< யோசுவா 21 >
1 ௧ அப்பொழுது லேவியர்களின் வம்சப்பிதாக்களின் தலைவர்கள்; கானான்தேசத்தில் இருக்கிற சீலோவிலே ஆசாரியனாகிய எலெயாசாரிடமும், நூனின் மகனாகிய யோசுவாவிடமும், இஸ்ரவேல் மக்களுடைய கோத்திரப் பிதாக்களில் உள்ள தலைவர்களிடமும் வந்து:
Levili boy başları, Kenan topraklarında, Şilo'da, Kâhin Elazar, Nun oğlu Yeşu ve İsrail oymaklarının boy başlarına giderek, “RAB, Musa aracılığıyla bize oturmak için kentler, hayvanlarımız için de otlaklar verilmesini buyurmuştu” dediler.
2 ௨ நாங்கள் குடியிருக்கும் பட்டணங்களையும், எங்களுடைய மிருகஜீவனுக்காக வெளிநிலங்களையும் எங்களுக்குக் கொடுக்கும்படி, யெகோவா மோசேயைக்கொண்டு கட்டளையிட்டாரே என்றார்கள்.
3 ௩ யெகோவாவுடைய கட்டளையின்படியே, இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய பங்குகளிலே லேவியர்களுக்குப் பட்டணங்களையும் அவைகளின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்.
Bunun üzerine İsrailliler RAB'bin buyruğu uyarınca kendi paylarından Levililer'e otlaklarıyla birlikte şu kentleri verdiler:
4 ௪ கோகாத்தியர்களின் வம்சங்களுக்குச் சீட்டு விழுந்தது; அந்தச் சீட்டின்படி லேவியர்களில் ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததிக்கு யூதா கோத்திரத்திலும், சிமியோன் கோத்திரத்திலும், பென்யமீன் கோத்திரத்திலும் கிடைத்த பட்டணங்கள் பதின்மூன்று.
İlk kura Kehat boylarına düştü. Levililer'den olan Kâhin Harun'un oğullarına kurayla Yahuda, Şimon ve Benyamin oymaklarından on üç kent verildi.
5 ௫ கோகாத்தின் மற்ற வம்சங்களுக்கு, எப்பிராயீம் கோத்திரத்தின் வம்சங்களுக்குள்ளும், தாண் கோத்திரத்திலும், மனாசேயின் பாதிக் கோத்திரத்திலும், சீட்டினால் கிடைத்த பட்டணங்கள் பத்து.
Geri kalan Kehatoğulları'na Efrayim, Dan ve Manaşşe oymağının yarısına ait boylardan alınan on kent kurayla verildi.
6 ௬ கெர்சோன் வம்சத்தின் மக்களுக்கு, இசக்கார் கோத்திரத்தின் வம்சங்களுக்குள்ளும், ஆசேர் கோத்திரத்திலும், நப்தலி கோத்திரத்திலும், பாசானில் இருக்கிற மனாசேயின் பாதிக் கோத்திரத்திலும், சீட்டினால் கிடைத்த பட்டணங்கள் பதின்மூன்று.
Gerşonoğulları'na kurayla İssakar, Aşer, Naftali oymaklarına ait boylardan ve Başan'da Manaşşe oymağının yarısından alınan on üç kent verildi.
7 ௭ மெராரி வம்சத்தின் மக்களுக்கு, அவர்களுடைய வம்சங்களின்படியே, ரூபன் கோத்திரத்திலும், காத் கோத்திரத்திலும், செபுலோன் கோத்திரத்திலும் கிடைத்த பட்டணங்கள் பன்னிரண்டு.
Merarioğulları'na boy sayılarına göre Ruben, Gad ve Zevulun oymaklarından alınan on iki kent verildi.
8 ௮ இந்தப் பட்டணங்களையும் அவைகளின் வெளிநிலங்களையும் இஸ்ரவேல் மக்கள், யெகோவா மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடியே, சீட்டுப்போட்டு லேவியர்களுக்குக் கொடுத்தார்கள்.
