< யோசுவா 12 >
1 ௧ யோர்தான் நதிக்கு அந்தப் புறத்தில் சூரியன் உதயமாகிற திசையிலே அர்னோன் ஆறு துவங்கி எர்மோன் மலைவரைக்கும், கிழக்கே சமபூமி எல்லைகளிலெல்லாம் உள்ள ராஜாக்களை இஸ்ரவேலர்கள் முறியடித்து, அவர்களுடைய தேசங்களையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்.
Haddaba kuwanu waa boqorradii dalka, oo ay reer binu Israa'iil laayeen oo ay dalkoodii ka qaateen meel Webi Urdun ka shishaysa oo qorrax ka soo baxa ka xigta, markii laga bilaabo dooxadii Arnoon iyo tan iyo Buur Xermoon, iyo inta banka Caraabaah xagga bari ka xigta oo dhan:
2 ௨ அந்த ராஜாக்களில், எஸ்போனில் குடியிருந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோன், அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேர் துவங்கி ஆற்றின் நடுமையமும் பாதிக் கீலேயாத் உட்பட அம்மோனியர்களின் எல்லையான யாப்போக்கு ஆறுவரையுள்ள தேசத்தையும்,
oo waxay ahaayeen boqorkii reer Amor oo ahaa Siixon, oo degganaa Xeshboon, oo xukumi jiray Carooceer oo ku tiil dooxadii Arnoon darafteeda, iyo magaaladii ku tiil dooxadii dhexdeeda, iyo Gilecaad badhkeed, iyo tan iyo Webi Yabboq, kaasoo ku yiil soohdintii reer Cammoon,
3 ௩ சமவெளி துவங்கிக் கிழக்கே இருக்கிற கின்னரேத் கடல்வரைக்கும் பெத்யெசிமோத் வழியாகக் கிழக்கே இருக்கிற சமவெளியின் கடலாகிய உப்புக்கடல்வரைக்கும் இருக்கிற தேசத்தையும் தெற்கே அஸ்தோத்பிஸ்காவுக்குக் கீழாக இருக்கிற தேசத்தையும் ஆட்சிசெய்தான்.
iyo bankii Caraabaah iyo tan iyo baddii Kinnered, iyo xagga bari, iyo tan iyo baddii Caraabaah, taas oo ah Badda Cusbada leh, oo bari, ee ku taal jidkii Beytyeshimood, ee xagga koonfureed, ee ka hoosaysay dhaadhacyadii Fisgaah:
4 ௪ இராட்சதரில் மீதியான பாசானின் ராஜாவாகிய ஓகின் எல்லையையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்; அவன் அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் வாழ்ந்து,
iyo xuduudkii Coog oo ahaa boqorkii Baashaan, oo ka hadhay reer Rafaa ee Cashtarod agteeda joogay, Edrecii agteedana joogay.
5 ௫ எர்மோன் மலையையும் சல்காயிவையும், கெசூரியர்கள், மாகாத்தியர்கள் எல்லைவரைக்கும் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் எல்லையாக இருந்த பாதிக் கீலேயாத்வரைக்கும் இருக்கும் பாசான் அனைத்தையும் ஆட்சிசெய்தான்.
Kaasu wuxuu xukumi jiray Buur Xermoon, iyo Salkaah, iyo Baashaan oo dhan, iyo tan iyo soohdinta reer Geshuur iyo kan reer Macakaad iyo Gilecaad badhkeed, iyo xuduudka Siixon oo boqor u ahaa Xeshboon.
6 ௬ அவர்களைக் யெகோவாவின் ஊழியக்காரனாகிய மோசேயும் இஸ்ரவேல் மக்களும் முறியடித்தார்கள்; அந்த தேசத்தைக் யெகோவாவின் ஊழியக்காரனாகிய மோசே ரூபனியர்களுக்கும் காத்தியர்களுக்கும் மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்கும் சொந்தமாகக் கொடுத்தான்.
Addoonkii Rabbiga oo Muuse ahaa iyo reer binu Israa'iil baa laayay iyagii, oo addoonkii Rabbiga oo Muuse ahaa ayaa reer Ruubeen iyo reer Gaad, iyo reer Manaseh badhkood hanti ahaan u siiyey.
