< யோவான் 17 >
1 ௧ இயேசு இவைகளைச் சொன்னபின்பு தம்முடைய கண்களை வானத்திற்கு ஏறெடுத்து:
ⲁ̅ⲛⲁⲓ ⲁϥϫⲟⲟⲩ ⲛϭⲓ ⲓⲥ ⲁⲩⲱ ⲁϥϥⲓ ⲛⲉϥⲃⲁⲗ ⲉϩⲣⲁⲓ ⲉⲧⲡⲉ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲡⲁⲓⲱⲧ ⲁⲧⲉⲩⲛⲟⲩ ⲉⲓ ϯ ⲉⲟⲟⲩ ⲙⲡⲉⲕϣⲏⲣⲉ ϫⲉⲕⲁⲥ ⲉⲣⲉⲡⲉⲕϣⲏⲣⲉ ϯ ⲉⲟⲟⲩ ⲛⲁⲕ
2 ௨ பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனிடம் ஒப்படைக்கப்பட்ட அனைவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்படி மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரம் கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படி நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும். (aiōnios )
ⲃ̅ⲕⲁⲧⲁ ⲑⲉ ⲉⲛⲧⲁⲕϯ ⲛⲁϥ ⲛⲧⲉⲝⲟⲩⲥⲓⲁ ⲛⲥⲁⲣⲝ ⲛⲓⲙ ϫⲉⲕⲁⲥ ⲟⲩⲟⲛ ⲛⲓⲙ ⲉⲛⲧⲁⲕⲧⲁⲁⲩ ⲛⲁϥ ⲉϥⲉϯ ⲛⲁⲩ ⲛⲟⲩⲱⲛϩ ϣⲁ ⲉⲛⲉϩ (aiōnios )
3 ௩ ஒன்றான உண்மை தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். (aiōnios )
ⲅ̅ⲡⲁⲓ ⲇⲉ ⲡⲉ ⲡⲱⲛϩ ϣⲁ ⲉⲛⲉϩ ϫⲉⲕⲁⲥ ⲉⲩⲉⲥⲟⲩⲱⲛⲅ ⲡⲛⲟⲩⲧⲉ ⲙⲙⲉ ⲙⲙⲁⲩⲁⲁϥ ⲁⲩⲱ ⲡⲉⲛⲧⲁⲕⲧⲛⲛⲟⲟⲩϥ ⲓⲥ ⲡⲉⲭⲥ (aiōnios )
4 ௪ பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்குக் கொடுத்த செயல்களைச் செய்துமுடித்தேன்.
ⲇ̅ⲁⲛⲟⲕ ⲁⲓϯ ⲉⲟⲟⲩ ⲛⲁⲕ ϩⲓϫⲙ ⲡⲕⲁϩ ϫⲉ ⲁⲓϫⲉⲕ ⲡϩⲱⲃ ⲉⲃⲟⲗ ⲉⲛⲧⲁⲕⲧⲁⲁϥ ⲛⲁⲓ ⲉⲧⲣⲁⲁⲁϥ
5 ௫ பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினால் இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்.
ⲉ̅ⲧⲉⲛⲟⲩ ϭⲉ ⲡⲁⲓⲱⲧ ϯ ⲉⲟⲟⲩ ⲛⲁⲓ ϩⲁϩⲧⲏⲕ ϩⲣⲁⲓ ϩⲙ ⲡⲉⲟⲟⲩ ⲉⲛⲉⲩⲛⲧⲁⲓϥ ϩⲁ ϩⲧⲏⲕ ⲉⲙⲡⲁⲧⲉ ⲡⲕⲟⲥⲙⲟⲥ ϣⲱⲡⲉ
6 ௬ நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனிதர்களுக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாக இருந்தார்கள், அவர்களை எனக்குக் கொடுத்தீர், அவர்கள் உம்முடைய வார்த்தையை கடைபிடித்திருக்கிறார்கள்.
