< யோபு 30 >
1 ௧ “இப்போதோ என்னைவிட இளவயதுள்ளவர்கள் என்னை கேலி செய்கிறார்கள்; இவர்களுடைய தகப்பன்களை நான் என் மந்தையைக் காக்கும் நாய்களுடன் வைக்கவுங்கூட வெட்கப்பட்டிருப்பேன்.
Men koulye a, sila ki pi jenn pase m ap giyonnen m. Papa a sila mwen pat ta dakò pou mete ansanm ak chen bann mouton yo.
2 ௨ வயது முதிர்ந்ததினாலே பெலனற்றுப்போன அவர்கள் கைகளினால் எனக்கு என்ன உதவியிருந்தது.
Anverite, ki byen fòs men pa yo ta kab fè m? Gwo fòs te deja disparèt nan yo
3 ௩ குறைச்சலினாலும் பசியினாலும் அவர்கள் வாடி, அதிக நாட்களாய் வெறுமையான வெட்டவெளிக்கு ஓடிப்போய்,
akoz mank bagay ak grangou. Y ap manje tè sèk nan lannwit lan, ak pèt e ak dezolasyon an.
4 ௪ செடிகளுக்குள் இருக்கிற தழைகளைப் பிடுங்குவார்கள்; காட்டுசெடிகளின் கிழங்குகள் அவர்களுக்கு ஆகாரமாயிருந்தது.
Yo rache fèy raje nan mitan rakèt la. Manje yo se rasin bayawonn.
5 ௫ அவர்கள் மனிதர்களின் நடுவிலிருந்து துரத்தப்பட்டார்கள்; திருடனைத் துரத்துகிறதுபோல்: திருடன் திருடன் என்று அவர்களைத் துரத்திவிட்டார்கள்.
Yo chase yo deyò lavil la nan dezè; yo kriye dèyè yo tankou se vòlè,
6 ௬ அவர்கள் பள்ளத்தாக்குகளின் வெடிப்புகளிலும், பூமியின் குகைகளிலும், கன்மலைகளிலும் போய் குடியிருந்தார்கள்.
jiskaske yo vin rete nan move ravin yo, nan twou tè ak nan wòch yo.
7 ௭ செடிகளுக்குள்ளிருந்து கதறி, முட்செடிகளின்கீழ் ஒதுங்கினார்கள்.
Pami rak tibwa yo, yo rele fò. Anba machacha a, yo vin rasanble ansanm.
8 ௮ அவர்கள் மூடரின் மக்களும், தகுதியில்லாதவரின் பிள்ளைகளும், தேசத்திலிருந்து துரத்தப்பட்டவர்களுமாக இருந்தார்கள்.
Pitit a moun fou, wi, pitit a mechan yo, yo te resevwa fwèt jis lè yo kite peyi a.
9 ௯ ஆனாலும் இப்போது நான் அவர்களுக்குப் பாட்டும் பழமொழியும் ஆனேன்.
Men koulye a, se mwen menm yo pase nan rizib; mwen devni yon pawòl betiz pou yo.
10 ௧0 என்னை மிகவும் வெறுத்து, எனக்குத் தூரமாகி, என் முகத்திற்கு முன்பாகத் துப்பத் தயங்காதிருக்கிறார்கள்.
Yo pè m, yo kanpe lwen m, e yo pa sispann krache nan figi m.
11 ௧௧ நான் கட்டின கட்டை அவர் அவிழ்த்து, என்னைச் சிறுமைப்படுத்தினதினால், அவர்களும் கடிவாளத்தை என் முகத்திற்கு முன்பாக உதறிவிட்டார்கள்.
Akoz Li te lage fisèl banza a pou te aflije mwen, yo rete retire brid la nèt devan m.
12 ௧௨ வலதுபுறத்தில் வாலிபர் எழும்பி, என் கால்களைத் தவறி விழவைத்து, தங்கள் கேடான வழிகளை எனக்கு நேராக ஆயத்தப்படுத்துகிறார்கள்.
Sou men dwat lan, nich sa vin leve. Yo rale pye mwen akote. Yo mennen kont mwen tout manèv destriksyon yo.
13 ௧௩ என் பாதையைக் கெடுத்து, என் ஆபத்தைப் பெருகச் செய்கிறார்கள்; அதற்கு அவர்களுக்கு உதவி செய்கிறவர்கள் தேவையில்லை.
Yo gate wout mwen. Yo bourade lachit mwen san mande sekou.
14 ௧௪ பெரிய வழியை உண்டாக்கி, தாங்கள் கெடுத்த வழியில் புரண்டு வருகிறார்கள்.
Tankou nan yon gran brèch, yo parèt; nan mitan tanpèt, yo woule m.
15 ௧௫ பயங்கரங்கள் என்மேல் திரும்பிவருகிறது, அவைகள் காற்றைப்போல என் ஆத்துமாவைப் பின்தொடருகிறது; என் செழித்தவாழ்வு ஒரு மேகத்தைப்போல் கடந்துபோனது.
Gwo perèz yo vin vire kont mwen. Yo tanmen gate respè m tankou van. Byennèt mwen disparèt tankou nwaj.
