< யோசுவா 22 >

1 அப்பொழுது யோசுவா ரூபனியர்களையும் காத்தியர்களையும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தார்களையும் அழைத்து,
אָ֚ז יִקְרָ֣א יְהוֹשֻׁ֔עַ לָרֽאוּבֵנִ֖י וְלַגָּדִ֑י וְלַחֲצִ֖י מַטֵּ֥ה מְנַשֶּֽׁה׃
2 அவர்களை நோக்கி: யெகோவாவுடைய ஊழியக்காரனாகிய மோசே உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் நீங்கள் செய்தீர்கள்; நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றிலும் என் வார்த்தையின்படி செய்தீர்கள்.
וַיֹּ֣אמֶר אֲלֵיהֶ֔ם אַתֶּ֣ם שְׁמַרְתֶּ֔ם אֵ֚ת כָּל־אֲשֶׁ֣ר צִוָּ֣ה אֶתְכֶ֔ם מֹשֶׁ֖ה עֶ֣בֶד יְהוָ֑ה וַתִּשְׁמְע֣וּ בְקוֹלִ֔י לְכֹ֥ל אֲשֶׁר־צִוִּ֖יתִי אֶתְכֶֽם׃
3 நீங்கள் இதுவரைக்கும் அநேக நாட்களாக உங்களுடைய சகோதரர்களைக் கைவிடாமல், உங்களுடைய தேவனாகிய யெகோவாவுடைய கட்டளையைக் காத்துக்கொண்டு நடந்தீர்கள்.
לֹֽא־עֲזַבְתֶּ֣ם אֶת־אֲחֵיכֶ֗ם זֶ֚ה יָמִ֣ים רַבִּ֔ים עַ֖ד הַיּ֣וֹם הַזֶּ֑ה וּשְׁמַרְתֶּ֕ם אֶת־מִשְׁמֶ֕רֶת מִצְוַ֖ת יְהוָ֥ה אֱלֹהֵיכֶֽם׃
4 இப்பொழுதும் உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களுடைய சகோதரர்களுக்குச் சொல்லியிருந்தபடியே, அவர்களை ஓய்ந்திருக்கச் செய்தார்; ஆகவே யெகோவாவுடைய ஊழியக்காரனாகிய மோசே யோர்தானுக்கு மறுபுறத்திலே உங்களுக்குக் கொடுத்த உங்களுக்குச் சொந்தமான தேசத்தில் இருக்கிற உங்களுடைய கூடாரங்களுக்குத் திரும்பிப்போங்கள்.
וְעַתָּ֗ה הֵנִ֨יחַ יְהוָ֤ה אֱלֹֽהֵיכֶם֙ לַֽאֲחֵיכֶ֔ם כַּאֲשֶׁ֖ר דִּבֶּ֣ר לָהֶ֑ם וְעַתָּ֡ה פְּנוּ֩ וּלְכ֨וּ לָכֶ֜ם לְאָהֳלֵיכֶ֗ם אֶל־אֶ֙רֶץ֙ אֲחֻזַּתְכֶ֔ם אֲשֶׁ֣ר ׀ נָתַ֣ן לָכֶ֗ם מֹשֶׁה֙ עֶ֣בֶד יְהוָ֔ה בְּעֵ֖בֶר הַיַּרְדֵּֽן׃
5 ஆனாலும் நீங்கள் உங்களுடைய தேவனாகிய யெகோவாவிடம் அன்புவைத்து, அவருடைய வழிகளிலெல்லாம் நடந்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவரை உங்களுடைய முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் தொழுதுகொள்கிறதற்காக, யெகோவாவுடைய ஊழியக்காரனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த கட்டளைகளின்படியும் நியாயப்பிரமாணத்தின்படியும் செய்வதற்கு மிகவும் கவனமாக இருங்கள் என்றான்.
רַ֣ק ׀ שִׁמְר֣וּ מְאֹ֗ד לַעֲשׂ֨וֹת אֶת־הַמִּצְוָ֣ה וְאֶת־הַתּוֹרָה֮ אֲשֶׁ֣ר צִוָּ֣ה אֶתְכֶם֮ מֹשֶׁ֣ה עֶֽבֶד־יְהוָה֒ לְ֠אַהֲבָה אֶת־יְהוָ֨ה אֱלֹֽהֵיכֶ֜ם וְלָלֶ֧כֶת בְּכָל־דְּרָכָ֛יו וְלִשְׁמֹ֥ר מִצְוֹתָ֖יו וּלְדָבְקָה־ב֑וֹ וּלְעָבְד֕וֹ בְּכָל־לְבַבְכֶ֖ם וּבְכָל־נַפְשְׁכֶֽם׃
6 இவ்விதமாக யோசுவா அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்களுடைய கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.
