< யோவான் 16 >

1 நீங்கள் இடறல் அடையாதபடிக்கு இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.
These things have I spoken to you, that ye may not fall away.
2 அவர்கள் உங்களை ஜெப ஆலயங்களுக்கு புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்கு ஊழியம் செய்கிறவன் என்று நினைக்கும் காலம் வரும்.
They will put you out of the synagogues; yea, the hour is coming when every one that killeth you will think that he is offering sacrifice to God.
3 அவர்கள் பிதாவையும், என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச் செய்வார்கள்.
And these things will they do, because they neither know the Father nor me.
4 அந்தக் காலம் வரும்போது நான் இவைகளை உங்களுக்குச் சொன்னேன் என்று நீங்கள் நினைக்கும்படி இவைகளை உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன்; நான் உங்களோடு இருந்ததினால் ஆரம்பத்திலே இவைகளை உங்களுக்குச் சொல்லவில்லை.
But I have spoken these things to you, that, when the time cometh, ye may remember that I myself told you of them. But these things I told you not at the beginning, because I was with you.
5 இப்பொழுது நான் என்னை அனுப்பினவர் இடத்திற்குப் போகிறேன்; எங்கே போகிறீர் என்று உங்களில் ஒருவனும் என்னைக் கேட்கவில்லை.
But now I go to him that sent me; and none of you asketh me, Whither goest thou?
6 ஆனாலும் நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்களுடைய இருதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது.
But because I have spoken these things to you, sorrow hath filled your hearts.
7 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்கு நன்மையாக இருக்கும்; நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடம் வரமாட்டார்; நான் போனால் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.
But I tell you the truth; it is expedient for you that I depart. For if I do not depart, the Comforter will not come to you; but if I go, I will send him to you.
8 அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.
And when he is come, he will bring conviction to the world, of sin, and of righteousness, and of judgment.
9 அவர்கள் என்னை விசுவாசிக்காதபடியினாலே பாவத்தைக்குறித்தும்,
Of sin, because they believe not in me;
10 ௧0 நீங்கள் இனி என்னைப் பார்க்காதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும்,
of righteousness, because I go to the Father, and ye see me no more;
11 ௧௧ இந்த உலகத்தின் தலைவன் நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.
of judgment, because the prince of this world hath been judged.
12 ௧௨ இன்னும் அநேக காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாக இருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.
I have yet many things to say to you, but ye cannot bear them now.
13 ௧௩ சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, எல்லா சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சொந்தமாக பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் எல்லாவற்றையும் சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்குத் தெரிவிப்பார்.
But when he, the Spirit of truth, is come, he will guide you into all the truth. For he will not speak from himself, but whatever he shall hear, that he will speak; and he will tell you the things to come.
14 ௧௪ அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.
He will glorify me, for he will receive of what is mine, and will tell it to you.
15 ௧௫ பிதாவினுடையவைகள் அனைத்தும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்குத் தெரிவிப்பார் என்றேன்.
Every thing that the Father hath is mine. For this cause I said, that he receiveth of what is mine, and will tell it to you.
16 ௧௬ நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மீண்டும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றார்.
A little while, and ye no longer behold me; and again a little while, and ye will see me.
17 ௧௭ அப்பொழுது அவருடைய சீடர்களில் சிலர்: நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள் என்றும், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றும் அவர் நம்முடனே சொல்லுகிறதின் கருத்து என்ன என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டதும் அல்லாமல்:
Some of his disciples therefore said to one another, What is this that he saith to us, A little while, and ye behold me not, and again a little while, and ye will see me? and, Because I go to the Father?
18 ௧௮ கொஞ்சக்காலம் என்கிறாரே, இதென்ன? அவர் சொல்லுகிறது என்ன என்று நமக்குப் புரியவில்லையே என்றார்கள்.
They said therefore, What is this that he saith, A little while? We do not know what he is speaking of.
19 ௧௯ அதைக்குறித்துத் தம்மிடத்தில் கேட்கும்படி அவர்கள் விரும்புகிறதை இயேசு அறிந்து, அவர்களைப் பார்த்து: கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்று நான் சொன்னதைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே விசாரிக்கிறீர்களோ?
