< யோவான் 3 >
1 ௧ யூதர்களுக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான்.
నికదిమనామా యిహూదీయానామ్ అధిపతిః ఫిరూశీ క్షణదాయాం
2 ௨ அவன் இரவு நேரத்தில் இயேசுவினிடம் வந்து: ரபீ, நீர் தேவனிடத்தில் இருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனென்றால், ஒருவனும் தன்னுடனே தேவன் இல்லாவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான்.
యీశౌరభ్యర్ణమ్ ఆవ్రజ్య వ్యాహార్షీత్, హే గురో భవాన్ ఈశ్వరాద్ ఆగత్ ఏక ఉపదేష్టా, ఏతద్ అస్మాభిర్జ్ఞాయతే; యతో భవతా యాన్యాశ్చర్య్యకర్మ్మాణి క్రియన్తే పరమేశ్వరస్య సాహాయ్యం వినా కేనాపి తత్తత్కర్మ్మాణి కర్త్తుం న శక్యన్తే|
3 ௩ இயேசு அவனுக்கு மறுமொழியாக: ஒருவன் மறுபடியும் பிறக்காவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைப் பார்க்கமாட்டான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
తదా యీశురుత్తరం దత్తవాన్ తవాహం యథార్థతరం వ్యాహరామి పునర్జన్మని న సతి కోపి మానవ ఈశ్వరస్య రాజ్యం ద్రష్టుం న శక్నోతి|
4 ௪ அதற்கு நிக்கொதேமு: ஒருவன் வயதானபின்பு எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாம்முறை நுழைந்து பிறக்கக்கூடுமோ என்றான்.
తతో నికదీమః ప్రత్యవోచత్ మనుజో వృద్ధో భూత్వా కథం జనిష్యతే? స కిం పున ర్మాతృర్జఠరం ప్రవిశ్య జనితుం శక్నోతి?
5 ௫ இயேசு மறுமொழியாக: ஒருவன் தண்ணீரினாலும் ஆவியினாலும் பிறக்காவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
యీశురవాదీద్ యథార్థతరమ్ అహం కథయామి మనుజే తోయాత్మభ్యాం పున ర్న జాతే స ఈశ్వరస్య రాజ్యం ప్రవేష్టుం న శక్నోతి|
6 ௬ சரீரத்தினால் பிறப்பது சரீரமாக இருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாக இருக்கும்.
మాంసాద్ యత్ జాయతే తన్ మాంసమేవ తథాత్మనో యో జాయతే స ఆత్మైవ|
7 ௭ நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக்குறித்து ஆச்சரியப்படவேண்டாம்;
యుష్మాభిః పున ర్జనితవ్యం మమైతస్యాం కథాయామ్ ఆశ్చర్యం మా మంస్థాః|
8 ௮ காற்றானது தனக்கு விருப்பமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆனாலும் அது இந்த இடத்திலிருந்து வருகிறது என்றும், இந்த இடத்திற்குப் போகிறது என்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவன் எவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.
సదాగతిర్యాం దిశమిచ్ఛతి తస్యామేవ దిశి వాతి, త్వం తస్య స్వనం శుణోషి కిన్తు స కుత ఆయాతి కుత్ర యాతి వా కిమపి న జానాసి తద్వాద్ ఆత్మనః సకాశాత్ సర్వ్వేషాం మనుజానాం జన్మ భవతి|
9 ௯ அதற்கு நிக்கொதேமு: இவைகள் எப்படி ஆகும் என்றான்.
తదా నికదీమః పృష్టవాన్ ఏతత్ కథం భవితుం శక్నోతి?
10 ௧0 இயேசு அவனைப் பார்த்து: நீ இஸ்ரவேலில் போதகனாக இருந்தும் இவைகளை அறியாமல் இருக்கிறாயா?
యీశుః ప్రత్యక్తవాన్ త్వమిస్రాయేలో గురుర్భూత్వాపి కిమేతాం కథాం న వేత్సి?
11 ௧௧ உண்மையாகவே உண்மையாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் பார்த்ததைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறோம்; நீங்களோ எங்களுடைய சாட்சியை ஏற்றுகொள்ளுகிறது இல்லை.
తుభ్యం యథార్థం కథయామి, వయం యద్ విద్మస్తద్ వచ్మః యంచ్చ పశ్యామస్తస్యైవ సాక్ష్యం దద్మః కిన్తు యుష్మాభిరస్మాకం సాక్షిత్వం న గృహ్యతే|
12 ௧௨ பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரலோக காரியங்களை உங்களுக்குச் சொன்னால் எப்படி விசுவாசிப்பீர்கள்?
ఏతస్య సంసారస్య కథాయాం కథితాయాం యది యూయం న విశ్వసిథ తర్హి స్వర్గీయాయాం కథాయాం కథం విశ్వసిష్యథ?