וַֽיְבָרְכֵ֖ם יְהוֹשֻׁ֑עַ וַֽיְשַׁלְּחֵ֔ם וַיֵּלְכ֖וּ אֶל־אָהֳלֵיהֶֽם׃ ס
7 மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்கு மோசே பாசானிலே பங்கு கொடுத்தான்; அதினுடைய மற்றப் பாதிக்கு, யோசுவா யோர்தான் நதிக்கு இந்தப் புறத்திலே மேற்கே அவர்களுடைய சகோதரர்களோடு பங்கு கொடுத்தான்; யோசுவா அவர்களை அவர்களுடைய கூடாரங்களுக்கு அனுப்பிவிடுகிறபோது, அவர்களை ஆசீர்வதித்து:
וְלַחֲצִ֣י ׀ שֵׁ֣בֶט הַֽמְנַשֶּׁ֗ה נָתַ֣ן מֹשֶׁה֮ בַּבָּשָׁן֒ וּלְחֶצְי֗וֹ נָתַ֤ן יְהוֹשֻׁ֙עַ֙ עִם־אֲחֵיהֶ֔ם בְּעֵ֥בֶר הַיַּרְדֵּ֖ן יָ֑מָּה וְ֠גַם כִּ֣י שִׁלְּחָ֧ם יְהוֹשֻׁ֛עַ אֶל־אָהֳלֵיהֶ֖ם וַיְבָרֲכֵֽם׃
8 நீங்கள் மிகுந்த ஐசுவரியத்தோடும், ஏராளமான ஆடுமாடுகளோடும், பொன், வெள்ளி, வெண்கலம், இரும்போடும், அநேக ஆடைகளோடும் உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பி, உங்களுடைய எதிரிகளிடம் கொள்ளையிட்டதை உங்களுடைய சகோதரர்களோடு பங்கிட்டுக்கொள்ளுங்கள் என்றான்.
וַיֹּ֨אמֶר אֲלֵיהֶ֜ם לֵאמֹ֗ר בִּנְכָסִ֨ים רַבִּ֜ים שׁ֤וּבוּ אֶל־אָֽהֳלֵיכֶם֙ וּבְמִקְנֶ֣ה רַב־מְאֹ֔ד בְּכֶ֨סֶף וּבְזָהָ֜ב וּבִנְחֹ֧שֶׁת וּבְבַרְזֶ֛ל וּבִשְׂלָמ֖וֹת הַרְבֵּ֣ה מְאֹ֑ד חִלְק֥וּ שְׁלַל־אֹיְבֵיכֶ֖ם עִם־אֲחֵיכֶֽם׃ פ
9 அப்பொழுது ரூபனுடைய சந்ததியினர்களும் காத்தின் சந்ததியினர்களும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களும், யெகோவா மோசேயைக் கொண்டு கட்டளையிட்டபடியே, அவர்கள் கைவசப்படுத்திக்கொண்ட அவர்களுடைய சொந்த தேசமான கீலேயாத் தேசத்திற்குப் போக, கானான் தேசத்தில் உள்ள சீலோவில் இருந்த இஸ்ரவேல் மக்களைவிட்டுத் திரும்பிப்போனார்கள்.
וַיָּשֻׁ֣בוּ וַיֵּלְכ֡וּ בְּנֵי־רְאוּבֵ֨ן וּבְנֵי־גָ֜ד וַחֲצִ֣י ׀ שֵׁ֣בֶט הַֽמְנַשֶּׁ֗ה מֵאֵת֙ בְּנֵ֣י יִשְׂרָאֵ֔ל מִשִּׁלֹ֖ה אֲשֶׁ֣ר בְּאֶֽרֶץ־כְּנָ֑עַן לָלֶ֜כֶת אֶל־אֶ֣רֶץ הַגִּלְעָ֗ד אֶל־אֶ֤רֶץ אֲחֻזָּתָם֙ אֲשֶׁ֣ר נֹֽאחֲזוּ־בָ֔הּ עַל־פִּ֥י יְהוָ֖ה בְּיַד־מֹשֶֽׁה׃
10 ௧0 கானான் தேசத்தில் இருக்கிற யோர்தானின் எல்லைகளுக்கு வந்தபோது, ரூபனுடைய சந்ததியினர்களும், காத்தின் சந்ததியினர்களும், மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களும், அங்கே யோர்தான் நதியின் மேற்கு பகுதியில் பார்வைக்குப் பெரிதான ஒரு பலிபீடத்தைக் கட்டினார்கள்.
