< யோசுவா 13 >
1 ௧ யோசுவா வயதுமுதிர்ந்தவனானபோது, யெகோவா அவனை நோக்கி: நீ வயதுமுதிர்ந்தவனானாய்; கைப்பற்றிக்கொள்ளவேண்டிய தேசம் இன்னும் மகா விசாலமாக இருக்கிறது.
A Isus veæ bijaše star i vremenit. I reèe mu Gospod: ti si star i vremenit, a zemlje je ostalo vrlo mnogo da se osvoji.
2 ௨ மீதியாக இருக்கிற தேசம் எவைகளென்றால், எகிப்திற்கு எதிரான சீகோர் ஆறு துவங்கிக் கானானியர்களைச் சேர்ந்ததாக என்னப்படும் வடக்கே இருக்கிற எக்ரோனின் எல்லைவரையுள்ள பெலிஸ்தர்களின் எல்லா எல்லைகளும், கெசூரிம் முழுவதும்,
Ovo je zemlja što je ostala: sve meðe Filistejske i sva Gesurska,
3 ௩ காசா, அஸ்தோத், அஸ்கலோன், காத், எக்ரோன் என்கிற பட்டணங்களில் இருக்கிற பெலிஸ்தர்களுடைய ஐந்து அதிபதிகளின் நாடும், ஆவியர்களின் நாடும்,
Od Siora, koji je pred Misirom, do meðe Akaronske na sjever; to pripada Hananejima; pet kneževina Filistejskih, Gazejska, Azotska, Askalonska, Getejska i Akaronska, i Aveji;
4 ௪ தெற்கே துவங்கி ஆப்பெக்வரை எமோரியர்கள் எல்லைவரை இருக்கிற கானானியர்களின் எல்லா தேசமும், சீதோனியர்களுக்கடுத்த மெயாரா நாடும்,
S juga sva zemlja Hananejska i Meara, što pripada Sidoncima do Afeka, do meðe Amorejske.
5 ௫ கிப்லியர்களின் நாடும், சூரியன் உதயமாகிற திசையில் எர்மோன் மலையடிவாரத்தில் இருக்கிற பாகால்காத் முதல் ஆமாத்துக்குள் நுழையும்வரையுள்ள லீபனோன் முழுவதும்,
I zemlja Givlejska i sav Livan k istoku, od Val-Gada pod gorom Ermonom pa do ulaska Ematskoga;
6 ௬ லீபனோன் துவங்கி மிஸ்ரபோத்மாயீம்வரை மலைகளில் குடியிருக்கிற அனைவருடைய நாடும், சீதோனியர்களுடைய எல்லா நாடும்தானே. நான் அவர்களை இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் துரத்துவேன்; நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, நீ இஸ்ரவேலுக்குப் பங்குகளைக் கொடுக்கச் சீட்டுகளைப்போட்டு தேசத்தைப் பங்கிடவேண்டும்.
Sve koji žive u toj gori od Livana do vode Misrefota, sve Sidonce ja æu otjerati ispred sinova Izrailjevih; samo je razdijeli ždrijebom Izrailju u našljedstvo, kao što sam ti zapovjedio.
7 ௭ ஆதலால் இந்த தேசத்தை ஒன்பது கோத்திரங்களுக்கும், மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்கும் சொந்தமாகும்படிப் பங்கிடு என்றார்.
Razdijeli dakle tu zemlju u našljedstvo meðu devet plemena i polovinu plemena Manasijina.
8 ௮ மனாசேயின் பாதிக்கோத்திரத்தார்களும் ரூபனியர்களும் காத்தியர்களும் தங்களுடைய பங்குகளை அடைந்து தீர்ந்தது; அதைக் யெகோவாவின் ஊழியக்காரனாகிய மோசே யோர்தானுக்கு மறுபுறத்தில் கிழக்கே அவர்களுக்குக் கொடுத்தான்.
Jer s drugom polovinom pleme Ruvimovo i Gadovo primiše svoj dio, koji im dade Mojsije s onu stranu Jordana k istoku, kako im dade Mojsije sluga Gospodnji,
9 ௯ அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேரும், நதியின் நடுவிலிருக்கிற பட்டணம் துவங்கி தீபோன்வரைக்கும் இருக்கிற மெதெபாவின் சமபூமி அனைத்தையும்,
Od Aroira koji je na brijegu potoka Arnona i grada nasred potoka, i svu ravnicu Medevsku do Devona,
10 ௧0 எஸ்போனிலிருந்து அம்மோனியர்களின் எல்லைவரை ஆட்சிசெய்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுக்குரிய எல்லாப் பட்டணங்களையும்,
I sve gradove Siona cara Amorejskoga, koji careva u Esevonu, do meðe sinova Amonovijeh,
11 ௧௧ கீலேயாத்தையும், கெசூரியர்கள் மாகாத்தியர்களுடைய எல்லையிலுள்ள நாட்டையும், எர்மோன் மலை முழுவதையும்,
I Galad i meðu Gesursku i Mahatsku i svu goru Ermonsku i sav Vasan do Salhe;
12 ௧௨ அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் ஆட்சிசெய்து, மோசே முறியடித்துத் துரத்தின இராட்சதர்களில் மீதியாக இருந்த பாசானின் ராஜாவாகிய ஓகுக்குச் சல்காவரையிருந்த பாசான் முழுவதையும் அவர்களுக்குக் கொடுத்தான்.
