< யோபு 3 >
1 ௧ அதற்குப் பின்பு யோபு தன் வாயைத்திறந்து, தான் பிறந்த நாளைச் சபித்து,
Potem Hiob otworzył swoje usta i przeklinał swój dzień.
2 ௨ வசனித்துச் சொன்னது என்னவென்றால்:
Hiob odezwał się i zawołał:
3 ௩ நான் பிறந்தநாளும் ஒரு ஆண்பிள்ளை உற்பத்தியானது என்று சொல்லப்பட்ட இரவும் அழிவதாக.
Niech zginie dzień, w którym się urodziłem, i noc, [w którą] powiedziano: Poczęty mężczyzna.
4 ௪ அந்த நாள் இருளாக்கப்படுவதாக; தேவன் உயரத்திலிருந்து அதை விசாரிக்காமலும், வெளிச்சம் அதின்மேல் பிரகாசிக்காமலும்,
Niech ten dzień stanie się ciemnością, niech o niego nie troszczy się Bóg z wysokości i nie oświetla go światłość.
5 ௫ கடுமையான இருளும் மரண இருளும் அதைக் கறைப்படுத்தி, கருமேகம் அதை மூடி, மந்தாரநாளின் பயங்கரங்கள் அதை பயமுறுத்துவதாக.
Niech go pokryje ciemność i cień śmierci, niech go ogarnie obłok i przerazi mrok dnia.
6 ௬ அந்த இரவை இருள் பிடிப்பதாக; வருடத்தின் நாட்களில் அது சந்தோஷப்படுகிற நாளாக இராமலும் மாதக்கணக்கிலே அது வராமலும் போவதாக.
Niech tą nocą zawładnie ciemność, niech nie będzie liczona wśród dni roku [i] nie wejdzie w liczbę miesięcy.
7 ௭ அந்த இரவு தனிமையாயிருப்பதாக; அதிலே கெம்பீரசத்தம் இல்லாமற்போவதாக.
Niech ta noc będzie samotna, niech nie będzie w niej radosnego śpiewu.
8 ௮ நாளைச் சபிக்கிறவர்களும், லிவியாதானை எழும்பச் செய்கிறவர்களும், அதைச் சபிப்பார்களாக.
Niech przeklną ją ci, którzy przeklinają dzień, którzy są gotowi podnieść swój lament.
9 ௯ அதின் மறையும் காலத்தில் தோன்றிய நட்சத்திரங்கள் இருண்டு, அது எதிர்பார்த்திருந்த வெளிச்சம் தோன்றாமலும், விடியற்காலத்து வெளுப்பை அது பார்க்காமலும் இருப்பதாக.
Niech gwiazdy zaćmią się [o] zmierzchu, niech nie doczeka się światła ani nie zobaczy zorzy porannej;
10 ௧0 நான் இருந்த கர்ப்பத்தின் வாசலை அது அடைக்காமலும், என் கண்கள் காண்கிற வருத்தத்தை மறைத்துவிடாமலும் இருந்ததே.
Bo nie zamknęła drzwi łona mej [matki] i nie ukryła smutku przed moimi oczami.
11 ௧௧ நான் கர்ப்பத்தில் அழியாமலும், கர்ப்பத்திலிருந்து புறப்படுகிறபோதே இறக்காமலும் போனதென்ன?
Czemu nie umarłem w łonie? [Czemu] nie zginąłem, kiedy wyszedłem z łona?
12 ௧௨ என்னை ஏந்திக்கொள்ள மடியும், நான் பாலுண்ண மார்பகங்களும் இருந்ததென்ன?
Czemu przyjęły mnie kolana? Czemu [przyjęły mnie] piersi, abym mógł [je] ssać?