וַיָּבֹ֙אוּ֙ אֶל־גְּלִיל֣וֹת הַיַּרְדֵּ֔ן אֲשֶׁ֖ר בְּאֶ֣רֶץ כְּנָ֑עַן וַיִּבְנ֣וּ בְנֵי־רְאוּבֵ֣ן וּבְנֵי־גָ֡ד וַחֲצִ֣י שֵׁבֶט֩ הַֽמְנַשֶּׁ֨ה שָׁ֤ם מִזְבֵּ֙חַ֙ עַל־הַיַּרְדֵּ֔ן מִזְבֵּ֥חַ גָּד֖וֹל לְמַרְאֶֽה׃
11 ௧௧ ரூபனுடைய சந்ததியினர்களும் காத்தின் சந்ததியினர்களும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களும் கானான் தேசத்திற்கு எதிரே இஸ்ரவேல் மக்களுக்குச் சொந்தமான யோர்தானின் எல்லைகளில் ஒரு பலிபீடத்தைக் கட்டினார்கள் என்று இஸ்ரவேல் மக்கள் கேள்விப்பட்டார்கள்.
וַיִּשְׁמְע֥וּ בְנֵֽי־יִשְׂרָאֵ֖ל לֵאמֹ֑ר הִנֵּ֣ה בָנ֣וּ בְנֵֽי־רְאוּבֵ֣ן וּבְנֵי־גָ֡ד וַחֲצִי֩ שֵׁ֨בֶט הַֽמְנַשֶּׁ֜ה אֶת־הַמִּזְבֵּ֗חַ אֶל־מוּל֙ אֶ֣רֶץ כְּנַ֔עַן אֶל־גְּלִילוֹת֙ הַיַּרְדֵּ֔ן אֶל־עֵ֖בֶר בְּנֵ֥י יִשְׂרָאֵֽל׃
12 ௧௨ அவர்கள் அதைக் கேள்விப்பட்டபோது, இஸ்ரவேல் மக்களின் சபையாரெல்லோரும் அவர்களுக்கு எதிராக யுத்தம்செய்வதற்காக சீலோவிலே கூடி,
וַֽיִּשְׁמְע֖וּ בְּנֵ֣י יִשְׂרָאֵ֑ל וַיִּקָּ֨הֲל֜וּ כָּל־עֲדַ֤ת בְּנֵֽי־יִשְׂרָאֵל֙ שִׁלֹ֔ה לַעֲל֥וֹת עֲלֵיהֶ֖ם לַצָּבָֽא׃ פ
13 ௧௩ கீலேயாத் தேசத்தில் இருக்கிற ரூபன் கோத்திரத்தார்களிடமும், காத் கோத்திரத்தார்களிடமும், மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களிடமும், ஆசாரியனாகிய எலெயாசாருடைய மகனாகிய பினெகாசையும்,
וַיִּשְׁלְח֨וּ בְנֵֽי־יִשְׂרָאֵ֜ל אֶל־בְּנֵי־רְאוּבֵ֧ן וְאֶל־בְּנֵי־גָ֛ד וְאֶל־חֲצִ֥י שֵֽׁבֶט־מְנַשֶּׁ֖ה אֶל־אֶ֣רֶץ הַגִּלְעָ֑ד אֶת־פִּינְחָ֖ס בֶּן־אֶלְעָזָ֥ר הַכֹּהֵֽן׃
14 ௧௪ அவனோடு இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலும் ஒவ்வொரு பிதாவின் குடும்பத்திற்கு ஒவ்வொரு பிரபுவாகப் பத்துப் பிரபுக்களையும் அனுப்பினார்கள்; இஸ்ரவேலின் சேனைகளிலே ஆயிரம்பேர்களுக்குள்ளே ஒவ்வொருவனும் தன் தன் பிதாவின் குடும்பத்திற்குத் தலைவனாக இருந்தான்.