ⲋ̅ⲁⲓⲟⲩⲛϩ ⲡⲉⲕⲣⲁⲛ ⲉⲃⲟⲗ ⲛⲣⲣⲱⲙⲉ ⲛⲧⲁⲕⲧⲁⲁⲩ ⲛⲁⲓ ⲉⲃⲟⲗ ϩⲙ ⲡⲕⲟⲥⲙⲟⲥ ⲛⲉ ⲛⲟⲩⲕ ⲛⲉ ⲁⲩⲱ ⲁⲕⲧⲁⲁⲩ ⲛⲁⲓ ⲁⲩⲱ ⲁⲩⲁⲣⲉϩ ⲉⲡⲉⲕϣⲁϫⲉ
7 ௭ நீர் எனக்குக் கொடுத்ததெல்லாம் உம்மாலே உண்டானது என்று இப்பொழுது அறிந்திருக்கிறார்கள்.
ⲍ̅ⲧⲉⲛⲟⲩ ⲁⲓⲉⲓⲙⲉ ϫⲉ ⲟⲩⲟⲛ ⲛⲓⲙ ⲉⲛⲧⲁⲕⲧⲁⲁⲩ ⲛⲁⲓ ϩⲉⲛⲉⲃⲟⲗ ϩⲓⲧⲟⲟⲧⲕ ⲛⲉ
8 ௮ நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாக அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள்.
ⲏ̅ϫⲉ ⲛϣⲁϫⲉ ⲉⲛⲧⲁⲕⲧⲁⲁⲩ ⲛⲁⲓ ⲁⲓⲧⲁⲁⲩ ⲛⲁⲩ ⲁⲩⲱ ⲛⲧⲟⲟⲩ ⲁⲩϫⲓⲧⲟⲩ ⲛⲁⲙⲉ ϫⲉ ⲛⲧⲁⲓⲉⲓ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲟⲟⲧⲕ ⲁⲩⲱ ⲁⲩⲡⲓⲥⲧⲉⲩⲉ ϫⲉ ⲛⲧⲟⲕ ⲁⲕⲧⲛⲛⲟⲟⲩⲧ
9 ௯ நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாக இருக்கிறார்களே.
ⲑ̅ⲁⲛⲟⲕ ⲉⲓⲥⲟⲡⲥ ⲉⲧⲃⲏⲏⲧⲟⲩ ⲛⲉⲓⲥⲟⲡⲥ ⲁⲛ ⲉⲧⲃⲉ ⲡⲕⲟⲥⲙⲟⲥ ⲁⲗⲗⲁ ⲉⲧⲃⲉ ⲛⲉⲛⲧⲁⲕⲧⲁⲁⲩ ⲛⲁⲓ ϫⲉ ⲛⲟⲩⲕ ⲛⲉ
10 ௧0 என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்; அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்.
ⲓ̅ⲁⲩⲱ ⲛⲟⲩⲓ ⲧⲏⲣⲟⲩ ⲛⲟⲩⲕ ⲛⲉ ⲁⲩⲱ ⲛⲟⲩⲕ ⲛⲟⲩⲓ ⲛⲉ ⲁⲩⲱ ⲁⲓϫⲓ ⲉⲟⲟⲩ ⲛϩⲏⲧⲟⲩ
11 ௧௧ நான் இனி உலகத்தில் இருக்கப்போவதில்லை, இவர்கள் உலகத்தில் இருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாக இருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்.
ⲓ̅ⲁ̅ⲁⲩⲱ ⲛϯϣⲟⲟⲡ ϭⲉ ⲁⲛ ϩⲙ ⲡⲕⲟⲥⲙⲟⲥ ⲁⲛⲟⲕ ⲇⲉ ⲉⲉⲓ ⲛⲏⲩ ϣⲁⲣⲟⲕ ⲡⲁⲓⲱⲧ ⲉⲧⲟⲩⲁⲁⲃ ϩⲁⲣⲉϩ ⲉⲣⲟⲟⲩ ϩⲙ ⲡⲉⲕⲣⲁⲛ ⲉⲛⲧⲁⲕⲧⲁⲁϥ ⲛⲁⲓ ϫⲉⲕⲁⲥ ⲉⲩⲉϣⲱⲡⲉ ⲛⲟⲩⲁ ⲕⲁⲧⲁ ⲑⲉ ⲛⲁⲛⲟⲛ
12 ௧௨ நான் அவர்களோடு உலகத்தில் இருக்கும்போது அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக்கொண்டுவந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, அழிவின் மகன் கெட்டுப்போனானே அல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை.