13 ௧௩ அப்படியில்லாதிருந்தால், அசையாமல்கிடந்து அமர்ந்திருந்து,
Teraz bowiem leżałbym i trwał w spokoju, spałbym i odpoczywał;
14 ௧௪ பாழ்நிலங்களில் தங்களுக்கு மாளிகையைக் கட்டின பூமியின் ராஜாக்களுடனும் மந்திரிமார்களுடனும்,
Z królami i z doradcami ziemi, którzy sobie budowali opustoszałe miejsca;
15 ௧௫ அல்லது, பொன்னை உடையவர்களும், தங்கள் வீடுகளை வெள்ளியினால் நிரப்பினவர்களுமான பிரபுக்களுடன் நான் இப்பொழுது தூங்கி இளைப்பாறுவேனே.
Albo z książętami, którzy mieli złoto i napełnili swe domy srebrem;
16 ௧௬ அல்லது, வெளிப்படாத வளர்ச்சியடையாத கருவைப்போலவும், வெளிச்சத்தைப் பார்க்காத குழந்தைகளைப்போலவும் இருப்பேனே.
Albo [czemu] nie stałem się jak ukryty, martwy płód, jak niemowlęta, [które] nie widziały światła?
17 ௧௭ துன்மார்க்கருடைய தொந்தரவு அங்கே ஓய்ந்திருக்கிறது; பெலனற்று சோர்ந்து போனவர்கள் அங்கே இளைப்பாறுகிறார்கள்.
Tam bezbożni przestają straszyć, tam pozbawieni siły odpoczywają.
18 ௧௮ சிறைப்பட்டிருந்தவர்கள் அங்கே ஏகமாக அமர்ந்திருக்கிறார்கள்; ஒடுக்குகிறவனுடைய சத்தம் அங்கே கேட்கப்படுகிறதில்லை.
Tam więźniowie razem wypoczywają i nie słyszą głosu ciemięzcy.
19 ௧௯ சிறியவனும் பெரியவனும் அங்கே சமமாக இருக்கிறார்கள்; அடிமை தன் எஜமானுக்கு நீங்கலாயிருக்கிறான்.
Mały i wielki [są] tam sobie równi i niewolnik jest wolny od swego pana.
20 ௨0 மரணத்திற்கு ஆசையாகக் காத்திருந்து, புதையலைத் தேடுகிறதுபோல அதைத் தேடியும் அடையாமற்போகிறவர்களும்,
Czemu nędznemu dane jest światło, a życie [tym], którzy są rozgoryczeni na duszy;
21 ௨௧ கல்லறையைக் கண்டுபிடித்ததினால் மிகவும் மகிழ்ந்து,
Którzy z tęsknotą wypatrują śmierci, a [ta] nie przychodzi, choć jej szukają pilniej niż ukrytych skarbów;
22 ௨௨ அதற்காகச் சந்தோஷப்படுகிற பாக்கியம் இல்லாதவராகிய இவர்களுக்கு வெளிச்சமும், மனவருத்தமும் உள்ள இவர்களுக்கு உயிர் கொடுக்கப்படுகிறதினால் பலன் என்ன?
Którzy wielce się radują i cieszą, kiedy grób znajdują?
23 ௨௩ தன் வழியைக் காணமுடியாதபடிக்கு, தேவனால் வளைந்துகொள்ளப்பட்டவனுக்கு வெளிச்சத்தினால் பலன் என்ன?
[Czemu dane jest światło] człowiekowi, którego droga jest ukryta i którego Bóg osaczył?
24 ௨௪ என் சாப்பாட்டுக்கு முன்னே எனக்குப் பெருமூச்சு உண்டாகிறது; என் கதறுதல் வெள்ளம்போல் புரண்டுபோகிறது.
Kiedy bowiem mam jeść, przychodzi moje wzdychanie, a moje jęki rozchodzą się jak woda;
25 ௨௫ நான் பயந்த காரியம் எனக்குச் சம்பவித்தது; நான் பயப்பட்டது எனக்கு வந்தது.
Bo to, czego się bałem, spotkało mnie, a to, czego się obawiałem, spadło na mnie.
26 ௨௬ எனக்குச் சுகமுமில்லை, நிம்மதியுமில்லை, அமைதலுமில்லை; எனக்குத் துன்பமே வந்தது.
Nie byłem bezpieczny, nie miałem spokoju ani odpoczynku, a jednak nadeszła trwoga.