Böylece RAB'bin Musa aracılığıyla buyurduğu gibi, İsrailliler otlaklarıyla birlikte bu kentleri kurayla Levililer'e verdiler.
9 ௯ லேவியின் கோத்திரத்தில் முதலாம் சீட்டைப்பெற்ற கோகாத்தியர்களின் வம்சங்களிலே இருக்கிற ஆரோனின் சந்ததியினர்களுக்கு,
Yahuda, Şimon oymaklarından alınan ve aşağıda adları verilen kentler,
10 ௧0 யூதா கோத்திரத்திலும், சிமியோன் கோத்திரத்திலும், அவர்கள் கொடுத்தவைகளும் பெயர்பெயராகச் சொல்லப்பட்டவைகளுமான பட்டணங்களின் பெயர்களாவன:
ilk kurayı çeken Levili Kehat boylarından Harunoğulları'na ayrıldı.
11 ௧௧ யூதாவின் மலைத்தேசத்தில் ஆனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனையும் அதைச் சுற்றியுள்ள வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்.
Yahuda'nın dağlık bölgesinde, Anaklılar'ın atası Arba'nın adıyla anılan Kiryat-Arba'yla –Hevron'la– çevresindeki otlaklar onlara verildi.
12 ௧௨ பட்டணத்தின் வயல்களையும் அதினுடைய கிராமங்களையும் எப்புன்னேயின் மகனாகிய காலேபுக்குச் சொந்தமாகக் கொடுத்தார்கள்.
Kentin tarlalarıyla köyleri ise Yefunne oğlu Kalev'e mülk olarak verilmişti.
13 ௧௩ இப்படியே கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியார்களுக்கு எபிரோனையும் அதினுடைய வெளிநிலங்களையும், லிப்னாவையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
Kâhin Harun'un oğullarına kazayla adam öldürenler için sığınak kent seçilen Hevron, Livna,
14 ௧௪ யாத்தீரையும் அதினுடைய வெளிநிலங்களையும், எஸ்தெமொவாவையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
Yattir, Eştemoa,
15 ௧௫ ஓலோனையும் அதினுடைய வெளிநிலங்களையும், தெபீரையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
Holon, Devir,
16 ௧௬ ஆயீனையும் அதினுடைய வெளிநிலங்களையும், யுத்தாவையும் அதினுடைய வெளிநிலங்களையும், பெத்ஷிமேசையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; அந்த இரண்டு கோத்திரங்களில் இருக்கிற பட்டணங்கள் ஒன்பது.
Ayin, Yutta ve Beytşemeş kentleriyle bunların otlakları –iki oymaktan toplam dokuz kent– verildi.
17 ௧௭ பென்யமீன் கோத்திரத்திலே அவர்களுக்குக் கிபியோனையும் அதினுடைய வெளிநிலங்களையும் கேபாவையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
Benyamin oymağından da Givon, Geva,
18 ௧௮ ஆனதோத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும், அல்மோனையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.
Anatot, Almon ve bunların otlakları, toplam dört kent verildi.
19 ௧௯ ஆசாரியர்களான ஆரோனுடைய சந்ததியார்களின் பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களும் உட்பட பதின்மூன்று.
Böylece Harun'un soyundan gelen kâhinlere otlaklarıyla birlikte verilen kentlerin toplam sayısı on üçü buldu.
20 ௨0 லேவியர்களான கோகாத்தின் குடும்பத்தார்களில் மீதியான அவர்களுடைய மற்ற வம்சங்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்திலே அவர்களுக்குப் பங்குவீதமாக அவர்கள் கொடுத்த பட்டணங்களாவன:
Kehatoğulları'ndan geri kalan Levili ailelere gelince, kurada onlara düşen kentler Efrayim oymağından alınmıştı.
