< யோபு 7 >
1 ௧ பூமியிலே பாடுபட மனிதனுக்குக் குறிக்கப்பட்ட காலம் உண்டல்லவோ? அவனுடைய நாட்கள் ஒரு கூலிக்காரன் நாட்களைப்போல் இருக்கிறதல்லவோ?
人在世上豈無爭戰嗎? 他的日子不像雇工人的日子嗎?
2 ௨ ஒரு வேலையாள் நிழலை விரும்பி, ஒரு கூலிக்காரன் தன் கூலியை வரப்பார்த்திருக்கிறதுபோல,
像奴僕切慕黑影, 像雇工人盼望工價;
3 ௩ மாயையான மாதங்கள் என்னுடைய சொந்தமாகி, பிரச்சனையான இரவுகள் எனக்குக் குறிக்கப்பட்டது.
我也照樣經過困苦的日月, 夜間的疲乏為我而定。
4 ௪ நான் படுத்துக்கொள்ளுகிறபோது, எப்பொழுது எழுந்திருப்பேன்? இரவு எப்பொழுது முடியும் என்று சொல்லி, விடியும்வரை உருண்டு புரளுகிறதினால் எனக்குப் போதுமென்றுபோகிறது.
我躺臥的時候便說: 我何時起來,黑夜就過去呢? 我盡是反來覆去,直到天亮。
5 ௫ என் உடல் பூச்சிகளினாலும், அடைபற்றின புழுதியினாலும் மூடப்பட்டிருக்கிறது; என் தோல் வெடித்து அருவருப்பாயிற்று.
我的肉體以蟲子和塵土為衣; 我的皮膚才收了口又重新破裂。
6 ௬ என் நாட்கள் நெய்கிறவன் எறிகிற நாடாவிலும் தீவிரமாக ஓடுகிறது; அவைகள் நம்பிக்கையில்லாமல் முடிந்துபோகும்.
我的日子比梭更快, 都消耗在無指望之中。
7 ௭ என் உயிர் காற்றைப்போலிருக்கிறதென்றும், என் கண்கள் இனி நன்மையைக் காணப்போகிறதில்லையென்றும் நினைத்தருளும்.
求你想念,我的生命不過是一口氣; 我的眼睛必不再見福樂。
8 ௮ இப்போது என்னைக் காண்கிறவர்களின் கண்கள் இனி என்னைக் காண்பதில்லை; உம்முடைய கண்கள் என்மேல் நோக்கமாயிருக்கிறது; நானோ இல்லாமற்போகிறேன்.
觀看我的人,他的眼必不再見我; 你的眼目要看我,我卻不在了。
9 ௯ மேகம் பறந்துபோகிறதுபோல, பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரமாட்டான். (Sheol )
雲彩消散而過; 照樣,人下陰間也不再上來。 (Sheol )
10 ௧0 இனி தன் வீட்டிற்குத் திரும்பமாட்டான், அவனுடைய இடம் இனி அவனை அறியாது.
他不再回自己的家; 故土也不再認識他。
11 ௧௧ ஆகையால் நான் என் வாயை அடக்காமல், என் ஆவியின் வேதனையினால் பேசி, என் ஆத்துமாவின் கசப்பினால் அங்கலாய்ப்பேன்.
我不禁止我口; 我靈愁苦,要發出言語; 我心苦惱,要吐露哀情。
12 ௧௨ தேவரீர் என்மேல் காவல் வைக்கிறதற்கு நான் சமுத்திரமோ? நான் ஒரு திமிங்கிலமோ?
我對上帝說:我豈是洋海, 豈是大魚,你竟防守我呢?
13 ௧௩ என் கட்டில் எனக்கு ஆறுதல் கொடுக்கும் என்றும், என் படுக்கை என் தவிப்பை ஆற்றும் என்றும் நான் சொல்வேன் என்றால்,
若說:我的床必安慰我, 我的榻必解釋我的苦情,
14 ௧௪ நீர் கனவுகளால் என்னைக் கலங்கவைத்து, தரிசனங்களால் எனக்கு பயமுண்டாக்குகிறீர்.
你就用夢驚駭我, 用異象恐嚇我,
15 ௧௫ அதினால் என் ஆத்துமா, நெருக்கப்பட்டு சாகிறதையும், என் எலும்புகளுடன் உயிரோடிருக்கிறதைவிட, மரணத்தையும் விரும்புகிறது.
甚至我寧肯噎死,寧肯死亡, 勝似留我這一身的骨頭。
16 ௧௬ இப்படியிருக்கிறதை வெறுக்கிறேன்; எந்நாளும் உயிரோடிருக்க விரும்பமாட்டேன், என்னை விட்டுவிடும்; என் நாட்கள் மாயைதானே.
我厭棄性命,不願永活。 你任憑我吧,因我的日子都是虛空。
17 ௧௭ மனிதனை நீர் ஒரு பொருட்டாக நினைக்கிறதற்கும், அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும்,
人算甚麼,你竟看他為大, 將他放在心上?
18 ௧௮ காலைதோறும் அவனை விசாரிக்கிறதற்கும், நிமிடந்தோறும் அவனைச் சோதிக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?
每早鑒察他, 時刻試驗他?
19 ௧௯ நான் என் உமிழ்நீரை விழுங்காமல் எத்தனைகாலம் என்னை நெகிழாமலும், என்னை விடாமலும் இருப்பீர்.
你到何時才轉眼不看我, 才任憑我咽下唾沫呢?
20 ௨0 மனிதர்களைக் காப்பவரே, பாவம்செய்தேனானால் உமக்கு நான் செய்யவேண்டியது என்ன? நான் எனக்குத்தானே பாரமாயில்லாமல், நீர் என்னை உமக்குக் குறியாக வைத்தது என்ன?
鑒察人的主啊,我若有罪,於你何妨? 為何以我當你的箭靶子, 使我厭棄自己的性命?
21 ௨௧ என் மீறுதலை நீர் மன்னிக்காமலும், என் அக்கிரமத்தை நீக்காமலும் இருக்கிறது என்ன? இப்பொழுதே மண்ணில் படுத்துக்கொள்வேன்; விடியற்காலத்திலே என்னைத் தேடுவீரானால் நான் இருக்கமாட்டேன்” என்றான்.
為何不赦免我的過犯, 除掉我的罪孽? 我現今要躺臥在塵土中; 你要殷勤地尋找我,我卻不在了。