13 ௧௩ பரலோகத்தில் இருந்து இறங்கினவரும் பரலோகத்தில் இருக்கிறவருமான மனிதகுமாரனே அல்லாமல் பரலோகத்திற்கு ஏறினவன் ஒருவனும் இல்லை.
యః స్వర్గేఽస్తి యం చ స్వర్గాద్ అవారోహత్ తం మానవతనయం వినా కోపి స్వర్గం నారోహత్|
14 ௧௪ பாம்பானது மோசேயினால் வனாந்திரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனிதகுமாரனும்,
అపరఞ్చ మూసా యథా ప్రాన్తరే సర్పం ప్రోత్థాపితవాన్ మనుష్యపుత్రోఽపి తథైవోత్థాపితవ్యః;
15 ௧௫ தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, உயர்த்தப்பட வேண்டும். (aiōnios )
తస్మాద్ యః కశ్చిత్ తస్మిన్ విశ్వసిష్యతి సోఽవినాశ్యః సన్ అనన్తాయుః ప్రాప్స్యతి| (aiōnios )
16 ௧௬ தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, அவரைக் கொடுத்து, இவ்வளவாய் உலகத்தில் அன்பு செலுத்தினார். (aiōnios )
ఈశ్వర ఇత్థం జగదదయత యత్ స్వమద్వితీయం తనయం ప్రాదదాత్ తతో యః కశ్చిత్ తస్మిన్ విశ్వసిష్యతి సోఽవినాశ్యః సన్ అనన్తాయుః ప్రాప్స్యతి| (aiōnios )
17 ௧௭ உலகத்தை தண்டனைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
ఈశ్వరో జగతో లోకాన్ దణ్డయితుం స్వపుత్రం న ప్రేష్య తాన్ పరిత్రాతుం ప్రేషితవాన్|
18 ௧௮ அவரை விசுவாசிக்கிறவன் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படமாட்டான்; விசுவாசிக்காதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசம் உள்ளவனாக இல்லாதபடியினால், அவன் தண்டனைத்தீர்ப்புக்கு உட்பட்டிருக்கிறான்.
అతఏవ యః కశ్చిత్ తస్మిన్ విశ్వసితి స దణ్డార్హో న భవతి కిన్తు యః కశ్చిత్ తస్మిన్ న విశ్వసితి స ఇదానీమేవ దణ్డార్హో భవతి, యతః స ఈశ్వరస్యాద్వితీయపుత్రస్య నామని ప్రత్యయం న కరోతి|
19 ௧௯ ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனிதர்களுடைய செயல்கள் தீமையானவைகளாக இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைவிட இருளை விரும்புகிறதே அந்த தண்டனைத் தீர்ப்புக்குக் காரணமாக இருக்கிறது.
జగతో మధ్యే జ్యోతిః ప్రాకాశత కిన్తు మనుష్యాణాం కర్మ్మణాం దృష్టత్వాత్ తే జ్యోతిషోపి తిమిరే ప్రీయన్తే ఏతదేవ దణ్డస్య కారణాం భవతి|
20 ௨0 தீங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் செய்கைகள் சுட்டி காட்டப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.
యః కుకర్మ్మ కరోతి తస్యాచారస్య దృష్టత్వాత్ స జ్యోతిరౄతీయిత్వా తన్నికటం నాయాతి;
21 ௨௧ சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் செய்கைகள் தேவனுக்குள்ளாக செய்யப்படுகிறது என்று வெளிப்படும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.
కిన్తు యః సత్కర్మ్మ కరోతి తస్య సర్వ్వాణి కర్మ్మాణీశ్వరేణ కృతానీతి సథా ప్రకాశతే తదభిప్రాయేణ స జ్యోతిషః సన్నిధిమ్ ఆయాతి|
22 ௨௨ இவைகளுக்குப் பின்பு, இயேசுவும் அவருடைய சீடர்களும் யூதேயா நாட்டிற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடு தங்கியிருந்து, ஞானஸ்நானம் கொடுத்து வந்தார்.
తతః పరమ్ యీశుః శిష్యైః సార్ద్ధం యిహూదీయదేశం గత్వా తత్ర స్థిత్వా మజ్జయితుమ్ ఆరభత|
23 ௨௩ சாலிம் ஊருக்கு அருகாமையான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் அதிகமாக இருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானம் கொடுத்து வந்தான்; மக்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள்.
తదా శాలమ్ నగరస్య సమీపస్థాయిని ఐనన్ గ్రామే బహుతరతోయస్థితేస్తత్ర యోహన్ అమజ్జయత్ తథా చ లోకా ఆగత్య తేన మజ్జితా అభవన్|
24 ௨௪ அக்காலத்தில் யோவான் காவலில் வைக்கப்படவில்லை.
