< யோசுவா 16 >

1 யோசேப்பின் கோத்திரத்தார்களுக்கு விழுந்த சீட்டினால் கிடைத்த பங்குவீதமாவது: எரிகோவின் அருகே இருக்கிற யோர்தானிலிருந்து, யோர்தானுக்குக் கிழக்கான நீரூற்றுக்குப் போய், எரிகோ துவங்கிப் பெத்தேலின் மலைகள்வரையுள்ள வனாந்திர வழியாகவும் சென்று,
約瑟的子孫拈鬮所得之地是從靠近耶利哥的約旦河起,以耶利哥東邊的水為界:從耶利哥上去,通過山地的曠野,到伯特利;
2 பெத்தேலிலிருந்து லூஸுக்குப் போய், அற்கியினுடைய எல்லையாகிய அதரோத்தைக் கடந்து,
又從伯特利到路斯,接連到亞基人的境界,至亞他綠;
3 மேற்கே யப்லெத்தியர்களின் எல்லைக்கும் தாழ்வான பெத்தொரோன் கேசேர் என்னும் எல்லைகள்வரை இறங்கி, மத்திய தரைக் கடல் வரைக்கும் போய் முடியும்.
又往西下到押利提人的境界,到下伯‧和崙的境界,直到基色,通到海為止。
4 இதை யோசேப்பின் கோத்திரங்களாகிய மனாசேயும் எப்பிராயீமும் சுதந்தரித்தார்கள்.
約瑟的兒子瑪拿西、以法蓮就得了他們的地業。
5 எப்பிராயீம் கோத்திரத்தார்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்கினுடைய கிழக்கு எல்லை அதரோத் அதார் துவங்கி, மேலான பெத்தொரோன்வரை போகிறது.
以法蓮子孫的境界,按着宗族所得的,記在下面:他們地業的東界是亞他綠‧亞達到上伯‧和崙;
6 மேற்கு எல்லை மிக்மேத்தாத்திற்கு வடக்காகச் சென்று, கிழக்கே தானாத்சீலோவுக்குத் திரும்பி, அதை யநோகாவுக்குக் கிழக்காகக் கடந்து,
往西通到北邊的密米他,又向東繞到他納‧示羅,又接連到雅挪哈的東邊;
7 யநோகாவிலிருந்து அதரோத்திற்கும் நகராத்திற்கும் இறங்கி, எரிகோவின் அருகே வந்து, யோர்தானுக்குச் செல்லும்.
從雅挪哈下到亞他綠,又到拿拉,達到耶利哥,通到約旦河為止;
8 தப்புவாவிலிருந்து மேற்கு எல்லை, கானா நதிக்குப் போய், மத்திய தரைக் கடலிலே முடியும்; இது எப்பிராயீம் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி உண்டான பங்கு.
從他普亞往西,到加拿河,直通到海為止。這就是以法蓮支派按着宗族所得的地業。
9 பின்னும் எப்பிராயீம் கோத்திரத்தார்களுக்குப் பிரத்தியேகமாகக் கொடுக்கப்பட்ட பட்டணங்களும் அவைகளின் கிராமங்கள் எல்லாம் மனாசே கோத்திரத்தார்களுடைய பங்கின் நடுவில் இருக்கிறது.
另外在瑪拿西人地業中得了些城邑和屬城的村莊。這都是分給以法蓮子孫的。
10 ௧0 அவர்கள் கேசேரிலே குடியிருந்த கானானியர்களைத் துரத்திவிடவில்லை; ஆகவே கானானியர்கள், இந்த நாள்வரை இருக்கிறபடி, எப்பிராயீமர்களுக்குள்ளே குடியிருந்து, கட்டாய வேலைக்காரர்களாக்கப்பட்டார்கள்.
他們沒有趕出住基色的迦南人;迦南人卻住在以法蓮人中間,成為做苦工的僕人,直到今日。

< யோசுவா 16 >