< யோவான் 14 >

1 உங்களுடைய இருதயம் கலங்காமல் இருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாக இருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாக இருங்கள்.
මනෝදුඃඛිනෝ මා භූත; ඊශ්වරේ විශ්වසිත මයි ච විශ්වසිත|
2 என் பிதாவின் வீட்டில் அநேக தங்கும் இடங்கள் இருக்கின்றன; அப்படி இல்லாமலிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு இடத்தை உங்களுக்காக ஆயத்தம் செய்யப்போகிறேன்.
මම පිතු ගෘහේ බහූනි වාසස්ථානි සන්ති නෝ චේත් පූර්ව්වං යුෂ්මාන් අඥාපයිෂ්‍යං යුෂ්මදර්ථං ස්ථානං සජ්ජයිතුං ගච්ඡාමි|
3 நான் போய் உங்களுக்காக இடத்தை ஆயத்தம்செய்தபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.
යදි ගත්වාහං යුෂ්මන්නිමිත්තං ස්ථානං සජ්ජයාමි තර්හි පනරාගත්‍ය යුෂ්මාන් ස්වසමීපං නේෂ්‍යාමි, තතෝ යත්‍රාහං තිෂ්ඨාමි තත්‍ර යූයමපි ස්ථාස්‍යථ|
4 நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார்.
අහං යත්ස්ථානං බ්‍රජාමි තත්ස්ථානං යූයං ජානීථ තස්‍ය පන්ථානමපි ජානීථ|
5 தோமா அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான்.
තදා ථෝමා අවදත්, හේ ප්‍රභෝ භවාන් කුත්‍ර යාති තද්වයං න ජානීමඃ, තර්හි කථං පන්ථානං ඥාතුං ශක්නුමඃ?
6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாக இருக்கிறேன்; என்னாலே அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
යීශුරකථයද් අහමේව සත්‍යජීවනරූපපථෝ මයා න ගන්තා කෝපි පිතුඃ සමීපං ගන්තුං න ශක්නෝති|
7 என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைப் பார்த்தும் இருக்கிறீர்கள் என்றார்.
යදි මාම් අඥාස්‍යත තර්හි මම පිතරමප්‍යඥාස්‍යත කින්ත්වධුනාතස්තං ජානීථ පශ්‍යථ ච|
8 பிலிப்பு அவரைப் பார்த்து: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்.
තදා ඵිලිපඃ කථිතවාන්, හේ ප්‍රභෝ පිතරං දර්ශය තස්මාදස්මාකං යථේෂ්ටං භවිෂ්‍යති|
9 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைப் பார்த்தவன் பிதாவைப் பார்த்தான்; அப்படி இருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?
තතෝ යීශුඃ ප්‍රත්‍යාවාදීත්, හේ ඵිලිප යුෂ්මාභිඃ සාර්ද්ධම් ඒතාවද්දිනානි ස්ථිතමපි මාං කිං න ප්‍රත්‍යභිජානාසි? යෝ ජනෝ මාම් අපශ්‍යත් ස පිතරමප්‍යපශ්‍යත් තර්හි පිතරම් අස්මාන් දර්ශයේති කථාං කථං කථයසි?
10 ௧0 நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களோடு சொல்லுகிற வசனங்களை நானாகவே சொல்லவில்லை; எனக்குள் வாழ்கிற பிதாவானவரே இந்த செயல்களைச்செய்து வருகிறார்.
අහං පිතරි තිෂ්ඨාමි පිතා මයි තිෂ්ඨතීති කිං ත්වං න ප්‍රත්‍යෂි? අහං යද්වාක්‍යං වදාමි තත් ස්වතෝ න වදාමි කින්තු යඃ පිතා මයි විරාජතේ ස ඒව සර්ව්වකර්ම්මාණි කරාති|
11 ௧௧ நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படி இல்லாவிட்டாலும் என்னுடைய செயல்களினாலாவது என்னை நம்புங்கள்.
අතඒව පිතර‍්‍ය්‍යහං තිෂ්ඨාමි පිතා ච මයි තිෂ්ඨති මමාස්‍යාං කථායාං ප්‍රත්‍යයං කුරුත, නෝ චේත් කර්ම්මහේතෝඃ ප්‍රත්‍යයං කුරුත|
12 ௧௨ உண்மையாகவே உண்மையாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற செயல்களைத் தானும் செய்வான், இவைகளைவிடப் பெரிய செயல்களையும் செய்வான்.
අහං යුෂ්මානතියථාර්ථං වදාමි, යෝ ජනෝ මයි විශ්වසිති සෝහමිව කර්ම්මාණි කරිෂ්‍යති වරං තතෝපි මහාකර්ම්මාණි කරිෂ්‍යති යතෝ හේතෝරහං පිතුඃ සමීපං ගච්ඡාමි|
13 ௧௩ நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படி அதைச் செய்வேன்.