וַעֲשָׂרָ֤ה נְשִׂאִים֙ עִמּ֔וֹ נָשִׂ֨יא אֶחָ֜ד נָשִׂ֤יא אֶחָד֙ לְבֵ֣ית אָ֔ב לְכֹ֖ל מַטּ֣וֹת יִשְׂרָאֵ֑ל וְאִ֨ישׁ רֹ֧אשׁ בֵּית־אֲבוֹתָ֛ם הֵ֖מָּה לְאַלְפֵ֥י יִשְׂרָאֵֽל׃
15 ௧௫ அவர்கள் கீலேயாத் தேசத்திலே ரூபன் கோத்திரத்தார், காத் கோத்திரத்தார், மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களாகிய இவர்களிடம் வந்து:
וַיָּבֹ֜אוּ אֶל־בְּנֵי־רְאוּבֵ֧ן וְאֶל־בְּנֵי־גָ֛ד וְאֶל־חֲצִ֥י שֵֽׁבֶט־מְנַשֶּׁ֖ה אֶל־אֶ֣רֶץ הַגִּלְעָ֑ד וַיְדַבְּר֥וּ אִתָּ֖ם לֵאמֹֽר׃
16 ௧௬ நீங்கள் இந்த நாளிலே யெகோவாவைப் பின்பற்றாதபடித் திரும்பி, இந்த நாளிலே யெகோவாவுக்கு எதிராகக் கலகம் செய்யும்படியாக உங்களுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலின் தேவனுக்கு எதிராகச் செய்த இந்தத் துரோகம் என்ன?
כֹּ֣ה אָמְר֞וּ כֹּ֣ל ׀ עֲדַ֣ת יְהוָ֗ה מָֽה־הַמַּ֤עַל הַזֶּה֙ אֲשֶׁ֤ר מְעַלְתֶּם֙ בֵּאלֹהֵ֣י יִשְׂרָאֵ֔ל לָשׁ֣וּב הַיּ֔וֹם מֵאַחֲרֵ֖י יְהוָ֑ה בִּבְנֽוֹתְכֶ֤ם לָכֶם֙ מִזְבֵּ֔חַ לִמְרָדְכֶ֥ם הַיּ֖וֹם בַּיהוָֽה׃
17 ௧௭ பேயோரின் அக்கிரமம் நமக்குப் போதாதா? யெகோவாவுடைய சபையிலே வாதை உண்டாயிருந்ததே; இந்த நாள்வரைக்கும் நாம் அதிலிருந்து நீங்கிச் சுத்தமாகவில்லையே.
הַמְעַט־לָ֙נוּ֙ אֶת־עֲוֹ֣ן פְּע֔וֹר אֲשֶׁ֤ר לֹֽא־הִטַּהַ֙רְנוּ֙ מִמֶּ֔נּוּ עַ֖ד הַיּ֣וֹם הַזֶּ֑ה וַיְהִ֥י הַנֶּ֖גֶף בַּעֲדַ֥ת יְהוָֽה׃
18 ௧௮ நீங்கள் இந்த நாளில் யெகோவாவைப் பின்பற்றாதபடித் திரும்புவீர்களோ? இன்று யெகோவாவுக்கு எதிராகக் கலகம் செய்வீர்களோ? அவர் நாளைக்கு இஸ்ரவேலின் சபையின்மேல் கடுங்கோபங்கொள்வாரே.
וְאַתֶּם֙ תָּשֻׁ֣בוּ הַיּ֔וֹם מֵאַחֲרֵ֖י יְהוָ֑ה וְהָיָ֗ה אַתֶּ֞ם תִּמְרְד֤וּ הַיּוֹם֙ בַּֽיהוָ֔ה וּמָחָ֕ר אֶֽל־כָּל־עֲדַ֥ת יִשְׂרָאֵ֖ל יִקְצֹֽף׃
19 ௧௯ உங்களுடைய சொந்த தேசம் தீட்டாக இருந்ததானால், யெகோவாவுடைய ஆசரிப்புக்கூடாரம் இருக்கிற யெகோவாவுடைய சொந்தமான அக்கரையில் உள்ள தேசத்திற்கு வந்து, எங்கள் நடுவே பங்குகளைப் பெற்றுக்கொள்ளலாமே; நீங்கள் நம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய பலிபீடத்தை அல்லாமல் உங்களுக்கு வேறொரு பலிபீடத்தைக் கட்டுகிறதினாலே, யெகோவாவுக்கும் எங்களுக்கும் எதிராக பிடிவாதம் செய்யாமல் இருங்கள்.