21 ௨௧ கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமான எப்பிராயீமின் மலைத்தேசத்தில் இருக்கிற சீகேமையும் அதினுடைய வெளிநிலங்களையும், கேசேரையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
Bunlar, Efrayim dağlık bölgesinde bulunan ve kazayla adam öldürenler için sığınak kent seçilen Şekem, Gezer,
22 ௨௨ கிப்சாயீமையும் அதினுடைய வெளிநிலங்களையும், பெத்தொரோனையும் அதினுடைய வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.
Kivsayim ve Beythoron olmak üzere otlaklarıyla birlikte dört kentti.
23 ௨௩ தாண் கோத்திரத்திலே எல்தெக்கேயையும் அதினுடைய வெளிநிலங்களையும், கிபெத்தோனையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
Dan oymağından Elteke, Gibbeton, Ayalon ve Gat-Rimmon olmak üzere otlaklarıyla birlikte dört kent;
24 ௨௪ ஆயலோனையும் அதினுடைய வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதினுடைய வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.
25 ௨௫ மனாசேயின் பாதிக் கோத்திரத்திலே தானாகையும் அதினுடைய வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதினுடைய வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் இரண்டு.
Manaşşe oymağının yarısından da Taanak, Gat-Rimmon ve otlakları olmak üzere iki kent alındı.
26 ௨௬ கோகாத் வம்சத்தின் மீதியான வம்சங்களுக்கு உண்டான பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களும் உட்பட பத்து.
Böylece Kehatoğulları'ndan geri kalan boylara otlaklarıyla birlikte verilen kentlerin toplam sayısı onu buldu.
27 ௨௭ லேவியர்களின் வம்சங்களிலே கெர்சோன் வம்சத்தார்களுக்கு மனாசேயின் பாதிக் கோத்திரத்தில் கொலை செய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமான பாசானிலுள்ள கோலானையும் அதினுடைய வெளிநிலங்களையும், பெயேஸ்திராவையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் இரண்டு.
Levili boylardan Gerşonoğulları'na, Manaşşe oymağının yarısına ait Başan'da kazayla adam öldürenler için sığınak kent seçilen Golan ve Beeştera, otlaklarıyla birlikte iki kent;
28 ௨௮ இசக்காரின் கோத்திரத்திலே கீசோனையும் அதினுடைய வெளிநிலங்களையும், தாபராத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
İssakar oymağından alınan Kişyon, Daverat, Yarmut ve Eyn-Gannim olmak üzere otlaklarıyla birlikte dört kent;
29 ௨௯ யர்மூத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும், என்கன்னீமையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.
30 ௩0 ஆசேரின் கோத்திரத்திலே மிஷயாலையும் அதினுடைய வெளிநிலங்களையும், அப்தோனையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
Aşer oymağından alınan Mişal, Avdon, Helkat ve Rehov olmak üzere otlaklarıyla birlikte dört kent;
31 ௩௧ எல்காத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும், ரேகோபையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.
32 ௩௨ நப்தலி கோத்திரத்திலே கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக கலிலேயாவிலுள்ள கேதேசையும் அதினுடைய வெளிநிலங்களையும், அம்மோத்தோரையும் அதினுடைய வெளிநிலங்களையும், கர்தானையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் மூன்று.
Naftali oymağından alınan ve kazayla adam öldürenler için sığınak kent seçilen Celile'deki Kedeş, Hammot-Dor, Kartan ve otlakları olmak üzere toplam üç kent.
33 ௩௩ கெர்சோனியர்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களும் உட்பட பதின்மூன்று.
Boy sayısına göre Gerşonoğulları'na otlaklarıyla birlikte verilen kentlerin toplam sayısı on üçü buldu.
34 ௩௪ மற்ற லேவியர்களாகிய மெராரி வம்சங்களுக்குச் செபுலோன் கோத்திரத்திலே யொக்னியாமையும் அதினுடைய வெளிநிலங்களையும், கர்தாவையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
Merarioğulları boylarına, geri kalan Levililer'e, Zevulun oymağından alınan Yokneam, Karta,
35 ௩௫ திம்னாவையும் அதினுடைய வெளிநிலங்களையும், நகலாலையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.
