< யோனா 1 >
1 ௧ அமித்தாயின் மகனாகிய யோனாவுக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டாகி, அவர்:
И бысть слово Господне ко Ионе сыну Амафиину, глаголя:
2 ௨ நீ எழுந்து பெரிய நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு எதிராகப் பிரசங்கம் செய்; அவர்களுடைய அக்கிரமம் என்னுடைய சந்நிதியில் வந்து எட்டினது என்றார்.
востани и иди в Ниневию град великий и проповеждь в нем, яко взыде вопль злобы его ко Мне.
3 ௩ அப்பொழுது யோனா யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போவதற்கா எழுந்து, யோப்பாவுக்குப் போய், தர்ஷீசுக்குப்போகிற ஒரு கப்பலைக்கண்டு, கட்டணம் செலுத்தி, தான் யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து விலகும்படி, அவர்களோடு தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான்.
И воста Иона, еже бежати в Фарсис от лица Господня и сниде во Июппию и обрете корабль идущь в Фарсис, и даде наем свой и вниде в онь плыти с ними в Фарсис от лица Господня.
4 ௪ யெகோவா கடலின்மேல் பெருங்காற்றை அனுப்பினார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமளவிற்கு பெரிய கொந்தளிப்பு உண்டானது.
И Господь воздвиже ветр велий на мори, и бысть буря великая в мори, и корабль бедствоваше еже сокрушитися.
5 ௫ அப்பொழுது கப்பற்காரர்கள் பயந்து, அவனவன் தன்தன் தெய்வங்களை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தைக் குறைப்பதற்காக கப்பலில் இருந்த சரக்குகளைக் கடலில் எறிந்துவிட்டார்கள்; யோனாவோ கப்பலின் கீழ்த்தளத்தில் இறங்கிப்போய்ப் படுத்துக்கொண்டு, ஆழ்ந்து தூங்கினான்.
И убояшася корабельницы, и возопиша кийждо к богу своему, и изметание сотвориша сосудов иже в корабли в море, еже облегчитися от них: Иона же сниде во дно корабля и спаше ту и храпляше.
6 ௬ அப்பொழுது மாலுமி அவனிடம் வந்து: நீ தூங்கிக் கொண்டிருக்கிறது என்ன? எழுந்திருந்து உன்னுடைய தெய்வத்தை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாமலிருக்க உன்னுடைய தெய்வம் ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான்.
И прииде к нему кормчий и рече ему что ты храплеши? Востани и моли Бога твоего, яко да спасет ны Бог, да не погибнем.
7 ௭ அவர்கள் யாரால் இந்த ஆபத்து நமக்கு வந்ததென்று நாம் தெரிந்துகொள்ள சீட்டுப்போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு சீட்டுப்போட்டார்கள்; யோனாவின் பெயருக்குச் சீட்டு விழுந்தது.
И рече кийждо ко искреннему своему приидите, вержим жребия и уразумеем, кого ради есть зло сие на нас? И метнуша жребия, и паде жребий на Иону.
8 ௮ அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: யாரால் இந்த ஆபத்து நமக்கு வந்ததென்று நீ எங்களுக்குச் சொல்லவேண்டும்; உன் தொழில் என்ன? நீ எங்கேயிருந்து வருகிறாய்? உன் தேசம் எது? நீ என்ன ஜாதியான் என்று கேட்டார்கள்.
И реша к нему возвести нам, кого ради сие зло на нас, что твое делание есть, и откуду грядеши и камо идеши, и от коея страны и от киих людий еси ты?
9 ௯ அதற்கு அவன்: நான் எபிரெயன்; கடலையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தரிடம் பயபக்தியுள்ளவன் என்றான்.
И рече к ним раб Господень есмь аз и Господа Бога небеснаго аз чту, иже сотвори море и сушу.
10 ௧0 அவன் யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து விலகி ஓடிப்போகிறவன் என்று தங்களுக்கு அறிவித்ததினால், அந்த மனிதர்கள் மிகவும் பயந்து, அவனை நோக்கி: நீ ஏன் இதைச் செய்தாய் என்றார்கள்.
И убояшася мужие страхом великим и реша к нему что сие сотворил еси? Зане разумеша мужие, яко от лица Господня бежаше, яко возвести им.
11 ௧௧ பின்னும் கடல் அதிகமாகக் கொந்தளித்துக்கொண்டிருந்ததால், அவர்கள் அவனை நோக்கி: கடல் நமக்காக அமைதியாகும்படி நாங்கள் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள்.
И реша к нему: что тебе сотворим, и утолится море от нас? Зане море восхождаше и воздвизаше паче волнение.
12 ௧௨ அதற்கு அவன்: நீங்கள் என்னை எடுத்து கடலிலே போட்டுவிடுங்கள்; அப்பொழுது கடல் அமைதியாக இருக்கும்; என்னால்தான் இந்தப் பெரிய கொந்தளிப்பு உங்கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன் என்றான்.
И рече к ним Иона: возмите мя и вверзите в море, и утолится море от вас понеже познах аз, яко мене ради волнение сие великое на вы есть.
13 ௧௩ அந்த மனிதர்கள் கரைசேருவதற்காக வேகமாகத் தண்டுவலித்தார்கள்; ஆனாலும் கடல் மிகவும் மும்முரமாகக் கொந்தளித்துக் கொண்டேயிருந்ததால் அவர்களால் முடியாமற்போனது.
И нуждахуся мужие, возвратитися к земли, и не можаху, яко море восхождаше и воздвизашеся паче на них.
14 ௧௪ அப்பொழுது அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு: ஆ யெகோவாவே, இந்த மனிதனுடைய ஜீவனுக்காக எங்களை அழித்துப்போடாதிரும்; குற்றமில்லாத இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தாதிரும்; தேவரீர் யெகோவா; உமக்குச் சித்தமாக இருக்கிறபடி செய்கிறீர் என்று சொல்லி,
И возопиша ко Господеви и реша: никакоже, Господи, да не погибнем души ради человека сего, и не даждь на нас крове праведныя: зане Ты, Господи, якоже восхотел, сотворил еси.
15 ௧௫ யோனாவை எடுத்துக் கடலிலே போட்டுவிட்டார்கள்; கடல் தன்னுடைய மும்முரத்தைவிட்டு அமைதியானது.
И взяша Иону и ввергоша его в море, и преста море от волнения своего.
16 ௧௬ அப்பொழுது அந்த மனிதர்கள் யெகோவாவுக்கு மிகவும் பயந்து, யெகோவாவுக்குப் பலியிட்டுப் பொருத்தனைகளைச் செய்தார்கள்.
И убояшася мужие страхом великим Господа и пожроша жертву Господеви и помолишася молитвами.
17 ௧௭ யோனாவை விழுங்குவதற்காக ஒரு பெரிய மீனை யெகோவா ஆயத்தப்படுத்தியிருந்தார்; அந்த மீனின் வயிற்றிலே யோனா இரவுபகல் மூன்றுநாட்கள் இருந்தான்.
И повеле Господь киту великому пожрети Иону. И бе Иона во чреве китове три дни и три нощи.