< யோபு 34 >
1 ௧ பின்னும் எலிகூ மறுமொழியாக:
and to answer Elihu and to say
2 ௨ “ஞானிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்; அறிவாளிகளே, எனக்குச் செவிகொடுங்கள்.
to hear: hear wise speech my and to know to listen to/for me
3 ௩ வாயானது ஆகாரத்தை ருசிபார்க்கிறதுபோல, காதானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கும்.
for ear speech to test and palate to perceive to/for to eat
4 ௪ நமக்காக நியாயமானதைத் தெரிந்துகொள்வோமாக; நன்மை இன்னதென்று நமக்குள்ளே அறிந்துகொள்வோமாக.
justice to choose to/for us to know between: among us what? pleasant
5 ௫ யோபு: நான் நீதிமான்; தேவன் என் நியாயத்தைத் தள்ளிவிட்டார் என்றும்,
for to say Job to justify and God to turn aside: remove justice my
6 ௬ நியாயம் என்னிடத்தில் இருந்தும் நான் பொய்யனென்று எண்ணப்படுகிறேன்; மீறுதல் இல்லாதிருந்தும், அம்பினால் எனக்கு இருந்த காயம் ஆறாததாயிருக்கிறதென்றும் சொன்னாரே.
upon justice my to lie be incurable arrow my without transgression
7 ௭ யோபைப் போலவே, கேலிசெய்வதை தண்ணீரைப்போல் குடித்து,
who? great man like/as Job to drink derision like/as water
8 ௮ அக்கிரமக்காரருடன் சேர்ந்துகொண்டு, துன்மார்க்கருடன் சுற்றுகிறவன் யார்?
and to journey to/for company with to work evil: wickedness and to/for to go: walk with human wickedness
9 ௯ எப்படியென்றால், தேவன்மேல் அன்பு வைக்கிறது மனிதனுக்குப் பயன் அல்ல என்றாரே.
for to say not be useful great man in/on/with to accept he with God
10 ௧0 ஆகையால் புத்திமான்களே, எனக்குச் செவிகொடுங்கள்; அநீதி தேவனுக்கும், சர்வவல்லமையுள்ள தேவனுக்கும் தூரமாயிருக்கிறது.
to/for so human heart to hear: hear to/for me forbid to/for God from wickedness and Almighty from injustice
11 ௧௧ மனிதனுடைய செயல்களுக்கு ஏற்ப அவனுக்குச் சரிக்கட்டி, அவனவன் நடக்கைகளுக்கு ஏற்ப அவனவனுக்குப் பலனளிக்கிறார்.
for work man to complete to/for him and like/as way man to find him
12 ௧௨ தேவன் அநியாயம் செய்யாமலும், சர்வவல்லமையுள்ள தேவன் நீதியைப் புரட்டாமலும் இருக்கிறது உண்மையே.
also truly God not be wicked and Almighty not to pervert justice
13 ௧௩ பூமியின்மேல் மனிதனுக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்? உலகம் முழுவதையும் ஒழுங்குபடுத்தினவர் யார்?
who? to reckon: overseer upon him land: country/planet [to] and who? to set: put world all her
14 ௧௪ அவர் தம்முடைய இருதயத்தை அவனுக்கு விரோதமாகத் திருப்பினாரென்றால், அவனுடைய ஆவியையும் அவனுடைய சுவாசத்தையும் தம்மிடத்தில் இழுத்துக்கொள்வார்.
if to set: make to(wards) him heart his spirit his and breath his to(wards) him to gather
15 ௧௫ அப்படியே உயிரினங்கள் அனைத்தும் இறந்துபோகும், மனிதன் மண்ணுக்குத் திரும்புவான்.
to die all flesh together and man upon dust to return: return
16 ௧௬ உமக்கு உணர்விருந்தால் இதைக் கேளும், என் வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும்.
and if understanding to hear: hear [emph?] this to listen [emph?] to/for voice: message speech my
17 ௧௭ நீதியைப் பகைக்கிற ஒருவன் ஆள முடியுமோ? மகா நீதிபரரைக் குற்றப்படுத்துவீரோ?
also to hate justice to saddle/tie and if: surely no righteous mighty be wicked
18 ௧௮ ஒரு ராஜாவைப் பார்த்து, நீ பொல்லாதவன் என்றும், அதிபதிகளைப் பார்த்து, நீங்கள் அக்கிரமக்காரர் என்றும் சொல்ல முடியுமோ?
to say to/for king Belial: worthless wicked to(wards) noble
19 ௧௯ இப்படியிருக்க, பிரபுக்களின் முகத்தைப்பார்க்காமலும், ஏழையைவிட செல்வந்தனை அதிகமாக நினைக்காமலும் இருக்கிறவரை நோக்கி இப்படிச் சொல்லலாமா? இவர்கள் எல்லோரும் அவர் கரங்களின் செயல்களே.
which not to lift: kindness face: kindness ruler and not to recognize rich to/for face: before poor for deed: work hand his all their
20 ௨0 இப்படிப்பட்டவர்கள் உடனே இறப்பார்கள்; மக்கள் நடுஇரவில் கலங்கி இறந்துபோவார்கள்; பார்க்காத கையினால் பலவந்தர் அழிந்துபோவார்கள்.
