иисусу и к старцем Израилевым, и положиша я пред Господем.
24 ௨௪ அப்பொழுது யோசுவாவும் இஸ்ரவேலர்கள் எல்லோரும் சேராகின் மகனாகிய ஆகானையும், அந்த வெள்ளியையும், சால்வையையும், பொன் கட்டியையும், அவனுடைய மகன்களையும், மகள்களையும், அவனுடைய மாடுகளையும், கழுதைகளையும், ஆடுகளையும், அவனுடைய கூடாரத்தையும், அவனுக்குண்டான அனைத்தையும் எடுத்து, ஆகோர் பள்ளத்தாக்கிற்குக் கொண்டுபோனார்கள்.
И взя Иисус Ахара сына Зараня, и сребро и ризу и сосуд златый, и возведе его в дебрь Ахор, и сыны его и дщери его, и телцы его и ослята его и вся овцы его, и кущу его и вся имения его, и весь Израиль по нем: и возведе я (со всем) во емек Ахор.
25 ௨௫ அங்கே யோசுவா: நீ எங்களைக் கலங்கச்செய்தது என்ன? இன்று யெகோவா உன்னைக் கலங்கச்செய்வார் என்றான்; அப்பொழுது இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவன்மேல் கல்லெறிந்து, அவைகளை அக்கினியில் சுட்டெரித்து, கற்களினால் மூடி;
И рече Иисус Ахару: почто потребил еси нас? Да потребит тя Господь, якоже и днесь. И побиша его камением весь Израиль, и сожгоша вся огнем, и наметаша их камением,
26 ௨௬ அவன்மேல் இந்தநாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இப்படியே யெகோவா தமது கடுங்கோபத்தைவிட்டு மாறினார்; ஆகவே அந்த இடம் இந்தநாள்வரைக்கும் ஆகோர் பள்ளத்தாக்கு என்னப்படும்.
и наметаша на нем громаду камения велику. И преста Господь от ярости гнева Своего. Сего ради прозвася имя месту тому емек Ахор даже до дне сего.