යථා පුත්‍රේණ පිතු ර්මහිමා ප්‍රකාශතේ තදර්ථං මම නාම ප්‍රෝච්‍ය යත් ප්‍රාර්ථයිෂ්‍යධ්වේ තත් සඵලං කරිෂ්‍යාමි|
14 ௧௪ என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.
යදි මම නාම්නා යත් කිඤ්චිද් යාචධ්වේ තර්හි තදහං සාධයිෂ්‍යාමි|
15 ௧௫ நீங்கள் என்னிடத்தில் அன்பாக இருந்தால் என் கட்டளைகளைக் கடைபிடியுங்கள்.
යදි මයි ප්‍රීයධ්වේ තර්හි මමාඥාඃ සමාචරත|
16 ௧௬ நான் பிதாவை கேட்டுக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களோடு இருக்கும்படி சத்திய ஆவியானவராகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தருவார். (aiōn g165)
තතෝ මයා පිතුඃ සමීපේ ප්‍රාර්ථිතේ පිතා නිරන්තරං යුෂ්මාභිඃ සාර්ද්ධං ස්ථාතුම් ඉතරමේකං සහායම් අර්ථාත් සත්‍යමයම් ආත්මානං යුෂ්මාකං නිකටං ප්‍රේෂයිෂ්‍යති| (aiōn g165)
17 ௧௭ உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைப் பார்க்காமலும், அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களோடு தங்கி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.
ඒතජ්ජගතෝ ලෝකාස්තං ග්‍රහීතුං න ශක්නුවන්ති යතස්තේ තං නාපශ්‍යන් නාජනංශ්ච කින්තු යූයං ජානීථ යතෝ හේතෝඃ ස යුෂ්මාකමන්ත ර්නිවසති යුෂ්මාකං මධ්‍යේ ස්ථාස්‍යති ච|
18 ௧௮ நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன், உங்களிடம் வருவேன்.
අහං යුෂ්මාන් අනාථාන් කෘත්වා න යාස්‍යාමි පුනරපි යුෂ්මාකං සමීපම් ආගමිෂ්‍යාමි|
19 ௧௯ இன்னும் கொஞ்சக்காலத்தில் உலகம் என்னைப் பார்க்காது, நீங்களோ என்னைப் பார்ப்பீர்கள்; நான் பிழைக்கிறபடி நீங்களும் பிழைப்பீர்கள்.
කියත්කාලරත් පරම් අස්‍ය ජගතෝ ලෝකා මාං පුන ර්න ද්‍රක්‍ෂ්‍යන්ති කින්තු යූයං ද්‍රක්‍ෂ්‍යථ; අහං ජීවිෂ්‍යාමි තස්මාත් කාරණාද් යූයමපි ජීවිෂ්‍යථ|
20 ௨0 நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்த நாளிலே நீங்கள் அறிவீர்கள்.
පිතර‍්‍ය්‍යහමස්මි මයි ච යූයං ස්ථ, තථාහං යුෂ්මාස්වස්මි තදපි තදා ඥාස්‍යථ|
21 ௨௧ என் கட்டளைகளை ஏற்றுக்கொண்டு அவைகளைக் கடைபிடிக்கிறவனே என்னிடத்தில் அன்பாக இருக்கிறான், என்னிடத்தில் அன்பாக இருக்கிறவன்மேல் என் பிதா அன்பாக இருப்பார்; நானும் அவன்மேல் அன்பாக இருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.
යෝ ජනෝ මමාඥා ගෘහීත්වා තා ආචරති සඒව මයි ප්‍රීයතේ; යෝ ජනශ්ච මයි ප්‍රීයතේ සඒව මම පිතුඃ ප්‍රියපාත්‍රං භවිෂ්‍යති, තථාහමපි තස්මින් ප්‍රීත්වා තස්මෛ ස්වං ප්‍රකාශයිෂ්‍යාමි|
22 ௨௨ ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவன் அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் உலகத்திற்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப்போகிற காரணம் என்ன என்றான்.
තදා ඊෂ්කරියෝතීයාද් අන්‍යෝ යිහූදාස්තමවදත්, හේ ප්‍රභෝ භවාන් ජගතෝ ලෝකානාං සන්නිධෞ ප්‍රකාශිතෝ න භූත්වාස්මාකං සන්නිධෞ කුතඃ ප්‍රකාශිතෝ භවිෂ්‍යති?
23 ௨௩ இயேசு அவனுக்கு மறுமொழியாக: ஒருவன் என்னில் அன்பாக இருந்தால் அவன் என் வார்த்தையைக் கடைப்பிடிப்பான், அவனில் என் பிதா அன்பாக இருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனுடன் குடிகொள்ளுவோம்.