Sve carstvo Ogovo u Vasanu, koji Og carova u Astarotu i Edrajinu i bješe ostao od Rafaja; a Mojsije ih pobi i istrijebi.
13 ௧௩ இஸ்ரவேல் மக்களோ கெசூரியர்களையும் மாகாத்தியர்களையும் துரத்திவிடவில்லை, கெசூரியர்களும் மாகாத்தியர்களும் இந்தநாள்வரை இஸ்ரவேலின் நடுவில் குடியிருக்கிறார்கள்.
Ali Gesureja i Mahateja ne izagnaše sinovi Izrailjevi, nego Gesureji i Mahateji ostaše meðu Izrailjem do danas.
14 ௧௪ லேவியர்களின் கோத்திரத்திற்குமட்டும் அவன் பங்கு கொடுக்கவில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா மோசேக்குச் சொன்னபடியே, அவருடைய தகனபலிகளே அவர்களுடைய பங்கு.
Samo plemenu Levijevu ne dade našljedstva; žrtve ognjene Gospoda Boga Izrailjeva jesu našljedstvo njegovo, kao što mu je rekao.
15 ௧௫ மோசே ரூபன் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களுக்குத்தக்கதாகப் பங்கு கொடுத்தான்.
A dade Mojsije plemenu sinova Ruvimovijeh po porodicama njihovijem,
16 ௧௬ அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேரும், ஆற்றின் நடுவிலிருக்கிற பட்டணம் துவங்கி மெதெபாவரையுள்ள சமபூமி முழுவதும்,
I meðe im bjehu od Aroira koji je na brijegu potoka Arnona, i grad koji je na srijedi potoka, i sva ravan do Medeve,
17 ௧௭ சமபூமியில் இருக்கிற எஸ்போனும், அதின் எல்லாப் பட்டணங்களுமாகிய தீபோன், பாமோத்பாகால், பெத்பாகால் மெயோன்,
Esevon sa svijem gradovima svojim u ravni, Devon i Vamot-Val i Vet-Valmeon,
18 ௧௮ யாகசா, கெதெமோத், மெபாகாத்,
I Jasa i Kadimot i Mifat,
19 ௧௯ கீரியாத்தாயீம், சீப்மா, பள்ளத்தாக்கின் மலையிலுள்ள செரேத்சகார்,
I Kirijatajim i Sivma i Zaret-Sar na gori kod doline,
20 ௨0 பெத்பேயோர், அஸ்தோத்பிஸ்கா, பெத்யெசிமோத் முதலான
I Vet-Fegor i Azdot-Fazga i Vet-Jesimot,
21 ௨௧ சமபூமியிலுள்ள எல்லாப் பட்டணங்களும், எஸ்போனில் ஆட்சிசெய்த சீகோன் என்னும் எமோரியர்களுடைய ராஜாவின் ராஜ்யம் முழுவதும் அவர்கள் எல்லைக்குள்ளானது; அந்தச் சீகோனையும், தேசத்திலே குடியிருந்து சீகோனின் அதிபதியாக இருந்த ஏவி, ரேக்கேம், சூர், ஊர், ரேபா என்னும் மீதியானின் பிரபுக்களையும் மோசே வெட்டிப்போட்டான்.
I svi gradovi u ravni, i sve carstvo Siona cara Amorejskoga, koji carova u Esevonu, kojega ubi Mojsije s knezovima Madijamskim, Evijom i Rekemom i Surom i Urom i Revom, knezovima Sionovijem, koji življahu u onoj zemlji.
22 ௨௨ இஸ்ரவேல் மக்கள் வெட்டின மற்றவர்களோடும், பேயோரின் மகனாகிய பிலேயாம் என்னும் குறிசொல்லுகிறவனையும் பட்டயத்தினால் வெட்டிப்போட்டார்கள்.
I Valama sina Veorova vraèa ubiše sinovi Izrailjevi maèem s drugima pobijenijem.
