< யோவான் 9 >

1 அவர் அப்புறம் போகும்போது பிறவிக் குருடனாகிய ஒரு மனிதனைப் பார்த்தார்.
la Yeecu cukentiri, con to ni kange ci bo fukma.
2 அப்பொழுது அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: ரபீ, இவன் குருடனாக பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள்.
bi bei tomange ceu me co, “nii meranka we ma bwiran kere, co kaka tebceb ka, ci bo co fukma?
3 இயேசு மறுமொழியாக: அது இவன் செய்த பாவமும் இல்லை, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமும் இல்லை, தேவனுடைய செயல்கள் இவனிடத்தில் வெளிப்படுவதற்கு இப்படிப் பிறந்தான்.
Yeeu cicu ci, nii kange mabo bwiran ke, nii wo kaka a tebceb, ma nyo na nangen kwamaro cerkangu cinen.
4 பகலாக இருக்கும்வரை நான் என்னை அனுப்பினவருடைய செயல்களைச் செய்யவேண்டும்; ஒருவனும் செயல்கள் செய்யக்கூடாத இரவு நேரம் வருகிறது.
Tam nyo bi ma nangen niwo tomu yere fiya kakuko wi. kume bouti wo nii mani a nangen tiyeu.
5 நான் உலகத்தில் இருக்கும்போது உலகத்திற்கு ஒளியாக இருக்கிறேன் என்றார்.
mi kale buri yeu, mo mi filang ka ko.”
6 இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே உமிழ்ந்து, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி:
bwiko Yeecu dim tokka kereko wo gwam ri, con twom bitom bitine, luwo muro, con beltiti. nuwe ce.
7 நீ போய், சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். சீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தம். அப்படியே அவன்போய்க் கழுவி, பார்வை அடைந்தவனாக திரும்பி வந்தான்.
con yi co,”ya nerum karum kacuwe ci loam” (dike dendo nungeu-”tomi) na wori ni wo ya nirum, yilanu ti oi.
8 அப்பொழுது அருகில் உள்ளவர்களும், அவன் குருடனாக இருக்கும்போது அவனைப் பார்த்திருந்தவர்களும்: இவன் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவன் அல்லவா என்றார்கள்.
la nubo bi dom kange niweu wo to co kutangbeu ken kini tiyau, me “kebo niwo ki yire fo ken kini tiya ka?
9 சிலர்: அவன்தான் என்றார்கள். வேறுசிலர்: அவனைப்போல இருக்கிறான் என்றார்கள். அவனோ: நான்தான் அவன் என்றான்.
kangumbo “kio” kangumbo ki ke cobo cerkangka, la con yi ci, “nmo”
10 ௧0 அப்பொழுது அவர்கள் அவனைப் பார்த்து: உன் கண்கள் எப்படித் திறக்கப்பட்டது என்றார்கள்.
cin yi co, “la manyi nuwe mwe wumome?”
11 ௧௧ அவன் மறுமொழியாக: இயேசு என்னப்பட்ட ஒருவர் சேறுண்டாக்கி, என் கண்களின்மேல் பூசி, நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். அப்படியே நான் போய்க் கழுவி, பார்வை அடைந்தேன் என்றான்.
con karcinen nii wo cuwo ti ki Yeecu, coca luwo muro beltiti nuwe mi, la yiye ki ya yan mirum kacuwe ciloam, o ma ya nirum di ma fiya toka.
12 ௧௨ அப்பொழுது அவர்கள்: அவர் எங்கே என்றார்கள். அவன்: எனக்குத் தெரியாது என்றான்.
cin me co, “fe nii cuwo?” cin karcinen ma nyombo.
13 ௧௩ குருடனாக இருந்த அவனைப் பரிசேயர்களிடத்திற்குக் கொண்டுபோனார்கள்.
cin bou ki niworu no fukmauFariciyawa nin.
14 ௧௪ இயேசு சேறுண்டாக்கி, அவன் கண்களைத் திறந்த நாள் ஓய்வுநாளாக இருந்தது.
la bi di fobka Yeecu luwe bitine wumom nuwe ce cike.
15 ௧௫ ஆகவே, பரிசேயர்களும் அவனைப் பார்த்து: நீ எப்படிப் பார்வை அடைந்தாய் என்று மீண்டும் கேட்டார்கள். அதற்கு அவன்: அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார், நான் கழுவினேன், பார்க்கிறேன் என்றான்.
Fariciya me co tak, manyii ca fiya toka? con yici, ci yoti mur nuwe, ma nirum cn mi totiye.”
