< யோனா 2 >

1 அந்த மீனின் வயிற்றிலிருந்து, யோனா தன்னுடைய தேவனாகிய யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்து:
ヨナは魚の腹の中からその神、主に祈って、
2 என் நெருக்கத்தில் நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு பதில் கொடுத்தார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர். (Sheol h7585)
言った、「わたしは悩みのうちから主に呼ばわると、主はわたしに答えられた。わたしが陰府の腹の中から叫ぶと、あなたはわたしの声を聞かれた。 (Sheol h7585)
3 கடலின் நடுமையமாகிய ஆழத்திலே நீர் என்னைத் தள்ளிவிட்டீர்; நீரோட்டம் என்னைச் சூழ்ந்துகொண்டது; உம்முடைய வெள்ளங்களும் அலைகளும் எல்லாம் என்மேல் புரண்டது.
あなたはわたしを淵の中、海のまん中に投げ入れられた。大水はわたしをめぐり、あなたの波と大波は皆、わたしの上を越えて行った。
4 நான் உமது கண்களுக்கு எதிரே இல்லாதபடிக்குத் தள்ளப்பட்டேன்; ஆனாலும் இன்னமும் உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்குவேன் என்றேன்.
わたしは言った、『わたしはあなたの前から追われてしまった、どうして再びあなたの聖なる宮を望みえようか』。
5 தண்ணீர்கள் என்னுடைய ஜீவனை எடுக்க என்னை நெருக்கினது; ஆழங்கள் என்னைச் சூழ்ந்தது; கடற்பாசி என் தலையைச் சுற்றிக்கொண்டது.
水がわたしをめぐって魂にまでおよび、淵はわたしを取り囲み、海草は山の根元でわたしの頭にまといついた。
6 மலைகளின் அடிவாரங்கள்வரைக்கும் இறங்கினேன்; பூமியின் தாழ்ப்பாள்கள் என்றென்றைக்கும் என்னை அடைக்கிறதாக இருந்தது; ஆனாலும் என் தேவனாகிய யெகோவாவே, நீர் என் உயிரை அழிவிலிருந்து காப்பாற்றினீர்.
わたしは地に下り、地の貫の木はいつもわたしの上にあった。しかしわが神、主よ、あなたはわが命を穴から救いあげられた。
7 என்னுடைய ஆத்துமா எனக்குள் சோர்ந்துபோகும்போது யெகோவாவை நினைத்தேன்; அப்பொழுது என் விண்ணப்பம் உமது பரிசுத்த ஆலயத்திலே உம்மிடத்தில் வந்து சேர்ந்தது.
わが魂がわたしのうちに弱っているとき、わたしは主をおぼえ、わたしの祈はあなたに至り、あなたの聖なる宮に達した。
8 பொய்யான விக்கிரக தெய்வங்களைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் புறக்கணிக்கிறார்கள்.
むなしい偶像に心を寄せる者は、そのまことの忠節を捨てる。
9 நானோ, துதியின் சத்தத்தோடு உமக்குப் பலியிடுவேன்; நான் செய்த பொருத்தனையைச் செலுத்துவேன்; இரட்சிப்பு யெகோவாவுடையது என்றான்.
しかしわたしは感謝の声をもって、あなたに犠牲をささげ、わたしの誓いをはたす。救は主にある」。
10 ௧0 யெகோவா மீனுக்குக் கட்டளையிட்டார், அது யோனாவைக் கரையிலே கக்கிப்போட்டது.
主は魚にお命じになったので、魚はヨナを陸に吐き出した。

< யோனா 2 >