Dimna ve Nahalal olmak üzere otlaklarıyla birlikte toplam dört kent;
36 ௩௬ ரூபன் கோத்திரத்திலே பேசேரையும் அதினுடைய வெளிநிலங்களையும், யாகசாவையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
Ruben oymağından alınan Beser, Yahsa, Kedemot ve Mefaat olmak üzere otlaklarıyla birlikte dört kent;
37 ௩௭ கெதெமோத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும், மெபாகாத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.
38 ௩௮ காத் கோத்திரத்திலே கொலை செய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக, கீலேயாத்திலுள்ள ராமோத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும், மகனாயீமையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
Gad oymağından alınan ve kazayla adam öldürenler için sığınak kent seçilen Gilat'taki Ramot, Mahanayim, Heşbon ve Yazer olmak üzere otlaklarıyla birlikte toplam dört kent verildi.
39 ௩௯ எஸ்போனையும் அதினுடைய வெளிநிலங்களையும், யாசேரையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.
40 ௪0 இவைகளெல்லாம் லேவியர்களின் மற்ற வம்சங்களாகிய மெராரி வம்சத்தார்களுக்கு, அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த பட்டணங்கள்; அவர்களுடைய பங்குவீதம் பன்னிரண்டு பட்டணங்கள்.
Boy sayısına göre Merarioğulları'na, yani Levili boyların geri kalanlarına kurayla verilen kentlerin sayısı on ikiydi.
41 ௪௧ இஸ்ரவேல் மக்கள் சொந்தமாக்கியிருந்த தேசத்தின் நடுவிலே இருக்கிற லேவியர்களின் பட்டணங்களெல்லாம், அவைகளின் வெளிநிலங்களும் உட்பட நாற்பத்தெட்டு.
İsrailliler'in toprakları içinde olup otlaklarıyla birlikte Levililer'e verilen kentlerin toplamı kırk sekizi buluyordu.
42 ௪௨ இந்தப் பட்டணங்களில் ஒவ்வொன்றிற்கும் அதைச் சுற்றியுள்ள வெளிநிலங்கள் இருந்தது; எல்லாப் பட்டணங்களுக்கும் அப்படியே இருந்தது.
Bu kentlerin hepsinin çevresinde otlakları vardı. Otlaksız kent yoktu.
43 ௪௩ இந்தவிதமாகக் யெகோவா இஸ்ரவேலுக்குக் கொடுப்பேன் என்று அவர்களுடைய முற்பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தையெல்லாம் கொடுத்தார்; அவர்கள் அவைகளைச் சுதந்தரித்துக்கொண்டு, அவைகளிலே குடியிருந்தார்கள்.
Böylece RAB atalarına vermeye ant içtiği bütün ülkeyi İsrailliler'e vermiş oldu. İsrailliler de ülkeyi mülk edinip buraya yerleştiler.
44 ௪௪ யெகோவா அவர்களுடைய முற்பிதாக்களுக்கு ஆணையிட்டபடியெல்லாம் அவர்களைச் சுற்றிலும் யுத்தமில்லாமல் ஓய்ந்திருக்கச்செய்தார்; அவர்களுடைய எல்லா எதிரிகளிலும் ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கவில்லை; அவர்கள் எதிரிகளையெல்லாம் யெகோவா அவர்களுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்.
RAB atalarına ant içtiği gibi, onları her yönden rahata erdirdi. Düşmanlarından hiçbiri onların önünde tutunamadı. RAB hepsini onların eline teslim etti.
45 ௪௫ யெகோவா இஸ்ரவேல் குடும்பத்தார்களுக்குச் சொல்லியிருந்த நல்ல வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறினது.
RAB'bin İsrail halkına verdiği sözlerden hiçbiri boş çıkmadı; hepsi yerine geldi.