< யோபு 5 >
1 ௧ “இப்போது கூப்பிடும், உமக்கு பதில் கொடுப்பவர் உண்டோ என்று பார்ப்போம்? பரிசுத்தவான்களில் யாரை நோக்கிப் பார்ப்பீர்?
૧“હવે હાંક માર; તને જવાબ આપનાર કોઈ છે ખરું? તું હવે ક્યા પવિત્રને શરણે જશે?
2 ௨ கோபம் மூடனைக் கொல்லும்; பொறாமை புத்தியில்லாதவனை அழிக்கும்.
૨કેમ કે ક્રોધ મૂર્ખ માણસને મારી નાખે છે; ઈર્ષ્યા મૂર્ખનો જીવ લે છે.
3 ௩ மூடன் ஒருவன் வேரூன்றுகிறதை நான் கண்டு உடனே அவனுடைய குடியிருக்கும் இடத்தைச் சபித்தேன்.
૩મેં મૂર્ખ વ્યક્તિને મૂળ નાખતાં જોયો છે, પણ પછી અચાનક મેં તેના ઘરને શાપ દીધો.
4 ௪ அவனுடைய பிள்ளைகள் காப்பாற்றுவதற்குத் தூரமாகி, காப்பாற்றுவாரில்லாமல், வாசலிலே நொறுக்கப்பட்டார்கள்.
૪તેનાં સંતાનો સહીસલામત નથી, તેઓ ભાગળમાં કચડાય છે. અને તેઓનો બચાવ કરે એવું કોઈ નથી.
5 ௫ பசித்தவன் அவனுடைய விளைச்சலை முட்செடிகளுக்குள் இருந்து பறித்துச் சாப்பிட்டான்; பேராசைக்காரன் அவனுடைய செல்வத்தை விழுங்கினான்.
૫તેઓનો પાક ભૂખ્યા લોકો ખાઈ જાય છે, વળી કાંટાઓમાંથી પણ તેઓ તે લઈ જાય છે. તેઓની સંપત્તિ લોભીઓ ગળી જાય છે.
6 ௬ தீமை புழுதியிலிருந்து உண்டாகிறதுமில்லை; வருத்தம் மண்ணிலிருந்து முளைக்கிறதுமில்லை.
૬કેમ કે વિપત્તિઓ ધૂળમાંથી બહાર આવતી નથી. અને મુશ્કેલીઓ જમીનમાંથી ઊગતી નથી.
7 ௭ தீப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல, மனிதன் வருத்தம் அநுபவிக்கப் பிறந்திருக்கிறான்.
૭પરંતુ જેમ ચિનગારીઓ ઊંચી ઊડે છે. તેવી જ રીતે મનુષ્ય સંકટને સારુ સૃજાયેલું છે.
8 ௮ ஆனாலும் நான் தேவனை நாடி, என் நியாயத்தை தேவனிடத்தில் ஒப்படைப்பேன்.
૮છતાં હું ઈશ્વરને શોધું અને મારી બાબત ઈશ્વરને સોંપું.
9 ௯ ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.
૯તેઓ મોટાં અને અગમ્ય કાર્યો કરે છે તથા અગણિત અદ્દભુત કાર્યો કરે છે.
10 ௧0 தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து, துக்கிக்கிறவர்களை காப்பாற்றி உயர்த்துகிறார்.
૧૦તે પૃથ્વી પર વરસાદ વરસાવે છે, અને ખેતરોમાં જળ પહોંચાડે છે.
11 ௧௧ அவர் பூமியின்மேல் மழையை பெய்யவைத்து, வெளிநிலங்களின்மேல் தண்ணீர்களை வருவிக்கிறார்.
૧૧તે સામાન્ય માણસને માનવંતા બનાવે છે; તથા શોકાતુરોને ઊંચે ચઢાવીને સલામત રાખે છે.
12 ௧௨ தந்திரக்காரரின் கைகள் காரியத்தை முழுவதும் செய்துமுடிக்காமல் இருக்க, அவர்களுடைய திட்டங்களை அவர் பொய்யாக்குகிறார்.
૧૨તે ચાલાક, પ્રપંચી લોકોની યોજનાઓને એવી રદ કરે છે કે, જેથી તેઓના હાથથી તેમનાં ધારેલાં કાર્યો થઈ શકતાં નથી.
13 ௧௩ அவர் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார்; தந்திரக்காரரின் ஆலோசனை கட்டப்படும்.
૧૩કપટી લોકોને તે પોતાના જ છળકપટમાં ગૂંચવી નાખે છે. અને દુષ્ટ માણસોના મનસૂબાનો નાશ કરે છે.
14 ௧௪ அவர்கள் பகற்காலத்திலே இருளுக்குள்ளாகி, மத்தியான வேளையிலே இரவில் தடவுகிறதுபோல தடவி அலைகிறார்கள்.
