< யோபு 32 >
1 ௧ யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்ததினால், அவனுக்கு அந்த மூன்று மனிதரும் பதில் சொல்லி முடித்தார்கள்.
S megszűnt ez a három férfi felelni Jóbnak, mert igaz volt a maga szemeiben.
2 ௨ அதினால் ராமின் வம்சத்தானாகிய பூசியனாகிய பரகெயேலின் மகன் எலிகூவுக்குக் கோபம் வந்தது, யோபு, தேவனைவிடத் தன்னைத்தான் நீதிமானாக்கினதினால், அவன்மேலும் அவனுக்குக் கோபம் வந்தது.
Akkor föllobbant haragja Elihúnak, a Búzbeli Barakél fiának a Rám nemzetségből; Jób ellen lobbant föl haragja, mivelhogy igazabbnak vélte magát Istennél,
3 ௩ கொடுக்கத்தக்க மறுமொழி யோபின் மூன்று நண்பர்களுக்கும் கிடைக்காதிருந்தும், அவர்கள் அவனை ஆகாதவனென்று முடிவு செய்ததால், அவர்கள்மேலும் அவனுக்குக் கோபம் வந்தது.
s három barátja ellen lobbant föl haragja, mivelhogy nem találtak feleletet, de Jóbot gonosznak ítélték.
4 ௪ அவர்கள் தன்னைவிட வயது முதிர்ந்தவர்களானதினால், எலிகூ யோபின் வார்த்தைகள் முடியும்வரை காத்திருந்தான்.
Elihú pedig kivárta Jóbot szavaival, mert azok korra öregebbek voltak nálánál.
5 ௫ அந்த மூன்று மனிதரின் வாயிலும் பதில் பிறக்கவில்லையென்று எலிகூ கண்டபோது, அவனுக்குக் கோபம் வந்தது.
De látta Elíhú, hogy nincsen felelet a. három férfi szájában, akkor föllobbant haragja.
6 ௬ ஆதலால் பரகெயேலின் மகன் எலிகூ என்னும் பூசியன் மறுமொழியாக: நான் இளவயதுள்ளவன், நீங்களோ வயதானவர்கள்; ஆகையால் நான் பயந்து, என் கருத்தை உங்களுக்கு முன்பாக வெளிப்படுத்த பயந்திருந்தேன்.
S megszólalt Elíhú, a Búzbeli Barakélnek fia és mondta: Fiatal vagyok én korra, ti pedig aggastyánok, azért tartózkodtam és féltem attól, hogy tudásomat közöljem veletek.
7 ௭ முதியோர் பேசட்டும், வயது சென்றவர்கள் ஞானத்தை அறிவிக்கட்டும் என்றிருந்தேன்.
Azt mondtam: Napok beszéljenek és az évek sokasága tudasson bölcsséget.
8 ௮ ஆனாலும் மனிதரில் ஒரு ஆவியுண்டு; சர்வவல்லமையுள்ள தேவனுடைய சுவாசமே அவர்களை உணர்வுள்ளவர்களாக்கும்.
Ámde a szellem az a halandóban s a Mindenható lehelete, a mi értelmessé teszi őket.
9 ௯ பெரியோரெல்லாம் ஞானிகளல்ல; முதியோரெல்லாம் நீதியை அறிந்தவர்களுமல்ல.
Nem a sokévűek bölcsek, s nem a vének értenek ítéletet;
10 ௧0 ஆகையால் நான் சொல்வதைக் கேளுங்கள்; நானும் என் கருத்தை வெளிப்படுத்துவேன் என்றேன்.
azért mondtam: hallgass reám, hadd közöljem én is tudásomat.
11 ௧௧ இதோ, உங்கள் வசனங்கள் முடியும்வரை காத்திருந்தேன்; நீங்கள் சொல்ல முடிந்ததை ஆராய்ந்து தேடும்வரை, உங்கள் நியாயங்களுக்குச் செவிகொடுத்தேன்.
Lám, várakoztam szavaitokra, figyeltem értelmezéseitekre, míg átkutatnátok a beszédeket.
12 ௧௨ நான் உங்கள் சொல்லைக் கவனித்தேன்; ஆனாலும் இதோ, உங்களில் யோபுக்கு நியாயத்தைத் தெரிவித்து, அவருடைய வசனங்களுக்கு ஏற்ற மறுமொழி சொல்லுகிறவனில்லை.
Ügyeltem is reátok, de íme nincs, ki Jóbot megczáfolná, ki közületek mondásaira felelne.
13 ௧௩ ஞானத்தைக் கண்டுபிடித்தோம் என்று நீங்கள் சொல்லாதபடி பாருங்கள்; மனிதனல்ல, தேவனே அவரை வெற்றி கொள்ளவேண்டும்.
Nehogy mondjátok: találtunk bölcsességet; Isten taszítsa őt el, nem ember!
14 ௧௪ அவர் என்னைப்பார்த்துப் பேசினதில்லை; நீங்கள் சொன்ன வார்த்தைகளினால் நான் அவருக்கு மறுமொழி சொல்வதுமில்லை.
De nem én hozzám intézett beszédet, nem is a ti mondásaitokkal válaszolnék neki.
15 ௧௫ அவர்கள் கலங்கி பிறகு மறுமொழி சொல்லாதிருக்கிறார்கள்; அவர்களுக்குப் பேச்சு நின்றுபோனது.
Megrettentek, nem feleltek többet, elszakadtak tőlük a szavak.
16 ௧௬ அவர்கள் பேசமாட்டார்களா என்று காத்திருந்தேன்; ஆனாலும் அவர்கள் மறுமொழி கொடுக்காமலிருந்ததினால்,
Várakozzam-e, mert ők nem beszélnek, mert elállottak, nem feleltek többé?
17 ௧௭ நானும் மறுமொழியாக எனக்குத் தோன்றியவரை சொல்லுவேன்; நானும் என் கருத்தை வெளிப்படுத்துவேன்.
Hadd felelek: én is a részemmel, hadd közlöm én is tudásomat.
18 ௧௮ வார்த்தைகள் எனக்குள் நிறைந்திருக்கிறது; என் உள்ளத்திலுள்ள ஆவி என்னை நெருக்கி ஏவுகிறது.
Mert tele vagyok szavakkal, szorít engem bensőm szelleme.
19 ௧௯ இதோ, என் உள்ளம் அடைக்கப்பட்டிருந்து, புது தோல்பைகளையே கிழிக்கும் புதுரசத்தைப் போலிருக்கிறது.
Íme bensőm olyan, mint nyitatlan bor, mint a mely új tömlőkből kifakad.
20 ௨0 நான் ஆறுதலடையும்படி பேசுவேன்; என் உதடுகளைத் திறந்து மறுமொழி சொல்லுவேன்.
Hadd beszélek, hogy megkönnyebbüljek, kinyitom ajkaimat és felelek.
21 ௨௧ நான் ஒருவனுடைய முகத்தைப் பார்க்காமலும், ஒரு மனிதனுக்கும் ஆசை வார்த்தை பேசாமலும் இருப்பேனாக.
Nem kell senki személyét tekintenem és embernek nem fogok hízelkedni;
22 ௨௨ நான் ஆசை வார்த்தை பேச அறியேன்; பேசினால் என்னை உண்டாக்கினவர் சீக்கிரமாக என்னை எடுத்துக்கொள்வார்.
mert nem is tudok én hízelkedni; csakhamar elvinne engem alkotóm.