< யோசுவா 11 >
1 ௧ ஆத்சோரின் ராஜாவாகிய யாபீன் அதைக் கேள்விப்பட்டபோது, அவன் மாதோனின் ராஜாவாகிய யோபாபிடமும், சிம்ரோனின் ராஜாவிடமும், அக்சாபின் ராஜாவிடமும்,
Vừa khi Gia-bin, vua Hát-so, đã hay các sự này, bèn sai sứ giả đến cùng Giô-báp, vua Ma-đôn, đến cùng Sim-rôn, vua Aïc-sáp,
2 ௨ வடக்கே இருக்கிற மலைகளிலும் கின்னரேத்திற்குத் தெற்கே இருக்கிற நாட்டுப்புறத்திலும் சமபூமியிலும் மேற்கு எல்லையாகிய தோரிலும் இருக்கிற ராஜாக்களிடமும்,
cùng các vua ở miền bắc, hoặc ở trên núi, trong đồng, miền nam Ki-nê-rết, xứ thấp, hay là trên các nơi cao Đô-rơ về phía tây.
3 ௩ கிழக்கேயும், மேற்கேயும் இருக்கிற கானானியர்களிடமும், மலைகளில் இருக்கிற எமோரியர்கள், ஏத்தியர்கள், பெரிசியர்கள், எபூசியர்களிடமும், எர்மோன் மலையின் அடியிலே மிஸ்பா தேசத்தில் இருக்கிற ஏவியர்களிடமும் ஆள் அனுப்பினான்.
Lại sai đến cùng dân Ca-na-an ở về phía đông và về phía tây, cùng dân A-mô-rít, dân Hê-tít, dân Phê-rê-sít, dân Giê-bu-sít ở trong núi, và đến cùng dân Hê-vít ở nơi chân núi Hẹt-môn, trong xứ Mích-ba.
4 ௪ அவர்கள் கடற்கரை மணலைப்போல ஏராளமான மக்களாகிய தங்களுடைய எல்லா சேனைகளோடும், ஏராளமான குதிரைகளோடும் இரதங்களோடும் புறப்பட்டார்கள்.
Các vua này với hết thảy quân lính mình bèn kéo ra, một dân đông vô số, như cát nơi bờ biển, có ngựa và xe theo rất nhiều.
5 ௫ இந்த ராஜாக்கள் எல்லோரும் கூடி, இஸ்ரவேலர்களோடு யுத்தம்செய்ய வந்து, மேரோம் என்கிற ஏரியின் அருகில் ஏகமாக முகாமிட்டார்கள்.
Hết thảy các vua này đã hẹn nhau đến đóng trại chung gần nước Mê-rôm, đặng giao chiến cùng Y-sơ-ra-ên.
6 ௬ அப்பொழுது யெகோவா யோசுவாவை நோக்கி: அவர்களுக்குப் பயப்படாதே; நாளை இந்த நேரத்திலே நான் அவர்களையெல்லாம் இஸ்ரவேலுக்கு முன்பாக வெட்டப்பட்டவர்களாக ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களுடைய குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்து, அவர்கள் இரதங்களை அக்கினியால் சுட்டெரிப்பாய் என்றார்.
Nhưng Đức Giê-hô-va phán cùng Giô-suê rằng: Chớ sợ, vì ngày mai tại giờ này, ta sẽ phó hết thảy chúng nó bị chết trước mặt Y-sơ-ra-ên; ngươi sẽ cắt nhượng ngựa, và đốt các xe cộ chúng nó nơi lửa.
7 ௭ யோசுவாவும், அவனோடு யுத்த மக்கள் அனைவரும், திடீரென்று மேரோம் ஏரியின் அருகே இருக்கிற எதிரிகளிடம் வந்து, அவர்களைத் தாக்கினார்கள்.
Vậy, Giô-suê và hết thảy chiến sĩ người lập tức đi đến, xông vào chúng nó gần nước Mê-rôm,
8 ௮ யெகோவா அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறியடித்து, பெரிய சீதோன்வரைக்கும் மிஸ்ரபோத்மாயீம்வரைக்கும், கிழக்கே இருக்கிற மிஸ்பே பள்ளத்தாக்குவரைக்கும் துரத்தி, அவர்களில் ஒருவரும் மீதியில்லாதபடி, அவர்களை வெட்டிப்போட்டார்கள்.
và Đức Giê-hô-va phó chúng nó vào tay Y-sơ-ra-ên. Giô-suê và hết thảy chiến sĩ đánh đuổi theo chúng nó cho đến Si-đôn lớn, cho đến Mít-rê-phốt-Ma-im, và đến trũng Mích-va về phía đông, chẳng để thoát khỏi một ai hết.
