< யோபு 35 >
1 ௧ பின்னும் எலிகூ மறுமொழியாக:
S megszólalt Elíhú és mondta:
2 ௨ “என் நீதி தேவனுடைய நீதியைவிட உயர்ந்ததென்று நீர் சொன்னது நியாயம் என்று நினைக்கிறீரோ?
Ezt gondolod-e jognak, erről mondod-e: igazságom Isten előtt,
3 ௩ நான் பாவியாக இல்லாததினால் எனக்கு நன்மை என்ன? பலன் என்ன? என்று சொன்னீர்.
hogy azt mondod, mi hasznod van, mit érek el többet, mint vétkemmel?
4 ௪ உமக்கும் உம்முடன் இருக்கிற உம்முடைய நண்பனுக்கும் நான் பதில் சொல்லுகிறேன்.
Én válaszolok neked szavakkal s barátaidnak veled együtt.
5 ௫ நீர் வானத்தை அண்ணாந்து பார்த்து, உம்மைவிட உயரமாயிருக்கிற ஆகாயமண்டலங்களைக் கண்ணோக்கும்.
Tekints az égre s láss, s nézd a fellegeket, melyek magasabbak nálad!
6 ௬ நீர் பாவம் செய்தால் அதினாலே அவருக்கு என்ன நஷ்டம்? உம்முடைய மீறுதல்கள் அதிகமானாலும், அதினாலே அவருக்கு என்ன பாதிப்பு?
Ha vétkeztél, mit mivelsz ellene, s ha sok a bűntetted, mit teszel neki;
7 ௭ நீர் நீதிமானாயிருந்தால், அதினாலே அவருக்கு என்ன கிடைக்கும்? அல்லது அவர் உம்முடைய கையில் என்ன லாபத்தைப் பெறுவார்?
ha igazad van, mit adsz neki, vagy mit fogad el kezedből?
8 ௮ உம்முடைய பாவத்தினால் உம்மைப்போன்ற மனிதனுக்கு நஷ்டமும், உம்முடைய நீதியினால் மனுமக்களுக்கு லாபமும் உண்டாகும்.
A magadféle férfit illeti gonoszságod, és ember fiát igazságod.
9 ௯ அநேகரால் பலவந்தமாக ஒடுக்கப்பட்டவர்கள் முறையிட்டு, வல்லவர்களுடைய புயத்தினிமித்தம் அலறுகிறார்கள்.
A sok zsarolás miatt kiáltanak, panaszkodnak sokaknak a karja miatt;
10 ௧0 பூமியின் மிருகங்களைவிட எங்களைப் புத்திமான்களும், ஆகாயத்துப் பறவைகளைவிட எங்களை ஞானவான்களுமாக்கி,
de nem mondják, hol van Isten, teremtőm, a ki adja, hogy énekre keljek éjjel,
11 ௧௧ என்னை உண்டாக்கினவரும், இரவிலும் பாடல்பாட அருள்செய்கிறவருமாகிய என்னை உருவாக்கின கர்த்தராகிய தேவன் எங்கே என்று கேட்பவன் ஒருவனுமில்லை.
a ki oktat minket a föld barmai által, s az ég madarai által bölcsekké tesz.
12 ௧௨ அங்கே அவர்கள் பொல்லாதவர்களின் பெருமையினாலே கூப்பிடுகிறார்கள்; அவரோ திரும்ப பதில் கொடுக்கிறதில்லை.
Akkor kiáltanak, de nem felel, a rosszak gőgje miatt.
13 ௧௩ தேவன் வீண்வார்த்தைகளைக் கேட்கமாட்டார், சர்வவல்லமையுள்ள தேவன் அதைக் கவனிக்கமாட்டார்.
Bizony, hamisságot nem hall az Isten, s a Mindenható nem látja meg;
14 ௧௪ அவருடைய தரிசனம் உமக்குக் கிடைக்கிறதில்லை என்று நீர் சொல்லுகிறீரே; ஆனாலும் நியாயத்தீர்ப்பு அவரிடத்தில் இருக்கிறது; ஆகையால் அவருக்குக் காத்துக்கொண்டிரும்.
hát még midőn mondod, hogy nem látod Őt, előtte van az ügy és to vársz reá.
15 ௧௫ இப்போது அவருடைய கோபமானது நியாயத்தை முற்றிலும் விசாரிக்காது; அவர் இன்னும் ஒன்றையும் குறையில்லாத முறையில் தண்டிக்கவில்லை.
És most azzal, hogy: semmiért büntetett haragja és nem nagyon tudott bűntettről –
16 ௧௬ ஆகையால் யோபு வீணாய்த் தம்முடைய வாயைத் திறந்து, அறிவில்லாத வார்த்தைகளை அதிகமாகப் பேசுகிறார்” என்றான்.
Jób hiábavalóságra nyitja meg a száját, tudás nélkül szaporít szavakat.