16 ௧௬ அப்பொழுது பரிசேயர்களில் சிலர்: அந்த மனிதன் ஓய்வுநாளைக் கடைபிடிக்காததினால் அவன் தேவனிடத்தில் இருந்து வந்தவன் இல்லை என்றார்கள். வேறுசிலர்: பாவியாக இருக்கிற மனிதன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படிச் செய்வான் என்றார்கள். இந்தவிதமாக அவர்களுக்குள்ளே பிரிவினை ஏற்பட்டது.
kangum Fariciyawa ki, nii wo bou bo kwama nin, wori ca nebo dur diye fobka.” kangum bo ki a manyi nii bwiranke a ma yirombo wotiye? la dor ciro tikangum.
17 ௧௭ மீண்டும் அவர்கள் குருடனைப் பார்த்து: உன் கண்களைத் திறந்தானே, அவனைக்குறித்து நீ என்ன சொல்லுகிறாய் என்றார்கள். அதற்கு அவன்: அவர் தீர்க்கதரிசி என்றான்.
la cin me ten fukma wo, ye mwa tok dor niwore, wori co ca wumom nuwe mwe?” fukma wo yici ki con” bwe tomange, kwama.”
18 ௧௮ அவன் குருடனாக இருந்து பார்வை அடைந்ததை யூதர்கள் நம்பாமல், பார்வை அடைந்தவனுடைய பெற்றோரை அழைத்து,
Yafudawa bo ciyabo nii wo fukma, la cin fiya toka no teb cebo bou bo ri.
19 ௧௯ அவர்களைப் பார்த்து: உங்களுடைய மகன் குருடனாகப் பிறந்தான் என்று சொல்லுகிறீர்களே, அவன் இவன்தானா? இவனானால், இப்பொழுது இவன் எப்படிப் பார்வையடைந்தான் என்று கேட்டார்கள்.
cin me tebcebo, “wo co bi bwekime ka bo fukma ka? la cane ko totiya?
20 ௨0 பெற்றோர் மறுமொழியாக; இவன் எங்களுடைய மகன்தான் என்றும், குருடனாகப் பிறந்தான் என்றும் எங்களுக்குத் தெரியும்.
tebcebo ciya ci,” nyon yimom wo bi bwe nye, nya bowe fukma
21 ௨௧ இப்பொழுது இவன் பார்வை அடைந்தது எப்படி என்று எங்களுக்குத் தெரியாது; இவனுடைய கண்களைத் திறந்தவன் யார் என்பதும் எங்களுக்குத் தெரியாது; இவன் வாலிபனாக இருக்கிறான், இவனையே கேளுங்கள், இவனே சொல்லுவான் என்றார்கள்.
cane ko ci totiyeu nya nyombo kange we wumom nuwe ceu nya nyombo ki me co cin duyom. can tokker dor cer.”
22 ௨௨ அவனுடைய பெற்றோர்கள் யூதர்களுக்குப் பயந்ததினால் இப்படிச் சொன்னார்கள். ஏனென்றால், இயேசுவைக் கிறிஸ்து என்று யாராவது அறிக்கை செய்தால் அவனை ஜெப ஆலயத்திற்குப் வெளியாக்க வேண்டும் என்று யூதர்கள் அதற்கு ஏற்கனவே முடிவு செய்திருந்தார்கள்.
tebcebo tok dikero wo nyeu, wori ci cwa tai Yafudawa ti. Yafudawa ciya no nii wo ciya kange co ki kiritti ye ri, ciyan cokum co bi kur kwama urcalima,
23 ௨௩ அதினிமித்தம்: இவன் வாலிபனாக இருக்கிறான், இவனையே கேளுங்கள் என்று அவனுடைய பெற்றோர்கள் சொன்னார்கள்.
nyo ri tebcebo yi ci ki “cin duyom, me co”
24 ௨௪ ஆதலால் அவர்கள் குருடனாக இருந்த மனிதனை இரண்டாம்முறை அழைத்து: நீ தேவனை மகிமைப்படுத்து; இந்த மனிதன் பாவி என்று நாங்கள் அறிந்திருக்கிறோம் என்றார்கள்.
la cin cuwo teng nii wo na yobe ce wo fukma, cin yi co, “caklang kwama, nyon nyimom nii wo nii bwiranke.
25 ௨௫ அவன் மறுமொழியாக: அவர் பாவியா இல்லையா என்று எனக்குத் தெரியாது; நான் குருடனாக இருந்தேன், இப்பொழுது பார்க்கிறேன்; இது ஒன்றுதான் எனக்குத் தெரியும் என்றான்.
ni wo kar cinen, “ma nyombo no con nii bwirang ke ri, dikero wiin ma nyimeu, “min fukma can miti toi.”