ⲓ̅ⲃ̅ⲙⲡⲉⲩⲟⲓϣ ⲉⲓ ⲛⲙⲙⲁⲩ ⲛⲉⲓϩⲁⲣⲉϩ ⲉⲣⲟⲟⲩ ⲡⲉ ϩⲙ ⲡⲉⲕⲣⲁⲛ ⲉⲛⲧⲁⲕⲧⲁⲁϥ ⲛⲁⲓ ⲁⲩⲱ ⲁⲓϩⲁⲣⲉϩ ⲉⲣⲟⲟⲩ ⲁⲩⲱ ⲙⲡⲉⲗⲁⲁⲩ ⲉⲃⲟⲗ ⲛϩⲏⲧⲟⲩ ⲧⲁⲕⲟ ⲉⲓⲙⲏⲧⲓ ⲡϣⲏⲣⲉ ⲙⲡⲧⲁⲕⲟ ϫⲉ ⲉⲣⲉⲧⲉⲅⲣⲁⲫⲏ ϫⲱⲕ ⲉⲃⲟⲗ
13 ௧௩ இப்பொழுது நான் உம்மிடத்திற்கு வருகிறேன்; அவர்கள் என் சந்தோஷத்தை நிறைவாக அடையும்படி உலகத்தில் இருக்கும்போது இவைகளைச் சொல்லுகிறேன்.
ⲓ̅ⲅ̅ⲧⲉⲛⲟⲩ ⲇⲉ ⲉⲉⲓⲛⲏⲩ ϣⲁⲣⲟⲕ ⲁⲩⲱ ⲛⲁⲓ ⲛⲉⲓϫⲱ ⲙⲙⲟⲟⲩ ϩⲙ ⲡⲕⲟⲥⲙⲟⲥ ϫⲉⲕⲁⲥ ⲉⲩⲉⲕⲱ ⲛⲁⲩ ⲙⲡⲁⲣⲁϣⲉ ⲉϥϫⲏⲕ ⲉⲃⲟⲗ ⲛϩⲏⲧⲟⲩ
14 ௧௪ நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தான் இல்லாததுபோல அவர்களும் உலகத்தார் இல்லை; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது.
ⲓ̅ⲇ̅ⲁⲛⲟⲕ ⲁⲓϯ ⲛⲁⲩ ⲙⲡⲉⲕϣⲁϫⲉ ⲁⲩⲱ ⲡⲕⲟⲥⲙⲟⲥ ⲁϥⲙⲉⲥⲧⲱⲟⲩ ϫⲉ ⲛϩⲉⲛⲉⲃⲟⲗ ⲁⲛ ϩⲙ ⲡⲕⲟⲥⲙⲟⲥ ⲛⲉ ⲕⲁⲧⲁ ⲑⲉ ϩⲱ ⲉⲁⲛⲅ ⲟⲩⲉⲃⲟⲗ ⲁⲛ ϩⲙ ⲡⲕⲟⲥⲙⲟⲥ
15 ௧௫ நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையில் இருந்து காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
ⲓ̅ⲉ̅ⲛⲉⲓⲥⲟⲡⲥ ⲁⲛ ϫⲉ ⲉⲕⲉϥⲓⲧⲟⲩ ⲉⲃⲟⲗ ϩⲙ ⲡⲕⲟⲥⲙⲟⲥ ⲁⲗⲗⲁ ϫⲉ ⲉⲕⲉϩⲁⲣⲉϩ ⲉⲣⲟⲟⲩ ⲉⲃⲟⲗ ϩⲙ ⲡⲡⲟⲛⲏⲣⲟⲥ
16 ௧௬ நான் உலகத்தான் இல்லாததுபோல, அவர்களும் உலகத்தார் இல்லை.