9 ௯ யோசுவா யெகோவா தனக்குச் சொன்னபடி அவர்களுக்குச் செய்து, அவர்களுடைய குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்து, அவர்களுடைய இரதங்களை அக்கினியால் சுட்டெரித்தான்.
Giô-suê làm cho chúng nó y như Đức Giê-hô-va đã phán dặn người, cắt nhượng ngựa, và đốt xe cộ của chúng nó nơi lửa.
10 ௧0 அக்காலத்திலே யோசுவா திரும்பி, ஆத்சோரைப் பிடித்து, அதின் ராஜாவைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டான்; ஆத்சோர் முன்னே அந்த ராஜ்யங்களுக்கெல்லாம் தலைமையான பட்டணமாக இருந்தது.
Trong một lúc đó, khi trở về, Giô-suê lấy Hát-so, và dùng gươm giết vua nó; Hát-so xưa vốn là kinh đô của các nước này.
11 ௧௧ அதில் இருந்த உயிரினங்களையெல்லாம் பட்டயத்தினால் வெட்டி, அழித்துப்போட்டான்; சுவாசமுள்ளது ஒன்றும் மீதியானதில்லை; ஆத்சோரையோ அக்கினியால் சுட்டெரித்தான்.
Giô-suê và quân lính dùng lưỡi gươm giết hết thảy người ở trong thành, chẳng còn lại vật chi có hơi thở, và người phóng hỏa thành Hát-so.
12 ௧௨ அந்த ராஜாக்களுடைய எல்லாப் பட்டணங்களையும் அவைகளுடைய எல்லா ராஜாக்களையும் யோசுவா பிடித்து, பட்டயத்தினால் வெட்டி, யெகோவாவுடைய ஊழியக்காரனாகிய மோசே கட்டளையிட்டபடி, அவர்களை அழித்துப்போட்டான்.
Giô-suê cũng bắt các vua nầy, dùng lưỡi gươm giết đi, và chiếm các thành của họ mà diệt đi, y như Môi-se tôi tớ của Đức Giê-hô-va, đã truyền dặn.
13 ௧௩ ஆனாலும் தங்களுடைய மேட்டின்மேல் இருந்த பட்டணங்களையெல்லாம் இஸ்ரவேலர்கள் சுட்டெரித்துப்போடாமல் வைத்தார்கள்; ஆத்சோரைமாத்திரம் யோசுவா சுட்டெரித்துப்போட்டான்.
Nhưng Y-sơ-ra-ên không đốt một thành nào ở trên gò nỗng, trừ ra Hát-so, mà Giô-suê đã đốt.
14 ௧௪ அந்தப் பட்டணங்களிலுள்ள மிருகஜீவன்களையும் மற்றக் கொள்ளைப்பொருட்களையும் இஸ்ரவேல் மக்கள் தங்களுக்கென்று எடுத்துக்கொண்டார்கள்; ஆனாலும் எல்லா மனிதர்களையும் அழித்துப்போடும்வரைக்கும் அவர்களைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டார்கள்; சுவாசமுள்ள ஒன்றையும் அவர்கள் மீதியாக வைக்கவில்லை.
Dân Y-sơ-ra-ên đoạt lấy về phần mình hết hảy hóa tài và hết thảy súc vật của các thành này; nhưng dùng lưỡi gươm giết mọi loài người cho đến chừng đã diệt hết, chẳng còn để lại vật nào có hơi thở.
15 ௧௫ யெகோவா தமது ஊழியக்காரனாகிய மோசேக்கு எப்படிக் கட்டளையிட்டிருந்தாரோ, அப்படியே மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்தான்; அப்படியே யோசுவா செய்தான்; அவன், யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டதில் ஒன்றையும் செய்யாமல் விடவில்லை.
Mạng lịnh mà Đức Giê-hô-va đã truyền cho Môi-se, tôi tớ Ngài, thì Môi-se đã truyền lại cho Giô-suê, và Giô-suê làm theo phàm điều gì Đức Giê-hô-va phán dặng Môi-se, Giô-suê không bỏ sót gì hết.