Jesus knew that they were desirous of asking him, and said to them, Is it of this that ye are inquiring of one another, that I said, A little while, and ye behold me not, and again a little while, and ye will See me?
20 ௨0 உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்களுடைய துக்கம் சந்தோஷமாக மாறும்.
Truly, truly do I say to you, that ye will weep and lament, but the world will rejoice; ye will be sorrowful, but your sorrow will be turned into joy.
21 ௨௧ பெண்ணானவளுக்குப் பிரசவநேரம் வரும்போது அவள் துக்கமடைகிறாள்; பிள்ளை பெற்றவுடனே ஒரு மனிதன் உலகத்தில் பிறந்தான் என்கிற சந்தோஷத்தினால் பின்பு உபத்திரவத்தை நினைக்கமாட்டாள்.
A woman when she is in travail hath sorrow, because her hour is come; but as soon as she is delivered of the child, she remembereth no more the anguish, through joy that a man is born into the world.
22 ௨௨ அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்து இருக்கிறீர்கள். நான் மீண்டும் உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்களுடைய இருதயம் சந்தோஷப்படும், உங்களுடைய சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடமிருந்து எடுத்துப்போடுவதில்லை.
So ye also now have sorrow; but I shall see you again, and your heart will rejoice, and your joy no one taketh from you.
23 ௨௩ அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றும் கேட்கமாட்டீர்கள். உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்ளுவது எதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார்.
And in that day ye will ask nothing of me. Truly, truly do I say to you, Whatever ye shall ask the Father, he will give it you in my name.
24 ௨௪ இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்களுடைய சந்தோஷம் நிறைவாக இருக்கும்படி பெற்றுக்கொள்ளுவீர்கள்.
Hitherto ye have asked nothing in my name; ask, and ye will receive, that your joy may be made full.
25 ௨௫ இவைகளை நான் உவமைகளாக உங்களோடு பேசுகிறேன்; காலம் வரும், அப்பொழுது நான் உவமைகளாக உங்களோடு பேசாமல், பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன்.
These things I have spoken to you in parables. The time is coming, when I shall no more speak to you in parables, but shall tell you plainly of the Father.
26 ௨௬ அந்த நாளில் நீங்கள் என் நாமத்தினாலே கேட்டுக்கொள்ளுவீர்கள். உங்களுக்காகப் பிதாவை நான் கேட்டுக்கொள்ளுவேன் என்று உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை.
In that day ye will ask in my name; and I do not tell you that I will pray the Father for you;
27 ௨௭ நீங்கள் என்னை நேசித்தத்தினால், நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று விசுவாசிக்கிறபடியினால் பிதா தாமே உங்களை நேசிக்கிறார்.
for the Father himself loveth you, because ye have loved me, and have believed that I came forth from God.
28 ௨௮ நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன்; மறுபடியும் உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்றார்.
I came forth from the Father, and have come into the world; again, I leave the world, and go to the Father.
29 ௨௯ அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: இதோ, இப்பொழுது நீர் உவமையாகப் பேசாமல், வெளிப்படையாக பேசுகிறீர்.
His disciples say, Lo! now thou speakest plainly, and speakest no parable.
30 ௩0 நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர் என்றும், ஒருவன் உம்மை கேள்வி கேட்க தேவை இல்லை என்றும், இப்பொழுது அறிந்திருக்கிறோம்; இதினாலே நீர் தேவனிடத்திலிருந்து வந்தீர் என்று விசுவாசிக்கிறோம் என்றார்கள்.
Now are we sure that thou knowest all things, and needest not that any one should ask thee; by this we believe that thou camest forth from God.
31 ௩௧ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்கள்.
Jesus answered them, Do ye now believe?
32 ௩௨ இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்திற்குப்போய், என்னைத் தனியே விட்டு விடும் காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனிமையாக இருக்கமாட்டேன், பிதா என்னோடு இருக்கிறார்.
Behold, the hour is coming, yea, is now come, when ye will be scattered, every one to his own, and will leave me alone; and yet I am not alone, because the Father is with me.
33 ௩௩ என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாகும்படி இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்துவிட்டேன் என்றார்.
These things I have spoken to you, that in me ye may have peace. In the world ye have tribulation; but be of good cheer; I have overcome the world.

< யோவான் 16 >