26 ௨௬ அவர்கள் மறுபடியும் அவனைப் பார்த்து: உனக்கு என்ன செய்தான், உன் கண்களை எப்படித் திறந்தான் என்றார்கள்.
la cin yii co, ye co ma mwene?” ca manyi ca wumom nuwe mwe?”
27 ௨௭ அவன் மறுமொழியாக: ஏற்கனவே உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் கேட்காமல் போனீர்கள்; மறுபடியும் ஏன் கேட்கிறீர்கள்? அவருக்குச் சீடராக உங்களுக்கும் விருப்பம் இருக்கிறதா என்றான்.
con ciya, min yim kom kican, la ka nuwa bo. ye bwi la kom cwiti na nuwa cannen? kom cwibo kom yilam be bei tomange ce, ko ti cwika?
28 ௨௮ அப்பொழுது அவர்கள் அவனைத் திட்டி: நீ அவனுடைய சீடன், நாங்கள் மோசேயினுடைய சீடர்.
cin toran co ki, “mon nii tomange e, nyeu nyon nob tomangeb mucar nyin nyimom kwama tok ker kange muca, la nyombo fiye nii wo bou ce wiye.
29 ௨௯ மோசேயுடனே தேவன் பேசினார் என்று தெரியும், இவன் எங்கே இருந்து வந்தவன் என்று எங்களுக்குத் தெரியாது என்றார்கள்.
30 ௩0 அதற்கு அந்த மனிதன்: அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கிருந்து வந்தவர் என்று நீங்கள் தெரியாமல் இருப்பது ஆச்சரியமான காரியம்.
nii wo ciya, ci ki wo la bi kwang” kom ki ka nyombo fiye nii wo bou wiye, la co wumom nuwe miye.
31 ௩௧ பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறது இல்லை என்று தெரிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தி உள்ளவனாக இருந்து அவருக்கு பிரியமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.
nyon nyimom kwama mani nuwa nob bwiran ke, no ci cinti ki a ma cinen dike ci cwitiye ri, an ma cinen.
32 ௩௨ பிறவிக் குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தான் என்று உலகம் உண்டானதுமுதல் கேள்விப்பட்டது இல்லையே. (aiōn g165)
ka cikko ci ywel kaleu, ba nuwam bo wi ki kange nii wumom nuwa nii ci bo fukmau. (aiōn g165)
33 ௩௩ அவர் தேவனிடத்தில் இருந்து வராமல் இருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான்.
nii wori bou bo kwama nin, ma ca ma kange diker ti.”
34 ௩௪ அவர்கள் அவனுக்கு மறுமொழியாக: முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ என்று சொல்லி, அவனைப் வெளியே தள்ளிவிட்டார்கள்.
cin yi co ki, “ci bou nen mor bwiran ke, la muki merangum ki nyoka? la cin ywabken co kale.
35 ௩௫ அவனை அவர்கள் வெளியே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைப் பார்த்தபோது: நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறாயா என்றார்.
Yeecu nuwa ki cin ywam co bi kur kwama urcalima ri. con fiya, la con yi co,” mun ciya kange bi bwe nifire ka?”
36 ௩௬ அதற்கு அவன்: ஆண்டவரே, அவரிடத்தில் நான் விசுவாசமாக இருக்கும்படிக்கு அவர் யார் என்றான்.
con ciya co ki, “we teluwe cuwo ma ne bilenketi cinene?”
37 ௩௭ இயேசு அவனைப் பார்த்து: நீ அவரைப் பார்த்திருக்கிறாய், உன்னுடனே பேசுகிறவர் அவர்தான் என்றார்.
Yeecu yi co, “mun tom co, nii wuro yinen ker tiye.”
38 ௩௮ உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான்.
nii cuwo yi co ki, “teluwe min ne bilenke.” la con wab co.
39 ௩௯ அப்பொழுது இயேசு: பார்க்காதவர்கள் பார்க்கும்படியாகவும், பார்க்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்றார்.
Yeecu ki warke bou ki co kale we, na nyori wuor tobe na to kange buro towe an yilam fukma.
40 ௪0 அவரோடு இருந்த பரிசேயர்களில் சிலர் இவைகளைக் கேட்டபொழுது: நாங்களும் குருடரோ என்றார்கள்.
kangeb Faricawa wo kange ceu, nuwa dike buro ri, me co, “nyon fukma ken ka?
41 ௪௧ இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் குருடராக இருந்தால் உங்களுக்குப் பாவம் இருக்காது; நீங்கள் பார்க்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்களுடைய பாவம் நிலைநிற்கிறது என்றார்.
Yeecu yi ci, no kom fukma ri mani ka ma bwiran keti, la can kom yi ki kom ti toi, bwiranke kume nyim wi.

< யோவான் 9 >