7 ௭ யோர்தானுக்கு இந்தப் புறத்திலே மேற்கே லீபனோனின் பள்ளத்தாக்கிலுள்ள பாகால்காத் துவங்கி சேயீருக்கு ஏறிப்போகிற ஆலாக்மலைவரைக்கும், மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் சமபூமியிலும் மலைகளுக்கடுத்த பகுதிகளிலும் வனாந்திரத்திலும் தெற்குத் தேசத்திலும் இருக்கிறதும்,
Oo kuwanu waa boqorradii Yashuuca iyo reer binu Israa'iil ka laayeen Webi Urdun shishadiisa xagga galbeed ka xigta, markii laga bilaaba Bacal Gaad oo ku tiil dooxadii Lubnaan iyo tan iyo Buur Xaalaaq oo kor u kacsan Seciir; oo Yashuuca wuxuu siiyey qabiilooyinkii reer binu Israa'iil, oo hanti ahaan buu ugu qaybiyey,
8 ௮ யோசுவா இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சொந்தமாகப் பங்கிட்டதுமான ஏத்தியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் என்பவர்களுடைய தேசத்தில் இருந்தவர்களும், யோசுவாவும் இஸ்ரவேல் மக்களும் முறியடித்தவர்களுமான ராஜாக்கள் யாரென்றால்:
xagga dalkii buuraha lahaa, iyo dalkii dooxooyinka ahaa, iyo bankii Caraabaah, iyo dhaadhacyadii, iyo cidladii, iyo xagga Koonfureed, iyo reer Xeed, iyo reer Amor, iyo reer Kancaan, iyo reer Feris, iyo reer Xiwi, iyo reer Yebuus.
9 ௯ எரிகோவின் ராஜா ஒன்று, பெத்தேலுக்கு அருகான ஆயீயின் ராஜா ஒன்று,
Oo waa kuwan boqorradii, boqorkii Yerixoo, iyo boqorkii Aacii tii u dhowayd Beytel,
10 ௧0 எருசலேமின் ராஜா ஒன்று, எபிரோனின் ராஜா ஒன்று,
iyo boqorkii Yeruusaalem, iyo boqorkii Xebroon,
11 ௧௧ யர்மூத்தின் ராஜா ஒன்று, லாகீசின் ராஜா ஒன்று,
iyo boqorkii Yarmuud, iyo boqorkii Laakiish,
12 ௧௨ எக்லோனின் ராஜா ஒன்று, கேசேரின் ராஜா ஒன்று,
iyo boqorkii Cegloon, iyo boqorkii Geser,
13 ௧௩ தெபீரின் ராஜா ஒன்று, கெதேரின் ராஜா ஒன்று,
iyo boqorkii Debiir, iyo boqorkii Geder,
14 ௧௪ ஓர்மாவின் ராஜா ஒன்று, ஆராதின் ராஜா ஒன்று,
iyo boqorkii Xormaah, iyo boqorkii Caraad,
15 ௧௫ லிப்னாவின் ராஜா ஒன்று, அதுல்லாமின் ராஜா ஒன்று,
iyo boqorkii Libnaah, iyo boqorkii Cadullaam,
16 ௧௬ மக்கெதாவின் ராஜா ஒன்று, பெத்தேலின் ராஜா ஒன்று,
iyo boqorkii Maqeedaah, iyo boqorkii Beytel,
17 ௧௭ தப்புவாவின் ராஜா ஒன்று, எப்பேரின் ராஜா ஒன்று,
iyo boqorkii Tafuu'ax iyo boqorkii Heefer,
18 ௧௮ ஆப்பெக்கின் ராஜா ஒன்று, லசரோனின் ராஜா ஒன்று,
iyo boqorkii Afeeq, iyo boqorkii Lashaaroon,
19 ௧௯ மாதோனின் ராஜா ஒன்று, ஆத்சோரின் ராஜா ஒன்று,
iyo boqorkii Maadoon, iyo boqorkii Xaasoor,
20 ௨0 சிம்ரோன் மேரோனின் ராஜா ஒன்று, அக்சாபின் ராஜா ஒன்று,
iyo boqorkii Shimroon Meroon, iyo boqorkii Akshaaf,
21 ௨௧ தானாகின் ராஜா ஒன்று, மெகிதோவின் ராஜா ஒன்று,
iyo boqorkii Tacanaag, iyo boqorkii Megiddoo,
22 ௨௨ கேதேசின் ராஜா ஒன்று, கர்மேலைச் சார்ந்த யொக்னியாமின் ராஜா ஒன்று,
iyo boqorkii Qedesh, iyo boqorkii Yoqnecaam oo Karmel tiil,
23 ௨௩ தோரின் கரையைச் சேர்ந்த தோரின் ராஜா ஒன்று, கில்காலைச்சேர்ந்த கோயிமின் ராஜா ஒன்று,
iyo boqorkii Door oo ku tiil meesha ugu dheer Door, iyo boqorkii quruumaha degganaa Gilgaal,
24 ௨௪ திர்சாவின் ராஜா ஒன்று; ஆக இவர்களெல்லோரும் முப்பத்தொரு ராஜாக்கள்.
iyo boqorkii Tirsaah. Oo boqorradii oo dhammuna waxay ahaayeen kow iyo soddon.