וְאַ֨ךְ אִם־טְמֵאָ֜ה אֶ֣רֶץ אֲחֻזַּתְכֶ֗ם עִבְר֨וּ לָכֶ֜ם אֶל־אֶ֨רֶץ אֲחֻזַּ֤ת יְהוָה֙ אֲשֶׁ֤ר שָֽׁכַן־שָׁם֙ מִשְׁכַּ֣ן יְהוָ֔ה וְהֵאָחֲז֖וּ בְּתוֹכֵ֑נוּ וּבַֽיהוָ֣ה אַל־תִּמְרֹ֗דוּ וְאֹתָ֙נוּ֙ אֶל־תִּמְרֹ֔דוּ בִּבְנֹֽתְכֶ֤ם לָכֶם֙ מִזְבֵּ֔חַ מִֽבַּלְעֲדֵ֔י מִזְבַּ֖ח יְהוָ֥ה אֱלֹהֵֽינוּ׃
20 ௨0 சேராவின் மகனாகிய ஆகான் சாபத்தீடானப் பொருளைக்குறித்துத் துரோகம்செய்ததினாலே, இஸ்ரவேல் மக்களின்மேல் கடுங்கோபம் வரவில்லையா? அவன் ஒருவன்மட்டும் தன்னுடைய அக்கிரமத்தினாலே மடிந்துபோகவில்லையென்று யெகோவாவுடைய சபையார்கள் எல்லோரும் சொல்லச்சொன்னார்கள் என்றார்கள்.
הֲל֣וֹא ׀ עָכָ֣ן בֶּן־זֶ֗רַח מָ֤עַל מַ֙עַל֙ בַּחֵ֔רֶם וְעַֽל־כָּל־עֲדַ֥ת יִשְׂרָאֵ֖ל הָ֣יָה קָ֑צֶף וְהוּא֙ אִ֣ישׁ אֶחָ֔ד לֹ֥א גָוַ֖ע בַּעֲוֹנֽוֹ׃ פ
21 ௨௧ அப்பொழுது ரூபன் கோத்திரத்தார்களும், காத் கோத்திரத்தார்களும், மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களும், இஸ்ரவேலின் ஆயிரம்பேர்களின் தலைவர்களுக்கு மறுமொழியாக:
וַֽיַּעֲנוּ֙ בְּנֵי־רְאוּבֵ֣ן וּבְנֵי־גָ֔ד וַחֲצִ֖י שֵׁ֣בֶט הַֽמְנַשֶּׁ֑ה וַֽיְדַבְּר֔וּ אֶת־רָאשֵׁ֖י אַלְפֵ֥י יִשְׂרָאֵֽל׃
22 ௨௨ தேவாதி தேவனாகிய யெகோவா, தேவாதி தேவனாகிய யெகோவாவே, அதை அறிந்திருக்கிறார்; இஸ்ரவேலர்களும் அறிந்துகொள்ளுவார்கள்; அது பிடிவாதத்தினாலாவது, யெகோவாவுடைய கட்டளைக்கு எதிரான துரோகத்தினாலாவது செய்யப்பட்டதானால், இந்த நாளில் அவர் எங்களைக் காப்பாற்றாமல் இருப்பாராக.
אֵל֩ ׀ אֱלֹהִ֨ים ׀ יְהוָ֜ה אֵ֣ל ׀ אֱלֹהִ֤ים ׀ יְהוָה֙ ה֣וּא יֹדֵ֔עַ וְיִשְׂרָאֵ֖ל ה֣וּא יֵדָ֑ע אִם־בְּמֶ֤רֶד וְאִם־בְּמַ֙עַל֙ בַּֽיהוָ֔ה אַל־תּוֹשִׁיעֵ֖נוּ הַיּ֥וֹם הַזֶּֽה׃
23 ௨௩ ஒரு காரியத்தைக்குறித்து நாங்கள் எங்களுக்கு அந்த பலிபீடத்தைக் கட்டினதே அல்லாமல், யெகோவாவைப் பின்பற்றாதபடிக்கு விலகுவதற்காவது, அதின்மேல் சர்வாங்கதகனபலியையாவது போஜனபலியையாவது சமாதானபலிகளையாவது செலுத்துகிறதற்காவது அதைச் செய்ததுண்டானால், யெகோவா அதை விசாரிப்பாராக.