moment to die and middle night to shake people and to pass and to turn aside: remove mighty: strong not in/on/with hand
21 ௨௧ அவருடைய கண்கள் மனிதருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.
for eye his upon way: conduct man: anyone and all step his to see: see
22 ௨௨ அக்கிரமக்காரர் ஒளிந்துகொள்ளக்கூடிய இருளுமில்லை, மரணஇருளுமில்லை.
nothing darkness and nothing shadow to/for to hide there to work evil: wickedness
23 ௨௩ மனிதன் தேவனுடன் வழக்காடுவதற்கு அவர் அவன்மேல் அதிகமானதொன்றையும் சுமத்தமாட்டார்.
for not upon man to set: consider still to/for to go: went to(wards) God in/on/with justice: judgement
24 ௨௪ ஆராய்ந்து முடியாதவிதத்தில், நியாயமாக அவர் வல்லமையுள்ளவர்களை நொறுக்கி, வேறு மனிதரை அவர்கள் இடத்திலே நிறுத்துகிறார்.
to shatter mighty not search and to stand: stand another underneath: instead them
25 ௨௫ அவர்களின் செயல்களை அவர் அறிந்தவர் என்பதினால், அவர்கள் நசுங்கிப்போகும் அளவுக்கு இரவுநேரத்தில் அவர்களை அழித்துப்போடுகிறார்.
to/for so to recognize work their and to overturn night and to crush
26 ௨௬ அவர்கள் அவரைவிட்டுப் பின்வாங்கி அவருடைய எல்லா வழிகளையும் உணர்ந்துகொள்ளாமல் போனதினாலும்,
underneath: because of wicked to slap them in/on/with place to see: see
27 ௨௭ எளியவர்களின் வேண்டுதல் அவரிடத்தில் சேரவைத்ததினாலும், சிறுமையானவனுடைய வேண்டுதலை கேட்கிற அவர்,
which upon so to turn aside: turn aside from after him and all way: conduct his not be prudent
28 ௨௮ எல்லோரும் பார்க்கும்படி அவர்களைத் துன்மார்க்கரென்று அடிக்கிறார்.
to/for to come (in): come upon him cry poor and cry afflicted to hear: hear
29 ௨௯ மாயக்காரன் ஆளுகை செய்யாமலும், மக்கள் சிக்கிக்கொள்ளாமலும்,
and he/she/it to quiet and who? be wicked and to hide face and who? to see him and upon nation and upon man unitedness
30 ௩0 ஒரு மக்களுக்காவது ஒரு மனிதனுக்காவது, அவர் சமாதானத்தை அருளினால் யார் கலங்கவைப்பான்? அவர் தமது முகத்தை மறைத்தால் அவரைப் பார்ப்பவன் யார்?
from to reign man profane from snare people
31 ௩௧ நான் தண்டிக்கப்பட்டேன்; நான் இனிப் பாவம் செய்யமாட்டேன்.
for to(wards) God to say to lift: bear not to destroy
32 ௩௨ நான் பார்க்காத காரியத்தை நீர் எனக்குப் போதியும், நான் அநியாயம் செய்தேனென்றால், நான் இனி அப்படிச் செய்வதில்லை என்று தேவனை நோக்கிச் சொல்லமுடியுமே.
beside to see you(m. s.) to show me if injustice to work not to add: again
33 ௩௩ நீர் அப்படிச் செய்யமாட்டேன் என்கிறதினால், உம்முடன் இருக்கிறவர்களில் ஒருவனை உமக்குப் பதிலாக அதைச் செய்யச்சொல்வீரோ? நான் அல்ல, நீரே தெரிந்துகொள்ளவேண்டும்; அல்லவென்றால், நீர் அறிந்திருக்கிறதைச் சொல்லும்.
from from with you to complete her for to reject for you(m. s.) to choose and not I and what? to know to speak: promise
34 ௩௪ யோபு அறிவில்லாமல் பேசினார்; அவர் வார்த்தைகள் ஞானமுள்ளவைகள் அல்லவென்று,
human heart to say to/for me and great man wise to hear: hear to/for me
35 ௩௫ புத்தியுள்ள மனிதர் என் சார்பாகப் பேசுவார்கள்; ஞானமுள்ள மனிதனும் எனக்குச் செவிகொடுப்பான்.
Job not in/on/with knowledge to speak: speak and word his not in/on/with be prudent
36 ௩௬ அக்கிரமக்காரர் சொன்ன மறுமொழிகளினால் யோபு முற்றும்முடிய சோதிக்கப்படவேண்டியதே என் ஆசை.
oh that! to test Job till perpetuity upon turn in/on/with human evil: wickedness
37 ௩௭ தம்முடைய பாவத்துடன் மீறுதலைச் சேர்த்தார்; அவர் எங்களுக்குள்ளே கைகொட்டி, தேவனுக்கு விரோதமாகத் தம்முடைய வார்த்தைகளை அதிகமாகப் பேசினார்” என்றான்.
for to add upon sin his transgression between us to slap and to multiply word his to/for God