< யோவேல் 3 >
1 ௧ இதோ, யூதாவிற்கும் எருசலேமிற்கும் ஏற்பட்டிருக்கிற சிறையிருப்பை நான் திருப்பும் அந்நாட்களிலும் அக்காலத்திலும்,
Oto bowiem w tych dniach i w tym czasie, gdy odwrócę niewolę ludu Judy i Jerozolimy;
2 ௨ நான் எல்லா தேசத்தாரையும் கூட்டி, யோசபாத்தின் பள்ளத்தாக்கிலே அவர்களை இறங்கிப்போகச் செய்வேன், அவர்கள் என் மக்களையும் இஸ்ரவேலென்னும் என் பங்கையும் அந்நியமக்களுக்குள்ளே சிதறடித்து என் தேசத்தைப் பங்கிட்டுக்கொண்டதினால்,
Zgromadzę też wszystkie narody i sprowadzę je do Doliny Jehoszafata, i będę tam z nimi rozprawiał o swoim ludzie i o swoim dziedzictwie Izraela, które rozproszyły wśród narodów i podzieliły moją ziemię.
3 ௩ அவர்கள் என் மக்கள்பேரில் சீட்டுப்போட்டு, ஆண்குழந்தைகளை விபச்சாரிகளுக்கு விலையாகக் கொடுத்து, மதுபானம் குடிப்பதற்காக பெண் குழந்தைகளைத் திராட்சைரசத்திற்கு விலையாகக் கொடுத்ததினாலும், அங்கே அவர்களோடு வழக்காடுவேன்.
O mój lud rzucały los, dawały chłopca za nierządnicę i dziewczynę sprzedawały za wino, aby piły.
4 ௪ தீருவே, சீதோனே, பெலிஸ்தியாவின் அனைத்து எல்லைகளே, உங்களுக்கும் எனக்கும் என்ன? இப்படி எனக்குச் சரிக்கட்டுகிறீர்களோ? இப்படி எனக்குச் சரிக்கட்டுவீர்களாகில், நான் தாமதமில்லாமல் மிகவேகமாக நீங்கள் சரிகட்டுகிறதை உங்கள் தலையின்மேல் திரும்பும்படிச் செய்வேன்.
Ale wy cóż macie przeciwko mnie, Tyrze i Sydonie, oraz wszystkie granice filistyńskie? Czy chcecie dać mi odpłatę? Jeśli mi odpłacicie, to prędko i niezwłocznie i ja zwrócę waszą odpłatę na waszą głowę;
5 ௫ நீங்கள் என்னுடைய வெள்ளியையும் பொன்னையும் எடுத்து, இன்பமும் உயர்ந்ததுமான என் பொருட்களை உங்கள் கோவில்களிலே கொண்டுபோய்,
Gdyż zabraliście moje srebro i złoto, a moje wspaniałe klejnoty wnieśliście do swoich świątyń;
6 ௬ யூதாவின் மக்களையும் எருசலேமின் மக்களையும் அவர்களுடைய எல்லைகளுக்குத் தூரமாக்கும்படிக்கு, கிரேக்கரிடத்தில் விற்றுப்போட்டீர்கள்.
A synów Judy i synów Jerozolimy sprzedaliście Grekom, by ich oddalić od ich granic.
7 ௭ இதோ, நீங்கள் அவர்களை விற்றுப்போட்ட அவ்விடத்திலிருந்து நான் அவர்களை எழும்பிவரச்செய்து, நீங்கள் சரிக்கட்டினதை உங்கள் தலையின்மேல் திரும்பும்படி செய்து,
Oto wzbudzę ich z tego miejsca, do którego ich sprzedaliście, i zwrócę waszą zapłatę na waszą głowę;
8 ௮ உங்கள் மகன்களையும், மகள்களையும் யூதா மக்களின் கையிலே விற்பேன்; இவர்கள் அவர்களைத் தூரதேசத்தார்களாகிய சபேயரிடத்தில் விற்றுப்போடுவார்கள்; யெகோவா இதைச் சொன்னார்.
I sprzedam waszych synów i wasze córki w ręce synów Judy, a oni sprzedadzą ich Sabejczykom, narodowi dalekiemu. Tak bowiem PAN powiedział.
9 ௯ இதை அந்நியமக்களுக்குள்ளே அறிவியுங்கள்; போருக்கு ஆயத்தம்செய்யுங்கள்; பராக்கிரமசாலிகளை எழுப்புங்கள்; போர்வீரர்கள் எல்லோரும் சேர்ந்து ஏறிவரட்டும்.
Rozgłoście to wśród pogan, ogłoście wojnę, pobudźcie wojowników, niech przybędą [i] niech wyruszą wszyscy mężowie waleczni.
10 ௧0 உங்கள் மண்வெட்டிகளைப் பட்டயங்களாகவும், உங்கள் அரிவாள்களை ஈட்டிகளாகவும் அடியுங்கள்; பலவீனனும் தன்னைப் பலவான் என்று சொல்வானாக.