23 ௨௩ அப்படியே யோர்தானும் அதற்கடுத்த பகுதியும் ரூபன் கோத்திரத்தின் எல்லையானது; இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ரூபன் கோத்திரத்தார்களுக்கு, அவர்கள் வம்சங்களின்படி வந்த பங்கு.
I bjehu meðe sinova Ruvimovijeh Jordan s meðama svojim. To je našljedstvo sinova Ruvimovijeh po porodicama njihovijem, gradovi i sela njihova.
24 ௨௪ காத் கோத்திரத்திற்கு மோசே அவர்கள் வம்சங்களுக்குத் தகுந்தபடிக் கொடுத்தது என்னவென்றால்:
I dade Mojsije plemenu Gadovu, sinovima Gadovijem po porodicama njihovijem,
25 ௨௫ யாசேரும், கீலேயாத்தின் எல்லாப் பட்டணங்களும், ரப்பாவுக்கு எதிரே இருக்கிற ஆரோவேர்வரையுள்ள அம்மோனியர்களின் பாதித் தேசமும்,
I bjehu im meðe Jazir i svi gradovi Galadski i polovina zemlje sinova Amonovijeh do Aroira koji je prema Ravi,
26 ௨௬ எஸ்போன் துவங்கி ராமாத்மிஸ்பே வரை பெத்தொனீம் வரைக்கும் இருக்கிறதும், மகனாயீம் துவங்கி தெபீரின் எல்லைவரை இருக்கிறதும்,
I od Esevona do Ramot-Mispe i Vetonima, i od Mahanaima do meðe Davirske;
27 ௨௭ எஸ்போனின் ராஜாவாகிய சீகோனுடைய ராஜ்யத்தின் மற்றப் பகுதிகளாகிய பள்ளத்தாக்கில் இருக்கிற பெத்தாராமும், பெத்நிம்ராவும், சுக்கோத்தும் சாப்போனும், யோர்தான்வரை இருக்கிறதும், கிழக்கே யோர்தானின் கரையோரமாக கின்னரேத் கடலின் கடைசிவரைக்கும் இருக்கிறதும், அவர்கள் எல்லைக்குள்ளானது.
I u dolini Vet-Aram i Vet-Nimra i Sokot i Safon; ostatak carstva Siona cara Esevonskoga, Jordan i meða njegova do kraja mora Hinerotskoga s onu stranu Jordana na istok.
28 ௨௮ இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் காத் கோத்திரத்தார்களுக்கு, அவர்களுடைய வம்சங்களின்படி வந்த பங்கு.
To je našljedstvo sinova Gadovijeh po porodicama njihovijem, gradovi i sela njihova.
29 ௨௯ மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்கும், மோசே அவர்களுடைய வம்சத்திற்குத் தகுந்தபடிக் கொடுத்தான்.
I dade Mojsije polovini plemena Manasijina, i dobi polovina plemena sinova Manasijinih po porodicama svojim;
30 ௩0 மகனாயீம் துவங்கி, பாசானின் ராஜாவாகிய ஓகின் முழு ராஜ்யமாக இருக்கிற பாசான் முழுவதும், பாசானிலுள்ள யாவீரின் எல்லா ஊர்களுமான அறுபது பட்டணங்கள் அவர்களுடைய எல்லைக்குள்ளானது.
Meða im bješe od Mahanaima, sav Vasan, sve carstvo Oga cara Vasanskoga, i sva sela Jairova, što su u Vasanu, šezdeset gradova.
31 ௩௧ பாதிக் கீலேயாத்தையும், பாசானிலே அஸ்தரோத், எத்ரேயி என்னும் ஓகு ராஜ்யத்தின் பட்டணங்களையும், மனாசேயின் மகனாகிய மாகீரின் மக்கள் பாதிப்பேருக்கு அவர்களுடைய வம்சங்களின்படியே கொடுத்தான்.
I polovina Galada, i Astarot i Edrajin, gradovi carstva Ogova u Vasanu, dopadoše sinovima Mahira sina Manasijina, polovini sinova Mahirovijeh po porodicama njihovijem.
32 ௩௨ மோசே கிழக்கே எரிகோவின் அருகே யோர்தானுக்கு அக்கரையில் இருக்கிற மோவாபின் சமவெளிகளில் பங்குகளாகக் கொடுத்தவைகள் இவைகளே.
To je što razdijeli u našljedstvo Mojsije u polju Moavskom s onu stranu Jordana prema Jerihonu na istoku.
33 ௩௩ லேவி கோத்திரத்திற்கு மோசே பங்கு கொடுக்கவில்லை, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா அவர்களுக்குச் சொல்லியிருந்தபடி, அவரே அவர்களுடைய பங்கு.
A plemenu Levijevu ne dade Mojsije našljedstva; Gospod je Bog Izrailjev njihovo našljedstvo, kao što im je rekao.