< யோவான் 9 >
1 ௧ அவர் அப்புறம் போகும்போது பிறவிக் குருடனாகிய ஒரு மனிதனைப் பார்த்தார்.
耶稣在路上行走的时候,看见一个与生俱来的盲人。
2 ௨ அப்பொழுது அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: ரபீ, இவன் குருடனாக பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள்.
门徒问他:“拉比,为什么这人生下来就看不到?是他犯了什么罪吗,还是他的父母?”
3 ௩ இயேசு மறுமொழியாக: அது இவன் செய்த பாவமும் இல்லை, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமும் இல்லை, தேவனுடைய செயல்கள் இவனிடத்தில் வெளிப்படுவதற்கு இப்படிப் பிறந்தான்.
耶稣回答:“不是他或他的父母犯了罪,而是要在他身上显示上帝的能力。
4 ௪ பகலாக இருக்கும்வரை நான் என்னை அனுப்பினவருடைய செயல்களைச் செய்யவேண்டும்; ஒருவனும் செயல்கள் செய்யக்கூடாத இரவு நேரம் வருகிறது.
在白天的时候,我们要做好自己的工作,这是派我前来此处之人让我做的。黑夜一到,就没有人能工作了。
5 ௫ நான் உலகத்தில் இருக்கும்போது உலகத்திற்கு ஒளியாக இருக்கிறேன் என்றார்.
只要我还在这世界,我就是这世界的光。”
6 ௬ இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே உமிழ்ந்து, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி:
说了这话,耶稣在地上吐了一口唾沫,将唾沫和泥混在一起,抹在瞎子的眼睛上,
7 ௭ நீ போய், சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். சீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தம். அப்படியே அவன்போய்க் கழுவி, பார்வை அடைந்தவனாக திரும்பி வந்தான்.
然后对他说:“去西罗亚池洗一洗吧。”(西罗亚意为“派你去。”)。那人走开了,在水池中洗了洗,就看见了。
8 ௮ அப்பொழுது அருகில் உள்ளவர்களும், அவன் குருடனாக இருக்கும்போது அவனைப் பார்த்திருந்தவர்களும்: இவன் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவன் அல்லவா என்றார்கள்.
他的邻居和其他知道他是个乞丐的人说:“这不是那个曾坐着讨饭的人吗?”
9 ௯ சிலர்: அவன்தான் என்றார்கள். வேறுசிலர்: அவனைப்போல இருக்கிறான் என்றார்கள். அவனோ: நான்தான் அவன் என்றான்.
有人说是他。其他人则说:“不是他,只是有点像而已。”但这个男人不断地说:“就是我!”
10 ௧0 அப்பொழுது அவர்கள் அவனைப் பார்த்து: உன் கண்கள் எப்படித் திறக்கப்பட்டது என்றார்கள்.
于是他们问他:“你怎么能看到的?”
11 ௧௧ அவன் மறுமொழியாக: இயேசு என்னப்பட்ட ஒருவர் சேறுண்டாக்கி, என் கண்களின்மேல் பூசி, நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். அப்படியே நான் போய்க் கழுவி, பார்வை அடைந்தேன் என்றான்.
他回答:“一个叫耶稣的人和了一点泥,抹在我的眼上,对我说:‘去西罗亚池洗一洗吧。’我就去洗了洗,然后就看见了。”
12 ௧௨ அப்பொழுது அவர்கள்: அவர் எங்கே என்றார்கள். அவன்: எனக்குத் தெரியாது என்றான்.
众人问:“他在哪儿呢?” 他说:“我不知道。”
13 ௧௩ குருடனாக இருந்த அவனைப் பரிசேயர்களிடத்திற்குக் கொண்டுபோனார்கள்.
他们就把这位曾经的盲人带到法利赛人那里。
14 ௧௪ இயேசு சேறுண்டாக்கி, அவன் கண்களைத் திறந்த நாள் ஓய்வுநாளாக இருந்தது.
耶稣和泥让他重见光明的那一天,正是安息日。
15 ௧௫ ஆகவே, பரிசேயர்களும் அவனைப் பார்த்து: நீ எப்படிப் பார்வை அடைந்தாய் என்று மீண்டும் கேட்டார்கள். அதற்கு அவன்: அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார், நான் கழுவினேன், பார்க்கிறேன் என்றான்.