16 ௧௬ ஆகையால் இப்போது என் ஆத்துமா என்னில் சோர்ந்துபோனது; உபத்திரவத்தின் நாட்கள் என்னைப் பிடித்துக் கொண்டது.
Konsa, koulye a nanm mwen vide nèt. Jou afliksyon yo sezi m.
17 ௧௭ இரவுநேரத்திலே என் எலும்புகள் துளைக்கப்பட்டு, என் நரம்புகளுக்கு இளைப்பாறுதல் இல்லாதிருக்கிறது.
Nan lannwit, zo m yo frennen anndan m, e sa yo kap manje m pa pran repo.
18 ௧௮ வியாதியின் கடுமையினால் என் உடை மாறிப்போனது; அது என் அங்கியின் கழுத்துப்பட்டையைப்போல, என்னைச் சுற்றிக்கொண்டது.
Ak gwo fòs, vètman m vin tòde sou mwen. Li mare m nèt tankou kolye manto m.
19 ௧௯ சேற்றிலே தள்ளப்பட்டேன்; புழுதிக்கும் சாம்பலுக்கும் ஒப்பானேன்.
Li te jete mwen nan labou, e mwen te vin tankou pousyè ak sann.
20 ௨0 தேவனே உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் எனக்கு பதில் கொடுக்காமலிருக்கிறீர்; கெஞ்சி நிற்கிறேன், என்மேல் பாராமுகமாயிருக்கிறீர்.
Mwen kriye a Ou menm pou sekou, men Ou pa reponn mwen. Mwen kanpe, e se gete, Ou gete m.
21 ௨௧ என்மேல் கோபமுள்ளவராக மாறினீர்; உம்முடைய கரத்தின் வல்லமையால் என்னை விரோதிக்கிறீர்.
Ou vin okipe m ak mechanste. Avèk fòs a men Ou, Ou pèsekite m.
22 ௨௨ நீர் என்னைத் தூக்கி, என்னைக் காற்றிலே பறக்கவிட்டு, என்னைப் பயத்தினால் அழிந்துபோகச் செய்கிறீர்.
Ou leve m wo sou van, e fè m monte; epi Ou fè m fonn nèt nan move tan an.
23 ௨௩ வாழ்வோர் அனைவருக்கும் குறிக்கப்பட்ட தங்கும் இடமாகிய மரணத்திற்கு என்னை ஒப்புக்கொடுப்பீர் என்று அறிவேன்.
Paske mwen konnen ke Ou ap mennen m a lanmò, jis rive nan gwo kay asanble a ki fèt pou tout sila ki viv yo.
24 ௨௪ ஆனாலும் நான் எந்த ஒருவனை அவன் ஆபத்திலே தவிக்கவைத்ததும்,
Malgre, èske yon moun k ap tonbe pa lonje men l? Oswa nan gwo pwoblem li pa kriye sekou?
25 ௨௫ துன்பப்படுகிறவனைப் பார்த்து அவனுக்காக நான் அழாதிருந்ததும், ஏழைக்காக என் ஆத்துமா கவலைப்படாதிருந்ததும் உண்டானால், அவர் என் விண்ணப்பத்திற்கு இடங்கொடாமல், எனக்கு விரோதமாகத் தமது கையை நீட்டுவாராக.
Èske mwen pa t kriye pou sila nan gwo twoub? Èske nanm mwen pa t plen tristès pou malere a?
26 ௨௬ நன்மைக்காகக் காத்திருந்த எனக்குத் தீமை வந்தது; வெளிச்சம் வருமென்று பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இருள் வந்தது.
Lè m t ap tann sa ki bon an, se mal ki rive m; lè m tap tann limyè, alò se tenèb ki te vini.
27 ௨௭ என் உள்ளம் கொதித்து, அமைதல் இல்லாதிருக்கிறது; உபத்திரவநாட்கள் என்மேல் வந்தது.
Kè m twouble nèt anndan m. Mwen pa kab poze. Jou plen ak afliksyon yo parèt devan m.
28 ௨௮ வெயில் படாதிருந்தும், நான் கறுகறுத்து அலைகிறேன்; நான் சபையிலிருந்து எழுந்திருக்கும்போது அலறுகிறேன்.
Mwen fè dèy toupatou san solèy. Mwen kanpe nan asanble; mwen rele sekou.
29 ௨௯ நான் தீக்கோழிகளுக்குச் சகோதரனும், நரிகளுக்குத் தோழனுமானேன்.
Mwen te vin frè ak chen mawon, zanmi ak otrich la.
30 ௩0 என் தோல் என்மேல் கறுத்துப்போனது; என் எலும்புகள் வெப்பத்தினால் காய்ந்துபோனது.
Chè m vin nwa sou mwen, li kale, e zo m yo brile ak lafyèv.
31 ௩௧ என் சுரமண்டலம் புலம்பலாகவும், என் கின்னரம் அழுகிறவர்களின் சத்தமாகவும் மாறின.
Pou sa, se doulè ap mwen jwe, e flit mwen an sonne pou sila k ap kriye.