לִבְנ֥וֹת לָ֙נוּ֙ מִזְבֵּ֔חַ לָשׁ֖וּב מֵאַחֲרֵ֣י יְהוָ֑ה וְאִם־לְהַעֲל֨וֹת עָלָ֜יו עוֹלָ֣ה וּמִנְחָ֗ה וְאִם־לַעֲשׂ֤וֹת עָלָיו֙ זִבְחֵ֣י שְׁלָמִ֔ים יְהוָ֖ה ה֥וּא יְבַקֵּֽשׁ׃
24 ௨௪ நாளைக்கு உங்களுடைய பிள்ளைகள் எங்களுடைய பிள்ளைகளை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கும் உங்களுக்கும் என்ன?
וְאִם־לֹ֤א מִדְּאָגָה֙ מִדָּבָ֔ר עָשִׂ֥ינוּ אֶת־זֹ֖את לֵאמֹ֑ר מָחָ֗ר יֹאמְר֨וּ בְנֵיכֶ֤ם לְבָנֵ֙ינוּ֙ לֵאמֹ֔ר מַה־לָּכֶ֕ם וְלַֽיהוָ֖ה אֱלֹהֵ֥י יִשְׂרָאֵֽל׃
25 ௨௫ ரூபனுடைய மக்கள் காத்தின் மக்களாகிய உங்களுக்கும் எங்களுக்கும் நடுவே யெகோவா யோர்தான் நதியை எல்லையாக வைத்தார்; யெகோவாவிடம் உங்களுக்குப் பங்கு இல்லை என்று சொல்லி, எங்கள் பிள்ளைகளைக் யெகோவா வுக்குப் பயப்படாமலிருக்கச் செய்வார்கள் என்கிற பயத்தினாலே நாங்கள் சொல்லிக்கொண்டது என்னவென்றால்:
וּגְב֣וּל נָֽתַן־יְ֠הוָה בֵּינֵ֨נוּ וּבֵינֵיכֶ֜ם בְּנֵי־רְאוּבֵ֤ן וּבְנֵי־גָד֙ אֶת־הַיַּרְדֵּ֔ן אֵין־לָכֶ֥ם חֵ֖לֶק בַּֽיהוָ֑ה וְהִשְׁבִּ֤יתוּ בְנֵיכֶם֙ אֶת־בָּנֵ֔ינוּ לְבִלְתִּ֖י יְרֹ֥א אֶת־יְהוָֽה׃
26 ௨௬ சர்வாங்கதகனத்திற்கு அல்ல, பலிக்கும் அல்ல, எங்கள் சர்வாங்கதகனங்களாலும், பலிகளாலும், சமாதானபலிகளாலும், நாங்கள் யெகோவாவுடைய சந்நிதியில் அவருடைய ஆராதனையைச் செய்யத்தக்கவர்கள் என்று எங்களுக்கும் உங்களுக்கும், நமக்குப் பின்வரும் நம்முடைய சந்ததியார்களுக்கும் நடுவே சாட்சி உண்டாயிருக்கும்படிக்கும்,
וַנֹּ֕אמֶר נַעֲשֶׂה־נָּ֣א לָ֔נוּ לִבְנ֖וֹת אֶת־הַמִּזְבֵּ֑חַ לֹ֥א לְעוֹלָ֖ה וְלֹ֥א לְזָֽבַח׃
27 ௨௭ யெகோவாவிடம் உங்களுக்குப் பங்கு இல்லை என்று உங்களுடைய பிள்ளைகள் நாளைக்கு எங்களுடைய பிள்ளைகளிடம் சொல்லாமலிருப்பதற்காகவே, ஒரு பலிபீடத்தை நமக்காக உண்டுபண்ணுவோம் என்றோம்.