法利赛人又问他是怎样看到的。他回答:“耶稣把泥抹在我的眼上,我洗了洗就看见了。”
16 ௧௬ அப்பொழுது பரிசேயர்களில் சிலர்: அந்த மனிதன் ஓய்வுநாளைக் கடைபிடிக்காததினால் அவன் தேவனிடத்தில் இருந்து வந்தவன் இல்லை என்றார்கள். வேறுசிலர்: பாவியாக இருக்கிற மனிதன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படிச் செய்வான் என்றார்கள். இந்தவிதமாக அவர்களுக்குள்ளே பிரிவினை ஏற்பட்டது.
有几个法利赛人说:“做这件事的人不会来自上帝,因为他不守安息日的规矩。”但也有人质疑:“一个罪人怎能显化这样的神迹呢?”众人分成了两派意见。
17 ௧௭ மீண்டும் அவர்கள் குருடனைப் பார்த்து: உன் கண்களைத் திறந்தானே, அவனைக்குறித்து நீ என்ன சொல்லுகிறாய் என்றார்கள். அதற்கு அவன்: அவர் தீர்க்கதரிசி என்றான்.
他们又对那重见光明的男人说:“既然他让你的眼睛能看到,你认为他是什么人?” 他说:“他肯定是个先知。”
18 ௧௮ அவன் குருடனாக இருந்து பார்வை அடைந்ததை யூதர்கள் நம்பாமல், பார்வை அடைந்தவனுடைய பெற்றோரை அழைத்து,
犹太人的首领们仍拒绝相信他曾经是个盲人,只是现在才能看见,于是就把他的父母叫来,
19 ௧௯ அவர்களைப் பார்த்து: உங்களுடைய மகன் குருடனாகப் பிறந்தான் என்று சொல்லுகிறீர்களே, அவன் இவன்தானா? இவனானால், இப்பொழுது இவன் எப்படிப் பார்வையடைந்தான் என்று கேட்டார்கள்.
他们问到:“这就是你们说生下来就看不见的儿子吗?现在他怎么又能看见呢?”
20 ௨0 பெற்றோர் மறுமொழியாக; இவன் எங்களுடைய மகன்தான் என்றும், குருடனாகப் பிறந்தான் என்றும் எங்களுக்குத் தெரியும்.
他的父母回答:“我们知道这就是我们的儿子,生下来就看不见。
21 ௨௧ இப்பொழுது இவன் பார்வை அடைந்தது எப்படி என்று எங்களுக்குத் தெரியாது; இவனுடைய கண்களைத் திறந்தவன் யார் என்பதும் எங்களுக்குத் தெரியாது; இவன் வாலிபனாக இருக்கிறான், இவனையே கேளுங்கள், இவனே சொல்லுவான் என்றார்கள்.
现在他为什么又能看到了,谁治好了他的眼睛,我们也不明白为什么。干嘛不问问他呢,他已经长大成人,可以表达自己的想法了。”
22 ௨௨ அவனுடைய பெற்றோர்கள் யூதர்களுக்குப் பயந்ததினால் இப்படிச் சொன்னார்கள். ஏனென்றால், இயேசுவைக் கிறிஸ்து என்று யாராவது அறிக்கை செய்தால் அவனை ஜெப ஆலயத்திற்குப் வெளியாக்க வேண்டும் என்று யூதர்கள் அதற்கு ஏற்கனவே முடிவு செய்திருந்தார்கள்.
他父母这样说,只是因为害怕犹太人首领。这些犹太人首领早就宣布,谁说耶稣就是基督,就会被赶出会堂。
23 ௨௩ அதினிமித்தம்: இவன் வாலிபனாக இருக்கிறான், இவனையே கேளுங்கள் என்று அவனுடைய பெற்றோர்கள் சொன்னார்கள்.
所以他的父母才说:“他已经长大成人,你们问他吧。”
24 ௨௪ ஆதலால் அவர்கள் குருடனாக இருந்த மனிதனை இரண்டாம்முறை அழைத்து: நீ தேவனை மகிமைப்படுத்து; இந்த மனிதன் பாவி என்று நாங்கள் அறிந்திருக்கிறோம் என்றார்கள்.
于是法利赛人再次把这位曾经的盲人叫来,对他说:“荣耀应该归于上帝!我们知道这人是个罪人。”
25 ௨௫ அவன் மறுமொழியாக: அவர் பாவியா இல்லையா என்று எனக்குத் தெரியாது; நான் குருடனாக இருந்தேன், இப்பொழுது பார்க்கிறேன்; இது ஒன்றுதான் எனக்குத் தெரியும் என்றான்.