තතෝ යීශුඃ ප්‍රත්‍යුදිතවාන්, යෝ ජනෝ මයි ප්‍රීයතේ ස මමාඥා අපි ගෘහ්ලාති, තේන මම පිතාපි තස්මින් ප්‍රේෂ්‍යතේ, ආවාඤ්ච තන්නිකටමාගත්‍ය තේන සහ නිවත්ස්‍යාවඃ|
24 ௨௪ என்னில் அன்பாக இல்லாதவன் என் வார்த்தைகளைக் கடைப்பிடிக்கமாட்டான். நீங்கள் கேட்கிற வார்த்தை என்னுடையதாக இல்லாமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாக இருக்கிறது.
යෝ ජනෝ මයි න ප්‍රීයතේ ස මම කථා අපි න ගෘහ්ලාති පුනශ්ච යාමිමාං කථාං යූයං ශෘණුථ සා කථා කේවලස්‍ය මම න කින්තු මම ප්‍රේරකෝ යඃ පිතා තස්‍යාපි කථා|
25 ௨௫ நான் உங்களோடு தங்கியிருக்கும்போது இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.
ඉදානීං යුෂ්මාකං නිකටේ විද්‍යමානෝහම් ඒතාඃ සකලාඃ කථාඃ කථයාමි|
26 ௨௬ என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியானவராகிய தேற்றரவாளன் எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைவுபடுத்துவார்.
කින්ත්විතඃ පරං පිත්‍රා යඃ සහායෝ(අ)ර්ථාත් පවිත්‍ර ආත්මා මම නාම්නි ප්‍රේරයිෂ්‍යති ස සර්ව්වං ශික්‍ෂයිත්වා මයෝක්තාඃ සමස්තාඃ කථා යුෂ්මාන් ස්මාරයිෂ්‍යති|
27 ௨௭ சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன், என்னுடைய சாமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபடி நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்களுடைய இருதயம் கலங்காமலும், பயப்படாமலும் இருப்பதாக.
අහං යුෂ්මාකං නිකටේ ශාන්තිං ස්ථාපයිත්වා යාමි, නිජාං ශාන්තිං යුෂ්මභ්‍යං දදාමි, ජගතෝ ලෝකා යථා දදාති තථාහං න දදාමි; යුෂ්මාකම් අන්තඃකරණානි දුඃඛිතානි භීතානි ච න භවන්තු|
28 ௨௮ நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடம் வருவேன் என்றும் நான் உங்களுக்குச் சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாக இருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்று நான் சொன்னதைக்குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனென்றால், என் பிதா என்னைவிட பெரியவராக இருக்கிறார்.
අහං ගත්වා පුනරපි යුෂ්මාකං සමීපම් ආගමිෂ්‍යාමි මයෝක්තං වාක්‍යමිදං යූයම් අශ්‍රෞෂ්ට; යදි මය්‍යප්‍රේෂ්‍යධ්වං තර්හ්‍යහං පිතුඃ සමීපං ගච්ඡාමි මමාස්‍යාං කථායාං යූයම් අහ්ලාදිෂ්‍යධ්වං යතෝ මම පිතා මත්තෝපි මහාන්|
29 ௨௯ இது நடக்கும்போது நீங்கள் விசுவாசிக்கும்படியாக, நடப்பதற்கு முன்னமே இதை உங்களுக்குச் சொன்னேன்.
තස්‍යා ඝටනායාඃ සමයේ යථා යුෂ්මාකං ශ්‍රද්ධා ජායතේ තදර්ථම් අහං තස්‍යා ඝටනායාඃ පූර්ව්වම් ඉදානීං යුෂ්මාන් ඒතාං වාර්ත්තාං වදාමි|
30 ௩0 இனி நான் உங்களோடு அதிகமாக பேசுவதில்லை. இந்த உலகத்தின் தலைவன் வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.
ඉතඃ පරං යුෂ්මාභිඃ සහ මම බහව ආලාපා න භවිෂ්‍යන්ති යතඃ කාරණාද් ඒතස්‍ය ජගතඃ පතිරාගච්ඡති කින්තු මයා සහ තස්‍ය කෝපි සම්බන්ධෝ නාස්ති|
31 ௩௧ நான் பிதாவில் அன்பாக இருக்கிறேன் என்றும், பிதா எனக்குக் கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும். எழுந்திருங்கள், இந்த இடத்தைவிட்டுப் போவோம் வாருங்கள் என்றார்.
අහං පිතරි ප්‍රේම කරෝමි තථා පිතු ර්විධිවත් කර්ම්මාණි කරෝමීති යේන ජගතෝ ලෝකා ජානන්ති තදර්ථම් උත්තිෂ්ඨත වයං ස්ථානාදස්මාද් ගච්ඡාම|

< யோவான் 14 >