כִּי֩ עֵ֨ד ה֜וּא בֵּינֵ֣ינוּ וּבֵינֵיכֶ֗ם וּבֵ֣ין דֹּרוֹתֵינוּ֮ אַחֲרֵינוּ֒ לַעֲבֹ֞ד אֶת־עֲבֹדַ֤ת יְהוָה֙ לְפָנָ֔יו בְּעֹלוֹתֵ֥ינוּ וּבִזְבָחֵ֖ינוּ וּבִשְׁלָמֵ֑ינוּ וְלֹא־יֹאמְר֨וּ בְנֵיכֶ֤ם מָחָר֙ לְבָנֵ֔ינוּ אֵין־לָכֶ֥ם חֵ֖לֶק בַּיהוָֽה׃
28 ௨௮ நாளைக்கு எங்களோடாவது, எங்களுடைய சந்ததியார்களோடாவது அப்படிச் சொல்வார்களானால், அப்பொழுது சர்வாங்க தகனத்திற்கும் அல்ல, பலிக்கும் அல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே சாட்சிக்காக எங்கள் பிதாக்கள் உண்டுபண்ணின யெகோவாவுடைய பலிபீடத்தின் சாயலான பலிபீடத்தைப் பாருங்கள் என்று சொல்லலாம் என்றோம்.
וַנֹּ֕אמֶר וְהָיָ֗ה כִּֽי־יֹאמְר֥וּ אֵלֵ֛ינוּ וְאֶל־דֹּרֹתֵ֖ינוּ מָחָ֑ר וְאָמַ֡רְנוּ רְא֣וּ אֶת־תַּבְנִית֩ מִזְבַּ֨ח יְהוָ֜ה אֲשֶׁר־עָשׂ֣וּ אֲבוֹתֵ֗ינוּ לֹ֤א לְעוֹלָה֙ וְלֹ֣א לְזֶ֔בַח כִּי־עֵ֣ד ה֔וּא בֵּינֵ֖ינוּ וּבֵינֵיכֶֽם׃
29 ௨௯ நம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாக இருக்கிற அவருடைய பலிபீடத்தைத்தவிர, நாங்கள் சர்வாங்க தகனத்திற்கும், போஜனபலிக்கும், மற்றப் பலிக்கும் வேறொரு பலிபீடத்தைக் கட்டுகிறதினாலே, யெகோவாவுக்கு எதிராகக் கலகம்செய்வதும், இன்று யெகோவாவைப் பின்பற்றாதபடிக்கு விலகுவதும், எங்களுக்குத் தூரமாக இருப்பதாக என்றார்கள்.
חָלִילָה֩ לָּ֨נוּ מִמֶּ֜נּוּ לִמְרֹ֣ד בַּֽיהוָ֗ה וְלָשׁ֤וּב הַיּוֹם֙ מֵאַחֲרֵ֣י יְהוָ֔ה לִבְנ֣וֹת מִזְבֵּ֔חַ לְעֹלָ֖ה לְמִנְחָ֣ה וּלְזָ֑בַח מִלְּבַ֗ד מִזְבַּח֙ יְהוָ֣ה אֱלֹהֵ֔ינוּ אֲשֶׁ֖ר לִפְנֵ֥י מִשְׁכָּנֽוֹ׃ פ
30 ௩0 ரூபனுடைய கோத்திரத்தார்களும், காத்தின் கோத்திரத்தார்களும், மனாசே கோத்திரத்தார்களும் சொல்லுகிற வார்த்தைகளை ஆசாரியனாகிய பினெகாசும், அவனோடு இருந்த சபையின் பிரபுக்களும், இஸ்ரவேலுடைய ஆயிரம்பேர்களின் தலைவர்களும் கேட்டபோது, அது பார்வைக்கு நன்றாக இருந்தது.
וַיִּשְׁמַ֞ע פִּֽינְחָ֣ס הַכֹּהֵ֗ן וּנְשִׂיאֵ֨י הָעֵדָ֜ה וְרָאשֵׁ֨י אַלְפֵ֤י יִשְׂרָאֵל֙ אֲשֶׁ֣ר אִתּ֔וֹ אֶת־הַ֨דְּבָרִ֔ים אֲשֶׁ֧ר דִּבְּר֛וּ בְּנֵי־רְאוּבֵ֥ן וּבְנֵי־גָ֖ד וּבְנֵ֣י מְנַשֶּׁ֑ה וַיִּיטַ֖ב בְּעֵינֵיהֶֽם׃
31 ௩௧ அப்பொழுது ஆசாரியனான எலெயாசாரின் மகனாகிய பினெகாஸ், ரூபனுடைய கோத்திரத்தார்களையும், காத்தின் கோத்திரத்தார்களையும், மனாசே கோத்திரத்தார்களையும் நோக்கி: நீங்கள் யெகோவாவுக்கு எதிராக அப்படிப்பட்ட துரோகத்தைச் செய்யாதிருக்கிறதினாலே, யெகோவா நம்முடைய நடுவில் இருக்கிறார் என்பதை இன்று அறிந்திருக்கிறோம்; இப்பொழுது இஸ்ரவேல் மக்களைக் யெகோவாவுடைய கைக்குத் தப்புவித்தீர்கள் என்றான்.