那人回答:“他是不是罪人,我不知道。我只知道一件事:我本来看不到,现在能看见了。”
26 ௨௬ அவர்கள் மறுபடியும் அவனைப் பார்த்து: உனக்கு என்ன செய்தான், உன் கண்களை எப்படித் திறந்தான் என்றார்கள்.
他们又问:“他向你做了什么呢?怎么治好你的眼睛的?”
27 ௨௭ அவன் மறுமொழியாக: ஏற்கனவே உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் கேட்காமல் போனீர்கள்; மறுபடியும் ஏன் கேட்கிறீர்கள்? அவருக்குச் சீடராக உங்களுக்கும் விருப்பம் இருக்கிறதா என்றான்.
他回答:“我已经告诉你们了,你们没听到吗?现在怎么又想听了?你们也想成为他的门徒吗?”
28 ௨௮ அப்பொழுது அவர்கள் அவனைத் திட்டி: நீ அவனுடைய சீடன், நாங்கள் மோசேயினுடைய சீடர்.
他们开始斥责他,说:“你才是他的门徒,我们是摩西的门徒。
29 ௨௯ மோசேயுடனே தேவன் பேசினார் என்று தெரியும், இவன் எங்கே இருந்து வந்தவன் என்று எங்களுக்குத் தெரியாது என்றார்கள்.
我们知道上帝曾对摩西说过什么。但这个人,我们甚至不知道他从何而来。”
30 ௩0 அதற்கு அந்த மனிதன்: அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கிருந்து வந்தவர் என்று நீங்கள் தெரியாமல் இருப்பது ஆச்சரியமான காரியம்.
那人答道:“真不可思议,他治好了我的眼睛,你们竟然不知道他从何而来。
31 ௩௧ பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறது இல்லை என்று தெரிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தி உள்ளவனாக இருந்து அவருக்கு பிரியமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.
我们都知道,上帝从不听罪人的祈求,只听那敬畏上帝、遵行他旨意的人。
32 ௩௨ பிறவிக் குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தான் என்று உலகம் உண்டானதுமுதல் கேள்விப்பட்டது இல்லையே. (aiōn )
自古以来,从来就没听过有人生来就看不到,但有人可以让他们重见光明。 (aiōn )
33 ௩௩ அவர் தேவனிடத்தில் இருந்து வராமல் இருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான்.
这人如果不是来自上帝,就什么都做不了。”
34 ௩௪ அவர்கள் அவனுக்கு மறுமொழியாக: முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ என்று சொல்லி, அவனைப் வெளியே தள்ளிவிட்டார்கள்.
犹太人说:“你生下来就是个彻底的罪人,居然来教训我们!”就把他赶出会堂。
35 ௩௫ அவனை அவர்கள் வெளியே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைப் பார்த்தபோது: நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறாயா என்றார்.
耶稣听说他们把他赶了出来,于是就去找到这个男人,问他:“你相信人子吗?”
36 ௩௬ அதற்கு அவன்: ஆண்டவரே, அவரிடத்தில் நான் விசுவாசமாக இருக்கும்படிக்கு அவர் யார் என்றான்.
那男人说:“先生,告诉我他是谁,我会全信他。”
37 ௩௭ இயேசு அவனைப் பார்த்து: நீ அவரைப் பார்த்திருக்கிறாய், உன்னுடனே பேசுகிறவர் அவர்தான் என்றார்.
耶稣说:“你已经见过他了,他此刻正在和你说话。”
38 ௩௮ உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான்.
那人说:“主啊,我相信你。”于是向耶稣跪拜。
39 ௩௯ அப்பொழுது இயேசு: பார்க்காதவர்கள் பார்க்கும்படியாகவும், பார்க்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்றார்.
耶稣对他说:“我到这世上就是为了带来评判,让盲人重见光明,让看得到的人成为盲人。”
40 ௪0 அவரோடு இருந்த பரிசேயர்களில் சிலர் இவைகளைக் கேட்டபொழுது: நாங்களும் குருடரோ என்றார்கள்.
耶稣身边的几名法利赛人听了这话,就说:“难道我们也看不到吗?”
41 ௪௧ இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் குருடராக இருந்தால் உங்களுக்குப் பாவம் இருக்காது; நீங்கள் பார்க்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்களுடைய பாவம் நிலைநிற்கிறது என்றார்.
耶稣回答:“如果你们看不到,就没有罪了,但现在你们说自己能看见,所以你们仍然有罪。”