< யோபு 4 >
1 ௧ அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் மறுமொழியாக:
Na Temanni Elifas buaa Hiob sɛ,
2 ௨ நாங்கள் உம்முடன் பேசத்துணிந்தால், அனுமதிப்பீரோ? ஆனாலும் பேசாமல் அடக்கிக்கொள்ளத்தக்கவன் யார்?
“Sɛ obi pɛ sɛ ɔne wo kasa a, worennya ntoboaseɛ mma no anaa? Hwan na wɔbɛtumi aka nʼano ato mu?
3 ௩ இதோ, நீர் அநேகருக்குப் புத்திசொல்லி, சோர்ந்த கைகளைத் திடப்படுத்தினீர்.
Dwene sɛdeɛ wakyerɛkyerɛ nnipa bebree, sɛdeɛ woahyɛ nsa a emu ayɛ mmerɛ den.
4 ௪ விழுகிறவனை உம்முடைய வார்த்தைகளால் நிற்கச்செய்தீர், தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தினீர்.
Wo nsɛm ahyɛ wɔn a wɔasunti no den; woahyɛ nkotodwe a ayɛ mmerɛ mu den.
5 ௫ இப்பொழுதோ துன்பம் உமக்கு சம்பவித்ததினால் சோர்ந்துபோகிறீர்; அது உம்மைத் தொட்டதினால் கலங்குகிறீர்.
Na afei a ɔhaw aba no, wʼaba mu abu; aba wo so, na wo ho adwiri wo.
6 ௬ உம்முடைய தேவபக்தி உம்முடைய உறுதியாயும், உம்முடைய வழிகளின் உத்தமம் உம்முடைய நம்பிக்கையாகவும் இருக்கவேண்டியதல்லவோ?
Wo nyamesuro mma wo ahotosoɔ anaa, na wʼakwan a ɛho nni asɛm mma wo anidasoɔ anaa?
7 ௭ குற்றமில்லாமல் அழிந்தவன் உண்டோ? சன்மார்க்கர் அழிக்கப்பட்டது எப்போது? இதை நினைத்துப்பாரும்.
“Dwene ho: Wɔasɛe obi a ne ho nni asɛm pɛn anaa? Ɛhefa na wɔsɛee obi a ɔyɛ pɛ?
8 ௮ நான் கண்டிருக்கிறபடி, அநியாயத்தை உழுது, தீமையை விதைத்தவர்கள், அதையே அறுக்கிறார்கள்.
Sɛdeɛ mahunu no, wɔn a wɔfɛntɛm bɔne ne wɔn a wɔdua ɔhaw no, wɔtwa so aba.
9 ௯ தேவனுடைய சுவாசத்தினாலே அவர்கள் அழிந்து, அவருடைய மூக்கின் காற்றினாலே அழிகிறார்கள்.
Sɛ Onyankopɔn home a, wɔsɛe; nʼabufuo ma wɔyera.
10 ௧0 சிங்கத்தின் கெர்ச்சிப்பும், கொடிய சிங்கத்தின் முழக்கமும் அடங்கும்; பாலசிங்கங்களின் பற்களும் உடைந்துபோகும்.
Agyata bɛtumi abobom na wɔapɔ so, nanso wɔbɛbubu gyata akɛseɛ no se.
11 ௧௧ கிழச்சிங்கம் இரையில்லாமையால் இறந்துபோகும், பாலசிங்கங்கள் சிதறிப்போகும்.
Gyata annya haboa a ɔwu, na gyatabereɛ mma no bɔ hwete.
12 ௧௨ இப்போதும் ஒரு வார்த்தை என்னிடத்தில் இரகசியமாக அறிவிக்கப்பட்டது, அதன் மெல்லிய ஓசை என் காதில் விழுந்தது.
“Wɔbɛkaa kokoamsɛm bi kyerɛɛ me na mʼaso tee no sɛ asomusɛm.
13 ௧௩ மனிதர்மேல் அயர்ந்த தூக்கம் வரும்போது, இரவு தரிசனங்களில் பலவித தோற்றங்கள் உண்டாகும்போது,
Wɔ anadwo daeɛso basabasa mu, ɛberɛ a nnipa adeda nnahɔɔ no,
14 ௧௪ பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது, என் எலும்புகளெல்லாம் நடுங்கியது.
ehu ne nketenkete kyeree me. Ɛmaa me nnompe nyinaa wosoeɛ.
15 ௧௫ அப்பொழுது ஒரு ஆவி என் முகத்திற்கு முன்பாகக் கடந்தது, என் உடலின் முடிகள் சிலிர்த்தது.
Honhom bi twaa mʼani so, na me ho nwi sɔre gyinaeɛ.
16 ௧௬ அது ஒரு உருவம் போல என் கண்களுக்குமுன் நின்றது, ஆனாலும் அதின் உருவம் இன்னதென்று விளங்கவில்லை; அமைதலுண்டானது, அப்பொழுது நான் கேட்ட சத்தமாவது:
Ɛgyinaeɛ, nanso, manhunu nʼabɔsuo. Biribi bɛgyinaa mʼanim, na metee nne bɔkɔɔ bi a ɛrebisa sɛ,
17 ௧௭ மனிதன் தேவனைவிட நீதிமானாயிருப்பானோ? மனிதன் தன்னை உண்டாக்கினவரைவிட சுத்தமாயிருப்பானோ?
‘Onipa dasani bɛtumi atene asene Onyankopɔn? Onipa bɛtumi ayɛ kronn asene ne Yɛfoɔ anaa?
18 ௧௮ கேளும், அவர் தம்முடைய வேலைக்காரரிடத்தில் நம்பிக்கை வைப்பதில்லை; தம்முடைய தூதரின்மேலும் புத்தியீனத்தைச் சுமத்துகிறாரே,
Sɛ Onyankopɔn ntumi mfa ne ho nto nʼankasa asomfoɔ so, na sɛ ɔka nʼabɔfoɔ mpo anim a,
19 ௧௯ புழுதியில் அஸ்திபாரம் போட்டு, மண் வீடுகளில் குடியிருந்து, செல்லுப்பூச்சியால் அரிக்கப்படுகிறவர்கள்மேல் அவர் நம்பிக்கை வைப்பது எப்படி?
hwan ne onipa a wɔde dɔteɛ anwene no, a ne fapem sisi mfuturo mu na wɔdwerɛ no ntɛm so sene abubummabaa?
20 ௨0 காலைமுதல் மாலைவரைக்கும் அழிந்து, கவனிப்பார் ஒருவருமில்லாமல், நிலையான அழிவை அடைகிறார்கள்.
Ɛfiri anɔpahema kɔsi anwummerɛ wɔbubu wɔn mu nketenkete; na wɔyera korakora a obiara nhunu wɔn bio.
21 ௨௧ அவர்களிலிருக்கிற அவர்களுடைய மேன்மை போய்விடுமல்லவோ? ஞானமடையாமல் இறக்கிறார்களே என்று சொன்னான்.
Wɔtete wɔn ntomadan nhoma mu, ɛno enti wɔwuwu a wɔnnim.’