16 ௧௬ இந்த விதமாக யோசுவா சேயீருக்கு ஏறிப்போகிற ஆலாக் மலைதுவங்கி லீபனோனின் பள்ளத்தாக்கில் எர்மோன் மலையடியில் இருக்கிற பாகால்காத் வரையுள்ள அந்த முழு தேசமாகிய மலைகளையும், தென்தேசம் எல்லாவற்றையும், கோசேன் தேசத்தையும் சமனான பூமியையும், நாட்டுப்புறத்தையும், இஸ்ரவேலின் மலைகளையும் அதின் சமபூமியையும் பிடித்துக்கொண்டு,
Vậy, Giô-suê chiếm lấy cả xứ này, nào núi, nào cả miền nam, nào toàn xứ Gô-sen, nào đất thấp và đồng bằng, nào núi Y-sơ-ra-ên cùng xứ thấp nó,
17 ௧௭ அவைகளின் ராஜாக்களையெல்லாம் பிடித்து, அவர்களை வெட்டிக் கொன்றுபோட்டான்.
từ phía núi trụi mọc lên phía Sê-i-rơ cho đến Ba-anh-Gát trong trũng Li-ban, tại chân núi Hẹt-môn. Người bắt hết thảy vua các miền đó, đánh và giết đi.
18 ௧௮ யோசுவா நீண்டநாட்களாக அந்த ராஜாக்கள் எல்லோரோடும் யுத்தம்செய்தான்.
Giô-suê đánh giặc cùng các vua này lâu ngày.
19 ௧௯ கிபியோனின் குடிகளாகிய ஏவியர்களைத்தவிர, ஒரு பட்டணமும் இஸ்ரவேல் மக்களோடு சமாதானம் செய்யவில்லை; மற்ற எல்லாப் பட்டணங்களையும் யுத்தம்செய்து பிடித்தார்கள்.
Chẳng có một thành nào lập hòa cùng dân Y-sơ-ra-ên, trừ ra dân Hê-vít ở tại Ga-ba-ôn. Dân Y-sơ-ra-ên nhờ giặc giã mà chiếm lấy hết thảy.
20 ௨0 யுத்தம்செய்ய இஸ்ரவேலுக்கு எதிராக வரும்படிக்கு, அவர்களுடைய இருதயம் கடினமானதும், இப்படியே அவர்கள்மேல் இரக்கம் உண்டாகாமல், யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி, அவர்களை அழித்துப்போட்டதும் யெகோவாவால் வந்த காரியமாக இருந்தது.
Vì Đức Giê-hô-va để cho lòng các vua ấy cố chấp mà chinh chiến cùng Y-sơ-ra-ên, hầu cho họ bị diệt đi, không được thương xót, y như Đức Giê-hô-va đã phán dặn Môi-se.
21 ௨௧ அக்காலத்திலே யோசுவா போய், மலைத்தேசமாகிய எபிரோனிலும் தெபீரிலும் ஆனாபிலும் யூதாவின் எல்லா மலைகளிலும் இருந்த ஏனாக்கியர்களை அவர்களுடைய பட்டணங்களோடு சேர்த்து அழித்தான்.
Trong lúc đó, Giô-suê đi trừ diệt dân A-na-kim, nào ở trong núi, ở Hếp-rôn, ở Đê-bia, ở A-náp, hay là ở trên khắp núi Giu-đa và núi Y-sơ-ra-ên; Giô-suê tận diệt chúng nó luôn với các thành của họ.
22 ௨௨ இஸ்ரவேல் மக்களின் தேசத்தில் ஏனாக்கியர்கள் ஒருவரும் மீதியாக வைக்கப்படவில்லை; காசாவிலும் காத்திலும் அஸ்தோத்திலும்மட்டும் சிலர் மீதியாக இருந்தார்கள்.
Chẳng còn người A-na-kim nào trong xứ Y-sơ-ra-ên, chỉ ở tại Ga-xa, Gát, và Aùch-đốt thì có.
23 ௨௩ அப்படியே யோசுவா, யெகோவா மோசேயிடம் சொன்னபடியெல்லாம் முழு தேசத்தையும் பிடித்து, அதை இஸ்ரவேலுக்கு, அவர்களின் கோத்திரங்களுடைய பங்குகளின்படியே, சொந்தமாகக் கொடுத்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாக இருந்தது.
Vậy, Giô-suê chiếm cả xứ, y như Đức Giê-hô-va đã phán dặn Môi-se, và ban xứ cho Y-sơ-ra-ên làm sản nghiệp, tùy sự chia phân từng chi phái. Bấy giờ, xứ được bình tịnh, không còn giặc giã.