ⲓ̅ⲋ̅ⲛϩⲉⲛⲉⲃⲟⲗ ⲁⲛ ϩⲙ ⲡⲡⲟⲛⲏⲣⲟⲥ ⲛⲉ ⲕⲁⲧⲁ ⲑⲉ ϩⲱ ⲉⲁⲛⲅ ⲟⲩⲉⲃⲟⲗ ⲁⲛ ϩⲙ ⲡⲕⲟⲥⲙⲟⲥ
17 ௧௭ உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.
ⲓ̅ⲍ̅ⲙⲁⲧⲃⲃⲟⲟⲩ ϩⲣⲁⲉⲓ ϩⲛ ⲧⲙⲉ ⲡⲉⲕϣⲁϫⲉ ⲡⲉ ⲧⲙⲉ
18 ௧௮ நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன்.
ⲓ̅ⲏ̅ⲕⲁⲧⲁ ⲑⲉ ⲉⲛⲧⲁⲕⲧⲁⲟⲩⲟⲓ ⲉⲡⲕⲟⲥⲙⲟⲥ ⲁⲛⲟⲕ ϩⲱ ⲁⲓϫⲟⲟⲩⲥⲉ ⲉⲡⲕⲟⲥⲙⲟⲥ
19 ௧௯ அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தம் ஆக்கப்பட்டவர்களாக ஆகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்.
ⲓ̅ⲑ̅ⲁⲩⲱ ϯⲧⲃⲃⲟ ⲙⲙⲟⲓ ϩⲁⲣⲟⲟⲩ ϫⲉⲕⲁⲥ ϩⲱⲟⲩ ⲟⲛ ⲉⲩⲉϣⲱⲡⲉ ⲉⲩⲧⲃⲃⲏⲩ ϩⲛ ⲧⲙⲉ
20 ௨0 நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதும் இல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும், வேண்டிக்கொள்ளுகிறேன்.
ⲕ̅ⲛⲉⲓⲥⲟⲡⲥ ⲇⲉ ⲁⲛ ⲉⲧⲃⲉ ⲛⲁⲓ ⲙⲁⲩⲁⲁⲩ ⲁⲗⲗⲁ ⲉⲧⲃⲉ ⲛⲕⲟⲟⲩⲉ ⲟⲛ ⲉⲧⲛⲁⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲉⲣⲟⲉⲓ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲙ ⲡⲉⲩϣⲁϫⲉ
21 ௨௧ அவர்கள் எல்லோரும் ஒன்றாக இருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்கள் எல்லோரும் நம்மில் ஒன்றாக இருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.
ⲕ̅ⲁ̅ϫⲉⲕⲁⲥ ⲧⲏⲣⲟⲩ ⲉⲩⲉϣⲱⲡⲉ ⲛⲟⲩⲁ ⲕⲁⲧⲁ ⲑⲉ ⲛⲧⲟⲕ ⲡⲁⲓⲱⲧ ⲉⲕϩⲣⲁⲓ ⲛϩⲏⲧ ⲁⲩⲱ ⲁⲛⲟⲕ ⲛϩⲏⲧⲕ ϫⲉⲕⲁⲥ ϩⲱⲟⲩ ⲟⲛ ⲉⲩⲉϣⲱⲡⲉ ϩⲣⲁⲓ ⲛϩⲏⲧⲛ ϫⲉⲕⲁⲥ ⲉⲣⲉⲡⲕⲟⲥⲙⲟⲥ ⲡⲓⲥⲧⲉⲩⲉ ϫⲉ ⲛⲧⲟⲕ ⲉⲛⲧⲁⲕⲧⲁⲟⲩⲟⲓ
22 ௨௨ நாம் ஒன்றாக இருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாக இருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.