૧૪ધોળે દહાડે તેઓને અંધકાર દેખાય છે, અને ખરે બપોરે તેઓ રાતની જેમ ફાંફાં મારે છે.
15 ௧௫ ஆனாலும் எளியவனை அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்திற்கும், பெலவானின் கைக்கும் தடுத்து காப்பாற்றுகிறார்.
૧૫પણ તે લાચારને તેઓની તલવારથી અને તે દરિદ્રીઓને બળવાનના હાથથી બચાવે છે.
16 ௧௬ அதினால் தரித்திரனுக்கு நம்பிக்கை உண்டு; தீமையானது தன் வாயை மூடும்.
૧૬તેથી ગરીબને આશા રહે છે, અને દુષ્ટોનું મોં ચૂપ કરે છે.
17 ௧௭ இதோ, தேவன் தண்டிக்கிற மனிதன் பாக்கியவான்; ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும்.
૧૭જુઓ, જે માણસને ઈશ્વર શિક્ષા કરે છે. તેને ધન્ય છે, માટે તું સર્વસમર્થની શિક્ષાને તુચ્છ ન ગણ.
18 ௧௮ அவர் காயப்படுத்திக் காயம் கட்டுகிறார்; அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது.
૧૮કેમ કે તે દુ: ખી કરે છે અને તે જ પાટો બાંધે છે; તે ઘાયલ કરે છે અને તેમના હાથ તેને સાજા કરે છે.
19 ௧௯ ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை விலக்கிக்காப்பார்; ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது.
૧૯છ સંકટમાંથી તે તને બચાવશે, હા, સાતમાંથી તને કંઈ નુકસાન થશે નહિ.
20 ௨0 பஞ்சகாலத்திலே அவர் உம்மை மரணத்திற்கும், போரிலே பட்டயத்தின் வெட்டுக்கும் விலக்கிக்காப்பார்.
૨૦તે તને દુકાળમાં મૃત્યુમાંથી; અને યુદ્ધમાં તલવારના ત્રાસમાંથી બચાવી લેશે.
21 ௨௧ நாவின் சவுக்குக்கும் மறைக்கப்படுவீர்; அழிவு வரும்போதும் பயப்படாமலிருப்பீர்.
૨૧જીભના તીક્ષ્ણ મારથી તે તારું રક્ષણ કરશે. અને આફતની સામે પણ તું નિર્ભય રહીશ.
22 ௨௨ அழிவையும் பஞ்சத்தையும் பார்த்து சிரிப்பீர்கள்; காட்டுமிருகங்களுக்கும் பயப்படாமலிருப்பீர்கள்.
૨૨વિનાશ અને દુકાળને તું હસી કાઢીશ. અને પૃથ્વી પરનાં હિંસક પશુઓથી તું ડરીશ નહિ.
23 ௨௩ வெளியின் கற்களுடனும் உமக்கு உடன்படிக்கையிருக்கும்; வெளியின் மிருகங்களும் உம்முடன் சமாதானமாயிருக்கும்.
૨૩તારા ખેતરના પથ્થરો પણ તારા સંપીલા મિત્રો બનશે. પૃથ્વી પરનાં જંગલી જાનવરોથી પણ તું બીશે નહિ.
24 ௨௪ உம்முடைய குடியிருப்பு சமாதானத்துடன் இருக்கக் காண்பீர்; உம்முடைய குடியிருக்கும் இடத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர்.
૨૪તને ખાતરી થશે કે તારો તંબુ સુરક્ષિત છે. અને તું તારા પોતાના વાડાને તપાસી જોશે, તો તને કશું ખોવાયેલું જોવા મળશે નહિ.
25 ௨௫ உம்முடைய சந்ததி பெருகி, உம்முடைய சந்ததியார் பூமியின் தாவரங்களைப்போல இருப்பார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள்.
૨૫તને ખાતરી થશે કે મારે પુષ્કળ સંતાનો છે, અને પૃથ્વી પરના ઘાસની જેમ તારા વંશજો પણ ઘણા થશે.
26 ௨௬ தானியம் ஏற்றகாலத்திலே களஞ்சியத்தில் சேருகிறதுபோல, முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர்.
૨૬જેમ પાકેલા ધાન્યનો પૂળો તેની મોસમે ઘરે લવાય છે. તેમ તું તારી પાકી ઉંમરે કબરમાં જઈશ.
27 ௨௭ இதோ, நாங்கள் ஆராய்ந்து அறிந்தது இதுதான்; காரியம் இப்படியிருக்கிறது; இதை நீர் கேட்டு உமக்கு நன்மையுண்டாக அறிந்துகொள்ளும்” என்றான்.
૨૭જુઓ, અમે એ વાતની ખાતરી કરી છે કે; તે તો એમ જ છે; તે તું સાંભળ અને તારા હિતાર્થે ધ્યાનમાં લે.”