Przekujcie wasze lemiesze na miecze, a wasze sierpy na oszczepy; kto słaby, niech powie: Jestem silny.
11 ௧௧ சகல மக்களே, நீங்கள் சுற்றிலுமிருந்து ஒன்றாக வந்து கூடுங்கள்; யெகோவாவே, நீரும் அங்கே உம்முடைய பராக்கிரமசாலிகளை இறங்கிவரச்செய்வீராக.
Zgromadźcie się i przyjdźcie, wszystkie okoliczne narody – zbierzcie się. Sprowadź tam, PANIE, swoich wojowników.
12 ௧௨ மக்கள் எழும்பி யோசபாத்தின் பள்ளத்தாக்கிற்கு வருவார்களாக; சுற்றிலுமுள்ள மக்களை நியாயந்தீர்க்க அங்கே நான் வீற்றிருப்பேன்.
Niech poganie się ockną i nadciągną na Dolinę Jehoszafata. Tam bowiem zasiądę, aby sądzić wszystkie okoliczne narody.
13 ௧௩ பயிர் முற்றியது, அரிவாளை நீட்டி அறுங்கள், வந்து இறங்குங்கள்; ஆலை நிரம்பியிருக்கிறது, ஆலையின் தொட்டிகள் வழிந்தோடுகிறது; அவர்களுடைய ஒழுக்கக்கேடு பெரியது.
Zapuśćcie sierp, bo dojrzało żniwo. Pójdźcie i zstąpcie, bo tłocznia jest pełna, kadzie przelewają się, bo ich zło [jest] wielkie.
14 ௧௪ நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே மக்கள் திரள்திரளாக இருக்கிறார்கள்; நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே யெகோவாவின் நாள் சமீபமாயிருக்கிறது.
Tłumy, tłumy w dolinie wyroku. Bliski bowiem jest dzień PANA w dolinie wyroku.
15 ௧௫ சூரியனும், சந்திரனும் இருண்டுபோகும், நட்சத்திரங்கள் ஒளிமங்கும்.
Słońce i księżyc się zaćmią i gwiazdy stracą swój blask.
16 ௧௬ யெகோவா சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; வானமும் பூமியும் அதிரும்; ஆனாலும் யெகோவா தமது மக்களுக்கு அடைக்கலமும் இஸ்ரவேல் மக்களுக்கு பாதுகாப்பான கோட்டையுமாக இருப்பார்.
I PAN zagrzmi z Syjonu, a z Jerozolimy wyda swój głos, tak że zadrżą niebiosa i ziemia. Ale PAN będzie ucieczką dla swego ludu i siłą synów Izraela.
17 ௧௭ என் பரிசுத்த மலையாகிய சீயோனிலே வாசமாயிருக்கிற நான் உங்கள் தேவனாகிய யெகோவா என்று அப்பொழுது அறிந்துகொள்வீர்கள்; அப்பொழுது எருசலேம் பரிசுத்தமாக இருக்கும்; அந்நியர்கள் இனி அதைக் கடந்துபோவதில்லை.
I poznacie, że ja jestem PANEM, waszym Bogiem, który mieszka na Syjonie, mojej świętej górze. I Jerozolima stanie się święta, a obcy już nie będą przez nią przechodzić.
18 ௧௮ அக்காலத்தில் மலைகள் திராட்சைரசத்தைப் பொழியும், மலைகள் பாலாக ஓடும், யூதாவின் ஆறுகள் எல்லாம் கரைபுரண்டு ஓடும்; ஒரு ஊற்று யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து புறப்பட்டு சித்தீம் என்னும் பள்ளத்தாக்கை நீர்ப்பாய்ச்சலாக்கும்.
I stanie się w tym dniu, że góry będą kropić moszczem, pagórki opływać mlekiem i wszystkie strumienie Judy napełnią się wodą, a z domu PANA wyjdzie źródło, które nawodni dolinę Sittim.
19 ௧௯ யூதா மக்களின் தேசத்திலே குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தி, அவர்களுக்குச் செய்த கொடுமையின் காரணமாக எகிப்து பாழாய்ப்போகும், ஏதோம் பாழான வனாந்திரமாகும்.
Egipt zostanie spustoszony, a ziemia Edom zamieni się w opustoszałe pustkowie z powodu przemocy wyrządzonej synom Judy, bo przelewali niewinną krew w ich ziemi.
20 ௨0 ஆனால் யூதாவோ நீண்டகாலமாகவும், எருசலேம் தலைமுறை தலைமுறையாகவும் குடியேற்றப்பட்டிருக்கும்.
Ale Juda będzie trwać na wieki, a Jerozolima – z pokolenia na pokolenie.
21 ௨௧ நான் தண்டிக்காமல் விட்டிருந்த அவர்களுடைய இரத்தப்பழியை தண்டிக்காமல் விடமாட்டேன்; யெகோவா சீயோனிலே வாசமாயிருக்கிறார்.
I oczyszczę tych, [których] krwi nie oczyściłem. PAN bowiem mieszka na Syjonie.