తదా యోహన్ కారాయాం న బద్ధః|
25 ௨௫ அப்பொழுது யோவானுடைய சீடர்களில் சிலருக்கும், யூதர்களுக்கும், சுத்திகரிப்பைக்குறித்து வாக்குவாதம் உண்டானது.
అపరఞ్చ శాచకర్మ్మణి యోహానః శిష్యైః సహ యిహూదీయలోకానాం వివాదే జాతే, తే యోహనః సంన్నిధిం గత్వాకథయన్,
26 ௨௬ அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக்குறித்து நீரும் சாட்சி கொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானம் கொடுக்கிறார், எல்லோரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள்.
హే గురో యర్ద్దననద్యాః పారే భవతా సార్ద్ధం య ఆసీత్ యస్మింశ్చ భవాన్ సాక్ష్యం ప్రదదాత్ పశ్యతు సోపి మజ్జయతి సర్వ్వే తస్య సమీపం యాన్తి చ|
27 ௨௭ யோவான் மறுமொழியாக: பரலோகத்தில் இருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டால் அன்றி, அவன் ஒன்றையும் பெற்றுக் கொள்ளமாட்டான்.
తదా యోహన్ ప్రత్యవోచద్ ఈశ్వరేణ న దత్తే కోపి మనుజః కిమపి ప్రాప్తుం న శక్నోతి|
28 ௨௮ நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள்.
అహం అభిషిక్తో న భవామి కిన్తు తదగ్రే ప్రేషితోస్మి యామిమాం కథాం కథితవానాహం తత్ర యూయం సర్వ్వే సాక్షిణః స్థ|
29 ௨௯ மணமகளை உடையவனே மணமகன்; மணமகனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்டு மணமகனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமானது.
యో జనః కన్యాం లభతే స ఏవ వరః కిన్తు వరస్య సన్నిధౌ దణ్డాయమానం తస్య యన్మిత్రం తేన వరస్య శబ్దే శ్రుతేఽతీవాహ్లాద్యతే మమాపి తద్వద్ ఆనన్దసిద్ధిర్జాతా|
30 ௩0 அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.
తేన క్రమశో వర్ద్ధితవ్యం కిన్తు మయా హ్సితవ్యం|
31 ௩௧ உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லோரையும்விட மேலானவர்; பூமியிலிருந்து உண்டானவன் பூமியின் தன்மை உள்ளவனாக இருந்து, பூமிக்குரிவைகளைப் பேசுகிறான்; பரலோகத்தில் இருந்து வருகிறவர் எல்லோரையும்விட மேலானவர்.
య ఊర్ధ్వాదాగచ్ఛత్ స సర్వ్వేషాం ముఖ్యో యశ్చ సంసారాద్ ఉదపద్యత స సాంసారికః సంసారీయాం కథాఞ్చ కథయతి యస్తు స్వర్గాదాగచ్ఛత్ స సర్వ్వేషాం ముఖ్యః|
32 ௩௨ தாம் பார்த்தையும், கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்; அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறது இல்லை.
స యదపశ్యదశృణోచ్చ తస్మిన్నేవ సాక్ష్యం దదాతి తథాపి ప్రాయశః కశ్చిత్ తస్య సాక్ష్యం న గృహ్లాతి;
33 ௩௩ அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியம் உள்ளவர் என்று முத்திரையிட்டு உறுதிப்படுத்துகிறான்.
కిన్తు యో గృహ్లాతి స ఈశ్వరస్య సత్యవాదిత్వం ముద్రాఙ్గితం కరోతి|
34 ௩௪ தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்; தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.
ఈశ్వరేణ యః ప్రేరితః సఏవ ఈశ్వరీయకథాం కథయతి యత ఈశ్వర ఆత్మానం తస్మై అపరిమితమ్ అదదాత్|
35 ௩௫ பிதாவானவர் குமாரனில் அன்பாக இருந்து எல்லாவற்றையும் அவருடைய கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
పితా పుత్రే స్నేహం కృత్వా తస్య హస్తే సర్వ్వాణి సమర్పితవాన్|
36 ௩௬ குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாக இருக்கிறான்; குமாரனை விசுவாசிக்காதவனோ ஜீவனைப் பார்ப்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான். (aiōnios )
యః కశ్చిత్ పుత్రే విశ్వసితి స ఏవానన్తమ్ పరమాయుః ప్రాప్నోతి కిన్తు యః కశ్చిత్ పుత్రే న విశ్వసితి స పరమాయుషో దర్శనం న ప్రాప్నోతి కిన్త్వీశ్వరస్య కోపభాజనం భూత్వా తిష్ఠతి| (aiōnios )