וַיֹּ֣אמֶר פִּֽינְחָ֣ס בֶּן־אֶלְעָזָ֣ר הַכֹּהֵ֡ן אֶל־בְּנֵי־רְאוּבֵ֨ן וְאֶל־בְּנֵי־גָ֜ד וְאֶל־בְּנֵ֣י מְנַשֶּׁ֗ה הַיּ֤וֹם ׀ יָדַ֙עְנוּ֙ כִּֽי־בְתוֹכֵ֣נוּ יְהוָ֔ה אֲשֶׁ֛ר לֹֽא־מְעַלְתֶּ֥ם בַּֽיהוָ֖ה הַמַּ֣עַל הַזֶּ֑ה אָ֗ז הִצַּלְתֶּ֛ם אֶת־בְּנֵ֥י יִשְׂרָאֵ֖ל מִיַּ֥ד יְהוָֽה׃
32 ௩௨ ஆசாரியனான எலெயாசாரின் மகனாகிய பினெகாசும், பிரபுக்களும், கீலேயாத் தேசத்தில் இருக்கிற ரூபனுடைய கோத்திரத்தார்களையும், காத்தின் கோத்திரத்தார்களையும் விட்டு, கானான் தேசத்திற்கு இஸ்ரவேல் மக்களிடம் திரும்பிவந்து, அவர்களுக்கு மறுசெய்தி சொன்னார்கள்.
וַיָּ֣שָׁב פִּֽינְחָ֣ס בֶּן־אֶלְעָזָ֣ר הַכֹּהֵ֣ן ׀ וְהַנְּשִׂיאִ֡ים מֵאֵ֣ת בְּנֵֽי־רְאוּבֵן֩ וּמֵאֵ֨ת בְּנֵי־גָ֜ד מֵאֶ֧רֶץ הַגִּלְעָ֛ד אֶל־אֶ֥רֶץ כְּנַ֖עַן אֶל־בְּנֵ֣י יִשְׂרָאֵ֑ל וַיָּשִׁ֥בוּ אוֹתָ֖ם דָּבָֽר׃
33 ௩௩ அந்தச் செய்தி இஸ்ரவேல் மக்களின் பார்வைக்கு நன்றாக இருந்தது; ஆகவே ரூபனுடைய வம்சத்தார்களும் காத்தின் வம்சத்தார்களும் குடியிருக்கிற தேசத்தை அழித்துவிட, அவர்கள் மேல் யுத்தத்திற்குப் புறப்படுவோம் என்கிற பேச்சை விட்டு, இஸ்ரவேல் மக்கள் தேவனை ஸ்தோத்தரித்தார்கள்.
וַיִּיטַ֣ב הַדָּבָ֗ר בְּעֵינֵי֙ בְּנֵ֣י יִשְׂרָאֵ֔ל וַיְבָרֲכ֥וּ אֱלֹהִ֖ים בְּנֵ֣י יִשְׂרָאֵ֑ל וְלֹ֣א אָמְר֗וּ לַעֲל֤וֹת עֲלֵיהֶם֙ לַצָּבָ֔א לְשַׁחֵת֙ אֶת־הָאָ֔רֶץ אֲשֶׁ֛ר בְּנֵי־רְאוּבֵ֥ן וּבְנֵי־גָ֖ד יֹשְׁבִ֥ים בָּֽהּ׃
34 ௩௪ யெகோவா தேவன் என்பதற்கு அந்த பலிபீடம் நமக்குள்ளே சாட்சியாக இருக்கும் என்று சொல்லி, ரூபனுடைய வம்சத்தார்களும், காத்தின் வம்சத்தார்களும் அதற்கு ஏத் என்று பெயரிட்டார்கள்.
וַֽיִּקְרְא֛וּ בְּנֵי־רְאוּבֵ֥ן וּבְנֵי־גָ֖ד לַמִּזְבֵּ֑חַ כִּ֣י עֵ֥ד הוּא֙ בֵּֽינֹתֵ֔ינוּ כִּ֥י יְהוָ֖ה הָאֱלֹהִֽים׃ פ

< யோசுவா 22 >