ⲕ̅ⲃ̅ⲁⲩⲱ ⲁⲛⲟⲕ ⲁⲓϯ ⲛⲁⲩ ⲙⲡⲉⲟⲟⲩ ⲉⲛⲧⲁⲕⲧⲁⲁϥ ⲛⲁⲓ ϫⲉⲕⲁⲥ ⲉⲩⲉϣⲱⲡⲉ ⲛⲟⲩⲁ ⲕⲁⲧⲁ ⲑⲉ ⲁⲛⲟⲛ ⲉⲁⲛⲟⲛ ⲟⲩⲁ
23 ௨௩ ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாக இருக்கும்படி, என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாக இருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாக இருக்கிறதையும் உலகம் அறியும்படி, நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
ⲕ̅ⲅ̅ⲁⲛⲟⲕ ϩⲣⲁⲓ ⲛϩⲏⲧⲟⲩ ⲁⲩⲱ ⲛⲧⲟⲕ ϩⲣⲁⲓ ⲛϩⲏⲧ ϫⲉⲕⲁⲥ ⲉⲩⲉϣⲱⲡⲉ ϩⲣⲁⲓ ⲛϩⲏⲧ ⲉⲩϫⲏⲕ ⲉⲃⲟⲗ ⲉⲟⲩⲁ ⲁⲩⲱ ⲛⲧⲉⲡⲕⲟⲥⲙⲟⲥ ⲉⲓⲙⲉ ϫⲉ ⲛⲧⲟⲕ ⲡⲉ ⲛⲧⲁⲕⲧⲛⲛⲟⲟⲩⲧ ⲁⲩⲱ ⲁⲕⲙⲉⲣⲓⲧⲟⲩ ⲕⲁⲧⲁ ⲑⲉ ⲉⲛⲧⲁⲕⲙⲉⲣⲓⲧ
24 ௨௪ பிதாவே, உலகத்தோற்றத்திற்கு முன் நீர் என்னில் அன்பாக இருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் பார்க்கும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனே இருக்கவிரும்புகிறேன்.
ⲕ̅ⲇ̅ⲡⲁⲓⲱⲧ ⲛⲉⲛⲧⲁⲕⲧⲁⲁⲩ ⲛⲁⲓ ϯⲟⲩⲱϣ ϫⲉⲕⲁⲥ ⲡⲙⲁ ⲁⲛⲟⲕ ⲉϯ ⲙⲙⲟϥ ⲛⲧⲟⲟⲩ ϩⲱⲟⲩ ⲟⲛ ⲉⲩⲉϣⲱⲡⲉ ⲛⲙⲙⲁⲓ ϫⲉⲕⲁⲥ ⲉⲩⲉⲛⲁⲩ ⲉⲡⲁⲉⲟⲟⲩ ⲉⲛⲧⲁⲕⲧⲁⲁϥ ⲛⲁⲓ ϫⲉ ⲁⲕⲙⲉⲣⲓⲧ ϩⲁ ⲑⲏ ⲛⲧⲕⲁⲧⲁⲃⲟⲗⲏ ⲙⲡⲕⲟⲥⲙⲟⲥ
25 ௨௫ நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள்.
ⲕ̅ⲉ̅ⲡⲁⲓⲱⲧ ⲡⲇⲓⲕⲁⲓⲟⲥ ⲙⲡⲉⲡⲕⲟⲥⲙⲟⲥ ⲥⲟⲩⲱⲛⲅ ⲁⲛⲟⲕ ⲇⲉ ⲁⲉⲓⲥⲟⲩⲱⲛⲅ ⲁⲩⲱ ⲛⲁⲓ ⲁⲩⲥⲟⲩⲱⲛⲧ ϫⲉ ⲛⲧⲟⲕ ⲡⲉ ⲛⲧⲁⲕⲧⲛⲛⲟⲟⲩⲧ
26 ௨௬ நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்தில் இருக்கும்படிக்கும், நானும் அவர்களில் இருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார்.
ⲕ̅ⲋ̅ⲁⲩⲱ ⲁⲓⲟⲩⲱⲛϩ ⲛⲁⲩ ⲉⲃⲟⲗ ⲙⲡⲉⲕⲣⲁⲛ ⲁⲩⲱ ⲟⲛ ϯⲛⲁⲟⲩⲟⲛϩϥ ϫⲉⲕⲁⲥ ⲧⲁⲅⲁⲡⲏ ⲉⲛⲧⲁⲕⲙⲉⲣⲓⲧ ⲛϩⲏⲧⲥ ⲉⲥⲉϣⲱⲡⲉ ϩⲣⲁⲓ ⲛϩⲏⲧⲟⲩ ⲁⲩⲱ ⲁⲛⲟⲕ ϩⲱⲱⲧ ⲟⲛ ⲛϩⲏⲧⲟⲩ